Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பு விதை - 2

Advertisement

Dhanuja

Well-known member
Member
அன்பு தோழிகளே!

அன்பு விதையின் அடுத்த விதையை விதைத்து விட்டேன் படித்துப் பார்த்து உங்கள் கருத்தை சொல்லவும்.




அன்பு விதை -2

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து

இன்புற்றார் எய்துஞ் சிறப்பு.


(75)

இவ்வுலகத்தில் இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராய் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர்.



அந்தப் பெரிய வீட்டில் நீலாமணி,விக்னேஸ்வரனின் நிச்சியம் வெகு சிறப்பாக நடைபெற்றது,கருணை கரத்தின் உள்ள அத்தனை மனிதர்களும் தங்களது விழா போல கொண்டாடியது தான் சிறப்பே.



அதிலும் திருவேங்கடத்திற்குச் சொல்லவே வேண்டாம் மகளின் திருமணக் கை கூடியது,கருணை இல்லத்தில் உள்ள அனைவரும் அவருக்கு உதவியது,வந்தவர்கள் அனைவரும் அவர்களது குடும்பத்தைப் பார்த்து நிகழ்ந்தது,இதை எல்லாம் விடத் தனது மகனின் வருகையென, திக்கு முக்காட வைத்தது அவரை.



ஊனம் என்பது மனம் அற்றவருக்கே,கருணை இல்லத்தில் உள்ள அனைவரும் தங்களது உடல் உழைப்பால்,அன்பால் மனம் முவந்து வேலை செய்தது பெருமையாக இருந்தது.



அதிலும் புதிதாய் வந்து சேர்த்திருக்கும் விமலன் என்னும் சிறுவனுக்குச் சுமார் பத்து வயது இருக்கும்,ஒற்றைக் கையை வைத்துக் கொண்டு அவன் பம்பரமாய்ச் சிரித்த முகத்துடன் அங்குமிங்கும் சென்று வேலை செய்தது பார்ப்பவர்கள் கண்களை நிறைத்தது.



அதுவரை இரு விட்டார்களும் தங்களை மறந்து உற்றார்,உறவினர், நண்பர்களை உபசரித்து,மணமக்களை உணவருந்த செய்து,அவர்கள் உணவருந்தி,கருணை இல்லத்தில் உள்ளவர்களைப் பத்திரமாகக் கொண்டு சேர்த்து வருவதற்குள் அப்பப்பா சோர்த்து போயினர் இரு பெற்றோர்களும்.



சும்மாவா சொன்னார்கள் 'கல்யாணம் பண்ணி பார்,வீட்டை கட்டி பாரென்று',களைத்து போய் முகவரையில் இரு குடும்பக்களும்,இளையவர்களும் அமர்ந்தனர்,அனைவர் கண்ணிலும் அப்பட்டமான சோர்வு,யார் என்ன உடை,என்ன அலங்காரம் என்பது கூடத் தெரியவில்லை.



இத்தனை செலவு செய்து இக்காலத்தில் திருமணம் செய்கிறோம் ஆனால் அதை முழுமையாக நான் அனுபவிக்கிறோமா என்பது பல குடும்பங்களில் கேள்விக்குறி தான்.



சிதம்பரம் மெதுவாக ஆரம்பித்தார்,அப்புறம் சம்மந்தி நிச்சியம் நல்ல படிய முடுஞ்சுது ரொம்பச் சந்தோசம்,நாங்க பொறப்படுறோம்,ஒரு இரண்டு நாள் போகட்டும் கல்யாணம் வேலை பத்தி பேசி முடிவெடுக்கலாம்.



கொஞ்சம் இருங்க சம்மந்தி போகலாம்,நானே அருணை விட்டு ட்ராப் பண்ண சொல்லுறேன்.



ஆமாங்க கொஞ்ச நேர பேசிட்டு போகலாம்,சிதம்பரத்தின் பார்வை லலிதாவை துளைத்தது,மனைவியின் எண்ணம் அறிந்தவர் சம்மதமாகத் தலை அசைத்தார் இதையெல்லாம் கூர்விழிகளால் அலசிய படி அமர்ந்து இருந்தாள் மீனா,ஏனோ இன்று அவளுக்கு நாள் நன்றாக இல்லாதது போல் ஓர் எண்ணம்,(எண்ணம் வலு பெறுமோ ).





