Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பு விதை – 6

Advertisement

Dhanuja

Well-known member
Member
அன்பு தோழிகளே

அன்பு கதையின் அடுத்தப் பதிவை கொடுத்து விட்டேன் படித்துப் பார்த்து உங்கள் கருத்தை கூறவும் கதையின் நடை புரிகிறதா என்பதையும் பதிவிடுங்கள், இனி நேரம் தாழ்த்தாமல் அத்தியாயம் வரும். உங்கள் கருத்தை எதிர் நான்.






அன்பு விதை – 6


மனோ தனது தாடையை இரு கைகளுக்குள் புதைத்து தன் எதிரில் கரும சிரத்தையாகத் திருமணப் பத்திரிகைகளை அடுக்கி கொண்டு இருந்த அருணை வெறிக்க வெறிக்கப் பார்த்துக் கொண்டு இருந்தான்.வந்ததில் இருந்து அமைதியாக இருக்கும் நண்பனை அவ்வப்போது பார்த்தாலும் எதுவும் பேசவில்லை.



இவன் பேச போவதில்லை என்பதை அறிந்த மனோ "டேய் என்ன நெனச்சு நீ இந்தக் கல்யாண முடிவ எடுத்தனு எனக்குத் தெரியல,விக்னேஸ்வரனை பத்தி நம்ம எல்லாத்துக்கும் தெரியும், கல்யாணத்துக்கு நம்ப நட்..பூஸ்….. வருவாங்கடா எவனது உளறி வச்சாங்கன்னா என்ன பண்ணுவ.



“நான் யாரையும் கூப்புடலை மீனுகிட்டையும் சொல்லிட்டேன் யாரையும் கூப்பிடத்தணு,அவளும் சரினு சொல்லிட்டா.”



“அருண் எனக்கு என்னமோ பயமா இருக்கு இந்த விஷயம் கல்யாணத்துக்குப் பிறகு நீலாக்கு தெரிய வந்துச்சு? முதல் அடி உனக்குத் தான்.அடுத்து தான் மீனுக்குப் பாவம்டா அந்தப் பொண்ணு. “தெரியவந்தா பார்த்துக்கலாம் அவன் பண்ண அதே தப்ப தான் நாமளும் செஞ்சொம் அவன் முழுசா அதுல மாட்டிகிட்டான் அவுளோதான்”.



“நீ ஈசியா சொல்லலாம் ஆனா பொண்ணுகளுக்கு இதை டைஜஸ்ட் பண்ண முடியாது அருண்.”



“கண்டிப்ப முடியாது தான். விக்னேஸ்வரன் நல்லவன் அவுங்க குடும்பம் பத்தி தெரியும் அதான் அப்பா கேட்டப்ப அவனை தெரிஞ்சும் ஓகே சொன்னேன், என்ன கேட்டா தெரியாம செஞ்ச தப்புக்கு மன்னிப்பு உண்டுன்னு சொல்லுவேன்,



சரி உன் பேச்சுக்கே வரேன் விக்னேஷ் தப்பு செஞ்சவன் அவனுக்கு நம்பப் பொண்ணு கொடுக்க யோசிக்கணும் கரெக்ட்டு. அதே அவுங்க நமக்குப் பொண்ணு கொடுக்க யோசுச்சா? ஏன்னா அன்னைக்கு நம்பப் பண்ணதும் தப்பு தான்”.



டேய்! டேய்! லூசு பையில அவன் அளவுக்கு நம்ப ஒன்னும் தப்பு பண்ணல.அந்த விக்னேஷ் ஒரு ட்ரக் அடிக்ட் நம்ப அப்புடியா.அவனைக் காப்பாத்த போய் நாமளும் மாட்டிகிட்டோம் நல்ல வேல வீட்டுக்கு தெரியாது. இன்றும் அந்த நாளை எண்ணினால் பயம் வர தான் செய்தது.

“புருஞ்சு பேசு மனோ அவனுக்கே தெரியாம நடந்த தப்புக்கு அவன் எப்புடி பொறுப்பாவான், இப்போ வரைக்கும் அவனுக்கு நடந்தது தெரியாதுடா அந்த அளவுக்கு மீனா அவனை கொண்டு போய் இருக்கா.தனியா ஒரு பொண்ணு ஒரு வருஷம் போராடி அவுங்க அண்ணனை மீட்டுருக்கா,அந்த சூழ்நிலையில நம்மளே விட்டா போதும்னு ஓடி வந்தது நியாபகம் இருக்கா.”



“எப்புடிடா மறக்க முடியும்.அவனவன் தப்பு மேல தப்பு பண்ணுறான்,ஆனா நம்ப ஒரு தடவ பண்ணிட்டு அய்யோஓஒ !............... வேணாம்டா சாமி இந்தப் பேச்ச விடு.ஆனா மச்சான் உன்ன பார்த்தா அவனுக்குக் கில்டியா இல்லையடா.”



