Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 9 1

Advertisement

Admin

Admin
Member
பகுதி – 9

விஸ்வம் வாங்கி வந்த இனிப்புக் காரங்களை ரதி தட்டில் வைத்து அனைவருக்கும் கொடுத்தாள். மீனா வீட்டின் உள்ளேயே இருந்து கொண்டாள். அவளின் மனநிலை உணர்ந்து யாரும் அவளைத் தொந்தரவு செய்யவில்லை.

கிளம்பும் சமயம் அவளிடம் வந்த வைஷ்ணவி சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.

“இன்னைக்கு வேலைக்குப் போகலையா மீனா....”

“இல்லை.... இன்னும் என்னால நேத்து நடந்ததுல இருந்து வெளி வர முடியலை.... நேத்து அனிக்கு மட்டும் எதவது ஆகி இருந்தா... அதை நினைச்சா இன்னும் பயமா இருக்கு....”

அவளின் கையை ஆறுதலாக அழுத்தி விட்ட வைஷ்ணவி, “அதை மறந்திடு மீனா. இனி வேலைக்கு எல்லாம் போக வேண்டாம். உனக்கும் அனிக்கும் புது இடம் எல்லாம் செட் ஆகணும். சின்ன வயசுலேயே நிறையக் கஷ்ட்டபட்டுட....கொஞ்ச நாள் உன் வீடு, குடும்பன்னு நிம்மதியா இரு....”

அவர் சொன்னதற்கு மீனா சம்மதமாகத் தலையசைத்தாள்..... அவள் மனம் இருக்கும் நிலையில் அவளுக்கே வேலைக்குச் சென்றாலும் ஒழுங்காக வேலை பார்க்க முடியாது என்று தோன்றியது.

“உனக்கு ஹரி மேல கோபமா... அவனா அனிகிட்ட அப்பான்னு கூப்பிட சொன்னது உனக்கு ஒன்னும் வருத்தம் இல்லையே....”

“இல்லை...” என்று மீனா தலை மட்டுமே அசைத்தாள். இதில் ஹரி மீது குற்றம் சொல்ல என்ன இருக்கிறது? அவனும் அனிக்காகத் தானே பார்க்கிறான். அது அவளுக்குப் புரிந்து தான் இருந்தது.

“எதையும் நினைச்சு குழப்பிக்காம.... நிம்மதியா இரு. கல்யாண வேலை எல்லாம் நாங்க பார்த்துக்கிறோம்.” என்றவர், விடைபெற.... மீனாவும் அவரோடு வெளியே வந்தாள்.

விக்ரமும் ஹரிணியும் மீனாவிடம் சொல்லிக்கொண்டு விடைபெற... அனியை தூக்கிக் கொண்ட ஹரி மீனாவிடம் “அத்தை வீட்ல இருந்து திரும்பி போகும் போது... கொண்டு வந்து விடுறேன்.” என்றான். அவளும் சரி என்பதாகத் தலையசைத்தாள்.

கொஞ்ச நேரம் கழித்து ரதியை விமலாவின் வீட்டிற்கு வரச்சொல்லிவிட்டு வைஷ்ணவி மற்றவர்களோடு கிளம்பி சென்றார்.

விமலாவின் வீட்டில் ஹரியின் மடியில் அமர்ந்து கொண்ட அனி, பேசிக்கொண்டே இருந்தாள். அதுவும் இதுவரை ஒரு இருபது அப்பாவாவது போட்டிருப்பாள். ஹரி அவள் அப்பா என்று அழைக்கும் அழகை ரசித்தபடி அவளுக்குப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தான்.

“அப்பா... இவங்க யாருப்பா....” என அவள் ஹரிணியைப் பார்த்து கேட்க...

“உன் அத்தை டா அவங்க.... அவரு உன்னோட மாமா...இது அத்விகா.... அவன் ஹரிப்ரசாத். உனக்கு அஸ்வத் மாதிரி தான் இவங்களும்.”

“ஓ.... சரி...” என்றவள், வைஷ்ணவியைப் பார்த்து விட்டு “நான் இவங்களை எப்படிக் கூப்பிடனும்?” என்றதும்,

“அவங்க உன்னோட பாட்டி டா....”

“பாட்டியா...”அனி சந்தேகமாக இழுத்தாள். அவளுக்கே அவரைப் பாட்டி என்று சொல்ல மனம் வரவில்லை...

