Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 17 1

Advertisement

Admin

Admin
Member


பகுதி – 17

மறுநாள் காலை எழுந்த மீனாவுக்குத் தலை மட்டும் அல்ல மனமும் பாரமாக இருந்தது. இருந்தாலும் இன்றும் ஹரியை தொல்லை செய்யக் கூடாது என்ற எண்ணத்தில் எழுந்து வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருந்தாள்.

ஹரியும் இரவு வெகு நேரம் கழித்து உறங்கியதால்... காலை எழுந்துகொள்ளவில்லை.... அவனின் பக்கத்தில் படுத்து இருந்த அனியை சத்தம் வராமல் எழுப்பிப் பள்ளிக்குக் கிளம்பச் செய்து அனுப்பி வைத்தவள், தானும் நேரமே குளித்து விட்டு வந்தாள்.

ஹரி எழுந்ததும் முதலில் மீனாவை தேடி வந்து அவள் நெற்றியில் கைவைத்துப் பார்த்தான். அவளுக்குக் காய்ச்சல் இல்லாதது நிம்மதியை தர.... அவள் முகத்தை ஆழ்ந்து பார்த்தவன் “சாரி மீனா உன்னை ரொம்பக் கஷ்ட்டபடுத்திட்டேன்.” என்றதும்,

“என்கிட்டே சொல்லாம வேற யார்கிட்ட ஹரி நீங்க மனசு விட்டு பேச முடியும். ஆனா எனக்குத் தான் உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னு தெரியலை....” மீனா பதிலுக்கு வேதனை பட....

“நீயும், அனியும் எனக்குக் கிடைச்சதே பெரிய ஆறுதல் தான். எதுக்காக வாழறோம்னு தெரியாம இருந்தது. இன்னைக்கு என்னோட வாழ்க்கைக்கும் ஒரு அர்த்தம் இருக்கு. அதனால நீ வேற எதையும் நினைச்சு கவலைப்படாம இரு.”

ஹரி சொன்னதற்கு மீனா சம்மதமாகத் தலையசைக்க... ஹரியும் புன்னகையுடன் அங்கிருந்து சென்றான்.

அதன் பிறகு வந்த நாட்களில் ஹரியும் மீனாவும் நன்றாகப் பேசி பழகினார்கள். முன்று வேலை உணவையும் சேர்ந்தே அருந்தினார்கள். அனியுடன் சந்தோஷமாக நேரத்தை செலவு செய்தனர். இரவும் ஒரே கட்டிலில் படுத்துக்கொண்டனர். ஆனால் அதற்கு மேல் செல்லவில்லை...

தம்பதிகளுக்கு இடையே தாம்பத்தியம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று.... என்னதான் இருவருக்கும் இடையே புரிதல் இருந்தாலும், மனமும் உடலும் ஒன்றி வாழ்வது தான் நல்ல இல்லறம் ஆகும்.


ஹரியின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட மீனா... அவன் மனதிற்கு எந்த வேதனையும் தன்னால் வந்து விடக் கூடாது என்ற எண்ணத்தில், ஒரு எல்லைக்கு மேல் அவனிடம் எந்த உரிமையையும் எடுத்துக் கொள்ளமட்டாள்.

மீனாவை தன் மனைவி என்று ஏற்றுக்கொண்டாலும், இன்னமும் ஹரி முழுதாகப் பிருந்தாவின் நினைவுகளில் இருந்து வெளியே வரவில்லை... அவளை நினைத்துக்கொண்டு மீனாவுடன் சந்தோஷமாக இருக்கவும் மனம் வரவில்லை. அதனால் கண்ணுக்கு தெரியாத ஒரு இடைவெளி இருவரிடமும் இருந்தது.

மீனாவுக்கு மனதில் ஆசைகள் இல்லாமல் இல்லை... அவளுக்கு ஹரியின் தோல்களில் சாய்ந்து கொள்ளவேண்டும், அவன் கையேடு கை கோர்த்து நடக்க வேண்டும். அவன் தலைமுடியை கலைத்து விளையாட வேண்டும் எனப் பல அசைகள் நெஞ்சிற்குள் இருந்தாலும்.... அவை எதையும் ஹரிக்குத் தெரியவிடக் கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தாள்.

முன்பு அவள் அசட்டுத் தனமாக நடந்து கொண்டதை ஹரியும் கவனித்துத் தானே இருந்தான். அதனால் இப்போது வெகு கவனமாக இருந்தாள்.

