Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அவனின் திருமதி 1

Advertisement

Anusuba

Tamil Novel Writer
The Writers Crew
அந்த வீடு காலையிலே பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்தது..உறவினர்கள் வரவால் வீடே சந்தோஷத்தில் பொங்கியது.
"இந்தாங்க காபி என்று தன் கணவன் மாரிமுத்துவிடம் நீட்டினார் ராகினி...

அதனை பெற்று கொண்டவர்"எத்தனை மணிக்கு மாப்பிள்ளை வரதா சொல்லிருக்கார்…

பத்துமணி வாக்குல வந்துடுவானாம்…என்று கூறிக் கொண்டே அங்கு வந்தார் செண்பகம்..அந்த வீட்டின் குடும்ப தலைவி…

"ஓ அப்படியா என்று மணியை பார்த்தவர்,பத்துமணி ஆக இன்னும் அரைமணி நேரம் இருக்கும்மா..அதுக்குள்ள பக்கத்துல ஒரு நண்பன் இருக்கான் பாத்துட்டு வந்துடுறேன்,என்றவர் காபியை குடித்துவிட்டு அங்கிருந்து சென்றார்…

செண்பகம் கணவனை இழந்தவர்.ஒரு ஆண்,மூன்று பெண் பிள்ளைகளை பெற்றெடுத்தவர்..இரண்டு மகள்களுக்கு திருமணம் முடிந்து விட்டது..மூத்தவள் ராதிகா..அவளுடைய கணவன் செந்தில் ஒரு ஹோட்டல் நடத்தி வருகிறார்...அவர்களுக்கு நவீன் என்ற ஒரு மகன் உள்ளான்..இரண்டாவது மகள் கல்பனாவை தன் அண்ணன் மகன் கணேஷிற்கு திருமணம் செய்து செய்து அவர்களுக்கு ராம்,லெட்சுமன் என்ற இரண்டு மகன்கள் உள்ளன..இருவரும் இரட்டை பிறவிகள்...கணேஷ் ஒரு கார் ஏஜென்சி தொழில் நடத்தி வருகிறான்..அவனுக்கு ஹரிணி என்ற ஒரு தங்கை உண்டு.அவளை தான் சரணுக்கு திருமணம் செய்ய பெரியவர்கள் முடிவு செய்திருந்தனர்..அடுத்தவன் சரண்...படித்து முடித்து சிங்கப்பூரில் பணிபுரிகிறான்..அவன் தான் தனது அக்கா கணவர்கள் தொழில் துடங்குவதற்கு பண உதவி செய்தான்..தங்கையையும் படிக்க வைத்தான்...இப்போது தங்கையின் திருமணத்தை முடிப்பதற்காக ஏழு வருடங்களுக்கு பிறகு இப்போது தான் சொந்த ஊருக்கு திரும்புகிறான்..அடுத்தவள் ஹரித்தா..கல்லூரி படிப்பை முடித்து விட்டு திருமணத்திற்காக காத்திருப்பவள்...

செண்பகம் சமையல் அறைக்குள் நுழையும் போது அங்கே கல்பனாவும்,ராதிகாவும் சமையல் செய்து கொண்டிருந்தனர்…"ராகிணி சென்று அங்கிருந்த தக்காளியை எடுத்து நறுக்கினார்..

"அண்ணி நீங்க ஏன் இதெல்லாம் பண்றீங்க..நீங்க இங்குட்டு வாங்க நான் பாத்துகிறேன் என்றவரிடம்,"விடு செம்பா எம் மருமகனுக்கு நான் செய்யாம வேறு யாரு செய்வா என்றவர் மேலும் இரண்டு தக்காளியை எடுத்து நறுக்கினார்..

ஏண்டி ராதிகா உன் புருஷன் எப்போ வரதா சொன்னார்…

"இல்லம்மா ஹோட்டல மூடிட்டு வர முடியாதாம்..நீங்க எல்லாம் பேசி முடிங்க..கல்யாணத்துக்கு வரேனு சொல்லிட்டாருமா"

ஆமாண்டி. உன் புருஷன் வந்தா தான் ஆச்சரியம்..மனுஷன் ஒரு நல்லது கெட்டதுல கூட கலந்துக்க மாட்டேங்குறாரு...அப்படி சம்பாதிச்சி என்னடி வச்சிருக்கீங்க..ஊரு முழுக்க கடன்…

"ம்மா போதும்..சும்மா அவர திட்டாத..அப்பறம் எனக்கு கெட்ட கோவம் வந்துடும் என்று அன்னையை முறைத்தாள்..

