Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழைப்பாயா ?10?

Advertisement

Rudhra Vikram

Member
Member
அவன் வயிற்றுப் பகுதியில் கட்டப்பட்டிருந்த கட்டை மீறி, அவன் அணிந்திருந்த சட்டையைத் தாண்டியும் இரத்தம் வழிய...

அதை இறுக்க பிடித்தவன் தேவியைக் காப்பாற்ற சென்றிருந்த சமயம்,
அந்த தக்ஷன் கூறிய சொற்களை நினைவு கூர்ந்தான்....
****
" தட்.. தட்... தட்... "

வாட்சனின் வீட்டிக் கதவைத் தட்டி வெகு நேரம் கழித்தே வந்தார் அவர்...

" அட... நீயா... என்ன இது.. இந்த நேரத்துல சும்மா சும்மா... டிஸ்டர்ப் பண்றீங்க... " கொஞ்சம் கறாரான கூற...

அவரின் உச்சந்தலையில் ஆணி அடித்தால் என்ன என்றிருந்த கோபத்தை உள்ளங்கையில் அடக்கி...

" சார்... ஒரு பொண்ணு மிஸ்ஸிங் சார்... இதுவே உங்க பொண்ணா இருந்தா இப்டி தான் பண்ணுவீங்களா... இப்ப கூட உங்ககிட்ட வந்து நின்னு பேசனும்னு அவசியம் இல்ல... நானே போய் செக் பண்ண எவ்ளோ நேரம் ஆகும்... வித்தார்த் சொன்னான்னு மட்டும் தான் பொறுமையா
பேசிட்டு இருக்கேன்.. "

கார்த்தி கூறியதில் எதை கவனித்தாரோ இல்லையோ வித்தார்த் என்ற சொல் காதை எட்டியது தான் தாமதம்..

" வித்தார்த்!! க.. கம் இன்.. " என வழி விட...

அவனும் உள்ளே சென்று சிசிடிவியில் பதிவானவற்றில் தேடத் தொடங்கினான்...

அதில் அந்த பேருந்து நிலையம் தெள்ள தெளிவாக தெரிய... திரும்பி வாட்சனைத் தீப்பார்வை பார்த்துவிட்டு தொடர்ந்தான்...

அதில் அந்த பெண்ணை சிலர் ஒரு காரில் ஏற்றி செல்வது தெரிய... அந்த காரின் நம்பர் பிளேடில் இருந்ததைக் குறித்துக் கொண்டான்...

செந்தில் கூறியது போல அவர்களுடனேயே ஆரம்பத்தில் இருந்து ஒருவன் நின்றிருந்தான்...
அவன் ஏதோ அலைப்பேசியில் பேசிக் கொண்டே இருந்தது தெரிந்தது...

இவர்களை பற்றிய தகவல்களை அந்த கும்பலிற்கு தெரியப்படுத்தி இருக்கலாம் என யூகித்தவன்... அனைத்தையும் எடுத்துக் கொண்டு திரும்பி நிற்க...

கார்த்தியைத் தடுத்தார் வாட்சன்...

" தம்பி.. சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.. அந்த கும்பல் என்ன கேட்டாலும் அத தந்துட்டா அவங்களே விட்ருவாங்க பா... இது ரிஸ்கான விஷயம்... "

ஏதோ அவர் கூறுவது
பாதி புரிந்தும் பாதி புரியாததுமாக அவரை ஏறெடுத்தான் கார்த்தி.

" என்ன பா அப்டி பாக்குற.. உன்ன முதல்லையே உள்ள விடாததுக்கு காரணம்... இது இந்த ஊர்ல இருக்க நிறைய பேருக்கு தெரியும்... தக்ஷன எதிர்த்த யாரும் இது வரைக்கும் இருந்ததில்லை... இருந்தவங்கள அவன் காலுக்கு கீழ வச்சி மிதிச்சிருவான்... இந்த ட்ரேசிங்கே வேணாம்... நான் அட்ரெஸ் தரேன் அங்க போய் பாரு... இந்த கார் கூட அங்க தான் வெளியவே நிக்கும்... " என்று அவர் கூற கூற விரைத்துப் போய் நின்றான்...

அதிலிருந்து மீண்ட கார்த்தி நகர முற்பட... அவனை மீண்டும் அழைத்தார் அவர்...

