அத்தியாயம் 127

Advertisement

SHALU shalu

Well-known member
Member
ஐயர் உச்சரிக்கும் மந்திரங்களை வழிமொழியத் தொடங்கி விட்டான் ஸ்வரூபன்.

அந்தச் சமயத்தில், தன் தந்தையிடம் சென்ற காஷ்மீரனோ,”இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்மளோட செல்லக்குட்டிக்குக் கல்யாணம் ஆகப் போகுது ப்பா” என்று தன்னுடைய குரல் கரகரக்க கூறினான்.

அதைக் கேட்ட சந்திரதேவ்வும் கூட,”ஆமாம் டா. அவ நம்ம கூடக், கொஞ்ச நாள் தான், இருந்து இருக்கா. அப்படீன்னாலும் கூட, அவ நம்மளை விட்டுப் பிரியப் போகிறதை நினைச்சாலே கஷ்டமா இருக்கு ப்பா!” என்று தன் மகனுடைய பேச்சை ஆமோதித்தார்.

இவ்விருவருடைய நிலையை அறிந்து, அருகே சென்று ஆறுதல் சொன்னார் பிரியரஞ்சன்.

இதே நேரம்,”மஹா! மாப்பிள்ளையை மேடைக்கு அழைச்சாச்சு. நீ ருத்ராக்ஷியைத் தயாராக இருக்கச் சொல்லு” என்று மகளுக்கு அறிவுறுத்தினார் கனகரூபிணி.

இன்னும் சில நிமிடங்களில் தன்னை மணமேடைக்கு அழைத்துச் செல்லப் போகிறார்கள் என்பதை உணர்ந்த ருத்ராக்ஷியோ, உடனே ஒரு வாய்த் தண்ணீர்க் குடித்து ஆசுவாசப்படுத்திக் கொண்டாள்.

அதைப் பார்த்ததும்,”நீ ஒன்னும் போருக்கு எல்லாம் போகப் போறது இல்லைம்மா. ரிலாக்ஸ் ஆக இரு” என அவளுக்கு அறிவுரை வழங்கினாள் மஹாபத்ரா.

அதைக் கேட்டு மெலிதாகப் புன்னகைத்தவளோ,”நான் நர்வஸ் ஆகலை அண்ணி. கல்யாணம் முடிஞ்சதும், நிறைய சடங்கு, சம்பிரதாயங்கள் இருக்கும். அதுக்கப்புறம், பால், பழம் தான் சாப்பிடுவோம். தண்ணீர் குடிக்கிறதையே மறந்துருவேன். அதான், இப்போவே தேவையான அளவு குடிச்சிக்கிட்டேன்” எனப் பதிலளித்தாள் ருத்ராக்ஷி.

“ம்ம். அதுவும் சரி தான். கல்யாணம் முடிகிற வரைக்கும் எல்லாருமே பிஸியாக, டென்ஷன் ஆகத் தான் இருப்போம். ஆனால், சாப்பிட்டோமா, தண்ணீர் குடிச்சோமான்னு நமக்கே தெரியாமல் சுத்திக்கிட்டு இருப்போம். நீ ஒன்னும் கவலைப்படாதே! உனக்குப் பசிச்சா, தாகமாக இருந்தால் என்கிட்ட சொல்லிடு” என்று அவளுக்கு வலியுறுத்தி விட்டு, ஐயர் அழைக்கவும், தன் நாத்தனாரை மேடைக்குக் கூட்டிச் சென்றாள் காஷ்மீரனின் மனைவி.

மண்டபத்தில் இருந்த அனைவருடைய சலசலப்பையும் வைத்தே தன்னவளது வரவை அறிந்து கொண்டவனோ, ஆவலாய் நிமிர்ந்து பார்த்தான் ஸ்வரூபன்.

அங்கே, அழகுப் பதுமையவள் மெல்ல அசைந்து நடந்து வந்து கொண்டிருந்த அற்புதமான காட்சி, அவனுக்கு விருந்தாக கிடைத்தது.

அதைக் கண்டு களிப்புற்றவனோ, தன் புன்னகையை விரிவுபடுத்தினான் ஸ்வரூபன்.

