Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 8 1

Advertisement

Admin

Admin
Member

பகுதி – 8

இரவு உறங்க நெடு நேரம் ஆனதால்... மறுநாள் தாமதமாக எழுந்த ஹரி மெதுவாகக் குளித்துக் கிளம்பிக் கொண்டு இருந்தான். அப்போது வீட்டின் அழைப்பு மணி ஒலிக்க..... வைஷ்ணவி சமையல் அறையில் இருந்ததால்.... ஹரி சென்று கதவை திறந்தான்.

“ஹே.... நீ எங்க வந்த?” என்று அவன் போட்ட சத்தத்தில் வைஷ்ணவி பதறி போய், யாரோ எவரோ என்று வெளியே வந்தவர், அங்கே முகத்தைத் தொங்க போட்டுக் கொண்டு நின்ற ஹரிணியைப் பார்த்ததும், அவருக்கு முகம் கொள்ளாத புன்னகை...

ஹரி திரும்ப எதோ சொல்ல வாயை திறந்தவன், பின்னால் வந்த ஹரிணியின் கணவன் விக்ரமை பார்த்ததும், பொட்டி பாம்பாக அடங்கி “வாங்க விக்ரம்....” என்று மரியாதையாக அழைத்து, அவன் கையில் இருந்த பெட்டியை வாங்கிக் கொண்டான்.

“வாங்க மாப்பிள்ளை.... வா ஹரிணி.... ஹப்பா... நீ வந்துட்டியா இனி எனக்குக் கவலை இல்லை....”

அண்ணனின் வரவேற்பில் அரண்டு போய் இருந்த ஹரிணி, தன் அன்னையின் பேச்சில் தான் தெளிந்தாள். அவளிடம் இருந்த அத்விகா தன் பாட்டியிடம் தாவ... விக்ரமிடம் இருந்த ஹரிப்ரசாதை ஹரி தூக்கிக் கொண்டான். இவன் பெரிய ஹரி அவன் சின்ன ஹரி.

“எப்படி டீ இவ்வளவு சீக்கிரம் வந்த...” வைஷ்ணவி மகளைப் பார்த்து கேட்டதற்கு, அவள் பதில் சொல்லும் முன் விக்ரம் முந்திக்கொண்டான்.

“எங்க அத்தை? நைட் நீங்க பேசினதை கேட்டதில இருந்து இங்க வரணும்னு ஒரே அனத்தல். சரி போகலாம்னு சொன்னது தான், அப்பவே துணி எடுத்து வைக்க ஆரம்பிச்சு.... ஒரே ரகளை.... விடியற்காலை அஞ்சு மணிக்கு சென்னையில கிளம்பி, இப்ப காலை பத்து மணிக்கு வந்திருக்கோம். வழியில டிபன் சாப்பிட கூடக் காரை நிறுத்த விடலை....”

மருமகன் பேசியதை புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்த வைஷ்ணவி “ஏன் டீ இப்படியா பண்ணுவ.... உனக்குத் தான் உங்க அண்ணனை பார்க்க போற சந்தோஷத்தில பசிக்காது. அதுக்காக அவரையுமா பட்னி போடுவே....” என்றவர், சமையல் அறைக்குள் செல்ல....

அவர் பின்னே உள்ளே வந்த ஹரி “சாப்பிட எதாவது இருக்கா... இல்லை ஹோட்டல்ல வாங்கிட்டு வரவா....” என்றான்.

“இல்லை நமக்கு ஊத்தின இட்லி இருக்கு... அதை ரெண்டு சாப்பிடும் போதே... தோசை ஊத்திடுறேன். நேத்து ஊருக்கு போறேன்னு உனக்கு எல்லாச் சட்னியும் அரைச்சு பிரிட்ஜில வச்சிருந்தேன். அதை வச்சு காலையில டிபன் முடிச்சிடலாம். மதியத்துக்குச் சமைக்க எதாவது வாங்கிட்டு வா போதும்.”

“ஆளு வளர்ந்திருக்க அளவுக்கு உங்க பொண்ணுக்கு அறிவே வளரலை... எதுக்கு இப்ப அவசரமா கிளம்பினா?.... சரி கிளம்பினவ ஒரு போனாவது பண்ணாளா.... விக்ரம் நம்ம வீட்டுக்கு வர்றதே அதிசயம், அவருக்கு வெறும் இட்லியும் தோசையுமா சாப்பிட குடுக்கிறது.”

