Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ03 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
கதை தான் என்றாலும் மனம் பதைக்கிறது.அவள் தப்பி விட மாட்டாளா என்று துடிக்கிறது.மூர்த்தி பழி வாங்கிய நபர்களில் அந்த பெரிய மனிதர் முதலா இல்லை கணவன் என்ற பெயரில் இருக்கும் கௌரவ் ஆ?
நியூஸ் பேப்பரில் இந்த மாதிரி பெண்களை வன்கொடுமை செய்யும் செய்திகளை பார்த்தாலே கண்ணீர் வரும்.ஒரு வாராமவது அந்த தாக்கம் இருக்கும்.யாராவது வந்து காப்பாற்றி இருக்க கூடாதா?னு தோணும்.கதையை தொடர்ந்து படிக்க பயமாய் இருக்கு.
எல்லா இடத்திலும் நடந்து கொண்டு இருக்கு.சின்ன குழந்தைகள் கூட பாதிக்க படுகின்றது.பூனை கண்ணை மூடி கொண்டால் உலகம் இருண்டு விடாது.அதே போல் படிக்க பயப்பட்டால் அந்த நிகழ்வு இல்லை என்று ஆகி விடாது.

இருந்தாலும் மனசு பக் பக் அடிக்கிது.
 
Last edited:
:love::love::love::love::love:

இந்த கௌரவ் மாதிரி ஆளுங்களை எல்லாம் என்ன பண்றது... இப்படி சின்ன பொண்ணை காதலிக்கிறேன்னு அவங்க மனசை கலைச்சிட்டு, கல்யாணம்ங்கிற பேருல ஒரு தாலியையும் கட்டிட்டு, இப்படி அடுத்தவன் கிட்ட விட்டா.. :devilish::devilish::devilish:
ஐயோ கோமல், அவன் கூட போகாத.. நீ அந்த களிமண் சுவரும் தகரக் கதவும் உள்ள அந்த வீட்டுக்கே போம்மா..

அழுவதைக் கேட்க ஆட்களும் இல்லை
ஆறுதல் வழங்க யாருமே இல்லை
ஏழைகள் வாழ இடமே இல்லை
ஆலயம் எதிலும் ஆண்டவன் இல்லை

தாயின் மடியும் நிலைத்திடவில்லை
தந்தையின் நிழலும் காத்திடவில்லை
ஆறிலும் சாவு நூறிலும் சாவு
அம்மா எங்களை அழைத்திடு தாயே

காகித ஓடம் கடல் அலை மீது
போவது போலே நானும் போவேன்
ஆதரவின்றி ஆழ்ந்திடும் ஓடம்
அது போல் ஒன்றாய் மூழ்குதல் நன்றாம்
 
Last edited:
இந்தக் கதையை மேற்கொண்டு படிக்கவே பயமாக இருக்கு, ஷோபா டியர்
வல்லூறுக்கிட்ட மாட்டிய சின்னப் பறவை சிதைந்து சின்னாபின்னாமாகப் போவது உறுதியாக தெரியுது
கோமலுக்கு என்ன ஆகுமோ ஏதாகுமோன்னு நெனச்சாலே எனக்கு நெஞ்சு வலிக்குதுப்பா
அப்பா மாதிரின்னு சொல்லி புனிதமான உறவை கேவலப்படுத்தும் அந்த கிழட்டு
நரியை கண்டந்துண்டமாக வெட்டி காக்கைக்கும் கழுகுக்கும் இரையாக்கணும்
அந்த கௌரவ் பையனுக்கு ஆக்சிடெண்டுன்னு சொன்னது கூட பொய்தானா?
மைனர் பெண்ணைத் திட்டம் போட்டுக்
கடத்தி வந்து ஊர் ஊராக சுற்றி இங்கே
ஒரு பொட்டல் காட்டில் கொண்டு வந்து கௌரவ் தள்ளிட்டான்
இனி இதிலிருந்து மீண்டு கோமல் வெளியே வருவது கஷ்டம்தான்
 
Last edited:
Top