உண்மைய சொன்னா உனக்கு கோவம் தாண்டி வரும்..ஏழு வருஷத்துக்கு அப்பறம் எம்புள்ள ஊருக்கு வரான்..அவன வந்து பாக்க கூட முடியாத அளவுக்கு உன் புருஷனுக்கு அப்படி என்னடி வேலை...முதல்ல சொந்த பந்தத்த மதிக்க கத்துக்க சொல்லு என்று காட்டமாய் கூறினார்…

என்னம்மா உம் புள்ள சம்பாதிக்கிறாங்குற திமிர்ல பேசுறீயா?

ஆமாண்டி..இப்ப வரைக்கும் அவன் தான உன் குடும்பத்த பாத்துகிறான்...அத இல்லனு சொல்ல முடியுமா உன்னால..?

போதும்மா எப்பவும் எங்கள மட்டம் தட்றதே உனக்கு வேலையா போச்சு என்றவள் தன் அன்னையை முறைத்துக் கொண்டே அங்கிருந்து சென்றாள்….

ஏன் செம்பா அவகிட்ட இப்படி பேசுற என்ற ராகிணியிடம்,பின்ன என்ன அண்ணி எல்லா விசயத்துலயும் அவரு இப்படியே பண்ணிட்டு இருக்காரு என்றவர்..,

கல்பனா மாப்பிள்ளைக்கு போன் பண்ணி எங்க வராருனு கேளு என்றார்…

மா கொஞ்ச நேரம் முன்னாடி தான் பேசுனேன்..அவுங்க அப்பவே ஏர்போர்ட்லேருந்து கிளம்பிட்டாங்களாம்..மறுபடியும் போன் பண்ணா அவர் எடுக்க மாட்டேங்குறாரு…

ஏன் எடுக்கல..என்றார் சற்று பதட்டத்துடன்..

மா ஏன் பயப்படுற..டிராவல்ல இருக்குறதுனால எடுத்துருக்க மாட்டார்..

ஓ அப்படியா என்றவர்,ஹரிணி எங்க என்றார்..

செம்பா அவ ஹரித்தா, பசங்க எல்லாரையும் கூட்டிட்டு தோட்டத்துல விளையாடுறா என்றார் ராகிணி..அப்போது,

ம்மா தம்பி வந்துட்டான் என்று ராதிகா குரல் கொடுக்க, அங்கிருந்த அனைவரும் வாசலை நோக்கி சென்றனர்..மாரிமுத்துவும் கடையிலிருந்து திரும்பியிருந்தார்..தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தவர்களும் வந்திருந்தனர்..

முதலில் காரை விட்டது இறங்கியது கணேஷ் தான்..இறங்கிய அவன் எதுவும் கூறாமல் பின்னாடி சென்று லக்கேஜை எடுத்து வைத்தான்...அப்போது காரின் கதவை திறந்து கொண்டு இறங்கினான் சரண்..அவனை பார்த்த செண்பகம் அவனை ஓடிச் சென்று அணைத்து கொண்டார்….மற்றவர்கள் சரணை அதிசயமாய் பார்த்தனர்..அவன் முன்பை விட இப்போது பார்பதற்கு வசீகரமாகவும்,அழகாகவும் இருந்தான்…

"ம்மா எப்படி இருக்க என்றவனிடம் "அதான் உன்ன பாத்துட்டால இனிமே அவ சந்தோஷமா இருப்பா என்றார் ராகிணி..

ஆமாண்ணா அம்மா இனிமே நைட்டெல்லாம் நல்லா தூங்குவாங்க என்ற ஹரித்தாவிடம்,ஏய் குண்டம்மா எப்படி இருக்க என்றான்…

ஹரித்தா அவனை முறைக்க, அதனை சட்டைசெய்யாதவன் அத்தை மாமா நல்லாருக்கீங்களா.."என்றான்…

நாங்க நல்லா இருக்கோம் மாப்பிள்ளை என்றார் மாரிமுத்து..அவர் பின்னால் நின்று கொண்டிருந்த ஹரிணிக்கு மனதிற்குள் பட்டாம் பூச்சி பறந்தது.. ஹரிணி அவணை ஒரக் கண்ணால் பார்த்து கொண்டிருந்தாள்…குழந்தைகள் அவனை அணைத்து கொண்டனர்..அக்கா இருவரும் நலம் விசாரித்தனர்..

