Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் -Episode 12

Advertisement

Aathirai

Well-known member
Member
(Episode -12)
ஒரு மின்னல் வந்து தன்னை எதிர்பாராமல் திடீரென்று தாக்கினால் எப்படி இருக்கும், அப்படித்தான் இருந்தது அந்த நிமிடம் அர்ஜுனுக்கு.. அவன் அவளை இங்கே எதிர்பார்க்கவில்லை.. அதே சமயம் அஞ்சலியும்தான்… இருவர் மனதிலும் ஒரே ஒரு கேள்வி, தாங்கள் காண்பது நிஜம் தானா என்று…
அதிர்ச்சி மீளாமல் தோழிகளோடு ஒரு இருக்கையில் வந்து அமர்ந்தாள் அஞ்சலி... அர்ஜுன் கண் கொட்டாமல் அஞ்சலியையே பார்த்துக்கொண்டிருந்தான்.. அருகில் இருந்த ரவி தான் அவனைத் தட்டி நினைவுக்கு கொண்டு வந்தான்...
“டேய்.. என்னடா வந்து ஒரு நாள் கூட ஆகல, அதுக்குள்ள ஒரு பொண்ண டாவடிக்கறியா..?” என்றான் ரவி கிண்டலாக...
“டேய்.. மாப்ள.. நான் யார நெனச்சு இவ்ளோ நாள் கனவு கண்டேனோ, அவளே இப்போ இங்க வந்துட்டா டா...” என்றான் அர்ஜுன் சந்தோஷத்தில்...
“என்னடா சொல்ற..?” என்று முழித்தான் ரவி...
“டேய்.. பிருந்தாவன் கார்டன்ல பாத்தேனே அந்தப் பொண்ணு டா..”
“அந்தப் பொண்ணு எப்படி டா அங்க இருந்து இங்க வந்தா..? சரி அது யாருன்னு மொதல்ல காட்டு...” என்று கேட்டான் ரவி ஆர்வமாக...
“அந்த பெப்ஸி ப்ளு கலர் சுடிதார் டா...”
ரவி அவளைப் பார்ப்பதற்குள் அவர்கள் கிளாஸ் ஸ்டாஃப் வந்து விட்டார்.. அவர் உள்ளே நுழைந்ததும் அனைவரும் எழுந்து நின்றனர்..
“யா, ப்ளீஸ் சிட் டவுன் ஸ்டூடண்ட்ஸ்.. ஓகே, ஆம் யுவர் கிளாஸ் இன்சார்ஜ்.. டுடே ஃபர்ஸ்ட் டே கிளாஸ் நொவ், சோ வீ ஜஸ்ட் இன்ட்ரடூயூஸ் ஔர்செல்வ்ஸ்... ஓகே... ஐ ஆம் மதனகோபால்... ஐ கம்ப்ளீட்டேட் மை எம்.எஸ்.ஸி, எம்.பில் இன் அண்ணா யுனிவெர்சிட்டி..” என்று தொடர்ந்து இங்கிலீஷில் அடுக்கிக்கொண்டே போனார் அவர்.. பொறுமை இழந்தவனாய் ரவி திடீரென்று எழுந்து நின்றான்...
“சார், உங்களுக்கு தமிழ் தெரியுமா, தெரியாதா..??” என்றான்..
திடீரென அவன் இப்படிக் கேட்பான் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை... அர்ஜுன் அவனைப் பிடித்து இழுத்தான்.. ஆனால், ரவியோ அசரவே இல்லை...
கிளாஸ் இன்சார்ஜோ அவனை முறைத்தார்... முதல் நாளே ஒருவன் வம்பு செய்கிறானே என்று நினைத்தவாறு பேசினார்...
“நான், தமிழ் தான் பா... ஏன், உனக்கு என்ன ஃப்ராப்ளம்.?” என்றார் அவர்..
“ம்ம்.. இப்போ மட்டும் எப்படி சார் இவ்ளோ அழகா தமிழ்ல பேசறிங்க.. இங்க எல்லாருமே தமிழ் தானே, அப்பறம் ஏன் சார் அந்த வீணாப் போன இங்க்லீஷ்காரங்க விட்டுட்டுப் போன இங்கிலீஷ, ஏதோ உங்க தாய் மொழி மாதிரி நெனச்சு பேசிட்டே போறீங்க..” என்றான் ரவி ஆவேசமாக..
“சரிப்பா, நீ சொல்றத நான் யோசிக்க மாட்டேனா..? இங்க தமிழ் மட்டும் இல்ல, வேற மொழி பேசற ஸ்டூடண்ட்ஸூம் இருப்பாங்க.. அதனால நாங்க ஜென்ரலா இங்கிலிஷ்ல தான் பேசுவோம்.. புரிஞ்சுதா.. உட்காரு..” என்று வெறுப்புடன் அவர் சொன்னதும் அனைவர் முகத்திலும் ஒரு கேலிச் சிரிப்பு...
அப்போது தான் ரவி சுற்றும் முற்றும் பார்த்தான்... அவர் சொன்னதைப் போல் அங்கே ஒரு சில ஆந்திரா, கேரள மாணவர்கள் இருந்தனர்.. அவனுக்கு என்னவோ போல் ஆகி விட்டது.. அர்ஜுன் செய்கையால் அவனைத் திட்டினான்...
