Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 17 2

Advertisement

Admin

Admin
Member

சில்லென்ற காற்று முகத்தில் மோத பைக்கில் முன்புறம் அமர்ந்திருப்பது சுகமாக இருந்தது. அதோடு இவ்வளவு பக்கத்தில் ஹரியும் இருப்பது நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதை அவளால் தான் முழுதாக அனுபவிக்க முடியவில்லை....

கேட் திறந்தே இருந்ததால்.... ஹரி வண்டியை நேராக வீட்டின் உள்ளே விட்டான். இவர்களுக்காக வைஷ்ணவி வெங்கட் அவர்களோடு அனியும் வெளி வராண்டாவில் தான் காத்துக் கொண்டு இருந்தனர்.

மீனா முன்புறம் அமர்ந்திருப்பதைப் பார்த்து அனி “ஹய் அம்மா வண்டி ஓட்டிட்டு வராங்க.” என உற்சாகக் குரலிட்டு கத்த.... மீனாவுக்கு வெட்கமாகப் போய்விட்டது.

இருவரையும் அப்படிப் பார்த்ததும் வைஷ்ணவி கூட ஒரு நொடி சந்தோஷப்பட்டு விட்டார். பிறகு தான் ஹரியின் முகத்தைப் பார்க்க.... அவன் முகத்தில் கோபம் வெளிப்படையாகத் தெரிந்தது.

பைக்கின் அருகே ஓடிய அனி “அப்பா நானும் வரேன் பா...” எனப் பின்புறம் ஏறி அமர்ந்து கொள்ள....

“அனி இறங்கு.... இப்ப நாம எங்கையும் போகலை....” சொல்லிக்கொண்டே ஹரி அனியை ஒரு கையால் பிடித்து இறக்கி விட்டவன், மீனாவையும் இறக்கி விட....

“ப்ளீஸ் பா.... ஒரே ஒரு ரவுண்டு.” அனி கொஞ்சலாகக் கேட்க....



“இன்னொரு நாள் போகலாம். உனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு தான....” என்றவன், வண்டியை நிறுத்திவிட்டு தானும் இறங்க.... அனியின் முகம் மாறியது.

“இல்லை இப்பவே போகணும்.” அவள் பிடிவாதம் பிடிக்க....

“சொன்னா கேட்கணும் போ உள்ளே....” ஹரி போட்ட அதட்டலில் அனி அரண்டு போய் உள்ளே ஓடி விட்டாள். அவன் இதுவரை இப்படியெல்லாம் அவளிடம் பேசியதே இல்லை....

தன் மீது உள்ள கோபத்தை அனியின் மீது காண்பிக்கிறான் என மீனாவுக்கு நன்றாகவே புரிந்தது. அவள் எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளே சென்றாள்.

இருவருக்கும் இடையே எதோ பிரச்சனை எனப் புரிந்து கொண்ட வைஷ்ணவி அவர்களிடம் எதுவும் கேட்கவில்லை... தன் கணவருக்கு உணவு எடுத்து பரிமாறியவர், தானும் அமர்ந்து சாப்பிட்டார்.

இப்போது எல்லாம் அனியே தான் சாப்பிடுவது. ஆனால் இன்று அவள் கோபத்தில் இருந்ததால்... மீனாவே மகளுக்கு உணவை எடுத்துக்கொண்டு வந்து ஊட்டிவிட.... ஹாலில் அமர்ந்து அழுது கொண்டிருந்த அனி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

ஹரி உடைகளை மாற்றிக்கொண்டு வெளியே வந்தவன், மகளின் முகத்தைப் பார்த்து விட்டு, தன்னையே நொந்து கொண்டவன், அவளைச் சமாதானம் செய்யச் செல்ல.... அனி அவன் பக்கம் கூடத் திரும்பவில்லை....

“அனி, நல்ல பொண்ணு தான...” மீனா கேட்க...

ஆமாம் என்று தலையசைத்தவள் “ஆனா... அப்பா குட் இல்ல.... எனக்கு அப்பா வேண்டாம்.” என்றாள்.

அதைக் கேட்ட ஹரி துடித்தே விட்டான். சின்னப் பெண் தெரியாமல் பேசுகிறாள் என்ற எண்ணம் கூட அவனுக்கு இல்லை... சட்டென்று அங்கிருந்து எழுந்து உள்ளே சென்று விட்டான்.

