Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பு விதை – 4

Advertisement

Dhanuja

Well-known member
Member
அன்பு தோழிகளே!

அன்பின் விதை அடுத்த அத்தியாயம் கொடுத்துவிட்டேன் படித்து விட்டு உங்கள் கருத்தை பதியுங்கள்,உங்கள் கருத்தை எதிர் நோக்கி நான்.




அன்பு விதை – 4



காலையில் இருந்து தனது அண்ணன் பின்னே சுற்றிக் கொண்டு இருந்தனர் இரு தங்கைகளும்.தங்கைகளின் செயலில் எரிச்சல் அடைந்தவன். “என்ன வேணும் உங்களுக்குச” சற்றுக் கோபமாகத் தான் கேட்டான்.



“அப்பாடா வேணி இது நம்ப அண்ணன் தாண்டி சந்தேகமே இல்ல”.



“ஆமா அக்கா நான் கூட வேற ஆளோனு நெனச்சேன்.இப்போ தான் நிம்மதியா இருக்கு”.



“ஏய்,நான் ஆபீஸ் போகணும் காலையிலே என்ன டென்ஷன் பண்ணாதீங்க என்ன வேணும் இரண்டு பேருக்கும்”.



“உண்மை வேண்டும்” இது வேணி. “நியாயம் வேண்டும்” இது நிலா.



“வாட்”.



“என்ன வாட் உனக்கு இந்தக் கல்யாணத்துல சம்மதமா”.அதற்கு அவன் பதில் சொல்ல வாய் எடுக்க. “நீ எப்புடி ஓகே சொன்ன அப்பா அம்மா போர்ஸ் பண்ணங்களா” என்று நீலா.அதற்கும் அவன் பதில் சொல்லும் முன் வேணி தொடர்ந்தாள்.



“ச்சா… ச்சா அப்புடி இருக்காது” இருவரும் மாறி மாறி அவனை வெறுப்பேற்றிக் கொண்டு இருந்தனர். ‘பேச விடுறாளுகளானு பாரேன்’ கடுப்பின் உச்சத்தில் இருந்த அருண் இருவரையும் தர தரவென்று இழுத்து சென்று அறைக்குள் தள்ளி பூட்டிவிட்டான்.இருவரும் காச் மூச் என ஒரே கூச்சல்.இவர்கள் சத்தம் தாங்காமல் அங்கு வந்தார் திருவேங்கடம்.



“ஏய் என்னடா சின்னப் பசங்க மாதிரி”. “அப்பா பாருங்க அப்பா” என்று மகன் குற்ற பத்திரிகை வாசிக்கத் தயாராக, சுசிலா வந்து கதவை திறந்து விட்டார்.அவராலும் கூச்சல் தாங்க முடியவில்லை.ரேஷன் கடையில் பொருள் வாங்க முந்தி அடிப்பது போல இருவரும் அடித்துப் பிடித்து வெளிவந்தனர்.



திருவேங்கடம் இருவரையும் முறைத்துப் பார்க்க.அருண் தனது அப்பாவின் பின் நின்று வாய் பொத்தி சிரித்தான்.மூர்த்தது மோளை இளையது காளை என்பது பழமொழி. இங்குச் சற்று வித்தியாசமாக மூர்த்தது காளை தங்கைகளிடம் வம்பு செய்து திட்டு வாங்கி கொடுப்பது,மிரட்டி வேலை செய்ய வைப்பது என்று செம சேட்டை அருண்.



தந்தை முன் தமையனை ஒன்றும் சொல்ல முடியாமல் இருவரும் தங்கள் வேலையைப் பார்க்க சென்றனர்.அருண் சிரிப்புடன் வேலைக்குக் கிளம்பி சென்றான்.கூடவே இன்று மீனாவிடம் என்ன வம்பு செய்ய வேண்டும் என்பதையும் திட்டமிட்டுச் சென்றான்.