" ஒரு நிமிஷம்... நீனு இல்ல யாரு இதுல இன்வால்வ் ஆகுறதயும் வித்தார்த் விரும்ப மாட்டான்... என் மூலமா இன்ஃபர்மேஷன் எதுவும் போகாதுனு வித்தார்த்க்கு நல்லாவே தெரியும்... வித்தார்த்தே சொல்லிருக்கான்னா... மே
பி... உனக்கு அதோட பின் விளைவுகள காட்ட நினைச்சிருப்பான்... இல்லனா அவனே வந்திருப்பான்... "

அவர் இவ்வளவு கூறுவது வியப்பில்லை என்றாலும் வித்தார்தை குறிப்பிடுவது தான் சற்று விச்சித்திரமாகப்பட்டது..

" என்னப்பா பாக்குற.. என் பொண்ணு... ஷாலினி... ஷி இஸ் எ ஆர்.ஜே... நம்ம லோக்கல் எஃப் எம் ஸ்டேசன்ல..

அவள அந்த தக்ஷன்கிட்ட இருந்து காப்பாத்துனது வேற யாரும் இல்ல வித்தார்த் தான்... அதனால மட்டும் தான் இதெல்லாம் சொல்லிட்டு இருக்கேன்.. யூ மே கோ நௌ... " என்றவரிடம் விடைப் பெற்றுக் கொண்டு புறப்பட்டான் கார்த்தி.

அந்த முகவரியில் இருக்கும் இல்லத்தை அடையும் வரை கார்த்தியின் மனதில் ஏகப்பட்டவை வந்து சென்றன...

சிறிது நேரத்திற்கு ஏதோ வேறு உலகத்தில் இருப்பது போன்ற பிரம்மை தோன்ற... கண்களை கசக்கிக் கொண்டு தன் ஹெல்மெட்டை கழற்றி பைக்கிலேயே மாட்டினான்.

அந்த இடம் மட்டும் அனைத்தையும் விட முற்றிலும் வித்தியாசமாக தென்பட்டது...

மெல்ல அடி எடுத்து உள்ளே செல்ல... வாசலிலேயே அந்த கார் இருந்தது. அதன் எண்ணை ஒப்பிட்டுப் பார்த்தவன் சிந்தையில் இருந்து விடுபட்டு உள்ளே சென்றான்..

அனைத்தும் வேலைப்பாடுகளும் நிமிர்ந்து பார்க்குமளவு கம்பீரமாக நிற்க... அதை எல்லாம் ரசிக்கும் மனநிலையில் இல்லாதவன் முன்னேறத் துவங்கினான்...

மாமிச மலை போல் ஜிம் பாடியுடன் விரைப்பாக நின்றிருந்தவர்களை தாண்டி அவன் முன்னேறி செல்ல... அவனை யாரும் தடுக்கவில்லை... அவனின் பால் ஒரு ஏளனமான புன்னகை சிந்தி விட்டு தங்கள் வேலையைத் தொடர்ந்தனர்....

அவர்கள் அத்தனை பேரையும் தாண்டி உள்ளே சென்றவன் அந்த காட்சியைக் கண்டு திகைத்துப் போனான்...

தேவி மிகவும் சோர்வான நிலையில் மயக்கத்தின் பிடியில் அமர்ந்து இருந்தாள்... அவளின் நிலையைத் பார்த்து கலக்கம் அடைந்தவனாக, அவளருகில் செல்ல முற்பட... அவனை தடுத்து தூர தட்டி விட்டான் ஒருவன்...

அதில் சிறிது தொலைவில் விழுந்தவன்
தன் ஆடையில் படிந்த தூசை தட்டி விட்டு முன்னேற... மீண்டும் அவனை தடுக்க வந்த ஒருவன் சட்டென விலகினான்...

அதன் காரணம் அறியும் முன்பாகவே அந்த ஓசை கார்த்தியின் செவிகளில் ரீங்காரமிட்டது அந்த காலடி ஓசைகள்...

கரை படியாத வெள்ளை வேட்டி, கையிலும் கழுத்திலும் சங்கிலி போன்ற நகைகள், நெற்றியில் சந்தனப் பொட்டு என இருந்தவர் பார்ப்பதற்கு வேண்டுமானால் நன்மதிப்பு பெற்றவராக தெரியலாம்...

கார்த்தியின் கண்களுக்கு அவை எதுவும் தெரியவில்லை...
அவர் பார்வையில் இருந்த
திமிர், அவர் நடையில் இருந்த அகங்காரம்... அவரின் புன்னகையில் மறைந்திருந்த ஏளனம்...

