Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழைப்பாயா ?3?

Advertisement

Rudhra Vikram

Member
Member
" வித்தார்த்"

அந்த பெயரை வாசித்ததும் ஏஞ்சலின் இதழில் சிரிப்பு குடி கொண்டது அந்த தருணத்திலும் கூட. அதை உள்வாங்கியது ஞாளியோ குரைத்துக் கொண்டே இருந்தது.

அதன் சத்தம் அவள் காதை வெகு நேரம் கழித்தே சென்றடைய பின்னர் தான் அதை கவனித்தாள்.

ஏஞ்சல்," ஹேய்... ஷ்ஷ்ஷூ.... சத்தம் போட கூடாது.. வா போகலாம்... " அவள் கூறியதும் தன் சத்தத்தை நிறுத்திக் கொண்டது. ஆனால், அதன் பார்வை மட்டும் எங்கோ நிலை பெற்றிருந்தது.

தன் சோர்ந்து போன தோளில் மேலும் பாரத்தை உணர்ந்தவள் திரும்பி பார்க்க அங்கு யாருமே இல்லை. தன் தோளில் ஒரு முறை கைவைத்து விட்டு மீண்டும் அந்த காகிதத்தைப் பார்த்தாள்...

அதைப் பார்த்து மெல்ல புன்னகை பூத்தவள் அங்கிருந்து நடையைக் கட்டினாள்.

இத்தனை நேரமும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்த இரு விழிகளை மீண்டும் சந்திப்பாளா...

***

சில நாட்களுக்குப் பின்...

" கமான் மேரி... புரிஞ்சிக்கோ.... நான் எங்கையோலாம் போகல... இதே ஊர்ல தான் இருக்க போறேன்... " ஏஞ்சல் மன்றாடிக் கேட்க அவள் மேல் இருந்த கோபத்தில் பல்லைக் கடித்துக் கொண்டு நின்றாள் அவள்...

" இங்க பாரு... வீடு பாத்து குடுத்ததே நம்ம மாம்ஸ் தானே... " என்று அவரைக் கோர்த்து விட...

" அடிப்பாவி... " என்று வாயில் கை வைத்தவரைப் பார்த்து பலிப்பு காட்டினாள் ஏஞ்சல்....

மேரி பார்வையாலே எரித்து விடுவது போல கையில் சப்பாத்தி கட்டையுடன் அவர் அருகில் செல்ல...

அவரோ, " ஐயோ... செல்லக்குட்டி நம்பு மா... அவ என்ன நல்லா மாட்டி விட பாக்குறா... நான் அப்டி பண்ணுவேனா சொல்லு.. " என்று கூறியபடியே பின்னால் நகர... கால் தடுக்கி ஒரு சோபாவில் விழுந்தார்.

ஏஞ்சல், " நம்பாத மேரி... 2019 டிசம்பர் 12, நைட்டு 8:37க்கு ஹோம்ல இருந்து வீட்டுக்கு வரும் போது சொன்னாருல்ல... " என்றதும் அவளை விநோதமாக பார்த்தார் அவர்.

" அடியேய்ய்ய்... அதெல்லாம் சும்மா ஒரு விளையாட்டுக்கு உன்ன எங்கையாவது போய் விட்டுட்டு வந்துருவேன்னு சொன்னது... அதுக்குனு இப்டியா... " என்க.. ஏஞ்சல் கண்கள் பிரகாசமாக ஒளிர்ந்தது.

" பாத்தியா மேரி.. இன்னும் நியாபகம் வச்சிருங்காரு... அப்போ என்ன அர்த்தம்..?? இஸ்கா க்யா மத்லப் ஹை....?? " முப்பத்திரண்டு பல்லையும் காட்டி கூறியவள்... மேரி பார்த்ததும் கண்ணைக் கசக்கிக் கொண்டு அழத் தொடங்கினாள்...

" என்னமா இப்டி பண்றிங்களே மா... " அவர் வாயில் கை வைத்து கூற... மேரி அவரை சரமாரியாக கட்டையால் அடிக்க துவங்கினாள்.

ஏஞ்சல் அருகில் இருந்த டேப் ரெக்கார்டரை ஆன் செய்ய... அதில்....

ஏய் போட்டு தாக்கு வர ஒரு புரா... போட்டு தாக்கு....
வங்க கடல் எற போட்டு தாக்கு....
ஏய்... போட்டு தாக்கு ஏய்... சக்கைப்போடு நீதான் போட்டு தாக்கு....

