Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பு விதை - 9

Advertisement

Dhanuja

Well-known member
Member
அன்பு தோழிகளே!

அன்பு விதையின் அடுத்தப் பதிவு படித்து விட்டு கருத்தை கூறவும்.உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்.


அன்பு விதை – 9


தான் பெற்ற மூன்று பிள்ளைகளுக்கும் திருமணம் முடிந்து விட்டது என்ற களிப்பும்,நிம்மதியும் கொள்வதற்குப் பதில் பயம் தான் பிடித்தது திருவேங்கடத்திற்கு.ஏன் இப்படி? என்று மனிதர் யோசிக்க ஆரம்பித்துவிட்டார் நீலாவின் திருமணப் பேச்சில் அருணின் திருமண உறுதி.சரி பெண் பிள்ளையைக் கட்டி கொடுத்துவிட்டு,பிறகு செய்யலாம் என்றால்,



சம்மந்தியான லலிதாவின் கோரிக்கைக்கு இணங்க வேண்டி அருண் - மீனா திருமணம்.அதுவே நெருடல் தான் எதற்கும் அலட்டிக்காத மகன்,தொட்டால் சிணுங்கி குணம் கொண்ட மருமகள்.இது போதாதென்று மூன்றாவது முத்து வேணி செய்து வைத்த சுதப்பல் கண்ணைக் கட்டியது மனிதருக்கு.



தொழில் துறையில் பலவகைக் குணம் கொண்ட மனிதர்களைப் பார்த்து பழகி அறிந்தவர்.அது மட்டுமா அளவற்ற மனிதர்கள்,குழந்தைகள் இன்னும் பல சிரிப்புக் குழந்தைகள் என்னும் சொல்லப்படும் குழந்தைகளின் மனதை படித்து அதன் படி நடப்பவர்.எத்தனை பெரிய மனிதர் திருவேங்கடம்.ஆனால் அவர் சறுக்கியது அவர் பெற்ற பிள்ளைகளிடம் தான்.எதனால் ? அன்பு ஒன்றே விடையாக....



திருமணம் முடிந்து அருண் -மீனா அருண் வீட்டுக்கு செல்ல,நீலா - விக்னேஸ்வரன் மீனா வீட்டுக்கு சென்றனர்,அவர்கள் செல்லவே முழித்துக் கொண்டு இருக்கும் வேணியைக் கையைப் பிடித்து இழுக்காத குறையாக,அழைத்துச் சென்றான் மனோ.விந்தையான திருமணம் பெரியவர்கள் பார்வையில் தொடங்கிய திருமணம் சிறுவர்களின் முடிவில் இன்று....



மணப்பெண்களிலே நீலா தான் பிழிந்து பிழிந்து அழுதாள் அவள் அழுகையைக் கண்டு விக்னேஸ்வரன் பயந்து போனான் பாவம் "என்னம்மா இப்புடி தேம்பி தேம்பி அழகுற, அம்மாகிட்ட போணுமா” அவன் அப்படிக்கேட்கவே அழுகையை நிறுத்திவிட்டு முறைத்து பார்த்தாள் நீலா.



“எதுக்குக் குறைகிற”



“லூசுத்தனமா கேள்வி கேட்டா முறைக்கத் தான் செய்வேன் என்றவள் அழுகையை நிறுத்தி கொண்டு அமைதியாக வந்தாள்.பக்கத்தில் உட்காந்து வந்தவன் தான் மண்டையை உடைத்து கொண்டான்.என்ன தான் அவள் எண்ணம் என்று.



புதுமணத் தம்பதிகளை மனம் நிறைய வரவேற்றார் லலிதா பெணின் புக்காத்து மருமகளின் பிறந்தகம் ஆயிற்றே அது தந்த களிப்பு தான் மங்கைக்கு.நீலாவை போல் மீனா அழுகவில்லை என்றைக்குமே தனது உணர்வுகளை வெளி காட்டாத பெண் அவள்.இன்றும் அப்படியே லலிதாவிடமும்,சிதம்பரத்திடமும் சிறு தலை அசைப்பு மட்டுமே போய்ட்டுவருகிறேன் என்பது போல.



மற்ற பெண்களைப் போலப் பயம் இருந்தாலும்,அதனை வெளி காட்டும் முறை தெரியாமல் தவித்தது அந்தக் குழந்தை.உணவை பிசைந்து தந்தாள் சாப்பிடுவேன் என்ற நிலையில் நீலா, அதனால தான் என்னமோ பெண்ணுக்குப் பயம் வந்துவிட்டது.



மீனாவோ தானே சாப்பிடும் ரகமென்றால், நமது வேணி சமைத்த சாப்பிடும் ரகம் அதனால் தான் தைரியமாகத் தன்னைக் கட்டி கொண்டனர்.மீனாவுக்கு நீலாவின் அழுகையை எண்ணினாலே உடல் உதறல் எடுத்தது.பக்குவம் சற்று குறைவான பெண் தான் என்று நிச்சயத்தின் முன்னே அறிந்துகொண்டாள்.இந்த அழகில் தனது அண்ணன் வேறு அரிச்சந்திரன் வீட்டுக்கு பக்கத்து வீடு போல் கடந்த காலத்தை மனைவிடம் சொல்லியே தீருவேன் என்று கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறான்.