“போன் பண்ணா நீ எங்க வர வேண்டாம்னு சொல்வியோன்னு பயந்திருப்பா....”

“போன் பண்ணலை சரி... அவரை வழியில ஹோட்டலில் சாப்பிடவாவது விட்டிருக்கலாம் இல்லை.... லூசு... லூசு....”

ஹரி வைஷ்ணவியிடம் கடிந்து பேசிக்கொண்டிருக்கும் போதே ஹரிணி உள்ளே வர... ஹரி அவளைப் பார்த்து முறைத்து விட்டு வெளியே சென்றான்.

“என்ன மா என்னைத் திட்டி முடிச்சிட்டானா... இல்லை இன்னும் பாக்கி இருக்கா....” ஹரிணி கேலியாகக் கேட்க....

“விக்ரம் இருக்கிறதுனால நீ தப்பிச்ச.... அவர் போனதும் உனக்கு இருக்கு....நீயும் அவன் சொல்ற மாதிரி தான் ஹரிணி நடந்துக்கிற....சரி வா வந்து முதல்ல சாப்பிடு...”

விக்ரமிற்குப் பரிமாறி விட்டு ஹரிணி தன் பிள்ளைகளுக்கு எடுத்து வைக்க... அத்விகா அவளே சாப்பிட.... சோபாவில் தன் அண்ணனிடம் இருந்த குட்டி ஹரிக்கு ஹரிணி ஊட்டி விடச் செல்ல... அவளிடமிருந்து தட்டை பிடுங்கிய ஹரி “நீ போய்ச் சாப்பிடு, நான் அவனுக்குக் குடுக்கிறேன்.” என்றான்.



அவள் ஹரியை அதியசயமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே.... அவன் சின்னவனுக்கு உணவை எடுத்து ஊட்ட ஆரம்பித்து இருந்தான்.

உணவு மேஜையில் தன் கணவனின் அருகில் சென்று உட்கார்ந்த ஹரிணி, தோசை எடுத்துக்கொண்டு வந்த வைஷ்ணவியிடம் “அண்ணனா மா இது....” என்றாள் ஆச்சர்யமாக....

“அனிதாவுக்கு ஊட்டி விட்டு பழக்கம்.”

“அனிதாவா யாரு? ஒருவேளை அண்ணா கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணா.... அதுக்குள்ள ஊட்டி விடுற அளவுக்கு வந்தாச்சா... நம்ம அண்ணனா....”

ஒரு நொடியில் ஹரிணியின் மனம் எதை எதையோ சுற்றி வர.... அதையே தான் விக்ரமும் நினைத்தான். பிருந்தாவை தான் தலையில தூக்கி வச்சு ஆடிட்டு இருப்பான். இனிமேயும் அப்படித்தானா என்று நினைத்தவன் “உங்க அண்ணன் திருந்தவே மாட்டானா டீ.....” என்றான் கடுப்பாக. அப்போது வைஷ்ணவி அங்கே இல்லை தோசை எடுக்க உள்ளே சென்று இருந்தார்.

“உங்களுக்கு ஏன் இவ்வளவு கடுப்பு? எல்லோரும் உங்களை மாதிரியே இருப்பாங்களா... பொண்டாட்டிய கண்டுக்காம.... எப்ப பாரு வேலை பார்த்துகிட்டே இருப்பீங்க.”

ஹரிணி சொன்னதைக் கேட்டு சிரித்த விக்ரம் “உன்னைக் கண்டுக்காம தான் ரெண்டு குழந்தை பெத்தியா....” என்றதும், ஹரிணி அவனைப் பார்த்து முறைத்தாலும் அவளுக்கும் சிரிப்பு வந்தது.

“நைட் கடை மூடி தான் ஆகணும் வேற வழி இல்லை.... அதனால நீங்க வீட்டுக்கு வருவீங்க... அப்ப போனா போகுதுன்னு... எதோ...” என்ற ஹரிணி வைஷ்ணவி வருவதைப் பார்த்துப் பேச்சை நிறுத்த ....

அவர் சென்றதும் ஹரிணியின் பக்கம் திரும்பிய விக்ரம் “எதோ.... சொல்லு... என்னவோ சொல்ல வந்த......” என்றான் கண்சிமிட்டி. ஹரிணி சொல்ல மாட்டேன் என்பது போல் தலையசைக்க....

