Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் 2.1

Advertisement

Nilaprakash

Member
Member
சூர்யா சிறிதேனும் உறங்கிக் கொள்ள நித்திரை தேவி ஒரு வழியாக இரக்கம் காட்டினாள்.அவன் கண்மூடி விழிக்கையில் அவனது அலைபேசி சப்தமிட்டது. " ஏண்டா ரெண்டு பேரும் இன்னும் ட்ரெயினிங் வரல " "..குரு....."அவனது குரலிருந்த உற்சாகம் அர்ஜூனை எழுப்பியது.இருவரும் அவசர அவசரமாக கிளம்பி அந்த பயிற்சி கூடத்திற்கு வந்தனர்.
அங்கே கருணாகரன் எனும் சிங்கம் தன் வயதிற்கு மீறிய உடற்பயிற்சியில் லயித்து இருந்தது‌.அனைவரும் ஓய்வுக்காக அமர்கையில் அர்ஜுன் கேட்டான் " அப்பரம் சிங்கம் நேத்து வீக் டேஸ் ல சுருதியாமே அம்மா சொன்னாங்க.. என்னாச்சு " அவனின் கேள்விக்கு அவன் தோளில் அடி வைக்க அர்ஜூன் வலியால் துடித்தது போல நடித்து சப்தமிட்டான் " பெருசு பார்த்து .... ரெண்டு தட்டுல உசிரு போயிரும் போல .. எனக்கு கல்யாணமும் ஆகல பெருசா எதையும் அனுபவிக்கல " என கண்ணடித்தான்.
" படவா ..இரு வரேன்" என்று அவனை முறைத்தப்படியே சூர்யாவை பார்த்து கேட்டார் " ஏண்டா வந்துட்டு சீக்கிரமே போய்டிங்களாம் ‌...அம்மா சொன்னா "
" அதுவா சிங்கம் அவன் ஒரு மோகினி பேயை பார்த்து பயந்துட்டான் ...." கொஞ்சம் இடைவெளி விட்டு தன் நண்பனின் முறைப்பை ஓரக்கண்ணால் இரசித்த படி " கனவுல " என்று முடித்தான்.
சூர்யா அவனை கண்களால் முறைத்தான் " அவன் கிடக்கிறான் குரு ..எப்ப பார்த்தாலும் லூசு மாதிரி ஏதாவது உளறிகிட்டு .."
சரி ரெண்டு பேரும் மதியம் சாப்பாட்டுக்கு வந்திருங்க ..உங்க அம்மா ஏதோ ஸ்பெஷலா செய்யராலாம் .. ரொம்ப நாள் உப்பு சப்பில்லாத சப்பாத்தி ஐ சாப்பிட்டு இளைச்சு போயிருக்கீங்களாம் " அவர் அவனுகளின் கட்டு மஸ்தான உடலை பார்த்து விட்டு " கண் தெரியாம என்னைக் கட்டி உங்களையும் வளர்க்கறா பாவம் " அவர் சொல்லவும் இளைஞர்கள் இருவரும் சிரித்தனர். அவர் கிளம்ப எத்தனிக்கவும் சூர்யா கேட்டான் " குரு ..யார் அந்த பொண்ணு புதுசா வீட்ல " அவளை பற்றிய அவனின் ஆவல் அதற்கு மேல் தாங்காது வெளி வந்தே விட்டது. கேள்வி என்னவோ மிக சிறிய கேள்வி தான் ஆனால் அதன் பதில் அவர்களின் வாழ்வை தலை கீழாக மாற்றக் கூடும் என்பதை அவர்கள் அப்பொழுது அறிந்திருக்க வாய்ப்பில்லை ஒரு வேளை அதை முன்கூட்டியே அறிந்திருந்தால் இன்று உயிருக்கு போராடும் தன் நண்பனை காப்பாற்ற கதறிக் கொண்டிருக்க மாட்டான் அர்ஜூன்.
மிலிட்டரி ஆப்ரேஷன் கேவில் குண்டுகள் துளையிட்டு சாவின் நுனியில் உயிர் மட்டுமே எஞ்சியிருந்த தன் நண்பனைக் கையில் ஏந்தி கதறினான் அர்ஜூன் " ஏண்டா..ஏன் இந்த பாதகி ஐ பார்த்த ...ஹே மலர்விழி " அவன் பற்களை கடித்தப்படி திரும்பிய திசையில் கருணாகரனின் அணைப்பில் அழுகை பீறிட சாய்ந்து சரிந்தாள் இக்கதையின் நாயகி மலர்விழி.
 
Nice story.
Aana ennathu ithu?no, no, no, ivalavu kutty ah oru epi.konjam readers um consider panungo authore.
நிச்சயமாக .. இன்று 2 , 3 ரெண்டையும் சேர்த்து பதிவிடுகிறேன் வாசகர்களின் எதிராபார்ப்பு புரிந்தது
Nice story.
Aana ennathu ithu?no, no, no, ivalavu kutty ah oru epi.konjam readers um consider panungo authore.
 
நிச்சயமாக .. இன்று 2 , 3 ரெண்டையும் சேர்த்து பதிவிடுகிறேன் வாசகர்களின் எதிராபார்ப்பு புரிந்தது
Tq for accepting my obligation dear.
 
Top