ஏய் என்னங்கடி எம்புள்ளைய வாசல்ல நிக்க வச்சி பேசுறீங்க..வாடா கண்ணா உள்ள என்று அழைக்க…,

"அம்மா ஒரு நிமிஷம் என்றவன் திரும்பி காரின் கதவை திறந்தான்..அதுவரை இவர்கள் பேசியதை ஒருவித பயத்துடன் உள்ளே அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்த அவள் இறங்கினாள்...அவளை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி…

டேய் தம்பி யாருடா இந்த பொண்ணு.பாக்க ரொம்ப அழகா இருக்கா என்ற ராதிகாவை அனைவரும் வெட்டவா,குத்தவா என்பதை போல் பார்த்தனர்…

வாங்க உள்ள போய் பேசிக்கலாம் என்றவன் அவளை அணைத்து கொண்டு உள்ளே சென்றான்..அனைவரும் அவனது பின்னால் சென்றனர்..

அந்த இடமே அவ்வளவு அமைதி..மாரிமுத்து ஒரு சேரில் அமர்ந்திருக்க,கணேஷ் ஒரு சேரில் அமர்ந்திருந்தான்..சரணும் அந்த பெண்ணும் ஷோபாவில் அமர்ந்திருந்தனர்...அவளுக்கு பயத்தில் உடல் நடுங்க மெல்ல அவளது கையை தன் கையோடு கோர்த்து கொண்டான் சரண்...அதனை கண்ட அனைவருக்குமே ஒருவித சந்தேகம் உண்டாகியது…

வெளியே ராதிகா கேட்ட கேள்விக்கு அவன் பதில் கூறுவான் என்று அனைவரும் காத்திருக்க, அவர்களது காத்திருப்பை மேலும் நீட்டிக்காமல் வாயை திறந்தான் சரண்…

இ இவ பே பேரு மேனிகா..இவளுக்கு சொந்தமுனு யாரும்மில்ல..இவளுக்கு எல்லாமே நான் தான்…

எல்லாமே நீதானா? செண்பகம் ஒருவித படபடப்புடன் கேட்டார்…

இனிமே இவ இங்க தான் எங்கூட இருக்க போறா என்று கூறி முடிக்கவும்,அவனது கன்னத்தில் பளார் என்ற அறை விழவும் சரியாய் இருந்தது...ஆமாம் செண்பகம் அவனை அடித்திருந்தார்..அவன் கூறியதை கேட்டு அனைவரும் அதிர்ந்து போயினர்..ஹரிணி அழுது கொண்டே அங்கிருந்து ஒட,ஹரித்தா அவளை சமாதானபடுத்த பின்னாடியே சென்றாள்….


"டேய் என்ன காரியம் டா பண்ணிட்டு வந்திருக்க..இங்க உனக்காகவே ஒருத்தி காத்துகிட்டு இருக்குறது மறந்து போச்சா"அவளுக்கு துரோகம் பண்ண உனக்கு எப்படி டா மனசு வந்தது…"இதோ பாரு டா நீ பண்ணிட்டு வந்த காரியாத்தால எங்க அண்ணணும்,அண்ணியும் எப்படி இடிஞ்சி போய் உட்காந்துருக்காங்க.."அவுங்களுக்கு நான் என்ன பதில் டா சொல்லுவேன்..என்று கத்தினார்...சரண் எதுவும் கூறாமல் அமைதியாய் அமர்ந்திருந்தான்.மேனிகா நடுங்கி போய் அமர்ந்திருந்தாள்…

"என்னங்க இதெல்லாம் உங்களுக்கு முதல்லையே தெரியுமா?கல்பனா கேட்டாள் கணேஷிடம்…

"எனக்கெப்படி தெரியும்.."நான் அவன ஒரு உண்மையான நண்பனா தான் நெனச்சிருக்கேன்..ஆனா அவன் என்ன அப்படி நினைக்கல போல..அதான் எங்கிட்ட கூட சொல்லாம இப்படி ஒரு காரியம் பண்ணிருக்கான் என்று தன் பங்கிற்கு பொங்கினான் கணேஷ்..

ராதிகா "டேய் தம்பி என்னடா இப்படி பண்ணிட்ட..இந்த அக்காகிட்டயாவது ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமே?

