Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழைப்பாயா ?11?

Advertisement

Rudhra Vikram

Member
Member
நீலம் நிறைந்த தொட்டியில் சுண்ணாம்பைக் கலந்தது
போல வானம் தோற்றமளிக்க, கதிரவன் தன் கதிரை கொஞ்சம் கொஞ்சமாக தூவிக் கொண்டிருந்தான்.

சோம்பல் முறித்து நிதானமாக எழுந்து கண்ணைக் கசக்கினாள் ஏஞ்சல்...

அடுத்த அறையில் இருந்து காலையிலேயே சுப்ரபாதம் தன் அறையை எட்டியிருந்ததில் மூளைக்குள் எச்சரிக்கை மணி அடிக்க... முடிந்தமட்டில் சீக்கிரமே கிளம்பி பரபரப்பாக வெளியில் வந்தாள்...

அதுவரை வேலை விசயமாக இருந்த உள அலைவில் ஜோசஃபிடம் கத்திக் கொண்டிருக்க, அவனோ காதில் பஞ்சை வைத்துக் கொண்டு செய்தித் தாளில் மூழ்கி இருந்தான்.

"மாம்ஸ்... வாட் எ சேஞ்ச் ஓவர் மாம்ஸ்... அப்டியே ரித்திக் ரோஷன் மாதிரி இருக்கிங்க... " என்றதும் கண்கள் மின்ன பார்த்தவன், அடுத்த விநாடியே புருவ முடிச்சுடன் அவளைப் பார்த்தான்.

" இப்ப எதுக்கு இவ ஐஸ் வக்கிறா " என ஜோசஃப் யோசனையில் மூழ்க... மேரி சற்று சாந்தமாகி, மற்ற இருவரையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

" மாம்ஸ்... வாட் ஹேப்பன்டு?? " அவள் கேட்ட விதத்தில் ஏதோ உள்குத்து இருப்பதாய் தோன்ற...

" இப்ப உனக்கு என்ன வேணும்? " அவரின் இந்த பதிலையே ஆவலாக
எதிர்ப்பார்த்திருந்தது காத்திருந்தது போல் முகம்
பிரகாசமானது ஏஞ்சலிற்கு.

"ஹிஹி... பெருசா எதுவும் வேண்டாம் மாம்ஸ்... காசு கொடுத்தா நான் அப்டியே..... " என இழுத்து ராகம் பாடி முடிப்பதற்குள் ஏஞ்சலை ஏற இறங்க பாரத்தாள் மேரி.

" அந்த டீ கடைக்கு போய் அரட்டை அடிக்கிறதுல அப்டி என்ன ஃபன் உனக்கு? " என்றவளை வெறித்தனமாக முறைத்தாள் ஏஞ்சல்.

" அது எங்க சங்கத்தோட ஆஃபீஸ் மீட்டிங்... அப்டிலா பொசுக்குனு டேமேஜ் பண்ண கூடாது... " என்றவாறே ஜோசஃபிடம் திரும்ப அவனோ கிழிந்து போன ஐந்து ரூபாய் தாளை நீட்டினான்...

அதை வாங்கி சுற்றி முற்றிப் பார்த்தவள், " ஏன் மாம்ஸ்... இது இன்னுமா உயிரோட இருக்கு...?"

அவளின் தலையிலேயே ஒரு கொட்டு வைத்தவன்
" உனக்கு இவ்ளோ காசு தந்ததே பெருசு... இதுல நக்கலா பண்ற... அந்த காச குடு... உனக்கு கிடையாது... " என கையிலிருந்ததை பிடுங்க

" ஆமா, இந்த காசுக்காக தான் ரித்திக் ரோஷன் வரைக்கும் போனேனா?" என்றபடி அவனின் சட்டை பையிலிருந்து நூறு ரூபாய் தாளை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினாள்.