அறைக்கு வந்த நீலாவின் பின்னே வால் பிடித்து வந்தாள் வேணி. “அக்கா என்னக்கா இப்புடி”. “எனக்கும் ஒன்னும் புரியலடி என்ன பொறுத்த வரைக்கும் அண்ணா அமைதி கிடையாது,விட்டுக்கொடுக்குற குணமில்லை,யோசுச்சு பேச மாட்டாங்க, சகிப்புத் தன்மை சுத்தம்,பொறுமை என்ன விலைனு கேக்குற ஆளு.அவுங்க எப்புடி மீனாவ.எனக்கு தெரிஞ்சு அந்தப் பொண்ணு ரொம்ப அமைதிடி.என்னவர் சொல்லுறத வச்சு பார்க்கும் பொது மீனா செம ஷார்ப்”.



நீலா அண்ணனை பற்றி கூறியவை பின்னுக்குப் போக,என்னவன் என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டாள் வேணி. “அடிப்பாவி எப்போ மாமாகிட்ட நம்பர் வாங்குன”.வினோத ஜந்து போல் வேணியைப் பார்த்த நீலா, “இதெல்லாம் ஒரு மேட்டராடி”.

“அக்கா நான் சொல்லுறத கேளு மாமா கூட அளவா பேசு.கல்யாணம் முடியட்டும் காலம் முழுசும் பேச தானே போற.எல்லாம் பொண்ணுங்களும் பண்ணுற தப்ப பண்ணாத அக்கா அப்புறம் ரொம்பப் போர் ஆய்டும்”.



“அப்புடிங்கற”. “அப்புடியேதான்”. பேச்சு திசை மாறி அண்ணன் பேச்சை மறந்து இருவரும் தங்களை பற்றி ஆரம்பித்துவிட்டனர்.( ஹாஹா என்னா தெளிவு இந்தச் சின்னக் குட்டிக்கு.உன்னையும் குழப்ப ஓர் ஆள் வரும்மா)

--------------------------------------------------------------------------------------------------

வேலையில் மூழ்கிய அருணுக்கு வெளி நாடு கால் வந்தது சிரித்து கொண்டே எடுத்தான். அடித்தது அவன் நண்பன் மனோ. எருமை கால்லிங்..... (ஹா ஹா நல்ல அறிமுகம் மனோவிற்கு).



“சொல்லுடா எருமை”. அந்தப் பக்கம் தனது முப்பது பற்களையும் காட்டி சிரித்தான் அந்த எருமை ஐயோ! மனோ...



“என்னடா புது மாப்பிள்ளை நீயும் விஷியத்தைப் போன் பண்ணி சொல்லுவ சொல்லுவனு,மூணு நாள் துக்கம் இல்லாம அல்லாடிக்கிட்டு இருக்கேன் .ஹ்ம்ம்... உங்கிட்ட இருந்து ஒரு மண்ணும் வரல அதான் நானே பேசிட்டேன்”.



“என் கல்யாணத்துல உனக்கு என்னடா ஆர்வம்”. “என்னடா அருண் இப்புடி கேட்டுட்ட நீ உயிர் நண்பன்…. டா”. ஏய்! ஏய்! நிறுத்துடா நீ யாருனு எனக்குத் தெரியும், நான் யாருனு உனக்குத் தெரியும்.நீ எதுக்குப் போன் பண்ண அத சொல்லு”.



“அதான் தெரியும் சொல்லிட்டியே அப்புறம் என்ன எல்லாம் அதுக்குத் தான்”. “நீ கேட்டதுக்கு நானும் பதில் சொல்லிட்டேன் வேற பேசு”.இருவர் பேச்சிலும் இளசான சூடு



“நானும் என் முடிவை சொல்லிட்டேன் அருண் எனக்கு அவ...........” பாதியில் பேச்சை நிறுத்தியவன். சரி இனிமே உங்கிட்ட பேசி நேரம் விரையம் தான் நான் எங்க அப்பாகிட்ட பேசுறேன்”. “நீ யாரு கிட்ட பேசுனாலும் என்கிட்ட கேட்காம முடிவு எடுக்க மாட்டாங்க எங்க வீட்டுல”.



