Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அரக்கன்( ஒரு இரக்கமற்றவன்) அத்தியாயம் இரண்டு EPISODE - 9

naveen prabu

Member
Member
EPISODE - 9

சத்தியா பதிலுக்காக நவீனை பார்க்க நவீன் நிமிர்ந்து சிரிக்க ஆரம்பித்தார் “ ஹஹஹஹஹஹ... ஹஹஹஹஹ”....


“எதுக்கு சிரிக்குற?”...


நவீனை ஒன்றும் புரியாமல் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் சத்தியா வின் தலை மீது துப்பாக்கியை வைத்தார் மணிவேல்


“ஹஹஹஹஹஹ.... ஹஹஹஹஹஹ”... மணிவேலும் நவீனுடன் சேர்ந்து சிரிக்க ஒன்னும் புரியாமல் மணிவேலை பார்த்தான் சத்தியா.


மணிவேல் துப்பாக்கியை சத்தியாவின் தலையில் வைத்து அழுத்த சத்தியா வானத்தை நோக்கி இருகைகளையும் தூக்கி நின்றான், சத்யாவின் கையில் இருந்த துப்பாக்கியை மணிவேல் புடிங்கிக்கொண்டு


“கையை தலைக்கு பின்னாடி வெச்சி கீழ படு சத்தியா”... என்றார், நடந்துகொண்டிருப்பது எதுவும் புரியாதவனாய் தன் கைகளை தலையின் மீது வைத்து சத்தியா கீழ படுத்தான்…


மணிவேல் தன் பாக்கெட்டில் இருக்கும் கைவிலங்கின் சாவியை நவீனிடம் தூக்கி வீச நவீன் சிரித்துக்கொண்டு தன் கைவிலங்கை கழட்டி மணிவேலிடம் தூக்கி வீசினான், மணிவேல் சத்தியாவின் கைகளை பின்னால் வைத்து கைவிலங்கிட்டார். நவீன் சிரித்துகொன்டே தன் பாக்கெட்டில் இருந்த ஒரு சிகெரெட்டை பத்தவைத்தார்.


“என்ன சத்தியா ஒரே ட்விஸ்ட்டா இருக்கா?”... சிகிரெட் புகைத்தவாறு நவீன் நாற்காலியில் கால் மேல் கால் போடு அமர்ந்தவாறு சிரித்தார் “ஹஹஹஹ ... ஹஹஹஹஹஹஹ”...


மணிவேல் நவீனின் முன் இருக்கும் நாற்காலியில் சத்தியாவை அமரவைத்தார். குழப்பத்துடன் கட்டப்பட்ட கைகளுடன் சத்தியா நவீனையும் மணிவேலையும் பார்க்க


“என்ன சத்தியா நீயா எல்லா எவிடென்சையும் கண்டுபுடிச்சனு நினைச்சிட்டு இருக்கியா?”...


இல்லை என்பது போல் தலையசைத்து “கண்டுபுடிக்க வெச்சோம்”...


“என்ன சொன்ன நீங்க பிளான் பன்னீங்களா”... “மொத்த பிளானையும் போட்டது நான் டா”... உனக்காக... உன் உயிருக்காக”...


நவீன் நடந்தவை அனைத்தையும் ஒன்றின் பின் ஒன்றாக விளக்க தொடங்கினார்


“உன்னோட பர்ஸ்ட் எவிடென்ஸ் அந்த கல்ட் பைபிள் நீ பாக்கணும்னு நான் தான் அங்க வேச்சன், அந்த பைபிள் மேல கீறல் போட்டதும் நான் தான்”... “அத நீ பாக்கணும்னு தான் உன்ன பிரஸ்ட் ஆன்டனி வீட்டுக்கு அனுப்புனன்”...


“அடுத்தது இன்னொரு விஷியம் சொல்லட்டா”... “கலைவாணன் வீட்டுக்கு வந்தது நீங்க ஏற்பாடு செஞ்ச டாக்டரே இல்ல”... “வந்தது மணிவேலின் மனைவி”... “நீ குடுத்த சிகிரெட்ல ramelteon-ஏ இல்ல”...


“அந்த ஹிப்னோடிசம் பிளான், போட்டதே நான் தான்”... “அங்க நடந்தது எல்லாமே ட்ராமா”... “எதுக்குனு யோசிக்குறியா உனக்கு சந்தேகம் வரவைக்குறதுக்கு தான்”... “அப்போ தானே நீ இந்த ஜேம்ஸ் பாண்டு வேலையை பாப்ப என்கிட்ட வந்து மாட்டுவ”...


ஒண்ணுமே புரியாதது போல சத்தியா குழப்பத்துடன் நவீனையும் மணிவேலையும் பார்க்க நவீன் அடுத்த விஷியத்தை சொன்னார்.


“இதுவரைக்கும் சூர்யா எந்த கொலையுமே பன்னதில்லை”... “எல்லா கொலையுமே பண்ணது மணிவேல் தான்”... “சூர்யா சிங்கள் ஃபாமிலிய எங்களுக்கு அடையாளம் காட்டுவான்”... “நா சூஸ் பண்ணுவன், மணிவேல் கொல்லுவாரு”...


அன்று டேனியல் வீட்டில் உண்மையில் நடந்தவை


நேரம் இரவு 11.30 மணி

காலிங் பெல் மணி ஒலித்தது… டேனியல் கதவை திரந்து சூர்யாவை வரவேற்றார், “யார் அது?”... சூர்யாவின் பின்னல் நின்றிருந்த மணிவேலை பார்த்து கேட்டார் டேனியல்


“அவர் பேர் மணிவேல் அவர் தான் எல்லாத்தையும் பண்ணுவாரு”...


இருவரும் வீட்டினுள் நுழைந்த பிறகு கதவு பூட்ட பட்டது… வரவேற்பறையில் ஷோபாவில் அமர்ந்திருந்த தன் மனைவியின் அருகில் அமர்ந்தார் டேனியல் அவர்களுக்கு நேர் எதிரே உள்ள சோபாவில் சூர்யாவும் மணிவேலும் அமர்ந்தனர்.


சிறிது நேரத்தில் மணிவேல் குளித்துவிட்டு தான் கொண்டு வந்திருந்த கருப்பு நிற உடையை அணிந்து வந்தான்…


“போகலாமா?…”


மேலும் எதிர்பாக்காத திருப்பங்களுக்காக இணைந்திருங்கள் அடுத்த எபிசோடிற்காக
 
Banumathi jayaraman

Well-known member
Member
அடங்கொன்னியா
என்ன மணிவேல் நாயும் குற்றவாளியா?
அப்போ மணிவேல் கமிஷனர் இல்லையா?
அடப்பாவிங்களா?
அப்போ எல்லோரும் கூட்டுக் களவாணிங்களா?
 
Advertisement

Latest Posts

Advertisement

Top