அனி பேசியது ஹரியின் பெற்றோரின் காதிலும் விழ... அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தனர்.

“அம்மா கூடத் தான் உன்னைத் திட்டி இருக்கேன், அடிச்சிருக்கேன். அப்ப உனக்கு அம்மாவும் வேண்டாமா..... அம்மா, அப்பான்னா கண்டிக்கத்தான் செய்வாங்க. எப்பவுமே கொஞ்சிட்டே இருக்க முடியுமா....”

“எப்பவும் உங்க அப்பா கொஞ்ச தானே செய்றார்.... ஒரு நாள் திட்டினா உன்னால வாங்க முடியாதா....”

“மழை பெய்து.... இப்ப வெளிய போய் மழையில நனைஞ்சா ஜுரம் வந்து உனக்குத் தான ஊசி போடுவாங்க. அதுக்குத்தான் அப்பா சொன்னாங்க.”

“உனக்கு அப்பா வேண்டாமா.... ஹய் ஜாலி எனக்குத் தான் அப்ப அப்பா...” மீனா மகளுக்குப் புரியும் விதத்தில் எடுத்து சொல்ல...

“யாருக்கோ அவங்க அப்பா வேண்டாமாம், சரி...அப்ப நான் என் பையனை கூடிட்டு கிளம்புறேன்.” வைஷ்ணவி இன்னும் அனியை தூண்டி விட.....

“அவங்க என்னோட அப்பா அவங்க உங்க கூட வர மாட்டாங்க.” என்ற அனி எழுந்து ஹரியிடம் சென்றவள் “அப்பா நீங்க வைஷுமாவோட போவீங்களா... போக மாட்டீங்க தானே.....” என அவன் கழுத்தை கட்டிக்கொண்டு கேட்க... ஹரியின் வருத்தம் மறைந்தது.

மகளைத் தூக்கிக் கொண்டவன் “இல்லடா.... நான் என் செல்லத்தை விட்டு எங்கையும் போக மாட்டேன்.” என்றவன், “சாரி டா.... என் தங்கத்தைத் திட்டிட்டேன்.” என்று அவள் கன்னத்தில் மாறி மாறி முத்தமிட....

“தப்புச் செஞ்சா திட்ட தான் வேணும். நீங்க ஏன் சாரி சொல்றீங்க. அவ தான் சொல்லணும்.” மீனா சொல்ல....

“வெரி வெரி சாரி பா....” அனி தன் தவறை உணர்ந்து சொல்ல... ஹரியின் முகம் மலர்ந்தது. அவனே அனிக்கு உணவை ஊட்டி விட.... மீனா அதன் பிறகு தான் உடை மாற்ற சென்றாள்.

குளியல் அறைக்குள் வந்தவளுக்குக் குளித்தால் தேவலை என்று தோன்ற... நிதானமாகக் குளிக்க ஆரம்பித்தாள்.

அனி உறங்கி இருக்க ஹரி அவளையே பார்த்துக்கொண்டு அமர்ந்து இருந்தான். உண்மையில் தவறு அவன் பக்கம் தான். வீணாக மீனாவின் மீது கோபப்பட்டு அதை அனியிடம் காட்டி இருந்தான். அவனின் தவறு அவனுக்குப் புரிந்து இருந்ததால்.... குற்ற உணர்வு வேறு நெஞ்சை அரித்தது.


தான் மீனாவுக்குக் கொஞ்சமும் நியாயம் செய்யவில்லை... திருமணம் செய்து கொண்டு அவளை வதைக்கிறோம் என நன்றாகவே புரிந்தது. அப்படி இருந்ததும் அனியிடம் அவள் தன்னை விட்டுக்கொடுக்காமல் பேசியது, மீனாவின் மீது அவனின் மதிப்பை இன்னும் உயர்த்தியது.

தான் அவளுக்கு என்ன செய்தோம்? எதுவுமே இல்லை.... ஆனால் தன்னுடைய மகளின் அன்பையும் அவள் எனக்காக விட்டு கொடுத்திருக்கிறாள். இனியாவது அவளை நன்றாக வைத்துகொள்ள வேண்டும். அவளின் மனம் சந்தோஷமடையும் படி நடந்து கொள்ள வேண்டும் என ஹரி நினைத்தான்.