அவனது முக பாவனைகளை அவதானித்துக் கொண்டே, தன்னுடைய இதழ் பிரித்துக் குறுநகை புரிந்து கொண்டே அவனருகே சென்றமர்ந்து,

“நீங்க முன்னாடியே என்னை ஃபோட்டோஸைப் பார்த்துட்டீங்க தானே? அப்பறமும் இந்தப் பார்வை எதுக்கு?” என்று அவன் புறம் திரும்பாமலேயே கேட்டவள், ஐயர் தன்னிடம் கொடுத்த மாலையைக் கழுத்தில் சூடிக் கொண்டாள் ருத்ராக்ஷி.

அதைக் கேட்டவனும் கூட,”ஆமாம். அது வெறும் ஃபோட்டோஸ் தான். எனக்கு உன்னை நேரில் பார்க்கனும்ன்ற ஆசையும் இருக்கும் தானே?” என அவளைப் பார்க்காமலேயே பதில் அளித்தான் ஸ்வரூபன்.

“ஓஹோ!” என்றவளை மெல்ல வெட்கம் ஆட்கொள்ள ஆரம்பிக்க, அவ்விணைகளின் பொருத்தத்தை அனைவரும் கண்ணாரக் கண்டு மகிழ்ந்தனர்.

“ம்மா! மஹா! நாத்தனார் முடிச்சை நீ போட்றியா?” என்று மாப்பிள்ளையின் தாய், தன்னிடம் கேட்டவுடன் ஸ்தம்பித்துப் போய் விட்டாள் மஹாபத்ரா.

“என்னம்மா? செய்றியா?” என அவளிடம் மீண்டும் வினவினார் கவிபாரதி.

“எனக்கு இதில் சம்மதம் தான் ம்மா. ஆனால், நான் இதைப் பண்றதால் பிரச்சினை வந்துடாதே?” என்று தயக்கத்துடன் கேட்டவளது, கன்னத்தை ஆதூரமாகத் தடவி விட்டு,

“இதிலென்ன பிரச்சினை வரப் போகுது ம்மா? நீயும் என் பொண்ணு மாதிரி தான். ஸ்வரூபனுக்குத் தங்கச்சி முறை தானே வருது! அப்பறம் என்ன?” என அவளுக்குப் புரிய வைத்தார் ஸ்வரூபனின் அன்னை.

“சரிங்க ம்மா” என்றவளுக்குச் சந்தோஷம் தாளவில்லை.

அவளிடம் கூறியது மட்டுமின்றி அங்கேயிருந்த மற்ற குடும்ப உறுப்பினர்களிடமும் இவ்விஷயத்தைப் பகிர்ந்து கொண்டார் கவிபாரதி.

அதைக் கேட்டவுடன் மஹாபத்ராவின் பெற்றோரான கனகரூபிணி மற்றும் பிரியரஞ்சனுக்கு அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

“இவ எங்களுக்கு ஒரே பொண்ணு. கூடப் பிறந்தவங்கன்னு யாருமில்லையே - ன்றது எங்களுக்கு எப்பவுமே ஒரு குறையாகத் தான் இருக்கும். அதை நினைச்சு நாங்க வருத்தப்படாத நாளே இல்லை ங்க. ஆனால், இப்போ நீங்க சொன்னதைக் கேட்டதும் எங்களுக்கு மனசுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு” என்று ஸ்வரூபனின் தாயிடம் தங்களது களிப்பை வெளிப்படுத்தினார்கள்.

மஹாபத்ராவை மேடைக்கு வருமாறு அழைத்து விட்டுச் சென்ற பிறகு, அவளோ, தன் கணவனிடம்,”என்னங்க! அவங்க சொன்னதைக் கேட்டீங்களா?” என்று குதூகலிப்புடன் வினவினாள்.

“கேட்டேன் ம்மா! அதை இன்னும் நல்லா நம்ம பிரைவேட் டைமில் பேசுவோம். இப்போ ஸ்டேஜூக்குப் போகலாம். வா” என மனைவியை அழைத்துக் கொண்டு மேடைக்குப் போனான் காஷ்மீரன்.

மங்கலநாணைக் கொண்டு போய் அனைவரிடமும் ஆசி வாங்கி வருமாறு மிருதுளாவை அனுப்பி வைத்தார்கள்.

அதைச் செவ்வனே செய்து முடித்து அனைவருக்கும் அட்சதையையும் கொடுத்து விட்டு வந்தார் மிருதுளா.

“கெட்டிமேளம்! கெட்டிமேளம்!” என்ற ஐயரின் உத்தரவின் பேரில்,

தன்னிடமிருந்த மங்கலநாணை ஆசையாக ஒரு தடவை பார்த்து ரசித்து விட்டு அதை ருத்ராக்ஷியின் கழுத்தில் பூட்டினான் ஸ்வரூபன்.