வழக்கமாக சந்தர் மாமாவின் கடைக்கு சென்று கொண்டிருந்தாள் அவள்... அதே சாலை தான் என்றாலும் ஒவ்வொரு முறையும் அதைக் கடக்கும் போது அவளுக்கு புதிதாக தான் தெரியும். வழி நெடுக ரசித்துக் கொண்டே போக,
அவள் மீது எதுவோ மோத வருவது போல் பின்னிருந்து அபாயக் குரல் கேட்க... சட்டென விலகிக் கொண்டு அந்த மிதிவண்டியைக் கையில் பிடித்து நிறுத்தினாள்.

"நமக்குன்னே கிளம்பி வரானுங்கய்யா" என ஒரு புறம் மூளை புலம்பியது.

" என்ன குட்டி பையா நீ.. சைக்கிள் ஓட்டி பழகுறதுனா வேற எங்கையாவது பண்ணலாம்ல? இங்க வண்டிலா நிறைய போகும் வரும்... " என்றவளை திரும்பி பார்த்தான் வித்தார்த்.

ஏஞ்சல் அவ்வளவு நேரம் மூச்சு வாங்குமளவு பேசியவள் சட்டென அமைதியாகினாள். அவனின் கண்களை இமை மூடாமல் பார்த்தவள் அதை எங்கோ பார்த்தது போல தோன்றிய பிரம்மை கலைத்து விட்டு சுய நினைவுக்கு வந்தாள்.

அவனும் அவளை அடையாளம் கண்டு கொண்டதாய் ஒரு சிநேக புன்னகை வீச,
ஏஞ்சல் அவனை என்னவோ போல பார்த்தாள்.

அது எதற்கென்றே தெரியாமல் குழம்பி நின்றான் வித்தார்த்.

" நம்மல விட இவ்ளோ ஹைட்டா இருக்கானே... " என மேலே பார்த்தாள் அவள்.

"மேல என்ன இருக்கு... " என்றவாறே மேலே இவனும் மேலே பார்க்க அங்கு தான் ஒன்றும் இல்லையே. அவனும் பொறுமையாக நின்றிருக்க... ஏஞ்சலே தொடர்ந்தாள்.

" ஹிஹி... என்ன விட கொஞ்சம் ஹைட் தான்... பரவாயில்லை... நீ குட்டி பையன் இப்ப தான் சைக்கிள் ஓட்ட ஆரம்பிச்சிருக்க... அதனால மன்னிச்சு விட்றேன்" என்றவாறே நடக்க... பின்னால் ஒரு புதருக்குள் மறைந்திருந்த ஸ்கூபியை முறைத்து விட்டு இவனும் நடந்தான்.

" இவன் குறுக்க வந்ததுக்கு நம்மல டேமேஜ் பண்ணிட்டாளே " என்றவாறே நடக்க துவங்க... ஒரு சிறுவன் அவனின் பெயரை வைத்து அழைத்தான்...

" வித்தார்த் அண்ணா... " அவன் கத்தியதில் வித்தார்த் திரும்பினானோ என்னவோ முதலில் திரும்பியது ஏஞ்சல் தான்.

" வித்தார்தா!!! எங்க? " அந்த சிறுவனுக்கும் மேலாக அவள் கத்த... சற்று குழம்பி தான் நின்றான் வித்தார்த்.

" எக்ஸ் க்யூஸ் மீ... " அவன் ஏஞ்சலை அழைத்தும் அவனை கண்டு கொள்ளாது தூரத்தில் ஓடி வந்த சிறுவனை சுற்றி அலைபாய்ந்த விழிகள் ஓரிடத்தில் நின்றது.

திரும்பி பார்த்தவள் அவன் ஏதோ சிந்தனையில் தன்னையே பார்ப்பதை உணர்ந்து
" என்ன?? " என்க அதற்காகவே காத்திருந்தவன் போல,

" வித்தார்த் அங்க தான் இருக்கான் பாருங்க... " என ஓரிடத்தை காட்ட... அவளோ கழுத்து சுளுக்கிக் கொண்டாலும் பரவாயில்லை என வேகமாக திரும்பி அங்கு பார்க்க அங்கு யாருமில்லை.