“ஏன் டீ? எனக்கு என்னவோ உன்மேல ஆசையே இல்லாத மாதிரி.... எதோ கடமைக்கு உன்னோட வாழுற மாதிரி பேசுற.....”

ஆசையா என் மேலையா என்பது போல் ஹரிணி பார்க்க.... “நம்பு டீ எனக்கு உன் மேல ரொம்ப ஆசை இருக்கு... ஆனா உங்க அண்ணன் மாதிரி எனக்கு வெளிய காமிக்கத் தெரியாத அப்பாவி நான். அது தான் அவனைக் காதல் மன்னன் ரேஞ்சுக்கும், என்னை எதோ வில்லனை போலப் பார்த்து வைக்றீங்க.”

அவன் சொன்னதைக் கேட்டு ஹரிணிக்குச் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.... அப்போது ஹரி அங்கே வந்ததால் இருவரும் பேச்சை நிறுத்தினர். ஹரியும் அவர்களோடு உட்கார்ந்து சாப்பிட்டான்.

மதிய சமையலுக்குச் சாமான்கள் வாங்க ஹரி சென்ற நேரத்தில், ஹரிணியிடம் வைஷ்ணவி அனிதாவை பற்றிச் சொல்ல.... அதை அங்கிருந்த விக்ரமும் கேட்டுக்கொண்டு இருந்தான்.

“இப்ப அனிதாவால தான் இந்தக் கல்யாணம் நடக்குது. இல்லைன்னா உங்க அண்ணன் பிருந்தாவையே நினைச்சிட்டுக் காலமெல்லாம் இப்படியே இருந்திடுவான்.”

“அத்தை, நான் கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. ஹரி வேற கல்யாணம் பண்ணிக்க மாட்டானோ.... அப்படிங்கிற பயத்தில நீங்க கல்யாணத்துக்கு அவசரப்படலையே...”

“இல்லை மாப்பிள்ளை கண்டிப்பா இல்லை. ஹரிக்கு எத்தனையோ பேர் பொண்ணு குடுகிறேன்னு தான் சொன்னாங்க. ஆனா அதுக்கு அவன் சம்மதிக்கணுமே.... அவன் மனசு இஷ்ட்டபடாத எதையும் செய்ய எனக்கு விருப்பம் இல்லை....”

“இந்தக் குழந்தை மேல ஏனோ அவனுக்கு அப்படி ஒரு பாசம். மீனாவும் நல்ல பொண்ணு... இவ்வளவு கஷ்டத்திலையும் தன் பெண்ணை நல்லா வளர்த்திருக்கா.... அந்தக் குழந்தையும் ஹரி மேல உயிரையே வச்சிருக்கு. ”

“எனக்கு அனிதா மீனா ரெண்டு போரையும் ரொம்பப் பிடிச்சிருக்கு. ஹரியும் மீனாவும் குழந்தைக்காக இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதிச்சாலும், கண்டிப்பா பின்னாடி அவங்க நல்ல கணவன் மனைவியா வாழ்வாங்க அப்படின்னு நான் நம்புறேன்.”

வைஷ்ணவியின் விளக்கத்தைக் கேட்ட விக்ரம் அதற்கு மேல் எதுவும் மறுத்து பேசவில்லை.... அவன் சென்று ஓய்வு எடுக்க.... ஹரிணியும் வைஷ்ணவியும் மதிய சமையலுக்குத் தயார் செய்தனர்.

ஹரி வந்து சாமான்களைக் கொடுத்து விட்டு அவன் வேலையைப் பார்க்க சென்றவன், அவனுடன் அத்விகாவையும் அழைத்துக் கொண்டு சென்றான்.


“பாருங்க மா அண்ணன் என்னோட பேசாமையே போய்ட்டான்.” ஹரிணி தன் தமயனை குறை சொல்ல....


“நீ அவனைக் கல்யாணம் பண்ணிக்கோ... பண்ணிக்கோன்னு தொலைச்சு எடுத்த..... அதுதான் அவனுக்குக் கோபம். இப்பவும் அவன் முழு மனசா கல்யாணத்துக்குச் சம்மதிக்கலை... அனிதாவை விட்டு பிரிஞ்சு இருக்க முடியாம தான் அமைதியா இருக்கான்.”