"அவனுக்கு இங்க ஒரு குடும்பம் இருக்குறது ஞாபம் இருந்தா இப்படி பண்ணிருப்பானா?"என்று கத்தினார் செண்பகம்…

முதலில் சுதாரித்தது மாரிமுத்து தான்.."செம்பா நடந்தது நடந்து போச்சு..இனிமே அத பத்தி பேசி எதுவும் ஆக போறது இல்ல..மேற்கொண்டு நடக்க வேண்டியத பாரு என்றார் மாரிமுத்து…

பாத்தியாடா...நீ அவருக்கு எவ்ளோ பெரிய துரோகம் பண்ணிருக்க..அதெல்லாம் மனசுல வச்சிக்காம எப்படி பேசுறாரு பாரு.. அவருக்கு போய் துரோகம் பண்ண உனக்கு எப்படி டா மனசு வந்தது…"ச்சீ உங்கிட்ட பேசவே எனக்கு புடிக்கல..இனிமே என் முகத்துலே முழிக்காத...என்ன பொருத்த வரைக்கும் நீ செத்துட்ட….

"அத்தை என்ன பேசுறீங்க…"

"செம்பா என்ன பேச்சு இதெல்லாம்.." என்று கேட்ட எதையும் காதில் வாங்காமல் ரூமிற்குள் சென்று கதவை சாத்தி கொண்டார்…

மாப்பிள்ளை நீங்க ஒன்னும் கவலை படாதீங்க...செம்பா எதோ கோவத்துல பேசிட்டு போறா..கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும் என்று மாரிமுத்து அவருக்கு ஆறுதல் கூறினார்…

"மாமா என்ன மன்னிச்சிடுங்க" என்று அவரது கையை பிடித்து மன்னிப்பு கேட்டான்…

அய்யோ மாப்பிள்ளை என்ன பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு.."ஏய் ராகினி இந்த பொண்ண கூட்டிட்டு போய் சரணோட ரூம்ல விடு...போம்மா போய் குளிச்சிட்டு வா என்றார்…

"வாம்மா"என்று ராகினி அழைக்க,சிறு தயக்கத்துடன் அவர் பின்னே சென்றாள் மேனிகா….

மாப்பிள்ள நீங்களும் போங்க...ரொம்ப தூரத்துலேருந்து வந்திருக்கீங்க..ரொம்ப அசதியா இருக்கும்..போய் குளிச்சிட்டு வந்து சாப்பிட்டு கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க..என்றவர் கணேஷிடம் திரும்பி "அழைத்து போ" என்றார்…அவனும் அப்படியே செய்தான்…

மாரிமுத்து அப்படியே சிறிது நேரம் அமர்ந்திருந்தார்...அவர் மணம் சொல்லெண்ணா துயரத்தை வடித்தது...மெல்ல எழுந்தவர் தன் மகளை நோக்கி சென்றார்...அங்கே ஹரிணி அழுது கொண்டிருந்தாள்...அவளை மற்றவர்கள் சமாதானம் செய்து கொண்டிருந்தார்கள்..

மாமா நான் எவ்ளோ சொல்லிட்டேன்.அழுகைய நிப்பாட்டவே மாட்டேங்குறா..?என்று ஹரித்தா கூற,நீங்க எல்லாம் கொஞ்சம் வெளில போங்க.என்றவர் அவர்களை அனுப்பிவிட்டு தன் மகளின் தலையை ஆதரவாய் வருடினார்.."ப்பா என்று கதறி அவரை அணைத்து கொண்டாள்…

"அழாதடா செல்லம்...உனக்கு விதிச்சது இவ்வளவு தானு மனச தேத்திக்கோ...இனிமே அந்த கடவுளே நினச்சாலும் அத மாத்த முடியாது….என்று கூறியவரின் கண்களிலும் சிறு கண்ணீர்…

ப்பா..பா..அ..அத்தானுக்கு என்ன புடிக்கலயா அப்பா...நான் அழகா இல்லையாப்பா...அதனால தான் வேற பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டாரா?