மீனா குளித்து முடித்து வந்து வெகு நேரம் ஆகியும் ஹரி சாப்பிட வரவில்லை.... அவளே வந்து அவனைச் சாப்பிட அழைத்தாள்.

“ஹரி சாப்பிட வரீங்களா, எனக்கு ரொம்பப் பசிக்குது.”

மீனா அழைத்ததும் ஹரி உடனே எழுந்து வந்தான். இருவரும் அமைதியாக உட்கார்ந்து சாப்பிட.... வைஷ்ணவி அவர்கள் இருவரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதைப் பார்த்து விட்டு நிம்மதியாக உறங்க சென்றார்.

சாப்பிட்டு முடித்த மீனா சமையல் அறையை ஒழுங்கு படுத்தி விட்டு மறுநாளுக்குத் தேவையானவைகள் இருக்கிறதா எனப் பார்த்து விட்டு வர.... ஹரி அதுவரை ஹாலில் தான் இருந்தான். அவள் படுக்கச் சென்றதும், இவனும் உள்ளே சென்றான்.

மீனா எப்போதும் படுக்கும் இடத்தில் திரும்பி படுத்துக்கொள்ள.... நடுவில் இருந்த அனியை ஓரத்திற்கு மாற்றிவிட்டு ஹரி நடுவில் படுத்துக்கொண்டான். மீனாவுக்கு அவன் நடுவில் படுத்தது தெரியாது.

திடிரென்று ஹரி அவளை இடையோடு சேர்த்து அனைத்து, அவள் காதில் ரகசியமாக “சாரி.....” என்று சொல்ல.... மீனாவுக்கு இன்ப அதிர்ச்சியில் பேச்சே வரவில்லை....

படபடப்பு அடங்கியதும் மீனா மெல்ல “சரி உங்க இடத்துக்குப் போங்க....” என்றாள்.

“ம்ம்..” என்ற ஹரிக்கு அவளை விட்டு விலகும் எண்ணம் சிறிதும் இல்லை.... அவளைத் தன்புறம் மெதுவாகத் திருப்பியவன், அவளின் நெற்றி, கன்னம் என முத்தமிட்டவனுக்கு ஆரம்பித்ததை நிறுத்தவே முடியவில்லை... அவன் அவளின் இதழ்களைச் சிறை செய்ய... மீனாவும் மயங்கி தான் போய் விட்டாள்.

சிறிது நேரம் சென்று விலகியவர்கள் முகத்தில் புன்னகை.... ஹரி மேலும் அவளை ஆவலாக அனைத்து அவளின் கழுத்து வளைவில் முத்தமிட.... அவனின் அணைப்பில் உருகினாலும் மீனா இருக்கும் இடத்தை மறக்கவில்லை.....

“ஹரி ப்ளீஸ் அனி இருக்கா.... எப்ப வேணா எழுந்துப்பா...” என்றதும், ஹரி தன்னைக் கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தான்.

கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன் மீனாவையும் இழுத்து தன் மீது சாய்த்துக்கொண்டான். மீனாவும் அவனின் தோள் வளைவில் ஆனந்தமாகச் சாய்ந்து கொள்ள.... இருவரும் மனம் விட்டுப் பேசிக்கொண்டு இருந்தனர்.

“இன்னைக்குத் திடிர்ன்னு என்ன ஆச்சு?” மீனா ஆரம்பிக்க....


“திடிர்ன்னு எல்லாம் இல்லை.... என் மனசுல நீ தான் என் மனைவின்னு பதிஞ்சு ரொம்ப நாள் ஆச்சு? ஆனா எதோ தயக்கம். நீ சொல்லு... உனக்கு என்னைப் பிடிக்கும் தான....” ஹரி உறுதியாகச் சொல்ல... மீனா ஆமாம் என்று உடனே ஒத்துக்கொண்டாள்.

“ஆரம்பத்தில உங்க மேல எனக்கு அவ்வளவு வெறுப்பு இருந்தது. என்னோட உலகத்தையே நீங்க மாத்திட்ட மாதிரி அவ்வளவு கோபம் வந்தது. ஆனா உங்க கூடப் பழக ஆரம்பிச்ச பிறகு, அதுவும் நீங்க அனியை பார்த்துக்கிற விதம் தான் முதல்ல பிடிச்சது.”