ஆக மொத்தம் இந்தத் திருமணத்தில் அன்னைவருக்குமே சிறு நெருடலும் பெரும் பயமும் இருக்கத் தான் செய்கிறது.அடுத்து…. அடுத்து என்று மூன்று பெற்றவர்களும் காரியத்தில் கண்ணாக,என்னதான் இருந்தாலும் வந்தவர்களைக் கவனிக்கும் பெரும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கு அல்லவா.



இந்த விடயத்தில் திருவேங்கடமும்,சுசிலாவும் திணறி தான் போனார்கள் இரண்டு சமந்தியின் உறவுகளையும் கவனிக்க வேண்டும்.இது ஒரு பெரிய சவாலான விடயம் சிறு பிணக்கு ஏற்பட்டாலும் உறவுகள் பாதிக்கும்.அதைவிடத் தங்கள் மகள்களைப் பாதிக்கும்,அதனாலே பயத்துடன் தான் நடந்தனர்.



இரு பெண்களையும் புகுந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டு,தனது மகனுடன் தங்கள் வீட்டில் அடி எடுத்து வைத்தனர் திருவேங்கட தம்பதியினர்.



“பூஜை அறையில விளக்கேத்துடாம்மா” அன்புடன் சுசிலா சொல்ல.சிறு தலையசைப்புடன் அருணுடன் சென்று விளக்கேற்றி வணங்கினாள்.என்ன வேண்டுவது என்று தான் தெரியவில்லை அவளுக்கு.



இனி தனது வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கற்பனை தன்னை வதைக்க எதிலும் ஒன்றை முடியவில்லை,தமயன் வேறு இன்று விடயத்தைச் சொல்ல போகிறேன் என்றது வயிற்றில் புளியை கரைத்தது,அவளது தவிப்பை அறிந்தவன் போல எதுவும் பேசாமலே அவள் கை பற்றித் தனது அறைக்கு அழைத்துச் சென்றான் அருண் நல்ல கணவனாக.



*********************************************​

மனோவின் வீட்டில் அனைத்து சடங்குகளும் முடிந்து சிறுது ஓய்வுக்குத் தம்பதிகளை அனுப்பி வைக்க,இருவரும் அறையில் தஞ்சம் புகுந்தனர் மனோவும் ஒன்றும் பேசவில்லை,வேணியும் பேச முயற்சிக்கவில்லை.அவனது முதிர்ச்சிக்கும் அவளது சிறு பிள்ளை தனத்துக்கும் சரியாகத் தான் இருந்தது.



“கொஞ்சம் படுத்து ரெஸ்ட் எடு” அவளை பார்த்து நம் மனோ சொல்ல.



“எனக்குப் பகல்ல தூங்கி பழக்கம் இல்ல”



அதற்கும் தன்மையாகச் “சரி கொஞ்சம் நேரம் டிவி பாரு”.



“எனக்கு டிவி பார்க்க புடிக்காது”



இப்போது மனோவின் பொறுமை நிற்கவே போகவா என்று கேட்டு வைக்க.பல்லைக்கடித்துக் கொண்டு குளியல் அறைக்குச் சென்றான்.அவள் முகத்திலும் கோபம் தான் எதற்கு என்று அவளுக்கே தெரியவில்லை ஆனால் கோபம், என்ன வேண்டும் என்பதை அறியாமல் அவளது மனமே குழம்பி தவித்தது.



தன்னைச் சுத்த படுத்திக் கொண்டு வெளியில் வந்தவன் அவளை நிமிர்ந்து பார்க்க, நின்றே இருந்தாள்.இன்று அவளிடம் பேசிய ஆகவேண்டும் என்ற முடிவோடு "உங்கிட்ட கொஞ்சம் பேசணும் பேசலாமா? தன்மையாகவே தொடங்கினான்”.



“எனக்குத் தூக்கம் வருது”



“ஏய்! என்ன விளையாடுறியா இப்போத்தானே தூங்குற பழக்கம் இல்லனு சொன்ன”.



“அது அப்போ, இது இப்போ” என்றவளை என்ன செய்தால் தகும் எண்ணியவன் “என்ன தாண்டி பிரச்சனை உனக்கு.கல்யாணம் வேணான்னு சொல்லிட்டு போயிட்டு எதுக்குடி என் கல்யாணத்த நிறுத்துன”



இந்தக் கேள்விக்குத் தான் அவளும் இன்று வரை விடை தேடி கொண்டு இருக்கிறாள் அவளுக்குக் கிடைக்கவில்லை,அவளுக்கே தெரியாத ஒன்றை எப்படிச் சொல்ல முடியும்.ஆனால் அவன் வயிறு எரியும் அளவுக்கு ஒரு பதிலை சொன்னாள் மகராசி.