“அவன் சரியாகக் கொஞ்ச நாள் ஆகும். இவனுக்கு மேல மீனா.... ரெண்டு பேரும் என்னதான் செய்யப் போறாங்களோ.... எனக்குக் கவலையா இருக்கு.” என்றவர்,




ஹரி வாங்கி வந்திருந்ததை எடுத்து பார்த்துவிட்டு “இங்க பாரு எல்லாம் உனக்குப் பிடிச்சததான் வாங்கிட்டு வந்திருக்கான்.” என்றதும், ஹரிணிக்கு ஒரே சந்தோஷம்.


“சரி நான் பார்த்துக்கிறேன். நீ போய்க் கொஞ்ச நேரம் படு.” என்று சொல்ல ஹரிணியும் தன் கணவன் இருந்த அறைக்கு வந்தாள். அவள் வந்த போது விக்ரம் நல்ல உறக்கத்தில் இருந்தான்.

இந்த நேரத்தில் விக்ரம் உறங்குவது எல்லாம் உலக அதிசயம். சென்னையில் அவர்கள் நிறைய இடங்களில் பல்பொருள் அங்காடிகள் வைத்து நடத்துகிறார்கள்.

அதனால் காலையில் வீட்டில் இருந்து சென்றால்... வீடு திரும்பப் பத்துப் பத்தரையாகும். மதிய உணவை எடுத்து செல்ல ஆட்கள் யாரவது வருவார்கள். அதனால் மதிய உணவும் சேர்ந்து அருந்த முடியாது.

இரவு வந்து சாப்பிட்டு படுக்க... பதினோரு மணிக்கு மேல் ஆகும். நாள் முழுவதும் உழைத்த களைப்பில் விக்ரம் படுத்ததும் உறங்கி விடுவான். காலை அவன் தாமதமாக எழுந்து கொள்ள.... ஹரிணி சீக்கிரமே எழுந்து சென்றிருப்பாள். அவர்கள் இருப்பது கூட்டுக் குடும்பத்தில். மாமனார், மாமியார், கொழுந்தனார் அவரின் மனைவி குழந்தைகள் என்று இவர்களையும் சேர்த்து மொத்தம் பத்து பேர்.

மேல் வேலைக்கு ஆட்கள் இருந்தாலும், இத்தனை பேருக்கு சமைக்கவே நேரம் சரியாக இருக்கும். முன்று பெண்கள் சேர்ந்து செய்தாலும், குழந்தைகள் இருப்பதால் ஆளுக்கு ஒன்று செய்வது போல் இருக்கும்.

கணவனோடு தனியாக நேரம் செலவழிக்கவோ... இல்லை பேசிக்கொண்டு இருக்கவோ நேரம் இருக்காது. எதோ ஓடிக்கொண்டே இருப்பது போல் இருக்கும்.

முதலில் எல்லாம் ஹரிணி இதைப் பெரிதாக எடுத்துக்கொண்டது இல்லை... ஆனால் ஹரிக்கு திருமணமாகி பிருந்தா வந்ததும், அவளுக்குத் தான் நிறையச் சந்தோஷங்களை இழப்பது போல் தோன்றியது.

அப்போது ஹரிணி முதல் குழந்தை கருவுற்று இருந்தாள். அதனால் குழந்தை பெற்றுக்கொள்ளத் தன் தாய் வீட்டிற்குப் பெங்களூர் வந்திருந்தாள்.

பிருந்தா ஹரியுடன் சேர்ந்து தான் மூன்று வேலையும் உணவு அருந்துவாள். அவன் வர எவ்வளவு நேரம் ஆனாலும் காத்திருப்பாள். எங்களோட சாப்பிடேன் என்றாலும் கேட்க மாட்டாள். ஹரியும் அவளுக்காகவே முடிந்த அளவு வேலையை முடித்து விட்டு வந்துவிடுவான்.

 
???

அடடா பொண்டாட்டிக்கு ஓவர் செல்லம் கொடுத்து தங்கையை கடுப்பாக்கிருக்கானே இந்த ஹரி........

விக்ரம் :D:D:D நல்லா போட்டு தாக்குற பொண்டாட்டியை.......

தங்கை பசங்களை விட அனிதா தான் ரொம்ப close போல ஹரிக்கு.....
 
Last edited:
Top