Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ04 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

:(:(:(

என்ன சொல்ல... பாவம் கோமல் ? ? எனக்கு என்னமோ கோமலுக்கு நடந்த கொடுமையில கெளரவுக்கும் பங்கு இருக்கும்னு தான் தோணுது..  :mad::mad: பாவம் ஆடி ஓடி படிக்க வேண்டிய வயதில் கோமல்லுக்கு நேர்ந்த நிலை..
இதுவும் கடந்து போகும்... ஆனால் கோமல் கடந்து வந்த பாதை...

நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்...

கற்பு நிலையென்று சொல்ல வந்தார்,
இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்;
வற்புறுத்திப் பெண்ணைக் கட்டிக்கொடுக்கும்
வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம்.
 
Last edited:
பெற்ற தகப்பன் இருந்தும் அன்பு, பாசம் காட்ட ஆளில்லாமல் ஏங்கிய தன்னை முழுவதுமாக நம்பிய ஒரு சின்னப் பெண்ணை ஏமாற்ற இந்த கௌரவ் படுபாவிக்கு எப்படி மனசு வந்தது?
ஒரு பிஞ்சை கசக்கி வந்த காசில் சாப்பிட இவனுக்கு எப்படி மனம் வருது?
பெண்ணின் உடம்பை விற்று சாப்பிட்டு உயிர் வளர்க்கணுமா?
இதுக்கு நரகலைத் தின்ன வேண்டியதுதானே
கோமலின் துன்பங்கள் இன்னும் தீரலைன்னு நினைக்கிறேன்
இதோடு கௌரவ் அடங்கலை போலவே
பொன் முட்டையிடும் வாத்தை அறுத்து வீசியது போல நல்லதொரு தொகைக்கு வேறு ஒருவனிடம் கோமலை விற்று விட்டானா?
 
Last edited:
கோமல் நிலைமைக்கு முழு காரணமும் அந்த கௌரவ் தான்.. இது தெரியாம அவன் சொல்ற கோமல் ங்கற வார்த்தைக்காக பணிஞ்சு போனாளே... உடலை கெடுத்து விடலாம் ஆனால் மனதால் அவள் கற்பு நிறைந்தவள் தான்.. அவள் பத்தினி தான்... அந்த நெருப்பு தான் இத்தனை க்கு பிறகும் மூர்த்தி மூலம் தீர்க்கப்பட்டிருக்கிறது...

ஷோபா டியர் அழ வைச்சே தீரணுமின்னு கங்கணம் கட்டிட்டீங்க.. ப்ளீஸ் கொஞ்சமே கொஞ்சம் எங்கள நினைச்சு பாருங்க....
 
மிகவும் கனமான பதிவு,
கௌரவ் என்னும் கொடிய மிருகத்தின் பணத்தாசையால் ஒரு சிறிய மலர் கசக்கி எறியப்பட்டது,,
அதிலும் மீண்டு வரும் இந்த அக்கினி குஞ்சு,,, உடலைத்தான் கலங்க படுத்தலாம்,, ஆனா அவள் மனது தூய பசுந்தங்கம்
கண்ணீர் வருகிறது சகோ,,, மனச ரொம்ப பாதிக்குது
 
Top