“அது எப்புடி இல்லாம இருக்கும், நிச்சியம் அப்போதான் என்னோட தங்கச்சின்னு தெரியும்.என்ன பார்த்த உடனே நெர்வோஸ் ஆகிட்டான்.தனியா கூட்டிட்டு போய் நான் தான் சமாதான படுத்தினேன்.”



“நீ ரொம்பக் கிரேட் டா,உங்க அப்பா மாதிரி சேவை மனப்பான்மை இல்லாம இருக்கன்னு நெனச்சேன் பரவாயில்லை உனக்கு மனசாட்சி இருக்கு.”



“நண்பனை முறைத்தவன் கருணை இல்லம் போய்ச் சேவை செஞ்சாதான் அவுங்க மேல பாசம்,அன்பு வரும் ன்னு யாருடா சொன்னது.என்னால அவுங்க கூட நேரம் ஒதுக்க முடியல, எங்க அப்பா அம்மா மாதிரி பாசமா பேச வராது.அதுக்காக அவுங்க மேல அன்பு இல்லனு அர்த்தம் இல்ல.”



“சரி சரி டென்ஷன் ஆகாத எல்லாம் நல்ல நடந்தா சந்தோசம் தான்.நீ சமாளிக்க முடியும் தெளிவா இருந்தினா அதுவே எனக்குப் போதும்.பேசிட்டே வந்த வேலைய மறந்துட்டேன் பாரு எனக்கும் கல்யாணம் நிச்சியம் பண்ணிட்டாங்கடா உங்க கல்யாணம் முடுஞ்சு ஒரு வரம் தள்ளி” அதிர்ந்த அருண் என்னடா சொல்லுற…..



நமக்கு என்ன வயசு குறையுதுனு நெனப்பா எங்க அம்மா தொல்லை தாங்க முடியல,அவுங்க சொந்தகார பொண்ணு தான், தூரத்து உறவு போலப் பெயர் நர்மதா,ஒரு டிகிரி படுச்சு இருக்கும் போல, அதுனால ஓகே சொல்லிட்டேன் டா.



ஹே!!!!!!சூப்பர்டா……என்ற அருண் உண்மையான அன்புடன் தனது நண்பனை கட்டிக்கொண்டான்.



“நாளை காலை ஒப்புத் தாம்பூலம் மாத்திட்டு, கல்யாணம் உறுதி படுத்தலாமுன்னு இருக்கோம். அதுக்குத் தான் உன்ன இன்வைட் பண்ண வந்தேன்.”

“கண்டிப்பா வரேண்டா எங்க அம்மா அப்பா கிட்டையும் ஒரு வார்த்தை சொல்லிடு”



“இப்போ உங்க வீட்டுல இருந்து தான் வரேன் நேருல போய்ச் சொல்லிட்டு ஆசிர்வாதம் வாங்கிட்டு வரேன்.சரி வா கிளம்பலாம் நிறைய வேல இருக்கு.



“எனக்குக் கொஞ்சம் வேல இருக்குடா முடுச்சுட்டு வரேன் வெயிட் பண்ணுறியா.மீனா குடும்பத்தைக் கூப்புட்றய்யடா” என்ற அருணை பார்த்து.



“இல்லடா நிச்சியத்துக்குப் பார்த்துக்கலாம் இப்போ முக்கியமான கொஞ்சம் பேர் மட்டும் போதும்”. “அதுவும் சரிதான் ஓகே வெயிட் பண்ணு வந்துடுறேன்”.



மறந்தும் வேணியைப் பற்றி இருவரும் பேசி கொள்ளவில்லை.பேசினால் சங்கடம் தான் என்பதை அறிந்து இருவரும் அதனைத் தவிர்த்தனர்.திருவேங்கடமும்,சுசீலாவும் கூட முகத்தில் சுணக்கம் இல்லாமல் அவனை வாழ்த்தினர்.வேணிக்கு தான் கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது.அது எப்படி அவன் திருமணம் செய்யலாம் என்று.



என்னடா இது நியாயம் அவனை வேண்டாம் என்று சொன்னது நீ தானே என்ற மனசாட்சியைக் கத்தியை கொண்டு மிரட்டி ஒடுக்கி விட்டு.மனோ பற்றி ஆழமாகச் சிந்திக்கத் தொடங்கிவிட்டாள்.இது எங்கு போய் முடியுமோ?வேணியின் நிலையில்லா மனதையும் முதிர்வில்லா குழந்தை தனமும் தான் மனோவிற்கு இவள் சரியாக வர மாட்டாள் என்று அருணுக்கு தோன்றியது.