மீனாவால் அவளின் உணர்வுகளை ஹரியிடம் மறைக்க முடிந்தது போல் வைஷ்ணவியிடம் மறைக்க முடியவில்லை....

வைஷ்ணவி மீனாவிடம் சொன்னது போல்... இவர்களுடன் சிறிது காலம் தங்கி இருக்கத் தன் கணவருடன் வந்திருந்தார். மீனா அவர்களை நன்றாகக் கவனித்துக்கொண்டாள்.

வைஷ்ணவி எதாவது வேலை செய்ய வந்தாலும் விட மாட்டாள். “அங்க நீங்க தானே அத்தை வேலை பார்கறீங்க இங்கையாவது ரெஸ்ட் எடுங்க.” என்று விடுவாள்.
இப்போது ஹரியும் மீனாவும் இருப்பதைப் பார்த்து வைஷ்ணவியும் அவர்கள் கணவன் மனைவியாக வாழ்வதாகவே நினைத்தார். ஆனால் இரண்டு மூன்று நாட்கள் சென்றதுமே அவருக்குத் தெரிந்து விட்டது. இருவரும் கணவன் மனைவியாக நடந்து கொள்கிறார்களே தவிர... வாழவில்லை என்பதைப் புரிந்து கொண்டார்.

அவரின் மனதுக்கு மிகவும் வேதனையாக இருந்தது. வெளித்தோற்றத்தில் இருவரும் மகிழ்ச்சியான தம்பதிகளாகத் தெரிந்தாலும் உள்ளுக்குள் இன்னும் வேறு வேறாகத் தான் இருந்தனர். அவர்கள் இருவரையும் அவர்களுக்குத் தெரியாமல் கவனிக்க ஆரம்பித்தார்.

வைஷ்ணவி காலை எழுந்ததும் காபி குடித்து விட்டு தன் கணவர் வெங்கட்டுடன் நடை பயிற்சிக்கு சென்று விடுவார். நடை பயிற்சி முடிந்து அங்கே இருக்கும் பார்க்கில் சிறிது நேரம் ஓய்வாக உட்கார்ந்துவிட்டு வருவார். அதற்குள் மீனாவும் எழுந்து காலை வேலைகளைப் பார்த்துக்கொண்டிருப்பாள்.

திரும்பி வந்ததும் ஹரிக்கு அனியை பள்ளிக்குக் கிளப்புவதில் உதவி செய்வார். வெங்கட் எப்போதும் சரியான நேரத்திற்குச் சாப்பிடும் பழக்கம் உடையவர். அதனால் வைஷ்ணவி தன் கணவர் உணவு அருந்தும் நேரத்திற்குத் தானும் அவருடன் உட்கார்ந்து சாப்பிடுவார்.

மீனா ஹரியோடு சாப்பிடுவாள். இரவு மட்டும் எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவார்கள். மதிய சமையல் மாமியார் மருமகள் இருவரும் சேர்ந்து தான் செய்வார்கள். ஆனால் வெங்கட் ஒரு மணிக்கு எல்லாம் சாப்பிடுவதால்... வைஷ்ணவியும் அவரோடு சேர்ந்து சாப்பிட்டு விட்டு எதாவது கைவேலை செய்து கொண்டிருப்பார்.

மதியம் ஹரி வரும் நேரம் மீனா ஆவலாக அவனுக்காகக் காத்திருப்பாள். அவள் கண்கள் எல்லாம் வாசலில் தான் இருக்கும். ஆனால் ஹரி கேட் திறந்து உள்ளே நுழையும் போது... வேலை இருப்பது போல் உள்ளே சென்று விடுவாள். ஹரி அவனிடம் இருக்கும் சாவியால் கதவை திறந்து கொண்டு வருவான்.

அதே போல் தான் ஹரி பார்க்காத நேரம் அவனைப் பார்ப்பவள், அவன் பார்க்கும் நேரம் வேறு பக்கம் பார்வையைத் திருப்பிக்கொள்வாள்.

வைஷ்ணவிக்குத் தெரிந்து விட்டது தவறு மீனா மீது இல்லை.... அவள் சரியாகத்தான் இருக்கிறாள். ஹரி தான் இன்னும் பழைய சம்பவங்களில் இருந்து வெளி வரவில்லை என்பதைப் புரிந்து கொண்டார். அவருக்குத் தன் மகன் மீது கோபம் வந்தது.