இங்குப் பெரியவர்கள் நால்வரும் பேசிக்கொண்டு இருக்கத் தனது மொபைலில் தான் உலகமே என்பது போல அதில் லயித்து இருந்தான் அருண் குமார்,நீலா மணியும்,விக்னேஸ்வரனும் கண்களால் கதை பேச,வேணி விழாவில் எடுத்த புகை படத்தை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் போட்டு அழகு பார்த்துக் கொண்டு இருந்தாள்,மீனா இவர்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு இருந்தாள்,அவள் சிந்தனையில் அத்தனை வியப்பு.



இருக்காதா பின்ன பல உறவினர்கள் விழாக்களுக்குச் சென்று இருக்கிறாள் அப்போதெல்லாம் அனைவரும் அவளைப் பாவமாக,பரிவாக,ஒட்டாத தன்மையாக இப்புடி பலவிதமான பார்வைகளையும் அலட்சிய பேச்சையும் கண்டவளுக்கு,அவளது குறையைப் பற்றி அலட்டி கொள்ளாத இவர்களை எண்ணி வியப்பு.அதை விட அந்த இல்லத்தில் உள்ளவர்களைப் பார்க்கும் பொதுக் கடவுள் தன்னை நிறைவாகவே வைத்திக்கிறார் என்று தான் தோன்றியது.



திருவேங்கடம் தொண்டையைச் சரி செய்து கொண்டு,அருண் என்று அழைக்க மெதுவாகத் தனது தந்தையை நிமிர்ந்து பார்த்தான்.



“சொல்லுங்க அப்பா”.



“இதுதான் விக்னேஸ்வரன் தங்கச்சி மீனா,இப்போ தொழிலை இந்தப் பொண்ணு தான் நடத்துறா”. நிச்சயத்தின் பொது அறிமுகம் செய்ய நேரமில்லை, எனவே மகனுக்கு முறையாக இப்போது அறிமுகம் செய்தார்.



"குட்" என்றவன் அவளிடம் ஒரு புன்னகையை சிந்தி மீண்டும் தனது வேலையில் முழுக.



அவனது அலட்சியத்தில் சிறு கோபம் எட்டி பார்த்தது திருவேங்கடத்திற்கு,அருண் உனக்கும் மீனாகும் கல்யாணம் பேசலாமுன்னு இருக்கோம்,உன் விருப்பம் என்ன.



அதுவரை தங்களுக்குள் முழிக்கிருந்த இளையவர்கள் அனைவரும் திடுக்கிட்டு விழித்தனர்.



அப்பா..... வேணி அதிர்ந்து கத்திவிட்டு, தனது அன்னையின் பார்வையில். “சாரி கொஞ்சம் அதிர்ச்சியாகிட்டேன்”.



மகளை ஒரு முறை பார்த்தவர் அருணிடம் திரும்பி,” உனக்கு இதில் விருப்பமா பொண்ணு புடிச்சு இருக்கா”.



“எனக்குப் புடுச்சு இருக்குப்பா”. அலட்டல் இல்லாமல் ஒத்துக்கொண்டான் அதே புன்னகையுடன்.



“என்னது புடுச்சு இருக்கா இந்த முறை அதிர்ந்து கத்தியது சிதம்பரமே தான்”.



வருங்கால அண்ணி மற்றும் அண்ணன் முகத்தில் அதிர்ச்சியைக் கண்டவள்,அதன் பின் வேணியின் அதிர்ச்சியைக் கண்டவள், இப்பொழுது தனது தந்தையும் என்றதில் அவ்வளவு வலித்தது,அது கோபமாக மாறி.



அம்மா! கோபத்தைக் கூட மெதுவாக மென்மையாகக் காட்டினாள் புஞ்சை உள்ளம் கொண்டவள்.



“என்ன பாப்பு”.



“எனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டமில்லை”.



பெரியவர்கள் எதிர் பார்த்த ஒன்று தான்,ஆம் அவர்கள் நிச்சியத்திற்கு முன்னே இதனைப் பற்றி ஓர் அலசு அலசிவிட்டார்கள்,தங்களது பிள்ளைகளின் நிறை குறை கூட.