----------------------------------------------------------------------------------------------------

அங்கு மீனாவிடம் விக்னேஸ்வரன் கெஞ்சி கொண்டு இருந்தான் திருமணத்திற்கு ஒரு மாதம் என்ற நிலையில் நண்பர்களை அழைத்துப் பார்ட்டி செய்ய வேண்டும் என்ற அவனது கோரிக்கையைத் தங்கையிடம் வைத்து அவளிடம் அனுமதி வேண்டி நின்றான்.



தாய்க்கு நிகராகத் தன் உயிர் காத்து,மானம் காத்து நின்றவள் ஆயிற்றே.அவளோ சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவத்தை எண்ணி “அண்ணா சொன்னா கேளு ரொம்பப் பயமா இருக்கு.இதே மாதிரி பார்ட்டி போய்த்தான்” மேலும் சொல்லாமல் மீனு தவிக்க.



அவளை விடத் துடித்தான் தமயன் சாரி…. சாரி…. மீனு நான் கேட்க மாட்டேன் சாரிடா…



அமைதியாக அவன் கைகளைப் பற்றியவள் நீ பார்ட்டி கொடு அண்ணா ஆனா கவனமா இரு.எதுவுமே அளவா இருக்கும் வரை எந்த வித பிரச்சனையும் இல்ல ,அளவிற்கு மேல போனா தான் பயம்.உனக்கு புரியும் நினைக்குறேன்.



“கண்டிப்பாடா கண்ணம்மா அப்புறம் நீலா கிட்ட மட்டும் உண்மைய சொல்ல.............. அவன் சொல்லி முடிக்கவில்லை ஐயோ ! அண்ணா இப்போ எதுவும் சொல்லாதே, கல்யாணம் முடியட்டும் பேசி, பழகி அவுங்க குணத்தைப் புரிஞ்சுகிட்டு சொல்லு,



நம்ப அம்மா அப்பாக்கு தெரியாத ஒண்ணுன்னா அது உன் விஷயம் மட்டும் தான்.எனக்காவது உண்மை தெரிஞ்சா எனக்கும் உனக்கும் வயசு வித்தியாசம் பார்க்காம அடி கூட விழலாம்”.



என்ன மீனு பயம் காட்டுற. ஆழ்ந்த மூச்சை வெளியிட்டவள்,எதையும் யோசிக்காத இன்னக்கி என்னமோ அத பாருண்ணா.அப்புறம் அவருகிட்ட பேசுனியா.அவருக்கு நன்றி சொன்னியா என்று கேட்டவளை பார்த்துப் புன்னகை புரிந்தவன்.



உன்னவரை பார்த்து பேசி எல்லாம் செஞ்சாச்சு,மீனுக்குகாக அவர் எது வேணாலும் செய்வாராம்.தங்கையிடம் பேசியது போல மனைவியிடமும் இதே வார்த்தைகளைப் பேசி இருவரது வாழ்க்கையையும் கேள்வி குறி ஆக்க போகிறோம் என்பதை விக்னேஷ் அறியவில்லை அறிந்திருந்தால்?


மனோவின் உயர் தர அடுக்கு மாடி வீட்டின் முன் வந்து இறகினர் திருவேங்கடம் குடும்பம்.மனோவின் தாய் அவர்களை வரவேற்று நடுக் கூடத்தில் அமர வைத்தார்.கொஞ்சம் இருங்க, அவர் உள்ள யாரு கூடையோ பேசிகிட்டு இருக்கார் என்றவர்.வேலைக்கார பெண் மணியிடம் சரசு “அந்தத் தட்ட எடுத்துட்டு வா” என்று பணித்தவர்.



அவர் கொண்டு வந்த தட்டில் உள்ள மஞ்சள், குங்குமம், பூ எடுத்து மூன்று பெண்களிடம் கொடுத்தார்.வேணியின் கண்கள் மட்டும் அவரை ஸ்கேன் செய்து கொண்டு இருந்தது.சிரித்த முகமாக மென்மையாக அணுகியவரை வேணிக்குப் பிடித்துப் போய் விட்டது.



“ஏங்க மனோ அம்மா நான் எதுவும் உதவி பண்ணனுமா” என்று சுசிலா கேட்க. “ஆமா அருண் அம்மா கொஞ்சம் வாங்க சுமங்கலி பொண்ணுகளுக்கு எல்லாம் எடுத்து வைக்கணும் சின்னத் தட்டு வச்சு கொடுக்கணும்” என்று அழைக்க, இருவரும் சிறு வயது தோழர்கள் அல்லவா அதான் இரு தாய் மார்களும் இயல்பாக உரையாடினர்.நீலா நீயும் வா என்று அழைத்தவர் வேணியைத் திரும்பி பார்க்க.



