Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 18 1

Advertisement

Admin

Admin
Member

பகுதி – 18


மறுநாள் காலை ஹரி அவன் அறையில் இருந்து வந்த போது.... வைஷ்ணவி ஹரிணியுடன் செல்லில் பேசிக்கொண்டு இருந்தார். அவரிடம் இருந்து செல்லை பறித்து அவன் பேசினான்.

“ஹே வாலு... எப்படி இருக்க?”

“எனக்கு என்ன நான் நல்லா தான் இருக்கேன்.”

“இல்லையே... பதில் வேற மாதிரி வருமே.... சரி இப்ப அத்விக்கு லீவ் தான, நீ இங்க வா... அப்பா அம்மாவும் இங்க இருக்காங்க.”

“நீ மட்டும் எங்க வீட்டுக்கு வரியா.... உனக்குக் கல்யாணம் ஆகி ஆறு மாசம் ஆச்சு. இந்தப் பக்கம் எட்டியாவது பார்த்தியா... அப்புறம் எங்க வீட்ல மட்டும் என்னை எப்படி அனுப்புவாங்க?”

தங்கை சொல்வதில் இருந்த உண்மை உரைக்க..... சில நிமிடங்கள் யோசித்த ஹரி “சரி நாங்க வரோம். நாங்க திரும்பி வரும் போது நீயும் எங்களோட வந்திடு....” என்றதும்,

ஹரிணிக்கு ஒரே சந்தோசம் “சரி எப்ப வர?” என்றாள் ஆர்வமாக....

“வார கடைசின்னா விக்ரமுக்கு வேலை இருக்கும் இல்லையா.... வியாழக்கிழமை வரோம். நாம சேர்ந்து பீச் ரெசார்ட் போகலாம். நீ இப்பவே உங்க வீட்ல சொல்லி பெர்மிஷன் வாங்கி வை....”

“இன்னும் ரெண்டு நாள் தான் ஜாலி... நீ காலையில சீக்கிரம் கிளம்பி வந்திடு... மதியம் எங்க வீட்ல சாப்டிட்டுக் கிளம்பலாம். நீ வந்திட்டு உடனே கிளம்பினா.... அதுக்கும் என் மாமியார் எதாவது சொல்வாங்க.”

“சரி நைட் விக்ரம் வந்ததும் போன் பண்ணு.... பேசிட்டு முடிவு பண்ணலாம்.”

தன் அண்ணன் வரப்போகிற மகிழ்ச்சியில் ஹரிணி போன்னை வைக்க.... அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த வைஷனவிக்கும் மகிழ்ச்சி.

“போயிட்டு வாங்க, அவளும் ரொம்ப நாளா கூப்டிட்டு இருக்கா....”

“ஆமாம் மா.... வியாழக்கிழமை போயிட்டு வெள்ளிக்கிழமை வந்திடுவோம்.”

அவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த அனி “எங்க பா போறோம்?” என்றாள் ஆர்வமாக....

“உன் அத்தை வீட்டுக்கு போறோம் டா....”

“அத்தை வீட்டுக்கா ஹை ஜாலி.... நான் அத்வி கூடச் சின்ன ஹரி கூட எல்லாம் விளையாடுவேன். எப்ப போறோம்? நான் அவங்களுக்குக் கிப்ட் வாங்கிட்டு போகணும்.” என அனி வரிசையாக அடுக்க...

“போதும் டி ஸ்கூல் பஸ் வர்ற டைம் ஆச்சு.... நாளையில இருந்து லீவ் தான.... வந்து எல்லாம் எடுத்து வைக்கலாம். இப்ப கிளம்பு...” என்றாள் மீனா. அவள் குரலில் உற்சாகம் இல்லை.... ஹரி அதைக் குறித்துக் கொண்டான்.

அனி பள்ளிக்குச் சென்றதும் ஹரியும் மீனவோடு தனியாகப் பேசும் சந்தர்பத்திற்காகக் காத்திருக்க... அவள் அவர்கள் அறைக்குள்ளேயே வரவில்லை.... வீட்டு வேலைகள் பார்த்துக்கொண்டிருந்தாள். சரி மதியம் பார்த்துக் கொள்வோம் என ஹரியும் ஷோரூம் கிளம்பி விட்டான்.

மதியம் அவன் வந்த போது வீடு அமைதியாக இருந்தது. வெங்கட்டும் வைஷ்ணவியும் அவர்கள் அறையில் ஓய்வு எடுக்க... மீனா சமையல் அறையில் இருந்தாள்.

மெல்ல சமையல் அறைக்குச் சென்ற ஹரி மீனாவை இழுத்துக்கொண்டு அவர்கள் அறைக்கு வந்து கதவை சாத்த.... ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே மீனாவுக்குப் புரியவில்லை..... ஹரி அவளை யோசிக்கக் கூட விடாமல் இறுக அனைத்திருந்தான்.

