Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பு விதை - 3

Advertisement

Dhanuja

Well-known member
Member
அன்பு தோழிகளே!

அன்பு விதையின் மூன்றாம் அத்தியாயம் படித்துப் பார்த்து கருத்தை பகிருங்கள்,உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்.


அன்பு விதை – 3
காலை மணி 8.20 யை தொட அவசரமாகக் கிளம்பி கொண்டு இருந்தாள் மீனா.விடியல் கண்ட உடன் முழித்துக் கொள்பவள் இன்று நேரம் சென்று தான் எழுந்தாள் உபயம் நம் அருண் தான்.

நேற்று நடந்தவைகளை எண்ணினால் கனவு என்று தான் தோன்றுகிறது. இன்னும் இவன் மாறவே இல்லை என்ன ஓர் அலட்சியம். கல்யாணம் என்றால் விளையாட்டாகப் போய் விட்டதா அதுவும் என்னுடன்.

தன்னை எப்படி அறிமுகம் செய்வான் அவன் தொழில் வட்டாரமும் சரி,குடும்ப வட்டமும் சரி மிகப் பெரிது,அது மட்டுமல்ல கல்லூரி படிக்கும் போதே கனவு கண்ணன் அவன்.அவனுடன் நான் நின்றாள்! எதற்கு இந்தத் தியாகம் என்ன யோசித்தாலும்,எந்த வழியில் யோசித்தாலும் இந்தத் திருமணம் ஏன் என்பதை அறியமுடியவில்லை.

விடியும் வரை யோசித்து விடிந்த பின் தூங்கியதால் வந்த வினை தான் வேலை தாமதம்.யாரிடமும் நேற்றில் இருந்து பேசவில்லை.மகளின் பின்னே சுற்றும் தாய் கூட அவளைக் கண்டுகொள்ளவில்லை பார்வையால் மட்டுமே அவளைத் தொடர்ந்தார்.

யோசிக்கட்டும் நன்றாக யோசிக்கட்டும் சாதகம் பாதகம் எல்லாம் யோசிக்கட்டும்.ஆனால் முடிவு திருமணம்.யோசிப்பது எதைச் சரி செய்வது எதனைச் சரி செய்ய சொல்லுவது என்பதற்காக மட்டுமே.நல்ல புத்திசாலியான தாய் லலிதா என்பது திண்ணம்.

கவலையுடன் இருப்பவளை பார்த்த தகப்பனுக்குக் கண்களில் ரெத்தமே வந்தது.அவர் கவலையாக "ப....... "தனது மகளைப் பாசமாக அழைக்கப் போக.அவரது மனையாள் கையை நறுக்கெனக் கிள்ளி கண்களால் மிரட்டினால்.

அப்பா இந்த ஆண்களுக்கு எங்கு இருந்து தான் மகள் மீது பாசம் வருமோ,தொட்டிலிட்ட அன்னையிடம் காட்டாது ,கட்டிலிட்ட மனைவிடம் காட்டாது ,மார்பில் துயில் கொள்ளும் மகளிடம் மட்டும் காட்டும் பாசம்.அவ்விடம் மட்டும் அளவுகோல் இல்லையோ.இரு பெண்களிடம் உயிர் பெற்று தன் உயிர் கொண்டு மகளிடம் தஞ்சம் அடைவது விந்தை தான்.

யாரிடமும் ஓர் வார்த்தை பேசாமல் உண்டவள்,விடைபெறும் நோக்கமாக மென்மையாக அந்தத் தலைக்கும் வலிக்குமோ என்பது போல் தாய் தந்தையிடம் தலை அசைத்து விடை பெற்றுச் சென்றாள்.எண்ணத்தில் வண்ணமாக அருண் மட்டுமே.

காரில் ஏறி அமர்ந்து டிரைவர் கார் எடுத்த மறு நொடி போன் இசைக்க,தனது காது மெஷின் மாட்டிக்கொண்டவள் அந்தப் போன் ஆன் செய்து காதில் வைக்க,விபிரிதமான ஒலி.அடக்கடவுளே என்பது போலப் போனை பரிதமாகப் பார்த்தாள்.

பயம் இல்லை யாரு? தெரிந்தவர் தான் என்றாலும் சங்கடமாக இருந்தது,கோபம் கொள்ளவில்லை அதற்காக இதை அனுமதிக்கவுமில்லை தனது எதிர்ப்பை மென்மையாக அதே சமயம் வலுவாகக் காட்டினாள்.

போனை கேட் செய்து அந்த எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பி பிளாக் செய்து,அலுவலக வேலை பட்டியில் ஆரம்பம் மனதினுள்.

வரிசையாக அணிவகுத்து நிற்கும் வேளைகளில் எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்,எது உடனே செய்ய வேண்டும் என்பதைத் தனித் தனி ரகமாகப் பிரித்துக் கணக்கு போட்டுக் கொண்டு வந்தாள் மனதினில்.

புத்தி கூர்மை அதிகமுள்ள பெண் அவள்.அதனால் எந்தக் குறிப்பு உபகரணங்களும் தேவையில்லை,பிசிர் இல்லாத தெளிவான முடிவு,இதிலும் சரிகினால் சரி செய்ய அடுத்த முயற்சி என்று படு ஸ்மார்ட்.

