Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 3 - என்னவளின் டைரி

Advertisement

Nilaprakash

Member
Member
அந்த டைரியின் பக்கங்கள் கண் முன் பிறழ காலச் சக்கரம் ஒரு வருடம் பின்னோக்கி நகர்ந்தது.

அன்று
மலர்விழி மெதுவாய் நடந்து செல்ல அந்த தெருவில் உள்ள சிலரின் கண்கள் சற்று பொறாமை உடன் பார்த்து தீர்த்தன..

மலர்விழி யின் தோழி ரீனா அவள் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்...மலர்விழி அழகாய் சிரித்தாள் ..அவள் அப்படி ஒரு அழகு..சற்றே சிவந்த நிறம் ..மங்களகரமான முகம் .. கொடியிடையாள் என்பார்களே அந்த சித்திரம் சிலை பேசும் அழகு...

அவள் அப்பா தமிழ் ஆசிரியர் இளஞ்செழியனின் பள்ளி சிநேகிதர் கோயிலில் அவளை பார்த்து விட்டு தன் மகனுக்கு பெண் கேட்டு வருகிறார்.. தாய் மங்கை கோ தலை கால் புரியவில்லை..பெரிய இடம் மாப்பிளை நல்ல படிப்பு நல்ல சம்பாத்தியம்..

"ஏன் மலர் ஒரு மாதிரி இருக்கே..?" ரீனாவின் கேள்விக்கு உற்சாகம் இன்றி பதில் அளித்தாள் மலர்விழி

"ஒண்ணுமில்ல ரீனா ..மனசு ஏதோ மாரி இருக்கு.. இதெல்லாம் சரி வருமா .. அப்பா வின் ஸ்கூல் ப்ரெண்ட் ..பெரிய இடம் ..என் சுய மரியாதை போகாமல் வாழனும் னு நினைக்கிறேன்..".

ரீனா "அசடு எல்லாம் சரி வரும் ..நல்ல மனசுக்கு நல்லது தான் நடக்கும் நம்பு " சொல்லிய படியே இருவரும் வீடு நோக்கி வந்தே விட்டனர் ..

ரீனா அவளின் பக்கத்து வீட்டுத் தோழி.தோழிகள் இருவரும் சிறு வயது முதலே உற்ற சிநேகிதிகள் தன் தோழிக்கு எப்படியாவது இந்த இடம் வாய்த்திடனும் ரீனாவின் மனது எண்ணியது

தன் தோழியை வேண்டுதலை அறிந்தவளாக அவளை பார்த்து புன்முறுவலித்து
கை அசைத்து விட்டு வீடு நுழைய அவள் அண்ணன் இளங்கோ பேசுவது கேட்டது ..

"ஏன் பா கல்யாணத்துக்கு எவ்வளவு செலவு ஆகும் "...செழியன் சற்றே செருமிய படி பதில் அளித்தார்"எப்படியும் ஒரு 10 லட்சம் ஆகும் பா"அவங்க அந்தஸ்து கு தகுந்த மாதிரி கொஞ்சமாவது செய்யனும் ல"

"சரி பா நான் கம்பனி ல கொஞ்சம் லோன் புரோசெடு பண்றேன் ..எப்படியும் இந்த இடம் முடிச்ச ராளம்.. பயனை பத்தி விசாரிச்சுட்டேன் பா..ரொம்ப நல்ல மாதிரி சொல்றாங்க .. பார்க்க வும் நல்லா இருப்பாபுளயாம்.."

மலருக்கு வியப்பு ஆக இருந்தது ..இத்தன நாள் தன் தலையில் அடித்து ..வம்பு செய்து சண்டை இட்ட தன் அண்ணன் இவ்வளவு பொறுப்பு ஆனவன்? அழுகை வந்தது..

அன்று இரவு அம்மாவிடம் சாப்பிட பிடிக்கவில்லை என்று கூறி படுக்கையில் சாய்ந்தாள்.. உறக்கம் வரவில்லை.." கடவுளே நாளை அந்த மாபிள்ளைக்கு என்னை சுத்தமா பிடிக்க கூடாது .."

கிட்டதட்ட அதே வேண்டுதலை அவளை பெண் பார்க்க வர போகும் கார்த்திக் அதே இறைவனிடம் இடம் வேண்டி கொண்டு இருந்தான்..

."சத்தியமா அந்த பொண்ணுக்கு என்ன பிடிக்காது கூடாது கடவுளே"
இறைவன் தான் மனிதர்களை பார்த்து எத்தனை முறை நகைத்திருக்கக் கூடும்

ஆச்சரியங்களின் கருவறை காதல் அது அதிசயங்களை உருவாக்கவே உருவெடுத்தது போலும் அன்றைய பொழுது அழகாக விடிந்து ஆயிரம் திருப்பங்களை அவர்கள் இருவரின் வாழ்வில் விதைக்க பிறந்ததது..

கார்த்திக் எழுந்தவுடன் பல் துலக்கி விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தான்...அவனின் தாய் அன்னபூரணி சமைத்து கொண்டு இருந்தாள்..

."அம்மா உன் மிலிட்டரி இந்த ஆர்டர் அசைன்மென்ட் எல்லாம் வேலை ஓட நிறுதிக்க சொல்ல மாட்டியா..அதுவும் ரிட்டயர்டு ஆனதுக்கு அப்ரமும் ஏன் மா உயிர எடுக்கரார்???...

அன்னபூரணி முறைத்தாள்.."ஏன் டா தடி மாடு .. அப்பா னு சொல்ல மாட்டியா?"..
"மா என் செல்லம் இல்ல..எனக்கு இப்ப கல்யாணம் வேணாம் மா ..மிலிட்டரி கிட்ட நீய பேசு .ப்ளீஸ்."