ஏய் போட்டு தாக்கு போட்டு தாக்கு..
ஹிட்டு சாங் ஒன்னு போட்டு தாக்கு...

பாடல் ஒலிக்க... மேரி ஜோசஃபை சப்பாத்தி கட்டையால் தாக்க... சந்தோஷ மிகுதியில் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருந்தாள் ஏஞ்சல்.

அடித்து முடித்ததும் களைத்து போய்
நாற்காலியில் அமர... ஏஞ்சலும் ஆடுவதை விட்டு விட்டு பாட்டை அணைத்து நல்ல பிள்ளை போல வாயில் கை வைத்து நின்றாள்.

தலையை உலுக்கிக் கொண்டு எழுந்தவன் கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தைப் பார்த்து அதிர்ந்து போனான். தலை முடி கலைந்திருக்க... சட்டையில் அங்காங்கே வேறு கிழிந்திருந்தது.

அப்படியே ஏஞ்சலை ஏறிட்டவர் ஒன்றும் தெரியாத அப்பாவியின் முகத்தை நகல் எடுத்தது போல இருந்த அவளின் முகத்தை தான் பார்த்தார்.

ஜோசஃப், " நான் அடி வாங்குனது கூட எனக்கு வலிக்கல டி.. இப்டி சம்மந்தமே இல்லாத மாதிரி ஒரு ரியாக்ஷன் தர பாத்தியா... "

"ஓஓ" என்று அழத் தொடங்கியவரைப் பார்த்ததும் ஏஞ்சலுக்கே பாவமாக தான் இருந்தது.

" மேரி மா... அப்டினா நான் கிளம்பட்டா... " என மீண்டும் ஆரம்பிக்க... மேரி அந்த சப்பாத்தி கட்டையை மீண்டும் எடுத்தாள்..

ஜோசப், " இங்க பாருங்க... சண்டை போடுறதுன்னா நீங்க ரெண்டு பேரும் போடுங்க டி... எதுக்கு அடுத்தவன் தலைய உருட்டி ஃபுட் பால் விளையாட்றிங்க.... " புலம்பலாக கூறினார் அவர்.

" அடச்சீ... போ தூர.... " என்று அவனை அதே நாற்காலியில் தள்ளி விட்டாள் மேரி.

மேரி, " ஏய்ய்.... என்னடி நினைச்சிட்டு இருக்க... இருபத்தி அஞ்சு வயசாகுது.... இன்னும் இப்டியே தான் சுத்தீட்டு இருப்பேன்னா எப்டி....?? " அக்கறையில் கூறினாலும் கோபத்தின் உச்சியில் நின்று கத்தினாள் அவள்...

ஏஞ்சல், " நீயே 27ல தானே கல்யாணம் பண்ண... அப்பறம் என்ன... இப்போ எதுக்கு அந்த பேச்சு... நான் போறேன்னா... போறேன்... " என்று விட்டு தன் பெட்டியை இழுக்க முடியாமல் இழுக்க... இதையெல்லாம் என்ன நடக்கிறதென்றே தெரியாமல் மல்லாக்க படுத்தபடி பார்த்துக் கொண்டிருந்தது ஞாளி.

மேரி, " அப்போ நான் சொல்றத கேக்க மாட்ட அப்டி தானே... " என்று அவள் கண்கள் கலங்கி கேட்டாள்.

அதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் இருந்தாலும் மனத்தை கல்லாக்கி கூறினாள் ஏஞ்சல்.

" மேரி... இங்க பாரு.. என்ன பாரு." என்று அவள் கன்னத்தை பிடித்து தன் புறம் திருப்பினாள் ஏஞ்சல்.

" உனக்கும் மாமாவேக்கும் நிறைய வொர்க் இருக்கும்னு எனக்கு தெரியும் மேரி.... நீ எனக்கு அக்கா மட்டும் இல்ல... எனக்கு ஒரு நல்ல ஃபிரண்ட்... இங்கையே நான் எவ்ளோ நாளைக்கு இருப்பேன் சொல்லு.... பக்கத்துல ஒரு எஃப் எம் ஸ்டேசன்ல வேலைக்கு சேர்த்துக்குறேன்னு சொன்னாங்க.. நான் இங்கிருந்து சும்மா கொஞ்ச தூரத்தில தானே இருக்கேன்... ஏதோ ஊரவிட்டு போகுற மாதிரி பேசுற... " என்றவள் பின் தன் பெட்டியை இழுத்துக் கொண்டே நடந்தாள்.