திரும்பி அவனை முறைக்க... அவனோ வயிற்றை பிடித்து சிரித்துக் கொண்டிருந்தான்...

" டேய்... நீ குட்டி பையன்னு சும்மா விட்றேன்... என்கிட்ட இதெல்லாம் வேணா... " என எச்சரிப்பது போல கூறி செல்ல அவனோ இன்னமும் லேசாக சிரித்தபடி அந்த சிறுவனை தூக்கினான்.

" அவன் வித்தார்த்னு தானே கூப்டான்... " என்ற கேள்வியை ஏஞ்சல் முன் வைக்க...

" இல்லையே... அவன் சித்தார்த்னு தான் சொன்னான்... என்னடா குட்டி பையா... " என்று ஒன்றும் அறியா அந்த சிறுவனை உள்ளே இழுத்து விட, அந்த சிறுவனும் என்னவோ ஏதோ என தலையை ஆட்டி வைத்தான்.

" என்னமோ சொல்றான்... ஆனா... " என இல்லாத மூளையை வைத்து யோசிக்க வேண்டாமென
வித்தார்தைப் பார்க்க அவன் அந்த சிறுவனிடம் பேசிக்கொண்டிருந்தான்...

"அப்பறம்... அவன் பேர மிஸ்யூஸ் பண்ற வேலைலா வச்சிக்காத என்ன... "

அவள் எச்சரிக்கை விடுத்த விதமே வித்தியாசமாக இருக்க அவனும் வேண்டுமென்றே...

" யாரு பேர? எதுக்கு மிஸ் யூஸ் பண்ண போறேன்? "

அவனை வெட்டவா குத்தவா என முறைத்தவள் தனக்குள்ளே சமாதானம் கூறிக் கொண்டு தொடர்ந்தாள்.

" குட்டி பசங்களாம் அதிகமா கேள்வி கேக்க கூடாது... ஷ்ஷ்ஷ்... "
என்றவள்...

" நமக்கு யார கூப்டாலும் நம்ம ஆள கூப்பிட்ற மாதிரியே இருக்கே... " மைண்ட் வாய்ஸ்
என நினைத்து வாய்விட்டே கூறி விட...

முகத்தில் அதிர்ச்சியின் சாயலை தெறிக்க.. அவளை கண் எடுக்காமல் பார்த்தான் வித்தார்த்...

" என்னஅஅஅ...?? "

" மைண்ட் வாய்ஸ்னு நினைச்சு சத்தமா சொல்லிட்டேனோ... அதுக்கு எதுக்கு ஷாக் ஆகுற தம்பி... " என்றவாறே அவள் முன்னேறி செல்ல...

" அட நில்லுங்க... "

அந்த சிறுவனை இறக்கி விட்டு வழியனுப்பி வைத்தவன்,

" ஓய்..யக்காவ்வ்வ்.. "

இரண்டே எட்டில் ஏஞ்சலின் அருகே நடந்தபடி வந்தான்...

" அட நம்ம ஊரு பாஷை... சொல்றா தம்பி... ஏன் இப்டி ஓடி வர...? " என்றவளை முறைத்தவன் பின்,

" இல்ல கா.. நீ ஏதோ சொன்னாயே... " என்க

" என்னடா தம்பி மரியாதைலாம் குறையிது... ம்ம்? " அணிந்திருந்த சட்டையின்
ஸ்லீவை ஏற்றி இல்லாத மீசையை முறுக்கிக் கொண்டு அவள் கேட்டதில் உதடு வரை வந்த சிரிப்பை கட்டுப்படுத்திக் கொண்டான் வித்தார்த்.