அப்படி எல்லாம் இல்லடா..யாரு சொன்னா நீ அழகா இல்லைனு...உன் அத்தானுக்கு அந்த பொண்ண எதோ ஒரு காரணத்துக்காக புடிச்சு போயிருக்கும்..அதனால அந்த பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டார்...அதனால அவருக்கு உன்ன பிடிக்காதுனு அர்த்தம் இல்ல...நீங்க சின்ன குழந்தையா இருக்கும் போது உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணலானு நாங்க முடிவு எடுத்தோம்..அப்போ நாங்க யோசிக்கவே இல்ல..நீங்க எல்லாம் பெரியவுங்களா ஆயிட்டா உங்களுக்குனு ஒரு விருப்பம் இருக்கும்...அந்த விருப்பத்துக்கு தகுந்தபடி தான் நடந்துப்பீங்கனு அப்போ எங்களுக்கு தெரியாது..அது முன்னாடியே தெரிஞ்சிருந்தா நாங்க அப்படி பேசி உன் மனசுல ஆசைய விதச்சிருக்க மாட்டோம்...இதெல்லாம் எங்களோட தவறு...நாங்க சொன்னதால தான நீ அவர் மேல உயிரா இருந்த...இப்போ நானே சொல்றேன் இந்த நெனப்பெல்லாம் இன்னையோட மறந்துடு…


என்னால எப்படிப்பா அத்தான மறக்க முடியும்..கண்டிப்பா முடியாது.சின்ன வயசிலேருந்து அவர தான் நெனச்சிட்டு இருக்கேன்…. தீடிர்னு அவர மறந்துடுனு சொன்னா எப்படிப்பா...அழுதாள்…

மறக்குறது கொஞ்சம் கஷ்டம் தான்….ஆனா நீ கண்டிப்பா மறந்து தான் ஆகனும்...அதான் எல்லாருக்கும் நல்லது….முதல்ல அழுகுறத நிப்பாட்டு...காலபோக்குல எல்லாம் சரியாயிடும்….உனக்குனு ஒரு அழகான வாழ்க்கை காத்திருக்கு...இனிமே ஒருத்தன் உனக்காக பிறக்க போறது இல்ல..அவன் ஏற்கனவே பிறந்துட்டான்...அவன் கூடிய சீக்கிரம் உன்ன தேடி வருவான்….என்றார்…

அதேநேரம் கே.கே கன்ஸ்டக்க்ஷன் என்ற அந்த ஐந்து மாடி கட்டித்தின் உள்ளே நுழைந்தான் அஜய் கார்த்திகேயன்...எதிரே வந்தவர்கள் அவனுக்கு வணக்கம் வைக்க, அதனை சிறிதும் கண்டு கொள்ளாமல் லிப்டில் ஏறி நான்காவது மாடிக்கு சென்றவன் அங்கு இருந்த தனது கேபினை நோக்கி சென்றான். ..

"வாடா...இது தான் ஆபீஸ்கு வர நேரமா…"என்று சுழற்நாற்காலியில் அமர்ந்து சுத்தி கொண்டே கேட்டான் அவனின் நண்பன் யாதேஷ்..

அவனை முறைத்து பார்த்தவன்"இது ஆபீஸ் மேன்..பப்ளிக் பார்க் இல்ல..இப்படி சுத்தி விளையாட என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்…

"ஸாரி " என்றவன் சட்டென நாற்காலியை விட்டு எழுந்தான்…

அஜய் எதுவும் கூறாமல் நாற்காலியில் அமர்ந்தவன் தனது பார்வையை சிஸ்டத்தில் பதித்தான்…

"நான் இங்க ஒருத்தன் நிக்கிறேன்…"

"யாரு நிக்க சொன்னா உட்காரு…"

"நான் உட்கார வரல .."

"பின்ன எதுக்கு வந்த…"

"அம்மா பொண்ணு பாத்திருக்காங்க"

அவனை நிமிர்ந்து பார்த்தவன் "சரி" என்றான்..

"இவ்வளவு தானா உன்னோட ரியாக்ஷன்…"

அஜய் எதுவும் கூறாமல் வேலையில் கவனத்தை செலுத்தினான்…"

"நாளைக்கு பொண்ண பாக்க அம்மா உன்னையும் கூட்டிட்டு வர சொன்னாங்க…"

"என்னால வர முடியாது…"

"அத நீயே அம்மாகிட்ட சொல்லு.."