சில நிமிடங்கள் சென்று விலகியவன், அவளை அப்படியே கட்டிலுக்குத் தள்ளிக்கொண்டு செல்ல....

“என்ன பண்றீங்க நீங்க? வீட்ல அத்தை மாமா இருக்காங்க நியாபகம் இருக்கா....”



மீனா சொன்னதை ஹரி காதில் வாங்கியது போலவே இல்லை.... அவளைக் கட்டிலில் தள்ளி தானும் பக்கத்தில் படுத்துக் கொண்டு நிதானமாக அவளைப் பார்த்தவன் “ஹே என்ன விளையாடுறியா? நைட் அனி இருக்கான்னு சொன்ன... இப்ப அம்மா, அப்பா இருக்காங்கன்னு சொல்ற.... அப்ப நான் எப்ப தான் மா என் வேலையைப் பார்க்கிறது?”

ஹரி கேட்ட விதம் மீனாவுக்குச் சிரிப்பை வரவழைக்க... “இப்போதைக்கு ஒன்னும் இல்லை போய்க் கதவை திறங்க.” என்றாள்.

“இல்லையா.... ஏன் டி?” என்ற ஹரியின் குரலில் இருந்த ஏமாற்றம் நன்றாகவே தெரிய..... ஆனால் மீனா அதற்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை.... அமைதியாக இருந்தாள்.

ஹரியும் அதற்கு மேல் அவளை வற்புறுத்தவில்லை....

“ஹரிணி வீட்டுக்கு போக உனக்கு எதாவது வாங்கனுமா.... இருந்தா சொல்லு இன்னைக்கு ஷாப்பிங் போகலாம்.” ஹரி சொன்னதும் இல்லை எனத் தலையசைத்த மீனாவின் முகம் வாட.... அதைக் கவனித்த ஹரி “உனக்கு ஹரிணி வீட்டுக்கு போக இஷ்ட்டம் இல்லையா.... நான் காலையிலேயே கவனிச்சேன்.” எனக் கேட்டதும்,

“அவங்க வீட்டுக்குப் போறது பத்தி ஒன்னும் இல்லை... ஆனா அவங்க சென்னையில இல்ல இருக்காங்க. எனக்குச் சென்னைக்குப் போகத்தான் பிடிக்கலை....” என்றாள் மீனா.

“ஏன்?” எனக் கேட்ட ஹரிக்கு உடனே காரணமும் புரிந்து விட்டது. அங்கே தானே ஆகாஷும் இருக்கிறான்.

“ஹே லூசு.... கண்டதையும் நினைச்சு ஏன் உன்னையே வருத்திகிற?.... நாம ஹரிணி வீட்டுக்கு தான் போறோம். முதல் நாள் மதியம் போயிட்டு அடுத்த நாள் மதியம் கிளம்பப் போறோம். அங்க நீ யாரையும் பார்க்க வேண்டியது வராது. அதனால தைரியமா கிளம்பு....”

ஹரி அவ்வளவு சொல்லியும் மீனாவின் முகம் தெளியாததைப் பார்த்து “நான் இருக்கேன் இல்ல.... அப்புறம் என்ன பயம் உனக்கு?” என்றான்.

“பயம் எல்லாம் இல்லை... எனக்கு அந்த மூஞ்சிய பார்க்க வேண்டாம். அவ்வளவு தான்.”

மீனா எரிச்சலாகச் சொல்ல... ஹரி அவளின் நெற்றியில் இதமாக இதழ் ஒற்ற.....

அவனின் முகத்தை இரு கரங்களால் தாங்கிய மீனா... “ஏன் ஹரி நீங்க என் வாழ்க்கையில முதல்ல வரலை? என்றாள். அந்தக் குரலில் அவ்வளவு ஆதங்கம் இருந்தது.

ஹரி பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான். இருவரின் முகமும் நெருக்கமாக இருந்தது.

“நீங்க வந்திருந்தா எனக்கு இந்த நிலைமை வந்திருக்காது இல்ல... இப்ப என் மனசு கிடந்தது தவிக்குது. உங்களைப் பிரிஞ்சிருக்கவும் முடியலை.... உங்களோட சேரவும் மனசு வரலை....”

“சில தம்பதிகள் பிரிஞ்சு வேற வேற கல்யாணம் பண்ணிக்கும் போது எனக்கு ஆச்சர்யமா இருக்கும். எப்படி இவங்களால இப்படி இருக்க முடியுது அப்படின்னு.... கல்யாணம் எல்லாம் வாழ்க்கையில ஒரு முறை தான்னு நினைப்பேன்.”