“அவங்க ப்ரணவ் பாட்டி மாதிரியே இல்லையே....” அனி கேட்க... ஹரி முறுவலுடன் “ம்ம்....மேக்கப் போட்டு வயசை கம்மியா காமிச்சுப்பாங்க.” என்றதும், “ஆமாம் எனக்கு வில்லியே இவங்க தான்.” ஹரிணியும் ஒத்து ஊத....


எழுந்து வந்து ஹரியின் முதுகில் அடித்த வைஷ்ணவி “உங்க அப்பாவுக்கும், அத்தைக்கும் என்னைப் பார்த்துப் பொறாமை. நான் உனக்குப் பாட்டி தான்டா....நீ என்னை வைஷுமா அப்படின்னு கூப்பிடு.” என்றதும்,

“இதை நான் ஆட்சேபிக்கிறேன்.” ஹரிணி சொல்ல....

“நானும்....” என்றான் ஹரி.




“ரெண்டு பேரும் ரொம்ப ஆடாதீங்க. இந்தக் காலத்தில யாரு பாட்டின்னு எல்லாம் கூப்பிடுறா... நீ வைஷுமான்னே சொல்லு அனி.” என்றதும், அனி சரி என்றாள்.

அப்போது ரதி அங்கே வர... அவளிடம் திருமணத்தைப் பற்றிப் பேசிய வைஷ்ணவி, நாளை அவளையும் ஹரிணியையும் மீனாவுக்குப் புடவை எடுக்கச் சென்று வர சொன்னார். ரதியும் திருமணம் வரை அலுவலகத்தில் விடுமுறை எடுத்திருப்பதால்.... சரி என்றாள்.

இவர்கள் இரவு வீடு திரும்பியபோது... அங்கே இவர்களுக்காக வெங்கட் காத்திருந்தார். அவரை அந்த நேரம் யாருமே எதிர்பார்க்கவில்லை....

“என்னப்பா வரேன்னு சொல்லவே இல்லை... சொல்லி இருந்தா நான் கூப்பிட பஸ் ஸ்டான்ட் வந்திருப்பேன் இல்லை...” ஹரி சொல்ல... வெங்கட் பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தார்.

சரி உள்ள போய்ப் பேசுவோம் என்ற வைஷ்ணவி வேகமாகக் கதவை திறக்க.. எல்லோரும் உள்ளே சென்றனர். அவர் சாப்பிட்டு இருக்க மாட்டார் என்று தெரியுமென்பதால் வைஷ்ணவி அவருக்குச் சட்னி அரைத்துத் தோசை ஊற்றினார்.

வெங்கட் அமைதியாகச் சாப்பிட்டார். அவர் சாப்பிட்டதும் எல்லோரும் ஹாலில் வந்து அமர்ந்தனர்.

“நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்க? ஹரிக்கு எதோ வரன் வந்திருக்கு அப்படின்னே... இப்ப பார்தா அந்தப் பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை இருக்குன்னு சொல்ற....”

“இப்படி ஒரு பெண்ணை ஹரிக்கு பார்க்கனும்னு என்ன அவசியம்?” வெங்கட் வைஷ்ணவியிடம் கேட்க....

“நான் தான் போன்ல உங்ககிட்ட சொன்னேன் இல்லை.... அனிதா பத்தி.”

“எல்லாம் நாடகம். அந்தக் குழந்தையை வச்சு ஹரியை பிடிக்கத் தான் இதெல்லாம்.”

வெங்கட் சொன்னதைக் கேட்டு “அப்பா... உங்களுக்குத் தெரிஞ்சா மாதிரி பேசாதீங்க.” என ஹரி கத்தியே விட்டான். அவனைப் பார்வையில் அடக்கிய வைஷ்ணவி,

“நீங்க மீனாவை இதுல குத்தம் சொல்லவே முடியாது. இதுக்கெல்லாம் காரணம் நம்ம ஹரி தான். நீங்க குத்தம் சொன்னா உங்க பையனை தான் சொல்லணும்.”

“நீங்க சொல்ற மாதிரி அவங்க வீட்லயும் சொல்லலாம். குழந்தையை வச்சு ஹரி மீனாவை பிடிச்சான்னு.”

“என் பையனுக்கு அப்படிப் பிடிக்க என்ன அவசியம்?”

