Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பு விதை - 10

Advertisement

Dhanuja

Well-known member
Member
அன்பு தோழிகளே

அன்பு விதையின் அடுத்தப் பதிவை போட்டுவிட்டேன் படித்துப் பார்த்து உங்கள் கருத்தை பகிரவும்.



அன்பு விதை – 10
சேவல் கூவும் நேரம் வந்தது தான் தாமதம் திருவேங்கடத்தின் வீட்டின் அழைப்பு மணி அலறோ அலரென்று அலறியது.அந்த கதறலில் வீட்டில் உள்ள நால்வரும் அடித்துப் பிடித்து எழுந்தனர். அருண் பதிரி எழும் மீனாவை பார்த்து “இப்போ எதுக்கு வேகமா எழுந்திருக்கிற, விழுந்து வைக்கவா? நைட் முழுக்க ஒழுங்கா தூங்கல, ஒழுங்கா படு” என்று அரட்டியவனை.

“பிராடு இவர் எங்க தூங்காவிட்டாரு, பாவி ஏதேதோ பேசி என்ன ………” அதற்கு மேல் எண்ண முடியாமல் வெட்கம் பிடிங்கி திங்க. அவனுக்கு முகம் காட்டாது படுத்து விட்டாள்.

அவனோ நிம்மதியாக மூச்சுவிட்டான் ‘நேற்று வாழ்க்கையைப் பத்தி பேசணும்,அண்ணன் ஆட்டு குட்டி’ என்று பல்லவி பாடியவளை பேச்சை மற்றும் பொருட்டாக,இந்திய பொருளாதாரத்தில் தொடங்கிய பேச்சு பாகிஸ்தான் எல்லை பிரச்சனையில் வந்து முடிந்தது.

எதற்காக இவன் சம்பந்தமே இல்லாமல் பேசுகிறான் என்று கதறிவிட்டாள் பெண் பாவம்.அதன் பின் நடந்தவை அனைத்தும் அருணின் சித்தம்.
அதையெல்லாம் எண்ணியவாறே அழகான காலை பொழுதில் தங்களை அழைக்கும் அந்த முகம் தெரியாதவனைக் கெட்ட வார்த்தையால் திட்டியவரே சென்று கதவை திறந்தான்.

அழுத விழிகளுடன் நீலா அவனைத் தள்ளி கொண்டு உள்ளே வர,அவள் பின் ஓய்ந்து போய் வந்தான் விக்னேஸ்வரன்.அவன் வந்த கோலமே சொன்னது வில்லங்கத்தை விலை கொடுத்து வாங்கிவிட்டான் என்பதை.இனி இதில் தான் செய்வதற்கு எதுவுமில்லை எண்ணியவன் அமைதியாகச் சோபாவில் அமர்ந்தான்.

அவன் அமர்ந்த வேலை மனோ - வேணி தம்பதியின் வருகை. அருண் இப்போது முடிவே கட்டிவிட்டான் சரிதான் என்று.அத்தனை தூரம் சொல்லியும் இவன் இப்புடி செய்து வைப்பான் என்று கனவா கண்டான்.

முன்னையே தெரிந்திருந்தால் மீனுவை தேன் நிலவுக்குத் தள்ளி கொண்டு சென்று இருக்கலாம் ஆனால் இப்போது ? ஒரு பெருமூச்சுடன் அமர்ந்திருந்தான் வேடிக்கையளராக.

அதற்குள் அரவம் கேட்டு மீனா,திருவேங்கடம் மற்றும் சுசீலா ஆஜர், திருமணமான மறு நாளன்றே பிறந்தகம் வந்த பெண்களைப் பார்த்து ஒரு தாயாக சுசீலாவிற்குப் பயம் வந்தது. முதலில் திருவேங்கடம் தான் சுதாரித்து “வாங்க மாப்பிள்ளை” என்று பொதுவாக அழைத்து அவர்களை அமர செய்து அவரும் அமர்ந்தார்.சுசீலாவிடம் கண்ணைக்காட்ட, வந்தவரை உபசரிக்க கலக்கத்துடன் சென்றார்.

ஒருவரும் பேசவில்லை பெரியவர் வாயே திறக்கவில்லை,எங்கே ஏன்? என்று கேட்டால் வில்லங்கம் வருமோ? என்று பயந்தவராக, அவர்களே சொல்லட்டும் பெரியவராக அமைதி காத்தார்.நீலாவிற்குத் தனது அண்ணன் மற்றும் தந்தையின் அமைதி கோப கனலை விசிறி விட.ஏன்? எதற்கு? இத்தனை காலையில்? என்ற கேள்விகள் அற்று அமர்ந்து இருக்கும் பிறந்தகம் மேல் வெறுப்பு தான் வந்தது.