சட்டென நிமிர்ந்தவன் உனக்கு ஒருவாட்டி சொன்னா புரியாதாடா...நான் தான் எங்கையும் வரலனு போன்லயே சொல்லிட்டனே.அப்புறம் ஏண்டா ஆபீஸ்ல வந்து தொல்ல பண்ற...என்று கோவத்தில் கத்தினான்…

டேய் பொண்ணு பாக்க போறது உனக்கில்ல..எனக்கு….நீதான் கன்னி கழியாம சாமியார சுத்த ஆசைபட்டா உங்கூட சேர்ந்த பாவத்துக்கு நானும் கன்னி பையனா இருந்து செத்து போகனுமா?ஆதங்கத்தில் குமுறினான் யாதேஷ்…

"நீ கன்னி கழியிறதுக்கு கல்யாணம் தான் பண்ணனும்னு அவசியம் இல்ல…"என்றான் அவனை ஒரு மார்க்கமாய் பார்த்து…."

நான் அப்படிபட்ட பையன் கிடையாது...கல்யாணம் பண்ணி தான் கன்னி கழியிவன்..என்றான் உறுதியாய்…

அதற்கு மேல் உன் இஷ்டம் என்பது போல் அவன் தனது வேலையை பார்க்க தொடங்கினான்…

டேய் கார்த்தி..ஏண்டா இப்படி இருக்க..நடந்த எல்லாத்தையும் மறந்துட்டு உனக்குனு ஒரு வாழ்க்கைய அமச்சிக்க மச்சான் என்றான் நண்பன் மீது உள்ள அக்கறையில்….

அவ்வளவு தான்..அதுவரை இருந்த இலகு தன்மை காணாமல் போய் அவனது முகம் கோபத்தை தத்தெடுத்தது.....அவனது கண்கள் இரண்டும் இரத்தமென சிவந்தது.."எதடா மறக்க சொல்ற..நான் உயிரா நெனச்ச ஒருத்தி எனக்கு துரோகம் பண்ணிட்டு வேற ஒருத்தன் கூட...எனக்கு சொல்லவே நாக்கு கூசுதுடா…"வாழ்க்கையில இந்த காதல்,கல்யாணம் எல்லாம் வெறும் வார்த்தைங்கடா...அதை உணர்வு பூர்வமா புரிஞ்சு யாரும் வாழறது இல்ல..ஒரு ஆணும் பெண்ணும் தங்களோட உடல் பசிய தீர்த்துக்க காதல் கல்யாணம்னு பேரு வச்சி வாழறாங்க..எனக்கு அதெல்லாம் தேவை இல்லடா..என்னோட தேவைக்கு காசா தூக்கி போட்டா க்யூவில வந்து நிப்பாளுங்க..இதுக்காக என்னால கல்யாணம் எல்லாம் பண்ணிக்க முடியாது...என்று கூறியவன் அவ்வளவு தான் முடிந்தது என்பதை போல் தனது வேலையை பார்க்க தொடங்கினான்…

அவன் கூறியதை கேட்டு யாதேஷ் தான் அதிர்ந்து போய் நின்றான்.ஓரு நேரத்தில் பெண்களை எவ்வளவு மதித்தவன்..இப்பொழுது பெண்களை பற்றி இவ்வளவு கேவலமாக பேசுகிறான்..இதற்கெல்லாம் காரணம் அவள் தான்.ஆம் அவனும் ஒரு காலத்தில் ஒரு பெண்ணை உயிராய் நேசித்தான்..ஆனால் அவளோ இவனை விட இவனின் பணத்தை அல்லவா அதிகமாய் நேசித்தால்...தொழில் வளர்ச்சியில் தோல்வியே சந்திக்காத தனது நண்பன் காதலில் தோற்று போனான்..தன் நண்பனை பற்றி நினைத்தவனுக்கு அவளின் மீது கோபம் அதிகமானது..அவள் மட்டும் என் நண்பனின் வாழ்வில் வராமல் போயிருந்தாள் இவனுக்கு இப்படி ஒரு நிலமை வந்தே இருக்காது...கடவுளே சீக்கிரம் இவனோட மனச மாத்தி இவனுக்கு ஒரே நல்ல வாழ்க்கைய அமைத்து கொடுப்பா என்று வேண்டிக் கொண்டான்…"




ஹாய் மக்களே மீண்டும் நான் தான்...இதோ உங்களுக்காக இன்னோரு கதையுடன் வந்துட்டேன்.என்னோட முதல் கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவ என்னோட இந்த கதைக்கும் குடுப்பீங்கனு நம்புறேன்...

இதோ அவனின் திருமதி கதையின் முதல் பதிவு பதிந்து விட்டேன்..படித்து விட்டு மறக்காம உங்க கருத்துக்களை கூறுங்கள்..உங்களுடைய கருத்துக்களுக்காக மீ வெயிட்டிங்...
 
Last edited:
Top