அனைத்தும் இவன் தான் தக்ஷனாக இருக்க வேண்டும் என்பதை ஆதாரமே இல்லாமல் நிரூபித்தன.

" என்ன டா பண்ற... அவரு நம்ம வீட்டுக்கு வந்த விருந்தாளி... நிக்க வச்சி பேசிட்டு இருக்க... " என கார்த்தியை அடிக்க வந்தவனை அதட்ட அவனோ கை, கால் நடுங்க ஒரு நாற்காலியை எடுத்து முன்னே வைத்தான்...

" ம்ம்... நீ உட்காரு பா.. சில ஜென்மங்களுக்கு தான் எத்தனை தடவை சொன்னாலும் உரைக்க மாட்டேங்குது... " என்றவர் எந்த அர்த்தத்தில் கூறுகிறார் என தெரிந்தும் தெரியாதது போல இருந்தான் கார்த்தி.

" இங்க பாருங்க... நான் உட்கார்ந்து பேச ஒன்னும் வரல.. அந்த பொண்ண ஒழுங்கா விட்ருங்க... இல்லனா இந்த கேஸ்அ நான் வேற மாதிரி டீல் பண்ண வேண்டி வரும்... " என்றதும் கலகலவென சத்தமாக சிரித்தான் தக்ஷன்...

" நல்ல பேசுற பா நீ.. அந்த பொண்ண கூட்டிட்டு போ... " என இன்னமும் சிரிப்புடன் சைகை காட்ட கழுத்து நரம்புகள் புடைக்க வந்த கோபத்துடன் கார்த்தி, தேவி அருகில் செல்ல... வலபுறத்தில் இருந்து அவனை தாக்க வந்தான் ஒருவன்.

அவனின் கையை பிடித்து முறுக்கி கீழே விழச் செய்தான் கார்த்தி. அதற்கு இன்னும் சத்தமாக சிரித்தவரை முடிச்சிட்ட புருவத்துடன் நோக்கினான் கார்த்தி.

" என்ன பா? இங்க வா... வந்து இங்க உட்காரு... " அவரின் குரலிலும் பார்வையிலும் ஏளனம் அப்பட்டமாக தெறிக்க...

இருந்தும் அந்த நாற்காலியில் அமர்ந்தான்...

" ம்ம்... இதே மாதிரி தான்... ஒருத்தன் வந்தான் போன தடவை... ஆங்... அ... அவன் பேரு என்னடா... " என இன்னொருவனிடம் கேட்க...

" ஏதோ... வி... வி.. "
என்றவரை இடை வெட்டி கூறினான் கார்த்தி.

" வித்தார்த்"

" ஆங்... வித்தார்த்... பேரு சரியா நியாபம் இல்ல... நல்ல பேரு.. பேருக்கு ஏத்தமாதிரி இருந்திருந்தா நான் என்னபா பண்ண போறேன்... இதோ உன்ன மாதிரியே குறுக்க வந்து நின்னான்... என்னும் பண்ணல... இதோ இந்த கத்தி இருக்குல்ல... " என அமர் வேட்டி மடிப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஆராய்ந்தவாறே கார்த்தி அருகில் வந்தார்...

" எனக்கு தைரியமா பேசுராங்கல்ல அவங்கள ரொம்ப பிடிக்கும் அந்த வித்தார்த் மாதிரி, அப்பறம் உன்ன மாதிரி... " என கார்த்தியைச் சுட்டிக் காட்டியவாறு அந்த கத்தியை இறக்க...

" வித்தார்த்க்கும் உனக்கும் என்ன பகை? அவன் ஏன் உனக்கு பயப்படனும்? " என்க அவனை ஒரு பார்வை பார்த்தவர்...

" பாத்தியா இந்த பையனுக்கு இன்னும் புரியல... சரி.. விளக்கமாய் சொல்றேன்... பயம்... என் மேல தான் இருக்கனும்னு அவசியம் இல்ல டா கண்ணா... உன் மேல உனக்கே பயம் வரனும்... அந்த பயத்துல இந்த தக்ஷன் தானா வந்து சேர்ந்திருவான்... " அவரை இன்னமும் குழப்பமாக பார்த்தான் கார்த்தி.