“எனக்குச் சரியா சொல்லத்தெரியலை... எப்ப நான் உங்களை விரும்ப ஆரம்பிச்சேன்னு? எனக்கு முன்னாடி நடந்த திருமணத்தைப் பத்தி எந்தச் சந்தோஷமான நினைவும் இல்லை... ஏன் நினைச்சு பார்த்தா வெறுப்பாதான் இருக்கும். அதனால கூட ஒருவேளை என் மனசு உங்களைச் சீக்கிரம் ஏத்துகிட்டு இருந்திருக்கலாம், தெரியலை....”

“ஆனா நான் உங்களை ரொம்பப் போர்ஸ் பண்ணிட்டேனா....”

“அப்படின்னு யார் சொன்னா... தேவ் பையன் பிறந்த நாள் அன்னைக்கு இன்னும் கொஞ்ச நேரம் நாம அப்படியே நெருக்கமா இருந்திருந்தா.... நான் உன்னைக் கிஸ் பண்ணி இருப்பேன். நான் அந்த ஸ்டேஜ்ல தான் இருந்தேன்.”

ஹரி சொன்னதைக் கேட்டு மீனா அவனை நம்பாமல் பார்க்க.... “ஏன் உனக்கு இவ்வளவு சந்தேகம்? நான் சொல்றது உண்மை தான். அப்புறம் ஏன் அப்படி நடந்துகிட்டேன் அப்படிங்கிறதுக்கும் உனக்குக் காரணம் சொல்லிட்டேன். நாம திரும்ப அதைப் பத்தி பேச வேண்டாம்.”



மீண்டும் பிருந்தாவை பற்றிப் பேச அவன் விரும்பவில்லை என மீனா புரிந்து கொண்டாள். அவளும் அதை நினைவு படுத்தி அவனைத் துன்புறுத்த விரும்பவில்லை... வேறு ஏதேதோவெல்லாம் பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது திடிரென்று அனி தூக்கத்தில் “எனக்கு அப்பா பிடிக்கும். அப்பா வேணும்.” எனப் புலம்ப.... அதைக் கேட்ட ஹரி உருகியே விட்டான்.

அப்பா வேண்டாம் என்று வாய்த்தவறி சொல்லிவிட்டு, அந்தப் பிஞ்சு மனம் படும் வேதனை அவனுக்கு நன்றாகவே புரிந்தது. மகளை அள்ளி தன் மீது போட்டுக்கொண்டவன், அந்த நிமிஷம் அவ்வளவு சந்தோஷமாக உணர்ந்தான்.

அன்பான மனைவி தன் மீது உயிரையே வைத்திருக்கும் மகள் இதைவிட ஒருவனுக்கு வேறு என்ன சந்தோஷம் வாழ்க்கையில் இருந்து விட முடியும்?

 
:love: :love: :love:

மீனா மகளுக்கு ஹரிய புரிய
வைக்குறது சூப்பர்...

ஹரி & அனிதா பாண்டிங் சூப்பர்..

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே
தாலாட்டு பாடும் தாயின் அன்பும் தந்தை அன்பின் பின்னே
தகப்பனின் கண்ணீரைக் கண்டோர் இல்லை
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை

அம்பியா இருந்த நீ ரெமோவா மாறிட்டியே ...

ஆப்பிள் லப்டொப் பெண்ணே
மடியில் வைத்து உன்னை
விரல்கள் தேயக் கொஞ்சி
நான் ரசிப்பேனே..!
எனை ஆக்டோபஸ் விரல்களால்
சுருட்டி விட்டாய்..
ஒரு அட்டம் பொம் உயிருக்குள்
உருட்டி விட்டாய்..
கூல்ஹனி கூல்ஹனி கூல்ஹனி
இதழில் குடிப்பேன் கூல்ஹனி
ஓ ரெமோ ஓ ரெமோ ஓ ரெமோ
இதழில் தா ரெமோ தா ரெமோ
 
Last edited:
:love: :love: :love:

ஹரி வட்டத்தை விட்டு வெளிய வந்தாச்சு.......
இனி வாழ்க்கையின் இன்னொரு பக்கம் பார்க்கப்போறாங்க ரெண்டு பேரும்.....
மீனாக்கு எந்த வருத்தமும் இப்போ இல்லை.......
பொண்ணுக்கும் புரிய வச்சாச்சு......
வைஷ்ணவி வேண்டுதலும் நிறைவேறப்போகுது......

ஆஷிக் கதை மீனா இன்னும் சொல்லலையே???
 
Last edited:
Top