"அப்பா சொன்னா சரியா தான் இருக்கும் .. நான் பேச மாட்டேன் டா .. உனக்கு ம் வயசு ஆகுது இல்ல டா"

..அதற்குள் உள்ளிருந்து கரிகாலன் சத்தமிட்டு கூப்பிட்டது ம் ..
,"இதோ வரேன் ங்க" என்ற படி ஓடினாள்..தன் தாய்க்கு 60 வயது தான அவனுக்கு வியப்பு ஆக இருந்தது

.."மிலிட்டரி ..."கோவத்தில் பல்லை கடித்தான் கார்த்திக்

கரிகாலன் retired மிலிட்டரி ஆபீஸர்..மிலிட்டரி கட்டுப்பாடு தான் எப்பொழுதும் வீட்டில்..மூன்று மகன்கள்..மூத்தவன் எழில் தணிக்கை அதிகாரி ..அவன் மனைவி ரூபா .. இரண்டாவது கலையரசன் .. பொதுப்பணித் துறையில் அரசு அதிகாரி. .மனைவி வீணா .. இரு மருமகள்கள் ...நான்கு பேரக் குழந்தைகள் என மிக அழகாக கட்டமைத்திருந்தார் அவர் முதுமையின் முதல் அத்தியாயத்தை


பணத்தை பார்த்து அல்ல குணத்தை பார்த்தே மருமகள்களை தேர்ந்து எடுத்து இருந்தார் .. இது வரை அவர் முடிவுகள் தப்பினது இல்லை.. எனவே அன்னபூரணி கு மட்டும் அல்ல அந்த குடும்பத்தில் யாருக்கும் அவரை எதிர்த்து பேச தைரியம் இருந்தது இல்லை. ..

மூன்றாவது மகன் கார்த்திக் ...ஜெனிடிக் இன்ஞினியரிங் முடித்து விட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருக்கிறான்.. ஆராய்ச்சி முடிவு வரும் வரை வேறு சிந்தனைக்கு அவனுக்கு விருப்பம் இல்லை...ஆனால் கரிகாலன் ஐ எதிர்த்து யார் போர் செய்வது ..

கார்த்திக் செய்வது அறியாது நிற்க சமையலறைக்குள் உள் நுழைந்தனர் அவன் அண்ணிகள்..அவன் அடுத்த காய் நகர்த்த ஆரம்பித்தான் ..

"அண்ணி ஸ். .என்னை காப்பாதுங்க. .."அவன் கை கூப்பி காதில் போட்டுக் கொள்ள அவர்கள் இருவரும் வாய் விட்டு சிரித்தனர்..

"என்ன கொழுந்தனாரே..வேண்டுதல் பலமா இருக்கு"

"அண்ணி ஸ் ..எனக்கு என் ரிசர்ச் முடிகணும்..அது என்னோட கனவு அண்ணி .. அதுக்குள்ள இந்த கல்யாணம் குழந்தை இன் சிக்கிட்டா..எல்லாம் பிசிபிசுத் போய்டும்".

அண்ணிகள் இருவரும் முறைக்கவும் " ஒகே ஒகே என் அண்ணிகள் எல்லாம் ஹார்லிக்ஸ் ...பூஸ்ட் ...பெண்கள் இந்நாட்டின் கண்கள் ...பட் எனக்கு இப்ப இந்த கல்யாணம் வேண்டாமே"

"எல்லாம் சரி கொழுந்தனாரே..பொண்ணு நல்ல அழகு னு கேள்வி பட்டோம் பார்த்த உடனே பல்டி அடிசுட மாட்டீங்க இல்ல.."

ரூபா கேட்க உரக்க சிரித்தான் கார்த்திக். .

."அண்ணி என் ரிசர்ச் விட அழகி யாரும் இல்லை எனக்கு "

இருவரும் யோசித்தனர்...
"சரி உங்களை நம்பி சிங்கத்தை கவிழ்கிறோம் "...

அன்று மாலை வந்தே விட்டது .. மலர்விழி யின் வீடு அமர்களப்பட்டது...

மலர் கண்ணாடி யில் பிம்பம் பார்த்தாள்..
"கடவுளே இன்னைக்கு ஏன் இவ்வளவு அழகாயி தெரிகிறேன்"..தன்னயே நொந்து கொண்டாள் மலர்

..ரீனா ஓடி வந்தாள் .."மாப்ள வீட்ல வந்துடாங்க"..மலருக் குள் ஏதோ பயம் உள் நுழைந்தது...

கார்த்திக் அந்த வீட்டை சுற்றி பார்த்தான் .. பளிச் என்று இருந்த அழகு ..எல்லாரையும் இளங்கோ வரவேற்று அழைத்து வந்தான்

..சம்பிரதாயங்கள் முடிந்து பெண்ணை அழைத்து வர சொன்னார்கள்...மலர் மனது முழுக்க வேண்டுதல் உடன் மிடறு விழுங்கிய படி காபி கொணர்ந்தாள்...

எதிலும் மனது செல்லாதவனாக கார்த்திக் கைபேசி ஐ நோண்டி கொண்டு இருந்தான்... பொறுமை இழந்து கரிகாலன் தொண்டை ஐ செரும மெல்ல தலை நிமிர்ந்தான்...அவன் பூமி ஒரு நிமிடம் நின்று சுழன்றது...

தொடரும்
 
நல்லா இருக்கு பதிவு
பொண்ணு பிடிச்சு இருக்குனு
சொல்வானா
 
Top