பொதுவாகக் கருணை இல்லத்தில் இருக்கும் அனைவருமே பல விதத்தில் பாதிக்கப் பட்டவர்கள்,அவர்களுள் ஓராயிரம் காயங்களும் அடக்கம்,அதனை அறிந்தவர்கள் என்பதால் சுசீலாவும் சரி,திருவேங்கடமும் சரி, மீனாவின் குறை ஒரு குறையாக எண்ணவில்லை,பக்குவம் என்பது இதுதானோ!



மீனாவின் பதிலில் அருண் கோபம் கொண்டு கத்தி இருக்க வேண்டும்,அவனோ மீனாவை தான் ஒரு புன் சிரிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தான்.



“பாப்பு நீ தம்பி கூடப் பேசி பார்த்துட்டு சொல்லலாமே ,அப்புறம் உன் முடிவு சொல்லு நாங்க ஏத்துக்குறோம்”.லலிதா மன்றாடி கேட்டார்,பெண் வாழ்வு சிறக்க பாடுபடுகிறது அந்தச் சராசரி தாயுள்ளம்.



தாயிடம் இனி பேச முடியாது என்பதை அறிந்தவள் தந்தையைத் துணைக்கு அழைத்தாள், அப்பா…………….அவர் தனது மனைவியைப் பார்க்க நொந்து தான் போனாள் மீனா.



“வா மீனு பாப்புப் பேசலாம்”, அருணின் குரலில் அத்தனை கேலி. அவன் தன்னைப் பாப்பு என்று அழைத்தது அத்தனை பிடித்தமில்லை அவளுக்கு,ஆனால் அவனது விழிப்பில் மற்றவர்களுக்குக் கண்ணனுக்குத் தெரியாத நிம்மதி.



பெயர்வர்கள் முன்னிலையில் நாகரிகம் கருதி அமைதியாக அவன் பின் சென்றாள்.



சிதம்பரம் அவர்கள் சென்றதை பார்த்தவாரே,”லல்லி என்னடி இது பாப்புவை பத்தி தெரியாம இந்தத் தம்பி கேலி பேசுது,பயமா இருக்குடி,நான் வேணா கூடப் போகவா”.



நல்ல கூடிய கெடுதிங்க போங்க, நம்ப பாப்புவை பத்தி தெரிஞ்சுதான் மாப்பிள பேசறாரு.



அவளது மாப்பிள்ளை என்ற விழிப்பை குறித்துக் கொண்டவர்,"நடக்குமாடி லல்லி”. குரலில் அத்தனை ஏக்கம்.



தாய்க்கு சற்று குறையாதது தந்தை பாசம்,சொல்லப்படாத பாசம்,வெளிப்படாத பாசம்,செயல் மட்டுமே பாசமாகக் கொண்டது தந்தை மகள் பாசம் அல்லவா.



அவரது கைகளை ஆறுதலாகப் பற்றி,உங்களுக்கு நான் புரிய வைக்குறேங்க எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்க,முதல அவுங்க பேசிட்டு வரட்டும்.அவருக்கும் அதுவே சரியென்று பட்டது.



மகனின் குணம் அறிந்த பெற்றவர்கள் அமைதி காத்தனர்,திருவேங்கடத்திற்கு இன்னும் தன் காதுகளை நம்ப முடியவில்லை,ஆனால் சுசிலாவின் தெளிவை கண்டு,அம்மாவும்,மகனும் இதைப் பற்றி விவாதித்து இருக்கிறாங்கள் என்பதை அறிந்து கொண்டார்.



அருணுக்கு எந்த விடயம் என்றாலும் தனது தாயிடம் ஒரு கருத்துத் தேவை,அம்மா கொன்டு என்று கூடச் சொல்லலாம்.



அங்கு,மிஸ்டர்.அருண் குமார் .



“சொல்லுடி”.



பல்லை கடித்துக் கொண்டு மரியாதை அவசியம்.



“சொல்லவந்ததைச் சொல்லுடி”, அலட்சியம் மட்டுமே அவன் குரலில்.



“திருந்தவே மாட்டிங்களா”.



"மாட்டேன்".



சோர்ந்து போனவளாக என்ன தான் வேணும்.



பழிக்கு பழி இரத்திற்கு இரத்தம்.



அவளும் இப்போது அலட்சியமாகப் பாத்தாச்சு பாத்தாச்சு,நிறைய கதையில கூடப் படித்து இருக்கேன்.