அவள் அந்த வீட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தாள்.அவளை கூட்டி சென்றாலும் ஒரு வேலையும் செய்யப் போவதில்லை என்பதை அறிந்தவராகப் பெரிய பெண்ணை மட்டும் அழைத்துச் சென்றார்.



அதன் பிறகு பெண் வீட்டார் வர,விழா சிறப்பாகத் தொடங்கியது அறக்கு நிற முழு நீளா சட்டையும் சந்தன நிற பேண்டுமாக வந்தவனை ஆவெனப் பார்த்து வைத்தாள் வேணி.நர்மதாவின் பக்கத்தில் உக்கார வைக்க அங்கே பேச்சுகள் ஆரம்பம் ஆனது.





வேணிக்கு எதற்கென்று தெரியாமல் அழுகை தான் வந்தது. முயன்று கட்டுப் படித்துக் கொண்டு இருந்தாள்.அவன் மீது காதலா என்றால் சத்தியமாக இல்லை.ஆனால் அழகாக இருக்கிறான்,நல்ல படிப்பு,வேலை,குணம் வேண்டாம் என்று சொல்லி விட்டோமே என்ற ஆதங்கம்.சிறு பிள்ளை செயல் தான் அதனால் அவளால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.



பொதுவாக நம் கையில் உள்ள பொருளை விட அடுத்தவர் அதனை எடுக்கும் பொதுத் தான் அந்தப் பொருளின் மேல் ஈடுபாடு அதிகம் வரும் மனித இயல்பு ஒன்றும் சொல்வதற்கில்லை.அதே செயலை தான் இந்தக் கடை குட்டியும் பண்ணி வைக்கிறது.அவள் பண்ணி கொண்டு இருக்கும் செயல் எத்தனைப் பேரின் மனதையும்,மாணத்தையும் பாதிக்கப் போகிறது என்பதை அறியாமல் செய்து கொண்டு இருந்தாள்.



விழா முடிந்து, விருந்து முடிந்து பெண் வீட்டார் கிளம்பும் நேரம் நர்மதாவிடம் சென்றவள் ஹாய்!.. என்று அழைக்க அவளும் புதியவள் பார்த்து மரியாதை நிமித்தம் ஹாய்!! என்றாள்.



கிளம்பும் சமயம் ஆதலால் நேரம் குறைவு அதனால் சொல்ல வந்த விடயத்தை அழகாக சொல்லி முடித்தாள். “இங்க பாருங்க நர்மதா நான் சுத்தி வளச்சு பேச விரும்பல ,மனோ காதல் தோல்வி உற்றவர் தெரியுமா” என்று கேட்க அதிர்ந்த அந்தப் பெண் ஐயோ! தெரியாதே அத்தை என்கிட்ட இதையெல்லாம் சொல்லவே இல்லையே!



அது எப்புடிங்க சொல்லுவாங்க இதே பொண்ணா இருந்தா ஊருக்கே தம்பட்டம் அடுச்சு இருப்பாங்க.சரி அத விடுங்க நான் ஏன் உங்ககிட்ட இப்போ சொல்லுறேனா. கல்யாணம் பண்ணிட்டு பின்னாடி உங்ககூட வாழ்றதுக்கு அவருக்கு நேரம் எடுத்தா என்ன பண்ணுறது.

ஏற்கனவே வயசு ஓடி போச்சு நீங்க சந்தோசமா வாழ கல்யாணம் பண்ணுறீங்களா இல்ல இவர் மனச மாத்தி அவரைக் குடும்ப வாழ்க்கைக்குத் தயார் படுத்தி அப்புறம் உங்க லைப் ஸ்டார்ட் பண்ண போறீங்களா.யோசுச்சு முடிவெடுங்க என்று சொன்னவள் தங்கள் குடும்பத்துடன் நல்ல பிள்ளையாக அமர்ந்து கொண்டாள்.



தன்னை விடச் சின்னப் பெண் யார் எவர் என்று தெரியவில்லை எதையோ சொல்கிறாள். இது பெற்றவர்கள் பார்த்து வைத்த சம்மந்தம்,சொந்தம் வேறு, இவை எதையும் யோசிக்காமல் இந்த அரைவேக்காடு அந்த அரைவேக்காடு சொன்னதை நம்பி.பெரிய முடிவுக்குச் சென்று விட்டது.அதன் விளைவு அடுத்த நாளே தெரிந்தது.



முடிந்ததடா மனோகரா உன் வாழ்க்கை என்று சிரித்தது விதி....
 
என்ன ஆச்சு இந்த வேணி
இப்படி செய்துட்டா
 
Top