அலுவலகம் சென்று தனது நாட்காலியில் அமர்ந்து தன்னை மறந்தாள் வேலை அவளை உண்ண,அவளும் அதற்கேற்ப வளைந்து கொடுத்தால்,சரியாக இரண்டு நாற்பதுக்கு வேறு ஓர் எண்ணில் இருந்து கால்.

அட்டென்ட் செய்தவள் காதில் அதே சத்தம்,இப்போது விழிகளில் சிறு கோபம் மென்மையாக “யாரு பேசுவது”.

அட்டகாசமாகச் சிரித்தவன் நான் தான் பாப்பு,என்ன ஓர் ஆச்சிரியம் அந்த உதடுகள் லேசாக வளைந்தது.

சொல்லுங்க அருண்.

லஞ்ச் போகலாம் வரியா.

இல்ல வேலை இருக்கு முடுச்சுட்டு வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுவேன் வெளி சாப்பாடு பிடிக்காது.

“இன்னக்கி ட்ரை பண்ணு புடிக்கும்”.அவள் பதிலை எதிர் பார்க்காமல், “நானே வரேன்”.
இல்லை..... அவள் சொல்லுவதைக் கேட்க அவனும் இல்லை.தன் வாக்யமே கடைசி என்பது போல் அனைத்து விட்டான்.

ஒரே கல்லூரி இரண்டு வருடமாக அவனை தெரியும் என்றாலும்,அவனுடைய குணத்திற்குப் பொருந்துவேனா என்பதே சந்தேகம் தான்.அப்புடி ஓர் அலட்சியம் ,விட்டெரி என்று சொல்லி கொண்டே போகலாம்.அம்மா................. மனதுக்குள் மட்டுமே அலற முடிந்தது.

----------------------------------------------------------------------------------------------------

அங்குத் திருவேங்கடம் வீட்டில் வேணியும்,நீலாவும் தனது பெற்றோரை முறைத்துக் கொண்டு இருந்தனர்.அவர்களுக்கு அண்ணனின் திருமணத்தில் விருப்பமில்லை.

வேணி, “என்னப்பா பண்ணி வச்சிருக்கீங்க,அம்மா நீங்க அப்பாக்கு சொல்ல கூடாதா”.

ஆதங்கப்பட்ட மகளின் பாசம் பிடிபட. “வேணி நீ சின்னப் பொண்ணு உனக்கு ஒன்னும் தெரியாது,அப்பா முடிவு எடுத்தா சரியாத்தான் இருக்கும்”.

அம்மா ஏதவது பேசாதீங்க அண்ணன் அழகுக்கு எங்க காலேஜில எத்தனை விசிறிங்க தெரியுமா.

உரக்க சிரித்த திருவேங்கடம் என் பையனாச்சே என்று தனது மீசையை நீவி கொள்ள.மனைவின் கண்டன பார்வையில் அத்தனை அணல்.புருவத்தை வளைத்தவர் தப்பிக்கும் வழியாக,பேச்சை மாற்றும் பொருட்டு.

உங்க அண்ணனுக்கு ரொம்பப் புடுச்சு போச்சு.நாங்க என்ன பண்ணுறது.

இப்போது நீலா, “என்னால நம்பவே முடியாளப்பா,அண்ணனுக்கு அந்தப் பொண்ணு மேல உண்மையா பிரியம் இருந்தா எனக்குச் சம்மதம் தான்,பின்பு தயங்கி நான் வாழ போற விடுப்பா பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்குறது அத்தனை சுலபம் இல்லை.

அண்ணன் வாழ்கை என் வாழ்க்கையைப் பாதிக்கக் கூடாது,அதே போல் என் வாழ்கை அண்ணனை பாதிக்கக் கூடாது,அந்த பொண்ணும் பாவம் தானே. பெணின் பேச்சில் கர்வம் கொண்ட தாய்.

“நீலா முதல அத்தாச்சினு சொல்லி பழகு ,அது என்ன அந்தப் பொண்ணு மாப்பிள்ளை சொந்தம் இனி உனக்கும் சொந்தம்,இப்பவே சரியா முறை சொல்லி பழகு அதுதான் வாழ போகும்போது சரி வரும்”.ஓர் அன்னையாய் மகளைச் சரியாகக் கண்டித்தார்.

உனக்கு என்ன தெரியும் அந்தப் பொண்ணா பத்தி,அவள் குறை உள்ள பெண் தான்,ஆனால் அவளால் நிறையாக வாழ முடியும்.நானும் உன் அண்ணனும் முதல பார்த்தது அவள் அறிவை தான்.மென்மை கொண்ட ஆற்றல் உடைய பெண் மீனா.

ஒரு விஷயம் புருஞ்சுக்கோ வேணி பார்க்கும் கோணத்துல தான் குறை உள்ளது. பொதுவாவே இந்த மாதிரி உள்ள பெண்ணும் சரி ஆணும் சரி ரொம்பத் திறமையா இருப்பாங்க புத்தி கூர்மை நம்மை விடப் பல மடங்கு இருக்கும்.