“பார்ரா,தேறிட்ட மீனு நீ”.



விஷியத்துக்கு வருவோம் அருண்,எனக்கு இஷ்டமில்லை நீங்க தியாகி பட்டம் வாங்க வேற ஆளா பாருங்க.



முடியாது முடியாது நான் தியாகி பட்டம் உங்கிட்ட தான் வாங்குவேன்,ரொம்ப மென்மைடி நீ இப்புடி மியாவ் மியாவ் பேசுற பாரு அது தான் கியூட்.



“நீங்க சரிப்பட்டு வர மாட்டீங்க நான் அப்பாகிட்ட சொல்லிடுவேன் உங்கள பத்தி”.



“என்னடி சொல்லுவ”.



“நீங்க பண்ண கூத்தத்தான், ஊர் நிறையப் பொண்ணுக சகவாசம் இன்னும் நிறைய”.



டூ பேட் மீனு குட்டி சிறுது நேரம் தாடையைத் தடவியவன் சரி நீ என்ன பத்தி சொல்லு,நான் உன்ன பத்தி சொல்லுறேன்.



விக்னேஸ்வரனின் பருவத்தில் முளைத்த வில்லங்கம் அவள் நினைவில் வர,அதில் பதறியவள் ப்ளீஸ் அருண் விக்கிக்கு தெரிஞ்சா ரொம்பப் பீல் பண்ணுவான் ப்ளீஸ்.



“அப்போ கட்டிக்கோ”.



“உங்களுக்கு என்ன பைத்தியமா என்ன கல்யாணம் பண்ண”.



“ஏன்,உனக்கு என்னடி குறைச்சல்”.



நீ என்ன லூசாடா என்பது போலப் பார்த்தவள்,இப்போ எதுக்கு இந்தத் திருமண ஒப்புதல்,தனது மனதினை கண்டு கொண்டவளை,மெச்சுதலாகப் பார்த்தான்.



காரணத்தை மறைத்துக் காரியமாக,"சும்மா தனியா இருக்கப் போர் அடிக்குது,அதான்”.



அதற்கு மேல் அவளால் பேச முடியும் என்று தோன்றவில்லை,விலகி செல்ல பார்க்க அவளது கையை எட்டி பிடித்தவன் தன் புறமாக இழுத்துக் காதில் ஏதோ சொல்ல,தண்ணீரில் இருந்து விழுந்த மீனாகத் துடித்தாள் மீனா.அருணின் குணம் தோராயமாகத் தெரியும் என்பதால் அமைதியாகினாள்.



இனி விதி வழி பயணம் தான்,எதார்த்தவாதியாகச் செயல்பட்டாள்,மிரட்டி திருமணம் செய்ய இது ஒன்றும் படமோ,கதையோ அல்ல,அருணின் மேல் பயமும் அல்ல,தன்னால் முடிந்த நிம்மதியை அவர்களுக்கு இந்தத் திருமணம் மூலம் தர எண்ணினாள்.



அருண் விளையாட்டாக எதையாவது சொல்ல போக,அது தனது அண்ணனின் மணவாழ்க்கைக்குப் பெரிய வெட்டாக மாறிவிடும் என்பது திண்ணம்.அதிலும் தனது அண்ணனின் விடயம் தெரிந்தும் தங்கை யை திருமணம் செய்ய அனுமதித்த இவனை எண்ணி குழம்பி தான் போனாள்.

இருவரும் பேசிவிட்டு வெளியில் வருவதைப் பார்த்த பெற்றவர்களின் கண்ணில் தான் எத்தனை எதிர்பார்ப்பு,இளையவர்கள் கண்ணில் அத்தனை ஆர்வம், அனைவர் எதிர்பார்ப்பையும் பொய்யாகாமல் அருண் திருமணத்திற்கு இருவரின் சார்பில் ஒப்புதல் தர,ஓடி வந்து கட்டி கொண்டாள் மீனாவின் தாய்.



தாயின் மகிழ்ச்சியைக் கண்டு கண்கள் நிறைந்தது பெண்ணுக்கு,அவளும் அனைத்து கொண்டாள்.



திருமணச் சம்மதம் அவள் சம்மதம் இல்லாமலே முடிவானது.



எந்த வகையான அன்பு இது?இது அன்பா என்ன ?.
 
Top