Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனிதாவின் அப்பா 15 1

Advertisement

Admin

Admin
Member





பகுதி – 15

அப்படி அவசரமா எங்க போறாங்க? என நினைத்தபடி உள்ளே வந்து கதவை அடைத்த மீனா, அறைக்குள் சென்று உடை மாற்றி விட்டு வந்து ஹால் சோபாவில் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டு இருந்தாள்.

அப்போதே நேரம் பத்து மணி... எப்போதும் வழக்கமாக உறங்கும் நேரம் என்பதால்... அவளுக்குத் தூக்கமாக வந்தது. ஹரி வரும் பொழுது எழுந்து கொள்ளலாம் என்று சோபாவில் படுத்துக்கொண்டே டிவி பார்த்தாள்.

சிறிது நேரம் சென்று அவளையும் அறியாமல் உறங்கி விட்டாள். நள்ளிரவு போல் விழித்தவள் நேரம் பார்க்க.... அப்பொழுது நேரம் ஒரு மணி. ஹரி வந்து விட்டானா எனத் தெரிந்து கொள்ள எழுந்து சென்று அறைக்குள் பார்த்தால்... அங்கே அவன் இல்லை.

திரும்ப ஹாலில் இருந்த ஜன்னலுக்கு வந்து வெளியே ஹரியின் கார் இருக்கிறதா என்று பார்த்தாள். அங்கே அவன் காரும் இல்லை.

இன்னுமா வரலை எங்க போய் இருப்பாங்க? என நினைத்தவள், அவன் செல்லுக்கு அழைத்துப் பார்க்க.... அவன் செல் அடித்தது ஆனால் அவன் எடுக்கவில்லை.

ஹரி அங்கே அவன் அப்பார்ட்மென்ட்ல் எதை எதையோ நினைத்து மனதை வதைத்துக்கொண்டவன், சிறிது நேரத்திற்கு முன்பு தான் உறங்கி இருந்தான். அதனால் அவனுக்கு மீனா அழைத்தது கேட்கவில்லை.

முதலில் ஹரிக்கு எதாவது ஆகி இருக்குமோ எனப் பயந்த மீனா... அவன் செல் அடிப்பதில் இருந்தே அப்படி எதுவும் இருக்காது என முடிவுக்கு வந்தாள்.

ஒரே அறையில் மகளோடு சேர்ந்து உறங்கி தான் பழக்கம். இங்கே இவ்வளவு பெரிய வீட்டில் தனியாக இருக்கப் பயமாக இருந்தது. எப்போதுமே ஹரி எட்டு மணிக்குள் வீடு திரும்பி விடுவதால் இதுவரை தனியாக இருந்து இல்லை.

மாடி வழியாகத் திருடன் யாரும் வந்து விட்டால் என அதை நினைத்து வேறு பயந்தாள். கதவு நன்றாக மூடி இருக்கிறதா என்று போய்ப் பார்க்க கூடத் தைரியம் இல்லாமல்... விளக்கு எரிந்தால்.... திருடன் வர யோசிப்பான் என்ற எண்ணத்தில் எல்லா விளக்குகளையும் போட்டுவிட்டு ஹாலிலேயே உட்கார்ந்து இருந்தாள்.

அப்படி உட்கார்ந்து இருக்கும் நேரத்தில்... தேவ்வின் வீட்டில் நடந்தது எல்லாம் யோசித்துப் பார்த்த போது... ஹரி தன்னைத் தவிர்க்க நினைத்தே வீட்டிற்கு வரவில்லை என முடிவுக்கு வந்தாள்.

ஏன் நான் அவங்களை என்ன செய்யப் போறேன்? இன்னொரு ரூம் இருக்கு இல்ல.... அதுல போய்க் கதவை பூட்டிக்க வேண்டியது தான.... இல்லைனா மாடிக்கு போக வேண்டியது தான...

அப்ப இத்தனை நாளும் அனிக்காகத் தான் தன்னைப் பொறுத்து போறானா.... நான் அவனுக்கு வேண்டாதவளா.... நான் தனியா இருப்பேன்னு நினைச்சு பார்க்கலையே....

நான் என்ன அவ்வளவு மோசமான பொண்ணா? எதுக்கு இப்படிப் பண்ணாங்க? என நினைத்தவளுக்கு என்ன நினைத்தும் அழுகையைக் கட்டுபடுத்தவே முடியவில்லை....

நாம் அவனிடம் எதாவது எதிர்பார்த்தோமா.... அவன் ப்ரண்ட் கேலி பண்ணதுக்கு நான் என்ன பண்ண முடியும்? என்னை ஒரு சக மனுஷியா கூட அவனால நினைச்சு பார்க்க முடியலை இல்லையா.... என்னைப் பத்தி நினைச்சு பார்த்திருந்தா... இப்படித் தனியா விட்டுட்டு போவானா....

நமக்கு மட்டும் ஏன் வாழ்க்கை இப்படி இருக்கு? வேண்டாத குப்பை மாதிரி ஏன் எல்லோரும் வெளியே தள்றாங்க. முதல்ல ஆகாஷ் இப்ப ஹரி.