" ஒன்னும் இல்ல... அவன் தங்கச்சி ரோஷினி... ரொம்ப நல்ல பொண்ணு.... உனக்கு கத்திய இங்க வச்ச மாதிரி அவளுக்கும் வச்சி லைட்டா குத்திட்டேன்... " என கார்த்தியின் வயிற்றுப் பகுதியில் கத்தியை மெதுவாக இறக்க.... வலியில் முகம் சுழித்தான் கார்த்தி...

" ஆங்... இதே தான் இதே மாதிரி தான் அந்த பொண்ணு சிணுங்கினா... அப்பப்பா... அப்ப எனக்கு எப்டி வலிச்சிது தெரியுமா... " என்றவரை லேசாக மூச்சு வாங்க பல்லைக் கடித்துக் கொண்டு பார்த்தவன் வித்தார்த் எவ்வாறு துடித்திருப்பான் என்பதை நினைவில் நிறுத்தினான்...

" ஹயோ... என்னபா இது நிஜமாவே இறங்கிருச்சு... " என ஒருவனை அழைத்து அதற்கு கட்டு போன செல்லிவிட்டு தன் இருக்கையில் அமர்ந்தார் தக்ஷன்.

" ம்ம்... நீ வந்திருக்கிறது இந்த பொண்ணுக்காக..
நான் உன்கிட்ட பேசுறது அந்த எவிடன்ஸ்காக.. ஒன்னும் இல்ல... அதோ அந்த ரூம்ல இதே மாதிரி நிறைய எவிடென்ஸ் அடுக்கி வச்சிருக்கேன்... நீ தாராளமா போய் பார்க்கலாம்... எனக்கு சம்மந்தப்பட்ட விசயம் இன்னொருத்தன் கிட்ட இருக்க கூடாதுல்ல... அந்த வித்தார்த் மாதிரி நீயும் அடக்க ஒடுக்கமா பணிந்து போய்டுவியாம்...
டேய்... அந்த பொண்ண அனுப்பி வைங்க டா.. அந்த எவிடன்ஸ் தானா அழிஞ்சிரும்.. "

தேவியை தாங்கிக் கொண்டு ஒருவன் கார்த்தியிடம் ஒப்படைக்க..

" அட இவனையே ஒருத்தன் தாங்கிட்டு போகனும் போலவே... " என சிரித்து விட்டு உள்ளே செல்ல போனவரை வெறித்துப் பார்த்தவன் அந்த பெண்ணை தட்டுத் தடுமாறி அழைத்து கொண்டு செல்ல...

" அப்பறம் அந்த எவிடன்ஸ வச்சி எதுவும் செய்ய முடியுமானு யோசிக்காத தம்பி... அது உன் அருமை நண்பன் வித்தார்த்கிட்ட தான் அநேகமா இருக்கும்.. அவனும் அதை அழிச்சிருவான்... " என்றுவிட்டு செல்ல... வித்தார்தின் மீது இருந்த மதிப்பு அனைத்தும் சுக்குநூறாய் உடைந்திருந்தது கார்த்திக்கு.

தேவியை செந்திலிடமே விட்டுவிட்டு வர... வித்தார்த் அந்த பெட்டியுடன் ஏற்கனவே வீட்டை அடைந்திருந்தான். வித்தார்த் அப்படி நடந்து கொண்டது என எல்லாமே அவனை பாதித்திருந்தது.

இரத்தம் படிந்த சட்டையை மாற்றிவிட்டு வந்து அமர்ந்தான் கார்த்தி.

" கார்த்தி... இதை வித்தார்த் தம்பி குடுக்க சொன்னாரு பா.. உனக்கு அடிபட்ருக்குல்ல... இதை குடுக்க சொன்னாரு... " என அவனிடம் ஒரு பெட்டியை தந்துவிட்டு செல்ல... அதை தனக்கு தேவையில்லை என்பதைப் போல ஓரமாக தூக்கி எறிந்தான் கார்த்தி.

வித்தார்தோ அவன் வீட்டை விட்டு வெளியே செல்லும் சமயம் அவன் வயிற்றில் ஏற்பட்ட காயத்தால் இரத்தம் கசிந்ததைப் பார்த்து பதறிப் போய் உடனே ராம்குமாரிடம் கூறினான்...

கார்த்திக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமா என்ற கவலையில் உறக்கம் வராமல் உளன்றவனின் சிந்தையை அந்த வெள்ளை நிற பெட்டியே ஆட்கொண்டிருந்தது.

அதனால் அவனுக்காக காத்திருப்பது என்னவோ.. ????
 
Top