அடேய்! உன்ன கொல்லாம விடமாட்டேண்டா நாளைக்கி காலைல ஊருக்கு வரேன் ஏர்போர்ட் வந்து பிக் அப் பண்ணு.



“சூப்பர்டா வரியா ஷார்ப் வந்துடுறேன் எருமை”. வந்து பேசிக்கிறன்டா உன்ன கருவியே போனை அணைத்தான் மனோ.

சற்று முன்பு முட்டி கொள்ளும் அளவு பேசியவர்களா இவர்கள், என்று வாய்பிளக்க வைத்தனர்.இப்போது புரிந்து இருக்குமே இருவருமே ஒரே குணமுடையவர்கள் , அதனால் தான் ஆண்டுங்கள் தாண்டி நட்பு தொடர்கிறது எந்த இடையூறும் இல்லாமல்.



----------------------------------------------------------------------------------------------

அங்கு மீனா கோபத்தைத் தனது தந்தையிடம் காட்டி கொண்டு இருந்தாள்.சிதம்பரம் பாவமாக முழித்துக் கொண்டு இருந்தார். ஒரு புறம் ஆசை மனைவி,மறுபுறம் ஆசை மகள் இரு பெண்களுமே அவர் வாழ்க்கையில் முக்கியப் பங்கை வகிப்பவர்கள்.இதில் யாரை அவர் ஆதரிப்பது.மிகவும் மோசமான கட்டத்தில் சிதம்பரம்.



அப்பா!....மென்மையான கோபம். மீனா அதிர்ந்து பேச மாட்டாள் அவள் குரல் உயர்த்திப் பேசி இதுவரை அவர்கள் பார்த்தது இல்லை,அவள் கோபம் எல்லாம் வேகமான நடையிலும்,பேப்பர் பென் எடுத்து கிறுக்குவதிலும் வெளிப்படும்.



அவள் அழைப்புக்குச் செவி சாய்த்தவர். “என்னடா” உருகி விடுபவர் போல் அழைக்க. “அம்மாகிட்ட சொல்லுங்கப்பா அதான் கல்யாணம் முடிவு ஆய்டுச்சுல. அப்புறம் என்ன வெளில போறது எனக்குப் புடிக்கலப்பா”.

‘லல்லிம்மா’ என்று அழைத்தவர் மனைவியைப் பார்க்காமல் விட்டதைப் பார்த்துக் கொண்டே பேசினார். “யாருக்கு இந்தக் காலத்துல இப்புடி ஒரு பொண்ணு கிடைப்பாங்க சொல்லு.அவ தான் கல்யாண பண்ணிக்கிட்டு போறேன்னு சொல்லுறாள.சி திஸ் இஸ் டூ குட் லல்லி.



அவரது பேச்சை அசட்டை செய்து “அங்க என்ன தெரியுது.நான் என்ன மேல தொங்கிட்டு இருக்கேனா என்ன பார்த்து பேசுங்க” அவர் வீக் பாயிண்ட் டச்சிங். “உன்ன பார்த்தா பேச முடியாதுடி அதான் மேல பார்க்குறேன் மெல்ல மூணு முனுத்துக் கொண்டார்”.



அவர் மறுபடியும் மேலே பார்த்தவாரே மூணு முணுக்க. “எனக்கு வேலை இருக்கு நான் போறேன்,அப்புறம் மிஸ்டர்.சிதம்பரம் இன்னக்கி நான் மீனா கூடப் படுத்துக்குறேன். என்று பெரிய அணுகுண்டை போட்டுவிட்டு அசால்ட்டாகச் சென்றார்”.



ஆத்தி! லல்லிம்மா லல்லி அம்மாடி என்று மனைவியின் பின்னே ஓடிய அப்பாவை பார்த்து மெலிதாகச் சிரித்திவிட்டு சென்றாள் மீனா.திருமணம் முடிவு செய்த தினத்தில் இருந்து அவள் அருண் மேல் சொல்லும் புகாரெல்லாம்,சிதம்பரத்தின் முன் பஞ்சாயத் வைக்கப் பட்டுக் முடிவில் தீர்ப்பு இல்லை என்ற நிலை வரும் பொதுப் பெற்றோர் இருவரும் அழகாகக் கழண்டு கொள்கின்றனர்.