கோபம் எல்லை கடக்க அவளே ஆரம்பித்தாள் “ஏன்ப்பா நான் உங்க பொண்ணு தானே”

“இது என்னம்மா கேள்வி”

“என்ன கேட்க வைக்கிறீங்கப்பா. ஏன் வந்தேன்? எதுக்குக் கோவமா இருக்கேன்? எதாவது கேட்டீங்களா..

“சொன்னதானடா தெரியும்” பாவமாகத் திருவேங்கடம் பேச.
சொல்லாமலே தெரியணும்ப்பா என்ன விசாரிச்சுக் கல்யாணம் பண்ணீங்க நீங்க,என்ன ஒரு குடிகாரனுக்கு, போதை மருந்து சப்புடறவனுக்குக் கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கீங்க அழுது கொண்டே கத்தினாள்.

அவளது பேச்சில் திருவேங்கடம் அதிர்ந்து நிற்க,சுசீலா அடுக்களையில் இருந்து ஓடி வந்தார்.மனோவிற்கு இது அதிகப்படியான குற்றசாட்டு என்றே தோன்றியது,அருண் வேடிக்கை மட்டுமே.மீனாவிற்குக் கோபமாக வந்தது என்ன பேச்சு இது? என்பது போல்.விக்னேஸ்வரன் எந்த உணர்வும் இல்லாமல் அமைதி காத்தான்.

தந்தையாக உள்ளம் பதற “என்னம்மா சொல்லுற”

உண்மைதான்ப்பா உங்க பையனுக்குக் கூடத் தெரியும்,வேணி வீட்டுக்கருக்கும் தெரியும்,என் மேல அப்புடி என்னப்பா உங்களுக்குக் கோபம்.

“ச்ச.. ச்ச… என்ன பேச்சு இது நீலா அப்பா உனக்கு அப்புடி பண்ணுவேனா ? டேய் அருண் என்னடா சொல்லுறா”

“அவன்கிட்ட கேட்காதீங்கப்பா இனி எனக்கு அவன் அண்ணனே இல்ல” அவளது பேச்சில் கவலை கொண்ட அருண்,

“லூசு மாதிரி பேசாத நீலா நடந்தது எல்லாமே உங்கிட்ட மாப்பிள்ளை சொல்லி இருப்பாரு தானே, அதுலயே தெரிஞ்சு இருக்குமே அவர் மேல எந்தத் தப்புமில்லைனு.இப்போ எப்புடி இருக்காரு அத பாரு.நானும் அத யோசுச்சு தான் கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டேன்”.


“நிறுத்து ...............”கத்தியவள் “நீ வேணா நொண்டிக்கும்,செவுடுக்கும் வாழ்க்கை கொடுக்கலாம் எனக்கு உன்ன மாதிரி பெரிய மனுசு கிடையாது” அவளது பேச்சில் கோபம் கொண்ட விக்னேஸ்வரன் வேகமாக எழுந்து நிற்க. அதை விட வேகமாக வந்து தனது தமையனின் கையைப் பிடித்தாள் மீனா,முகம் முழுதும் வேர்வை.

தன்னைப் பற்றி மீனா பேசியதை கூட கவலை தரவில்லை,தனது அண்ணனின் வாழ்க்கையை எண்ணி தான் பெண்ணுக்கு பயம்.சிறு வயதில் இருந்து இது போல் பேச்சுக்களைக் கடந்து தான் வந்து இருக்கிறாள் தனது தாயின் உதவியுடன்.அதனால் அவளுக்குத் தன்னைத் தாக்கி பேசியது பெரியதாகத் தெரியவில்லை.

நிலைமையைச் சிறியவர்கள் கையாளும் விதம் தவறாகப் படத் திருவேங்கடம் விக்னேஸ்வரனின் பெற்றோர்க்கு அழைத்து விட்டார்.அவர்களுக்கு நடந்த கூத்து எதுவும் தெரியாது பாவம்,அவர்களிடம் சொல்லி கொண்டும் வரவில்லை.

அந்தப் புரம் சிதம்பரம் விடயத்தைக் கேட்டு அதிர்ந்தார்.உடனே லலிதாவை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார்.பெரியவர்கள் முகத்தில் பெரும் சங்கடம்.

என்ன பேசுவது என்று தெரியவில்லை முதலில் தெளிந்தது லலிதா தான் தனது மகளை நோக்கி “உனக்கு முன்வே மாப்பிள்ளையைத் தெரியுமா மீனா,நீலா சொல்லுறதெல்லாம் உண்மையா என்ன நடந்துச்சு” இப்பவே சொல்லு என்பது போல் தாய் பார்க்க மெல்லிய குரலில் சுருக்கமாகச் சொன்னாள் மீனா.