நாம என்ன செஞ்சோம். நானா இவங்களைத் தேடி போனேன். ஏன் தேடி வந்து என்னை வதைக்கிறாங்க என நினைத்தவளுக்குக் கோபம், ஆத்திரம், கழிவிரக்கம் என எல்லா வித எண்ணங்களும் வந்து அவளை அலைகழித்தது.

வெகு நேரம் வரை அழுதவள் இப்படியே இருந்தால் தனக்குப் பைத்தியம் தான் பிடிக்கும் என நினைத்து, மனதை மாற்றும் விதத்தில் வீட்டு வேலை செய்ய ஆரம்பித்தாள்.

அப்போது நேரம் விடியற்காலை மூன்று மணி. எழுந்து வீட்டை பெருக்கி, துடைத்து, வாஷிங் மெஷின் போட்டு விட்டு வந்து ஹாலில் அமர்ந்து முன் தினம் துவைத்த துணிகளை மடித்து வைத்தாள்.

வேலை செய்யும் போதே மனதில் யோசனை ஓடிக்கொண்டே தான் இருந்தது. ஹரி என்ன தன்னை விரும்பியா திருமணம் செய்து கொண்டான், இல்லையே.... அனிக்காகத் தானே இந்தத் திருமணம் அவன் சரியாகத்தான் இருக்கிறான். நாம் தான் அவனிடம் அதிகம் எதிர்ப்பார்ப்பை வளர்த்துக்கொண்டோம். நாம் மனதில் ஆசையை வளர்த்துக் கொண்டதற்கு அவனை எப்படிப் பொறுப்பாக்க முடியும்.

இப்படி எதையெல்லாமோ யோசித்து அவளே ஒரு முடிவெடுத்துக் கொண்டவள், பொழுது விடியும் வேளையில் அப்படியே ஹாலில் தரையில் படுத்து உறங்க ஆரம்பித்தாள்.

அவள் உறங்கிய சிறிது நேரத்தில் எல்லாம் ஹரி வந்து விட்டான். தன்னிடம் இருந்த சாவியால் கதவை திறந்து கொண்டு வந்தவன், ஹாலில் படுத்திருந்த மீனாவை பார்த்து திகைத்து நின்று விட்டான்.

அவளைச் சுற்றி மடித்து வைத்த துணிகள் இருந்தது. தலை மட்டும் தான் வெளியில் இருந்தது. உடம்பு சோபாவுக்கு அடியில் இருந்தது. இங்க ஏன் தூங்கிறா? என யோசனையுடன் வீட்டை சுற்றி பார்த்தவனுக்கு, வீட்டில் எல்லா அறைகளிலும் விளக்கு எரிவதை பார்த்தும், புரிந்து விட்டது.

தனியாக இருக்கப் பயந்து போய் இருக்கிறாள் எனப் புரிந்ததும் அவளை இந்த நிலையில் விட்டு சென்ற தன்னையே நொந்து கொண்டவன், அவளை எழுப்பலாம் என அருகில் செல்ல....

அந்த நேரம் சரியாகத் துவைத்து முடித்த வாஷிங் மெஷின் சத்தம் போட.... அந்தச் சத்தத்தில் பதறி அடித்து மீனா எழுந்து கொள்ள முயல.... அவளாள் முடியவில்லை.

ஹரி அவள் உதவிக்குச் சென்றவன், அவள் தோள்களைப் பற்றி வெளியே இழுக்க... மீனா அரண்டு விட்டாள். யாரோ எனப் பயத்தில் கத்த போனவள், ஹரி என உணர்ந்ததும் அச்சத்தோடு அவனைப் பார்த்தாள்.

“ஹே மீனா பயந்துட்டியா....”

ஹரி கேட்க மீனா பதில் சொல்லாமல் எழுந்து அறைக்குள் சென்று விட்டாள். உள்ளே சென்றவள் கட்டிலில் படுத்து உறங்க... அறையின் வெளியில் நின்று ஹரி அவளைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான்.



அவள் பார்வையில் இருந்த அன்னியத்தன்மையும் விலகலையும் பார்த்து அவனக்கு மனதை பிசைந்தது. அவள் உறங்கியதும் அருகில் சென்று பார்த்தவனுக்கு, வீங்கிய இமைகளே சொன்னது அழுதிருக்கிறாள் என்று....

இரவு அங்கே தங்க வேண்டும் என்று செல்லவில்லை.... சிறிது நேரம் தனிமை தேவைப்பட்டது அதற்காகவே சென்றான். ஆனால் நேரம் செல்ல செல்ல அவனையும் அறியாமல் உறங்கி விட்டான். அதிகாலை எழுந்ததும் தான் எங்கே இருக்கிறோம் என நினைவு வந்து பதறி அடித்து வந்தான்.

அனி வேறு இல்லை... இரவெல்லாம் தனியே இருந்திருக்கிறாள். என்னவெல்லாம் நினைத்து வருந்தினாளோ.... நேற்று இருந்திருக்க வேண்டும் இந்த அறிவு.... இன்று வந்து என்ன பயன்?