“நம்மகிட்ட பணம் இருக்கு, அவங்க கிட்ட இல்லை... அதுக்காக என்ன வேணா பேசுவீங்களா.... இந்தப் பணத்தை வச்சு நம்மால என்ன சாதிக்க முடிஞ்சுது?”
“குழந்தை இல்லைன்னு உங்க மகனும் மருமகளும் ஏங்கிணாங்களே... அப்ப இந்தப் பணம் அவங்க குறையத் தீர்த்துச்சா... இல்லை இந்தப் பணத்தால உங்க மருமகள் உயிரை தான் நம்மால பிடிச்சு வைக்க முடிஞ்சுதா....”

“ஒருத்தரை பத்தி தெரியாம நீங்க எப்படித் தப்பா பேசலாம்? உங்களுக்கு மீனாவை பத்தி என்ன தெரியும்? அவளுக்கு ஹரியை பத்தி ஒண்ணுமே தெரியாது. அவ பாவம், உங்க மகனுக்கும் அனிதாவுக்கும் நடுவுல மாட்டிகிட்டு முழிச்சிட்டு இருக்கா....”

“ஹரியை விட்டு பிரிஞ்சா அந்தக் குழந்தை விபரிதமா எதாவது பன்னிடுமோன்னு பயத்துல தான் அவளே இந்தக் கல்யாணத்துக்கு ஒத்துக்கிறா...உங்க மகன் மேல ஆசைப்பட்டு இல்லை....”

வைஷ்ணவி எளிதில் உணர்ச்சி வசப்படுபவர் இல்லை. ஆனால் இன்று அவர் தன் இயல்பையும் மீறி கத்தி பேசினார்.

“சாரி நான் அப்படிப் பேசி இருக்கக் கூடாது. இருந்தாலும் ஏற்கனவே கல்யாணம் ஆகி குழந்தை இருக்கிற பெண்ணைப் போய் ஹரிக்கு ஏன் செய்யணும்?” வெங்கட் இப்போது கொஞ்சம் தணிவாகவே பேசினார்.

“இதே ஹரிக்கு ஒரு குழந்தை வந்ததுக்கு அப்புறம் பிருந்தா இறந்திருந்தா... அப்பவும் தானே அவனுக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்க நினைச்சிருப்போம். அது மாதிரி இப்பவும் நினைச்சுகோங்க.”

“அதோட அந்தக் குழந்தையால தான் இந்தக் கல்யாணமே நடக்குது அதையும் நியாபகம் வச்சுக்கோங்க.” என்ற வைஷ்ணவி ஹரிணியைப் பார்த்து “நீ போய்ப் படு...” என்றவர், கீழே இருந்த அறைகளில் ஒன்றின் உள்ளே சென்றுவிட்டார். ஹரியும் எழுந்து அவன் அறைக்குச் சென்று விட....

அதுவரை அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த விக்ரம். “மாமா நீங்க நினைக்கிற மாதிரி தான் நானும் நினைச்சேன். அதனால தான் இன்னைக்கு இவங்களோட அவங்க வீட்டுக்கு போனேன். ஆனா அந்தப் பொண்ணு அப்படிப் பட்ட பொண்ணு இல்லை....”

“நான் ஒருத்தரோட பார்வையிலேயே கண்டுபிடிச்சிடுவேன் அவங்க எப்படிப் பட்டவங்கன்னு. அனிதாவுக்கான தவிப்பு தான் அந்தக் கண்கள்ல தெரிஞ்சுதே தவிர... ஹரியை ஆர்வமா ஒரு பார்வை கூடப் பார்க்கலை....”

“அதனால நீங்க எதைப் பத்தியும் கவலைப்படாம இருங்க.” மருமகனின் பேச்சில் வெங்கட் நிம்மதி அடைந்தார்.
 
:love::love::love:

வைஷு வெங்கட் கெமிஸ்ட்ரி தான் செம :love:
வைஷும்மா (y)(y)(y) நச்சு நச்சுன்னு பாயிண்ட் பேசுறாங்க......
majority வெங்கட் எதிரணியில்...... அதுவும் மருமகனும்.......
மருமகனை நம்புறார்........

அனிதா 6 வருஷத்துக்கு சேர்த்து அப்பா அப்பா னு கூப்பிடுவா போல......
 
Last edited:
Top