“அம்மா இவங்களும் ,மனோ அண்ணனவும் ஒரே காலேஜ் தான் ஆனா வேற டிபார்ட்மென்ட் எல்லாருக்கும் தெரியும் ஒரே க்ளப்ல மெம்பரா இருந்தோம் அதுனால தெரியும்”

“என்கிட்ட சொல்லி இருக்கலாமே மீனா தாயின் குரலில் பெரும் வருத்தம்”

“அம்மா அண்ணா எதுவும் பண்ணல அவன் நண்பர்கள் கொஞ்சம் சரியில்லை ட்ரக் அடிக்ட், அண்ணனுக்குத் தெரியாம தினமும் ஜூஸ்னு சொல்லி கலந்து கொடுத்து இருக்கானுக, கொஞ்சம் கொஞ்சம் ட்ரக் பழகி இருக்கானுக அண்ணாவும் அதுக்கு அடிக்ட் ஆயிட்டான்”

பெரும் வேதனை மீனாவிற்கு அனைவர் முன்னிலும் தனது அண்ணனை பற்றிச் சொல்ல. அன்று மற்றவர்களுக்குத் தெரிய கூடாது என்பதற்குத் தானே ஒரு வருடம் பெற்றவர்களுக்குக் கூடத் தெரியாமல் தமையனை பாதுகாத்தாள் இன்றோ அனைத்தும் பாழ்.

வேதனையை முழுங்கி “ஒரு நாள் காலேஜ் பார்ட்டி எல்லாருமே போனோம் அங்க அந்தப் பசங்க பொண்ணுங்களோட கொஞ்சம் தப்பா நடந்துக்கிட்டாங்க” அதுக்கு மேல அவளால் பேச முடியவில்லை ,அவள் முழுங்கிய வார்த்தை அனைவருக்கும் புரிய சில நொடி மௌனம் விக்னேஸ்வரன் தலையைக் குனிந்து கொண்டான்.

“அப்புறம் போலீஸ் வந்துட்டாங்க எல்லாரும் ஓடிட்டாங்க நானும் அண்ணாவும் தான் இருந்தோம் அவருக்குக் கான்சியஸ் இல்ல,நான் தான் அண்ணாவை நம்பக் கெஸ்ட் ஹவுஸ் கூட்டிட்டுப் போய்ப் பார்த்துக்கிட்டேன்.கிட்டத்தட்ட ஒரு வருஷம் டிரீட்மென்ட் கவுன்சிலிங் கூட்டி போன்னேன்,ஆரம்ப ஸ்டேஜ்ல இருந்ததுனால சீக்கரம் குணமாயிடுச்சு.
சொல்லிவிட்டு தனது பெற்றோரை பார்க்க, என்ன சொல்லுவது சிதம்பரம் யோசித்து நிற்க நிலைமையைக் கையில் எடுத்தார் லலிதா.மாமியாராக யோசித்தால் தனது மகனுக்கே சாதகம் பேசும் மனம்,பெண்ணாகப் பார்த்தால் நீலாவிற்கே நியாயம் பேசும் மனம், அதனால் இருவருக்குமே ஒரு தாயாக நின்று யோசித்தார்,அப்போதுதானே தராசு இருபுறமும் சம நிலையில் இருக்கும்.

முதலில் எழுந்தவர் திருவேங்கடம்-சுசீலாவை நோக்கி இரு கரம் குவித்து "எங்கள மனுச்சுடுங்க சம்மந்தி இந்த விஷயம் எங்களுக்கே தெரியாது தெரிஞ்சு இருந்தா உண்மையா சொல்லியே பொண்ணு கேற்றுப்போம்”

“என்னம்மா நீ “என்றவர் அமைதியானார் ஒரு பெணின் தந்தையாக அதற்கு மேல் அவர்களிடம் பேச முடியவில்லை,சங்கடமான நிலையில் பெரியவர்கள்.

பின்பு தனது மருமகளிடம் சென்றவர் “தப்பு எங்க மேல இருக்குறதுனால, நீ எடுக்குற முடிவுக்கு நாங்க கட்டு படுறோம்” என்றவர் தனது கணவனைப் பார்க்க அவரும் எழுந்து கொண்டார்.

வருகிறேன் என்று சொல்ல கூட வருத்தமாக இருந்தது,கண்ணில் நீர் வழிய மீனா இருக்க,விக்னேஸ்வரன் ஒரு பெருமூச்சுடன் இருகரம் கூப்பி எதுவும் சொல்லாமல் வெளி ஏறி விட்டான்.
அனைவரும் செல்ல அருணிடம் “என்ன அருண் இது என்கிட்டயாவது சொல்லி இருக்கலாம் இல்லையா?” சுசீலா கலக்கத்துடன் கேட்க,

“அம்மா இது ஒரு பெரிய விஷியமா எனக்குத் தோணல,அப்..............” பேச வந்தவனை முழுதாகப் பேச விடாமல்.