எல்லோரும் ரவியைப் பார்த்தபடி இருக்க, அஞ்சலி மட்டும் அவன் அருகில் இருக்கும் அர்ஜுனைப் பார்த்தபடி இருந்தாள்.. இதை அர்ஜுனும் கவனித்து விட்டான்.. அவன் பார்த்ததும் சட்டென்று திரும்பி விட்டாள்.. அர்ஜுன் சிரித்தான்..
“ஓகே.. சைலென்ட் ப்ளீஸ்... ஃபர்ஸ்ட் ரோ, ஸ்டார்ட் டூ இன்ட்ரடூயூஸ் யுவர்செல்வ்ஸ்..” என்று மதனகோபால் கூறினார்...
அஞ்சலி கூறும் போது அர்ஜுனும், அர்ஜுன் கூறும் போது அஞ்சலியும் மும்முரமாக கவனித்தனர்.. ஒரு வழியாக அனைவரும் கூறி முடித்ததும், அடுத்து டாப் ரேங்க் எடுத்த மாணவர்களை மட்டும் எழுந்து நிற்கச் சொன்னார்... அவர்களின் பெர்சென்டேஜ்களை கேட்டு முடித்தார்.. அதில், அஞ்சலி மற்றும் அர்ஜுனின் பெர்சென்டேஜ் அவரை மலைக்க வைத்தது.. கடைசியில் அவர்கள் இருவரை மட்டும் எழுந்து நிற்கச் சொன்னார்..
“ஆங்... அர்ஜுன், ப்ரொஃப்பசர் ஸ்டீபன் சொன்ன ஸ்டுடென்ட் நீ தானே.. அண்ட் பெரியார் யுனிவெர்சிட்டி ஃபர்ஸ்ட்..?” என்றார் அர்ஜுனைப் பார்த்து...
“எஸ் சார்..” என்றான் அவன் பணிவாக..
“எக்ஸ்ட்ராடினரி பெர்சென்டேஜ்.. அண்ட் அஞ்சலி நீயும் அர்ஜுனுக்கு ஈக்வல் தான்.. பிகாஸ், மெட்ராஸ் யுனிவெர்சிட்டில தேர்ட்னா வெல் டன்.. சோ, யூ போத் ஆர் தி ரெப்ரசென்ட்டேடிவ் ஆப் திஸ் கிளாஸ்.. ஓகே... கீப் குட்..” என்று அவர் கூறும் போது வெளியே பெல் அடித்தது.. கிளாஸ் முடிந்து சென்றார் அவர்...
அர்ஜுனுக்கு அவர் காலிலே விழ வேண்டும் போல் இருந்தது.. எப்படியோ அஞ்சலியிடம் ரொம்பவும் சிரமம் இல்லாமல் பேசும் வாய்ப்பை அவர் ஏற்படுத்திக் கொடுத்ததாய் நினைத்தான்..
“டேய், போய் அவ கிட்ட பேசு டா.. அதான் சாரே சொல்லிட்டார்ல்ல..” என்று ரவி அருகில் இருந்து அவனை சீண்டிக் கொண்டே இருந்தான்..
“இரு டா.. லஞ்ச் டைம்ல பேசிக்கலாம்..” என்று அர்ஜுன் ரவியிடம் சொல்லிக்கொண்டிருக்க, அதற்குள் இன்ட்ரவல் டைமில் தோழிகள் நால்வரும் அவர்களிடமே வந்து விட்டனர்..
மது தான் முதலில் அர்ஜுனிடம் தைரியமாக பேசினாள்.. வாழ்த்துகளைத் தெரிவித்தாள்.. பிறகு, ஷாலினியும், ரூபாவும் பேசினர்.. ரூபா, ரவியின் தைரியத்தை வெகுவாக பாராட்டினாள்.. ரவிக்கு அப்படியே உச்சி குளிர்ந்தது...
“அஞ்சலி, கங்க்ராட்ஸ்.. சொல்லப் போனா, நீங்க தான் என்ன விட டேலன்ட்.. ஏன்னா, மெட்ராஸ் யுனிவெர்சிட்டி ரொம்ப டஃப் சிலபஸ்ன்னு கேள்விப்பட்டிருக்கேன்.. அதுல நீங்க யுனிவெர்சிட்டி தேர்ட்னா கண்டிப்பா கிரேட் தான்...” என்று அர்ஜுன் சொன்னதும் ஒரு சின்ன புன்னகை ஒன்றை மட்டும் உதிர்த்து “தேங்க்ஸ்...” என்றாள்...
“இவ இப்படி தான்.. யார்கிட்டயும் அவ்வளவு சீக்கிரம் பேசமாட்டா..” என்றாள் மது...
“பரவால்ல.. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க இல்லையா..? அப்பறம், வந்த முதல் நாளே ரொம்பப் பெரிய பொறுப்ப, நம்ம ரெண்டு பேர் கைல கொடுத்துட்டாங்க.. பட், நீங்க ப்ரீயா இருக்கலாம் அஞ்சலி.. எதுன்னாலும் நான் பாத்துக்கறேன்..” என்றான் அர்ஜுன் அவளிடம்...
அவளும் “ம்ம்ம்...” என்று தலையை மட்டும் ஆட்டினாள்... உடனே, தோழிகள் மூவரும் சிரித்தனர்...வெகு இயல்பாய் பேசி முதல் நாளே அஞ்சலியின் மனதில் இடம் பிடித்தான் அர்ஜுன்...
 
Top