ஹரி அவனே காபி போட்டு குடித்து விட்டு மீனா எழுவதற்காகக் காத்திருந்தான். எட்டு மணி வரை நன்றாக உறங்கி எழுந்த மீனா.... குளித்து விட்டு வெளியே வந்தவள், ஹாலில் இருந்த ஹரியை கண்டுகொள்ளாமல்... நேராகச் சென்று சமையல் அறையில் புகுந்து கொண்டாள்.

காலைக்கு இட்லியும் சட்னியும் செய்தவள், அதைக் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டு, அறைக்குத் திரும்ப....

“மீனா....” ஹரி அழைக்க..... அவள் நின்று அவனைத் திரும்பி பார்த்தாள். இன்னும் விழிகளில் வீக்கமும் சிவப்பும் இருந்தது.

“சாரி மீனா....”

“எதுக்கு?”

“நேத்து நைட் சீக்கிரம் வந்திடனும்ன்னு தான் போனேன். ஆனா....”

அவன் சொல்லும் போதே இடைமறித்து “இது உங்க வீடு, நீங்க எப்ப வேணா வரலாம் போகலாம். என்கிட்டே எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம்.”

சொல்லிவிட்டு மீனா அறைக்குள் சென்று விட.... ஹரி அதே இடத்தில் நின்றிருந்தான். அவள் இப்போது சில நாட்களாக இருக்கும் மீனா இல்லை.... முதல் தடவை அவளைப் பார்க்கும் போது இருந்தாலே.... அது போல் இருந்தாள்.

நீ யாரோ நான் யாரோ போன்ற பார்வை. பார்வையாலையே தள்ளி வைத்தாள். எல்லாம் களைந்து போனது... திரும்ப ஆரம்பித்த இடத்திற்கே வந்து நின்றனர்.

ஹரிக்கு மீனாவை எளிதாகச் சமாதானப்படுத்த முடியும் என்று தோன்றவில்லை.... அவன் உபயோகிக்கும் அறைக்குச் சென்று அங்கிருந்த கட்டிலில் படுத்து விட்டான்.

இரவில் எல்லா வேலைகளையும் பார்த்திருந்ததால்.... செய்ய வேலை ஒன்றும் இல்லாமல் மீனா திரும்பப் படுத்துக்கொண்டாள். இருவரும் ஆளுக்கொரு அறையில் ஆளுக்கொரு மனநிலையில் இருந்தனர்.

அனி வந்தால்... மீனாவின் மனநிலை மாறுமோ என்ற எண்ணத்தில் அனியை அழைக்க ஹரி சென்றான். செல்வதற்கு முன் மீனா இருந்த அறைக்கு வந்தவன் “நான் போய் அனியை கூடிட்டு வரேன்.” எனச் சொல்லிவிட்டு தான் சென்றான்.

ரொம்பத் தான் அக்கறை, நேத்து எங்க போச்சு இந்த அக்கறை? என மீனாவுக்கு அதற்கும் கோபம் வந்தது.

ஹரி சென்ற போது வீட்டில் தேவ் இல்லை... அதனால் உடனே அனியை அழைத்துக்கொண்டு கிளம்பி விட்டான். அனி வந்ததும் மீனாவை தேடியவள், அவள் வெளியில் எங்கும் இல்லாததால் அறைக்குள் சென்று பார்த்தாள்.

இந்நேரம் மீனா படுத்திருப்பதைப் பார்த்து தன் அம்மாவுக்கு உடம்புக்கு சரி இல்லையோ எனப் பதறி போனவள் “அம்மா.... என்னமா பண்ணுது? ஏன் மா படுத்திருக்கீங்க?” என்றவள், தன் தாயின் நெற்றி கன்னம் எல்லாம் சுடுதா எனத் தொட்டு தொட்டு பார்க்க... மகளின் அன்பு மீனாவின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

மகளை அனைத்து தன் கன்னத்தோடு கன்னம் வைத்து இழைந்தவள் “சாப்ட்டியா டா.....” என்றதும், “இல்லைமா.... ஆன்டி லேட்டா தான் எழுந்தாங்க. இப்ப தான் பூரி செஞ்சு தரேன்னு சொன்னாங்க. அதுக்குள்ள அப்பா வந்துட்டாங்க.”

மகள் சாப்பிட வில்லை என்றதும் உடனே எழுந்த மீனா அவளை அழைத்துக்கொண்டு உணவு மேஜைக்கு வந்தவள், தட்டில் இட்லி எடுக்க.... அப்போது தான் ஹரி சாப்பிடவில்லை எனத் தெரிந்தது.
மகளுக்கு உணவை ஊடிக்கொண்டே “உங்க அப்பாவை சாப்பிட சொல்லு....” என்றாள். அவன் எப்படியோ போகட்டும் என்று எல்லாம் விட முடியவில்லை....

“அப்பா.... அம்மா உங்களைச் சாப்பிட சொல்றாங்க.” அனி சத்தமாகச் சொல்ல... மீனா தலையில் அடித்துக்கொண்டாள்.

 
Top