ஏற்கனவே ஓரிடத்தில் பார்த்து வைத்திருந்த வீட்டிற்குத் தன் பொருட்களை எல்லாம் மாற்றி இருந்தாள் அவள். மேரியிடம் கூறினாள் இப்படி எதாவது கூறுவாள் என்று தான் அவளுக்கு தெரியாமல் எல்லாவற்றையும் செய்து விட்டு பின்னர் உரைத்தாள்.

ஏஞ்சல், " அப்பறம்.... மாமா எதுவும் பண்ணல... நான் சும்மா தான் அப்டி சொன்னேன்... அவர்கிட்ட சண்டை போட்டுட்டு இருக்காத மேரி... " என்க... இப்போது ஏஞ்சலை அடிக்க துரத்தினாள் மேரி.

" சரி.. சரி... போதும்... இந்த குதி குதிச்சா பூமி என்னத்துக்கு ஆகிறது.... " என்றவளை ஆரத்தழுவிக் கொண்டாள் மேரி.
அவளிடம் இருந்து மெதுவாக விலகிய ஏஞ்சல் ஜோசஃபை பார்த்தாள். மேரி எதையோ எடுக்க உள்ளே சென்றாள்

" மாம்ஸ் நான் திரும்ப வரம் போது குழந்தை சத்தம் கேட்கனும்... " என்க அவளை எதை எடுத்து அடிப்பது என்று தேடியும் கிடைக்காமல்...

" நீ பண்ண காரியத்துக்கு நீ வரும் போது நான் அடி வாங்குற சத்தம் தான்டி கேட்கும்... " என்று சலித்தவாறே கூறனார் அவர்.

" ஹிஹி... மேரிகிட்ட ரெகமன்ட் பண்ணிட்டேன் மாம்ஸ்... அடிக்கிற அளவுலாம் போக வேணாம்னு சொல்லி வச்சிருக்கேன்.. டோன்ட் வொரி... " என அவர் தோளைத் தட்டிக் கொடுத்து விட்டாள் அவள்.

அதற்குள் உள்ளே சென்ற மேரி ஒரு சில்வர் நிற செயினுடன் வர அவளை வித்தியாசமாகப் பார்த்தாள் ஏஞ்சல்...

" இதை பத்திரமா வச்சிக்க.... ஆனா... சரி... வேணா.... அதுக்கான நேரம் வரும்... பத்திரமா இரு... அங்க இங்க சுத்தாத... " என்று அவள் கழுத்தில் அணிவித்தாள் மேரி.

வழி முழுக்க அதை கையில் வைத்து ஆராய்ச்சி செய்தவாறே வந்தவள் அந்த வீட்டின் முன்பு நின்றிருந்தாள்.

மரத்தால் செதுக்கப்பட்ட வீட்டின் மேல் கொடிகள் படர்ந்து பந்தல் போட... அங்காங்கே சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் பூக்கள் சீரியல் பல்புகள் போல காட்சியளித்தன.

அந்த கார்கால மழைத்துளிகள் அவ்விடத்தை நறுமணத்தால் நிரப்பி இருக்க.... ஆழ மூச்சிழுத்து அவ்விடத்தை ரசித்தாள் அவள்.

அந்த ஞாளியோ அதற்கு எதிர்மாறாக வித்தியாசமான ஒலி எழுப்பிக் கொண்டிருந்தது.

அந்த செயினின் டாலரை தன் இதழ்களுக்கு இடையில் சிறை பிடித்து வைத்தபடி அவ்விடத்தை ரசித்தாள் அவள்.

திடீரென இடியும் மின்னலும் கர்ஜித்து பெரும் சத்தத்தை உருவாக்கி மிரட்டல் விடுத்தன.

" அம்மாஆஆ.... " பயத்தில் கத்திய ஏஞ்சலின் காலைச் சுற்றி நின்று கொண்டது அந்த ஞாளி.

அவள் இதழின் இடுக்கில் சிக்குண்டு கிடந்த அந்த டாலர் அதிலிருந்து விடைபெற்று... தானே திறந்து கொண்டது. அதில்.....

அதே எழுத்து.... V ....

அந்த மின்னலைப் போலவே அவளின் கழுத்தில் இருந்த அந்த செயினில் மின்னியது அந்த எழுத்து.....
 
Top