அவரால் இதைப் போய் ஹரியிடம் வெளிப்படையாகப் பேச முடியுமா.... தான் வற்புறுத்தி அவனை மனைவியுடன் சேர சொல்வது நன்றாக இருக்குமா.... தன் சொல்லுக்குப் பணிந்து ஹரி நடந்தாலும், அதை மீனாவால் ஏற்க முடியுமா.... ஹரி அவன் முழுமனதுடன் அல்லவா.... மீனாவுடன் சேர வேண்டும். அது தான் இருவருக்குமே நல்லது. இவர்கள் இருவரையும் சேர்க்க என்ன செய்வது? என்று தெரியாத குழப்பத்தில் வைஷ்ணவி இருந்தார்.

மறுநாள் பள்ளியில் எதோ கொண்டு வர சொன்னார்கள் என அனி திடிரென்று சொல்ல... மகளுக்கு அதை வாங்க மீனா ஏழு மணி போல் கிளம்பி கடைக்குச் சென்றாள். தான் போய் வாங்கி வருவதாக வெங்கட் சொல்லத்தான் செய்தார். ஆனால் அவருக்குப் பார்த்து வாங்க தெரியாது என்பதால் மீனாவே சென்றாள்.

ஹரியும் அன்று சீக்கிரமே வீடு திரும்பிவிட்டான். அவன் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் மழை பிடித்துக்கொண்டது. சாதாரண மழை அல்ல.... பேய் மழை. அதோடு காற்றும் பலமாக அடித்தது.

“இவ ஏன் இந்நேரம் தனியா போனா.... எனக்குப் போன் பண்ணி இருக்க வேண்டியது தான.....” ஹரி வெளி வராண்டாவில் குறுக்கும் நெடுக்குமாக நடந்த படியே புலம்ப....

ஆமாம் அப்படியே பொண்டாட்டி மேல ரொம்ப அக்கறை வைஷ்ணவி மனதிற்குள் நொடித்தவர், வெளியே ஒன்றும் காட்டிக்கொள்ளவில்லை....

காற்றுப் பலமாக அடித்ததால் மின்சாரமும் போய்விட்டது. இவர்கள் வீட்டில் இன்வேர்டர் இருந்ததால்.... விளக்குகள் எரிந்தது. ஆனால் தெருவில் வெளிச்சமே இல்லாமல்.... இருட்டாக இருந்து.

இதில் எப்படி மீனா நடந்து வர முடியும். அதற்கு மேல் ஹரி காத்திருக்க முடியாமல் மீனாவை தேடி பைக்கில் கிளம்பி விட்டான்.

மீனா பொருட்கள் வாங்கும் வரை ஒரு பிரச்சனையும் இல்லை.... அவள் வாங்கி முடித்துக் கிளம்பும் சமயம் மழை வந்ததால்.... அந்தக் கடையிலேயே நின்று கொண்டிருந்தாள்.

மழை வேறு நிற்கும் வழியில்லை.... சிறிது நேரத்தில் மழை சற்றுக் குறைந்ததும், திரும்பப் பெரிதாக மழை வருவதற்குள் கிளம்பி விடுவோம் என நினைத்து, அவள் பெரிய சாலையைக் கடந்து வீடுகள் இருக்கும் பகுதிக்குள் நுழைய.... மின்சாரம் இல்லாமல் தெருவே இருளில் மூழ்கி கிடந்தது.

அதைப் பார்த்ததும் இதில் எப்படித் தனியே நடந்து செல்வது என அவளுக்கு அச்சமாக இருந்தது. ஹரி வீடு திரும்பி இருப்பானா என்று தெரியவில்லை.... அவனை அழைக்கக் கையில் செல்லும் இல்லை... வீட்டிலேயே விட்டுவிட்டு வந்திருந்தாள்.

வீட்டுக்கு போவோமோ இல்லை திரும்பக் கடைக்கே சென்று விடுவோமா என யோசித்தவள், விறுவிறுன்னு நடந்திடலாம் என்ற எண்ணத்தில் நடக்கத் துவங்க.... சிறிது தூரம் கடந்து பிறகு ஹரி அவள் எதிரில் பைக்கில் வந்தான்.

அவனைப் பார்த்ததும் தான் பயம் போய் இயல்பாக மூச்சு விட முடிந்தது. அவள் பக்கத்தில் வந்து பைக்கை நிறுத்தி ஏறு என்றான்.