இதோ இப்போது நடந்ததே அதே போல்.அதில் சிறு எரிச்சல் வந்தாலும் தனக்காக அவர்கள் படும் உளைச்சலை எண்ணி அமைதி காத்தாள்.



நேற்று தன்னை வம்படியாக அழைத்துச் சென்ற அருணை எண்ணி பெரு மூச்சு வந்தது தலையை உலுக்கி கொண்டவள்.அவருக்கும் எனக்கும் ரொம்பக் கஷ்டம்.மற்ற பெண்களைப் போல் தன்னால் வாழ முடியுமா என்பது சந்தேகம் தான்.



அவள் எண்ணி கொண்டே உறவினர் அறைக்குச் செல்ல அங்கே அவளுடைய பிசியோ தெரபி டாக்டர் அமர்ந்து இருந்தார்.அவரை பார்த்த உடன் ஓர் மெல்லிய அலறல் ஐயோ!



“வாங்க டாக்டர் வந்து ரொம்ப நேரம் அச்சா”.



“இல்லாம இப்போதான் வந்தேன் நேத்து நான் சொல்லிகுடுத்த பண்ணிங்களா”.



“இல்ல டாக்டர்”.



“ஏன்ம்மா”.



“பண்ண தோணல”.



“ஆர் யூ ஆலரைட் மீனா”.



“எஸ் டாக்டர்”.



“தென்”.



தலையைக் குனிந்து கொண்டாள், அவளால் எதிலும் ஒன்ற முடியவில்லை இருபதைத் தாண்டி வயது ஓடி கொண்டு இருக்கிறது.ஐந்து வயதில் ஆரம்பித்த பயிற்சி ஒரு சதவீதம் கூட முன்னேற்றமில்லை பின் எதற்கு என்று சில ஆண்டுகள் நிறுத்திவிட்டாள்.இப்போது திருமணம் கூடவும் லலிதா மீண்டும் முயற்சி செய்ய ஆரம்பித்துவிட்டார்.



அவளைப் பார்த்து இரக்கம் கொண்ட டாக்டர் ஒன்னும் பேசாது அவளை அழைத்து அவரது பயிற்சியைத் தொடர ஆரம்பித்தார்,அவர் கையை வளைக்க,காலை மடக்க வலி உயிர் போனது கண்ணில் இருந்து அருவியாகக் கொட்டியது மீனாவிற்கு.



“வலிக்குதா மீனா” டாக்டர் அக்கறையாகக் கேட்க.



“வலிக்கதான் செய்யும் டாக்டர் நீங்க பாருங்க” சொல்லி கொண்டே வந்தார் லலிதா.அதான் பின் டாக்டர் பேசவில்லை.லலிதாவை பற்றி நன்கு அறிந்தவர்.



தான் ஒரு மருத்துவர் தான் தனக்கு இது போல் பிள்ளை பிறந்து இருந்தால்,அதுவும் பெண் குழந்தை.நான் இந்த அளவிற்குத் தன்னம்பிகையாக இருந்து வளர்த்திருப்பேனா என்பது கேள்வி குறி தான்.



லலிதாவின் மனதிடமும்,நம்பிக்கையும் பார்த்து வியந்து இருக்கிறார். அவரும் மகள் கண்ணீர் விடும் போதெல்லாம் நம்பிக்கை என்னும் வகையில் அவளைத் தேற்றுவது அருமை.இதோ இப்போதும் அவர் மனதுக்குள் உயிர் வலி தான், ஆசை பெணின் கண்ணீர் யாருக்கு மகிழ்ச்சி தரும்.ரணத்தை மனதில் அடக்கி வெளியில் மீனாவை ஊக்கினார்.தாய் அன்பை விடச் சிறந்தது உண்ட என்ன? தாய்க்கு நிகர் தாயயே.



கடவுள் விதைத்த விதை , மரமாகச் செழிக்குமா என்பதைக் காலம் தான் கூறும் நாமும் காத்திருப்போம்……….
 
Top