" இல்ல... அக்காக்கு ஹெல்ப் பண்ணலாம்னு தான்... சும்மா சொல்லு கா... " என்றபடி சந்தர் மாமா கடையும் தாண்டி சென்ற ஏஞ்சலை இழுத்து அமர வைத்து அவனும் அமர்ந்தான்.

" அது வந்து டா... தம்பி... என்னனா... அது... அது... " என நகத்தை கடித்துக் கொண்டு இருந்தவளைப் ஆச்சரியமாக பார்த்தது வித்தார்த் என்றால் அவனுக்கும் மேலாக ஆச்சரியத்தில் இருந்தார் சந்தர் மாமா.

" என்னமா இது? புதுசா" என்றபடி அவளின் கப்பில் காஃபியை கொடுக்க...
அதை வாங்கி கொண்டு

" ஈஈஈஈஈ.... இதுக்கு பெயர் தான் வெக்கமாம் சந்தா மாமா.. அதான் சும்மா ட்ரை பண்ணேன்... " என்றதும் அருகிலிருந்த வித்தார்த் சிரிக்க...

" ஏன்டா சிரிக்கிற... அக்கா லவ்வ பாத்தா உனக்கு சிரிப்பு வருதா... பே... "

கோபத்தில் காஃபியை உள்ளே தள்ளியவள் கப்பை அதன் இடத்தில் வைத்தவளுக்கு அப்போதே ஒன்று தட்டுப்பட்டது.

அங்கு வித்தார்தின் கப் இருக்கவில்லை.

" சந்தா மாமா... என் ஆளோட கப் எங்க... " என்றதும் அங்கிருந்த பற்கள் இல்லாத தாத்தா கூட வாயைப் பிளந்து கொண்டு பார்த்தார்.

" அ... அ.. அது.. என்ன மா சொன்ன. " என அங்கு அமர்ந்திருந்த வித்தார்த்தை கண்களால் காட்டி அவன் இங்கு தான் இருக்கிறான் என்று கூற அவளோ திரும்பி பார்த்து ஒன்றும் அறியாத வித்தார்தை முறைத்தாள்.

கோபத்தில் தஸ் புஸ் என மூச்சு வாங்க நடந்து அவன் முன் வந்து நின்றவள் அவனிடம் இருந்து கப்பை பிடுங்கி,

" டேய் தம்பி... என் ஆளோட கப்ல நீ எப்டிடா குடிக்கலாம்... அடி பிச்சு எடுத்துருவேன்... உனக்கு வேற கப்ல காஃபி வாங்கி தரேன். இத டச் பண்ண.... " என மிரட்ட வித்தார்திற்கு
புரை ஏறியது.

" ஆங்.. பாத்து பாத்து.. "

இது தான் சாக்கு என நன்றாக அவன் தலையில் நாலு தட்டு தட்டிவிட்டு அதை தன் கப் இருந்த இடத்தின் பக்கத்திலேயே வைத்து விட்டு வந்து அமர்ந்தாள்.

சந்தர் மாமாவிடம் தன்னை பற்றி அவளிடம் எதுவும் கூற வேண்டாம் என சைகையால் கூறி விட்டு அங்கிருந்து சிரித்துக் கொண்டே எழ,

அவனை வழி மறித்து நின்றாள் ஏஞ்சல்.

" ஆமா, நீ யாரு? உண்மைய சொல்லு?? " என்றதும் அதிர்ந்து போய்
அவளைப் பார்த்தான் வித்தார்த்.

" என்ன... நா... நான்... என்ன உண்மைய சொல்லனும்... ந.. நான் யாருனா... என் பெயர் சித்தார்த்.. வேற என்ன?" என்றவனை மேலும் முறைத்தாள் அவள்...

" நான் கேட்டது உண்மைய மட்டும் தான்... " என அழுத்தமாக கூற அவளை நிமிர்ந்து பார்த்தான்.

வித்தார்தின் பேசத் திறந்த வாயிலிருந்து வெறும் காற்று தான் வந்தது.
 
Top