“கார் கொண்டு வரலையா....” மீனா கேட்க....

அவள் கேட்டதும் தான் காரில் வந்திருக்கலாமே என்று தோன்றியது. அவசரத்தில் பைக்கை எடுத்து வந்திருந்தான்.

“ஏன் பைக்ல ஏற மாட்டியா?”

“எனக்கு ஒன்னும் இல்லை.... அப்புறம் நீங்க தான் பீல் பண்ணுவீங்க. நீங்க இதுவரை என்னைப் பைக்ல எங்கையும் கூடிட்டுப் போனது இல்லையே..... மறந்து எடுத்திட்டு வந்துடீங்களா.... பரவாயில்லை நான் நடந்து வரேன்.” என்ற மீனா நடக்கத் துவங்க....

அவள் சொல்வது உண்மை என்றாலும் ஹரிக்கு அவள் சொல்லி காட்டியது கோபத்தை வரவழைத்தது. அவள் அருகில் சென்று வண்டியை நிறுத்தியவன் “பரவாயில்லை ஏறு....” என்றான்.

“இருக்கட்டும் ஹரி..... கொஞ்ச தூரம் தானே நான் நடந்தே வரேன். அப்புறம் உங்க பிருந்தா கோவிச்சுப்பாங்க.”

மீனா சொல்ல ஹரி அவளை முறைத்தவன் “என்னைப் பத்தி மட்டும் பேசு.” என்றான்.

அவன் சொல்வது மீனாவுக்குப் புரிந்தது. அதாவது பிருந்தாவை பற்றிப் பேசக்கூடாது என்கிறான்.

“சரி நான் பேசலை.... வழிய விடுங்க, நான் போகணும்.” மீனா சொல்ல ஹரியின் பொறுமை பறந்தது.

மழை இன்னும் விடவில்லை தூறிக்கொண்டு இருந்தது. அதோடு மின்சாரமும் இன்னும் வரவில்லை.... இவளை எப்படித் தனியே விடுவது, அதோடு பைக்கை தள்ளிக்கொண்டு போவது எல்லாம் நடக்காத காரியம். இப்போது என்ன செய்வது? என யோசித்தவன்,

“பின்னாடி ஏற வேண்டாம் முன்னாடி ஏறு.” என்றான்.

என்னது முன்னாடியா என மீனா யோசிக்கும் போதே... ஹரி அவளின் இடையில் கை கொடுத்து தூக்கி அவளை முன்புறம் உட்கார வைத்திருந்தான்.



மீனா இறங்க முயல அதற்குள் வண்டியை அவன் எடுத்து விட “ஐயோ ! நான் இப்ப விழப் போறேன்.” மீனா கத்த....

“ஷு... கத்தாத... ரெண்டு பக்கமும் கால் போடு விழ மாட்ட....” என ஹரி வண்டியின் வேகத்தைக் குறைக்க... மீனா அவனின் சட்டையை ஒரு கையால் பற்றிக்கொண்டே.... மெதுவாக இருபக்கமும் கால் போட்டு உட்கார்ந்து கொண்டாள். இப்போது யாரவது பார்த்தால் அவள் தான் வண்டி ஓட்டுவது போல் இருக்கும்.

இவன் இம்சை தாங்க முடியலையே... என்னை அப்படியும் போக விடாம... இப்படியும் போக விடாம கொல்றானே.... என மீனா மனதிற்குள் ஹரியை திட்டியபடி வந்தாள்.

 
:love::love::love:

அடடா ஹரி உன் ஐடியாவே தனி தான்.......
ஏறு....... அந்த இடம் இப்போ உனக்கு தான்னு சொல்லமுடியலையே........

உங்கம்மா என்ன பண்ணலாம்னு யோசிச்சுட்டே இருக்காங்க.......
நீ உங்கம்மா சொல்றதுக்கு முன்னாடி execute பண்ணுவியா இல்லையா???
 
Last edited:
ஹா ஹா ஹா
மீனா நீ பைக் ஓட்டுற மாதிரி ஆனால் ஓட்டலை
செம ஸீன்
ஆனாலும் உனக்கு இந்த குசும்பு போகலையே, மீனா
அவனே மறந்தாலும் அவனை பிருந்தாவை மறக்க விட மாட்டியா, நீயி?
 
Last edited:
Top