“என்ன இப்போ உங்களுக்குக் கல்யாணம் புடிக்கலையா? என்ன கல்யாணம் பண்ண கேட்டீங்க… புடுச்சு தானே பேசுனீங்க.நான் ஓகே சொல்லலைனு ஒரு பீலே இல்லாம அடுத்தப் பொண்ணுக்கு போயிட்டீங்க,அதான் அந்தப் பொண்ணு நர்மதாவை குழப்பி விட்டேன்”



“என்ன பேச்சுடி இது?கிறுக்கச்சியாடி நீ,அபத்தமா ஒரு வேலைய பண்ணிட்டு அதுக்கு லாஜிக்கெ இல்லாத விளக்கம் வேற”



“ஹலோ என்ன ரொம்பப் பேசுறீங்க”



“பேசாமட்டும் செய்யுறேன்னு சந்தோச படு,நீ செய்யுற கோமாளி தனத்துக்கு அடிக்கம்மா விடுறேன்”



அடிப்பீங்களா!............. அடிங்க மல்லுக்கு நிற்க



மனோ கோவத்தில் அவளை நெருங்கும் நேரம், அவர்கள் அறையின் கதவு தட்ட பட்டது.அவளை முறைத்துக் கொண்டே கதவை திறந்தான்.அவன் தாய் தான் சற்று உள்ளே எட்டி பார்த்து “வேணி கிழ என் அறைக்கு வந்து ரெஸ்ட் எடு” என்றவர் சிறு புன்னகை புரிந்து சென்று விட்டார்.



தனது தாய் சென்றும் கதவை பிடித்துக் கொண்டு இருந்தவனை வேண்டுமென்றே உரசி கொண்டு சென்றாள் வேணி.அவளது சேட்டையில் சிலிர்த்தவன் ஏய்! என்று கூவ



கன பொழுதில் மாமியார் அறையை நோக்கி விரைந்து விட்டாள் நல்ல பிள்ளையாக.



இவள எப்படிச் சமாளிக்கிறது? பெரும் கவலை மனோவிற்கு.



*************************************​

முதல் இரவுக்கு மீனாவை தயார் செய்ய,பதுமை போல் அமர்ந்திருந்தாள் பெண் மனதுக்குள் திகில் இருந்தாலும், தன்னைத் தானே தேற்றி கொண்டு ஸ்திரமாக.



அங்கு உறவு பெண்களிடம் தனது மருமகளை விட்டுட்டு மகளைப் பார்க்க ஓடி வந்து விட்டார் லலிதா.செய்ய வேண்டியவற்றைச் சொல்லி அவளுக்குத் தேவையான அனைத்தும் தயார் நிலையில்.புது இடத்தில் தேவைகளைக் கேட்பது என்பது பெரும் தயக்கம்.



அதனைக் கொண்டு அனைத்தும் தயார் நிலையில் வைத்து மகளது முன் நெற்றி முட்டி ஒற்றை முத்தம்.தேவைகளைத் தவிர எதுவும் பேசவில்லை அறிவுரை என்பதை விட அனுபவமே சிறந்த பாடம்.முட்டி மோதி கற்று கொள்ளட்டும் லலிதாவின் பாலிசி.



மீனுக்குட்டியும் தெளிவாக முகத்தை வைத்துக் கொண்டு தாய்க்குப் பிரியாவிடை அளித்தாள்,அருணின் அறையை நோக்கி சென்றவள் தயங்கி ஒரு நிமிடம் நின்று நிதானித்து,வாழ்க்கையின் முதல் படியை எடுத்து வைத்தாள்.அங்கு மனோ - வேணி ஜோடிகளும் குறித்த நேரத்திற்கு அவர்களது அறையில்,அதேபோல விக்னேஸ்வரன் - நீலாமணியும்.



வெற்றியா? தோல்வியா? என்பது விடியலில்



எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, எங்கோ திருமணம் பேசி சிறுது நாட்களில் மனம் முடித்து,ஊர், உறவு, விருப்பம், வெறுப்பு ,பிடித்தம் ,நல்லவை ,அல்லவை, தெரிந்து தெரியாமல் இருக்கும் ரகசியங்கள் அனைத்து உணர்வுகளையும் முழுமை பெற வைப்பதே தாமத்தியம்,புணர்தல் என்பதை விட உணர்தல் என்று சொல்லாம்.



தாம்பத்தியத்தின் புனிதம் உணர்ந்தால் அதுவே திருமண வாழ்வின் வெற்றி.இவை எல்லாம் இந்த மூன்று ஜோடிகள் கடை பிடித்துக் கரை சேர்வர்களா என்பது மிகப் பெரிய வினா.விடை காலத்தின் கையில் மட்டுமே.
 
Top