அவளால வேகமா நடக்க முடியாது,கை வேல செய்ய முடியாது,காதுல மெஷின் உதவியோடு சன்னமா கேட்கும் அவுளோதான்.ஆனா அவுளோட பழகி பாரு நம்ம கிட்ட இல்லாத ஒரு தனிச் சிறப்பு அவகிட்ட இருக்கு.என்ன பொறுத்தவரைக்கும் மீனா நல்ல மருமகளா இருப்பா கண்ணம்மா.

தாய் என்பவளுக்குக் குறைகள் தெரியாது ஆனால் மாமியார் என்றால் குறைகள் மற்றும் தெரியும் இங்குத் தாயக நின்றார் மாமியார்.அற்புதமான அன்பு அல்லவா இது.



மீனாவுக்கு மெல்ல கோபம் எட்டி பார்த்தது.இருக்காதா பின்ன ஒரு நாலும் தனது வேலைகளைத் தடுமாறிச் செய்ததில்லை,ஆனால் இன்று காலை முதல் அருணின் நினைவு தான் ஒவ்வொரு தடுமாற்றத்திற்கும் காரணம்.

மீண்டும் போன் இம்முறை அதனை எடுக்கும் நிலையில் மீனா இல்லை,அவள் அதை வெறித்துப் பார்க்க,அவளுடைய அலுவலகக் கதவு படாரெனத் திறந்தது.வேறு யாரு அருண் தான்.

கோபமாக இருந்தான்,அவள் தான் சற்று சுதாரித்து அந்த உதடுக்கு வலிக்குமோ என்பது போல் அழைத்தாள் ",வாங்க".அவனைத் தனது முன் இருக்கையைக் காட்டி அமர வைத்து,அவனைக் கேளாது அவளே காப்பிக் கொண்டு வருமாறு பணிந்து,சொல்லுங்க என்பது போல் ஒரு பார்வை.

அன்று போல் இன்றும் இந்த மென்மையும்,பொறுப்பும் தான் அவனைக் கட்டிப்போட்டது,எங்கடா உன் கோபம் என்ற மனசாட்சிக்குப் பதில் அவனிடமில்லை.

அவனைப் பார்த்ததும் கண்ணில் நீர் படலம்,அதனை கண்டவன் கோபத்தைக் கை விட்டு." இங்க பாரு மீனா,நீ இப்புடி கஷ்ட படுற அளவுக்கு இங்க ஒன்னும் நடக்கல.எங்க வீட்டுல பொண்ணு பார்த்தாங்க உன் போட்டோ காட்டுங்க புடுச்சுது ஓகே சொல்லிட்டேன்.
இப்போ நீ ரியாக்ட் பண்ணுறத பார்த்தா நான் போர்ஸ் பண்ற மாதிரி இருக்கு.அவனைச் செல்லமாக முறைத்தலோ.

அதில் அவன் கண்களும் கண்டு கொண்டு சிரித்தது.என்ன கல்யாணம் பன்னுறதுல என்ன ரிஸ்க் இருக்கு சொல்லு.

ப்ச் ........ உங்களுக்கு விஷயம் புரியமாட்டேங்குது அருண்.நீங்க ஒரு முழுமையான ஆண் மகன் உங்களை என்னால திருப்தி பண்ண முடியாது உடலாலும்,மனசாலும்.உங்களுக்கு என்ன குறைச்சல் .உங்களோட கம்பர் பண்ணா ஏன் இப்புடி என்பது போல் பேச்சு வரும், அதில் எனக்கு விருப்பம் இல்லை.

எனக்கு நான் ஒசத்தி தான் அருண்.என்ன ஒப்பிட்டுப் பாக்குறது எனக்குப் புடிக்காது,நம்ம கல்யாணம் பண்ணா முதல அது தான் நடக்கும்.அவன் எதுவோ சொல்ல வர அவனைத் தடுத்தவள்.

நான் உன்ன நல்ல பாத்துக்குறேன்,யாரும் உன்ன பேசமுடியாது,நான் விட்டு தரமாட்டேன்,அப்புடின்னு சொல்ல வேண்டாம் அருண்.நிதர்சனம் அப்புடின்னு ஒன்னு இருக்கு அது படி யோசிங்க இன்னக்கி நல்ல இருக்கும் நாளை ஒரு சின்னச் சண்டை வந்தாலும் வார்த்தைகள் தடிக்கும்,குத்தி காட்ட தோணும்.

‘அடிப்போடி’ என்பது போல் பார்த்தவன் மேல்கொண்டு அவளைப் பேசவிடாது பசிக்குது வா என்று அழைத்து. அவள் வருகிறாளா என்பதைக் கூடப் பார்க்காமல் சென்றுவிட்டான்.நடையில் உள்ள வேகமே அவன் கோபத்தின் அளவை பறைசாற்ற.சலித்துக் கொண்டு அவன் பின்னே சென்றாள் மீனா.

இனி இந்த ஓட்டம் தொடருமோ………………….
 
Top