“ஆனா இப்ப நானே இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். அப்ப நான் நல்ல பொண்ணு இல்லையா....”

ஹரிக்கு மீனாவின் உணர்வுகளை நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது. இத்தனை நாள் அவனும் இப்படி நினைத்து தானே அவளிடம் இருந்து விலகி இருந்தான்.

“மீனா... இப்படி ஆனதுக்கு நீயோ நானோ காரணமில்லை.... நாம வாழ்க்கைல இப்படி எல்லாம் கஷ்ட்டபட்ட பின்னாடி தான் சேரனும்னு இருந்து இருக்கு....”

“இனிமே அதை நினைக்காதே விட்டுடு.... இப்படி எல்லாம் யோசிக்க ஆரம்பிச்சா... நாம என்னைக்கும் சேர்ந்து வாழ முடியாது.”

“எல்லாத்தையும் மறந்திடு.... நாம யாருக்கும் துரோகம் பண்ணலை யாரையும் ஏமாத்தலை.... நம்ம மனசாட்சிக்கு தெரியும், நாம உண்மையா தான் இருந்தோம்.”

“ஆகஷோ பிருந்தாவோ இனி நம்ம வாழ்க்கையில இல்லை....”

“உனக்கு நான், எனக்கு நீ, நமக்கு அனி. நாம ஒரு குடும்பம் ஆகியாச்சு.... இனி வேற எந்த விஷயத்தையும் நமக்கு நடுவுல கொண்டு வராத....” என்றபடி கட்டிலில் இருந்து எழுந்த ஹரி “போ போய்ச் சாப்பாடு எடுத்து வை.... அனி வரும் நேரம் ஆச்சு.” என்றதும்,



அவனின் குரலில் இருந்த அழுத்தம் மீனாவையும் வேறு எதையும் பேச விடாமல் செய்ய... அவள் அவன் சொன்னதைச் செய்யச் சென்றாள்.



இனி இவளை ரொம்ப யோசிக்க விடக்கூடாது. நாம தெளிஞ்சா இவ அடுத்து ஆரம்பிக்கிறா.... என நினைத்த ஹரி சாப்பிட சென்றான்.

அவர்கள் இருவரும் சாப்பிடும் போதே... வைஷ்ணவி சென்று அனியை அழைத்து வந்தார். அனி ஊருக்குச் செல்லும் உற்சாகத்தில் இருந்தாள்.

அறையில் மீனா மகளின் பள்ளி உடுப்பை களைந்துவிட்டு வேறு உடை மாற்றி விட.... ஹாலில் வைஷ்ணவி ஹரியிடம் பேசிக்கொண்டு இருந்தார்.
“ஹரி, மீனாவுக்குக் கொஞ்சம் நகை வாங்கணும். இன்னைக்குக் கடைக்குப் போவோமா....” வைஷ்ணவி கேட்க....

ஹரிக்கும் அது புரிந்தே இருந்தது. மீனா போட்டிருக்கும் நகைகள் வெளி இடங்களுக்குச் செல்ல போதாது தான். ஆனால் மீனா இன்று இருக்கும் மன நிலையில் கடைக்குச் சென்றாலும் ஒழுங்காகத் தேர்வு செய்ய மாட்டாள் என்று தெரியும்.

“நீங்களே பார்த்து வாங்கிடுங்கமா.... அனிக்கும் வாங்குங்க. ஹரிணிக்கும் எதாவது வாங்கணும்னாலும் வாங்கிடுங்க. அப்புறம் அவங்க வீட்டுக்கும் எதாவது வாங்கிட்டு போகணும் இல்லையா....அதையும் வாங்கிட்டு வந்திடுங்க.” என்றவன், தனது வங்கி கார்டை எடுத்துக் கொடுத்தான்.

ஹரி அவரையே வாங்க சொல்லி இருந்தாலும் வைஷ்ணவி மீனாவிடம் சென்று அவளது விருப்பத்தையும் கேட்டுக்கொண்டார்.

“மீனா, உனக்குக் கொஞ்சம் நகை வாங்க ஹரி பணம் கொடுத்திருக்கான். நீயே வந்து செலக்ட் பண்றியா....”

“இல்லை அத்தை நீங்களே வாங்கிடுங்க.” என்றவளுக்கு வைஷ்ணவியின் பெருந்தன்மையை நினைத்துக் கண்கள் கலங்கி விட்டது. அவள் கண் கலங்கியதை பார்த்து வைஷ்ணவி பயந்து விட்டார்.

 
:love: :love: :love:

ஹரியு‌ம் மீனாவும் தங்களுடைய பழைய வாழ்க்கையை மறந்து, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பான, அழகான வாழ்க்கை வாழ வேண்டும்
 
Last edited:
Top