ஓ! அப்போ எது உனக்குப் பெரிய விஷயம் சொல்லு? நீலா கத்த

அமைதியாக இருந்த பெண் இன்று மென்மையைத் தொலைத்து வெடிக்கவும் பயந்து தான் போனார் திருவேங்கடம். அவளைத் திசை திருப்பும் பொருட்டு.

“இங்க வாடாம்மா இப்போ எதுவும் பேசவேணாம் வா அப்பா கூட” அழைத்த மறு நொடி. அழுதுக் கொண்டே அவரது தோளில் தஞ்சம் அடைந்தாள்.அவளால தாங்க முடியவில்லை என்பதை விட ஏற்க முடியவில்லை,எத்தனை கல்யாண கனவுகள் அனைத்தும் கருகிய நொடி ஓய்ந்து போனாள் பெண்.

அனைவரும் அமைதியாகக் கலைந்து செல்ல. வேணியைப் பார்த்து 'வா' என்பது போல் கண் அசைத்தவன் எழுந்து விட்டான்,எதுவும் பேசவில்லை அருணின் தோளில் கை பதித்துக் கண்களால் விடை பெற்றான்.வேணிக்கு அருண்-மீனா மற்றும் தனது கணவன் மீது அடங்கா கோபம் யாரிடமும் பேசாமல் காரில் ஏறி அமர்ந்து கொண்டாள்.
********************************************

அவர்கள் செல்லவே மீனாவிடம் வந்த அருண் “எதுக்கு இந்த அழுகை, இதுக்குத் தான் சொன்னேன்… இனி உன் வேலைய பாரு அவன் விஷயத்தை அவன் பார்த்துப்பான்,எதுவும் யோசிக்காத என்ன” தன்மையாகச் சொன்னவனை ஏறிட்டவள்.

“நீங்க ஏன் என்ன கல்யாணம் பண்ணீங்க” மொட்டையாகக் கேட்டு வைக்க

“ஏன் என்ன இப்போ?” அவனும் கோபமாக இப்போது.

“முன்னவே தெரியும் தானே எங்கள பத்தி”.

அருணின் பொறுமை காற்றில் பறக்க “ஏய் லூசு எதாவது சொல்லிட போறேன், உன்ன அறிவாளின்னு நெனச்சேன், நீ அதுங்களுக்கு மேல இருக்க.முதல குளி,சாப்புடு அப்புறம் பேசலாம்”

அவனது கோபத்தில் அதிர்ந்தவள்,சரியென்பது போல் தலை ஆட்டினாள். சண்டையில் சட்டை கிழுந்தும் நம் அருண் செயலில் தெளிவாகத் தான் இருந்தான்.தங்கையைப் பேசியதற்கு எந்த எதிர் வினையுமில்லை.

அதற்கு இரண்டே காரணம் தான் ஒன்று பேசி புரியவைக்கும் இடத்தில் இப்போது நீலா இல்லை,இரண்டு பேச வேண்டியவனே மௌனம் கொண்டது.இனி அவர்கள் வாழ்க்கையை அவர்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.எந்தச் சூழ்நிலையிலும் தங்களது வாழ்க்கை பாதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான்.

இங்குக் காரில் மனோவுடன் சண்டை பிடித்துக் கொண்டே வந்தாள் வேணி “உங்களுக்கு எல்லாம் தெரியும் தானே அப்புறம் ஏன் சொல்லல”

அவளை ஒரு பார்வை பார்த்தவன் மௌனம் என்னும் பதிலை அளிக்க மீண்டும் தொடர்ந்தாள் அவனது மனையாள்

“இதே உங்க தங்கச்சிய இருந்தா இப்புடி தான் பேசாம இருப்பீங்களா” அதற்கும் மௌனம் இது போல் தான் நீ கேட்டுவைப்பாய் என்று முன்பே தெரியும் என்பது போல.

“அப்போ பதில் சொல்ல போறதில்லை, அது எப்புடி சொல்லுவீங்க நீங்களும் அதே இனம் தானே. யாருக்கு தெரியும் நீங்களும் அந்த மாதிரி தானோ என்னமோ, யாரையும் நம்ப முடியல” என்றவளை பார்த்தவன் சடாரென நெருங்கி வர.

தன்னை அடிக்கத் தான் போகிறான் என்று பயந்து பின்னால் சாய்ந்தாள் பெண். நெருங்கி வந்தவன் கதவை திறந்து அவளை இறங்கும் மாறு கை அசைத்தான்.சற்று நேரத்தில் தன்னைப் பயம் கொள்ளச் செய்தவனை முறைத்துக் கொண்டே இறங்கினாள் வேணி. கண்ணுக்கு தெரியாத சிரிப்புடன் மனோ அவளை பின் தொடர்ந்தான்.
 
Top