உடனே, ஒட்டுமொத்த மண்டபமும் தாங்கள் எதிர்பார்த்திருந்த அந்த தருணம் கண்ணுக்கு முன்னால் நிகழத் தொடங்கவும், தங்கள் கையிலிருந்த அட்சதையைத் தூவி ஆசி வழங்கத் துவங்கி விட்டார்கள்.

ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியின் குடும்பங்களும் தங்களுடைய கண்கள் ஆனந்தத்தில் கலங்கியதை உணர்ந்தனர்.

தாங்கள் இருவரும் திருமணப் பந்தத்தில் இணைந்ததை எண்ணி மன மகிழ்வுடன் அமர்ந்திருந்த ஸ்வரூபனும், ருத்ராக்ஷியும் ஒருவருக்கொருவர் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

“இப்போ நீங்க ரெண்டு பேரும் அக்னியைச் சுத்தி வலம் வாங்கோ!” என்கவும்,

உடனே ருத்ராக்ஷியின் சேலைத் தலைப்பையும், ஸ்வரூபனின் அங்கவஸ்திரத்தின் நுனியையும் சேர்த்து முடிச்சுப் போட்டு விட்ட மஹாபத்ராவோ, ஏதோ சாதனை செய்து விட்டதைப் போன்ற ஒரு முக பாவனையைக் காண்பிக்கவும், அதில் இதழ்களில் புன்சிரிப்பைத் தவழ விட்டான் காஷ்மீரன்.

அதன் பின்னர், அக்னியை வலம் வந்ததற்குப் பிறகு, மற்ற சடங்குகளையும் செய்து முடித்தார்கள்.

“ரிசப்ஷனுக்கு வேற டிரெஸ் மாத்திட்டு வரனும்” என்றதும், ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியை அவரவர் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

“மாப்பிள்ளை! கங்கிராட்ஸ்!” என்று கூறிப் புன்னகைத்தவனிடம்,

“தாங்க்ஸ் மச்சான்” என்றவனோ, மாற்று உடையை எடுக்கவும், அறையை விட்டு வெளியேறி விட்டான் காஷ்மீரன்.

”உனக்குச் சேலையைக் கட்டி விட பியூட்டீஷியனைக் கூப்பிடவா ம்மா?” என்றவளிடம்,

“வேண்டாம் அண்ணி. நானே சேலை கட்டிடுவேன்” என்று கூறியவளுக்குச் சின்னச் சின்ன உதவிகளைச் செய்து அவளைத் தயார்ப்படுத்தினாள் மஹாபத்ரா.

இந்தச் சமயத்தில் தான், பந்தியில் கவனம் செலுத்த வேண்டும் என்று அங்கே சென்றார் வித்யாதரன்.

சற்று நேரத்தில், மணமக்கள் மேடைக்கு வந்து அனைவருக்கும் காட்சி அளித்தனர்.

“ஃபோட்டோகிராஃபர்ஸ் ரெடியா ப்பா?” எனத் தன் மகனிடம் கேட்டார் சந்திரதேவ்.

“எஸ் ப்பா. ரெண்டு பேருமே கேமராவை வச்சிட்டுத் தயாரா இருக்காங்க. யாரையும் மிஸ் பண்ணி விடக் கூடாதுன்னு சொல்லி இருக்கேன்” என்றான் காஷ்மீரன்.

அதற்குப் பிறகு, முதலில் மாப்பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் தத்தமது குடும்பங்களுடன் தயாராகி விட்டனர்.

முதலில், ருத்ராக்ஷியின் தந்தை சந்திரதேவ்வும், ஸ்வரூபனின் அன்னையான கவிபாரதியும் மணமக்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

அதன் பின்னர், காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவும், அவர்களுக்கு அடுத்து, மஹாபத்ராவின் பெற்றோரும், வித்யாதரன், மிருதுளா மற்றும் அவர்களது பிள்ளைகளுடன் மேடைக்குப் போய்ப் புகைப்படம் எடுத்து முடித்ததும், மண்டபத்தில் இருந்த மற்றவர்களும் அதைப் பின்பற்றினர்.

நேரம் ஆக ஆக, மணமக்களும், அவர்களது வீட்டாரும் மிகவும் பசியோடு இருந்ததால் ஸ்வரூபன் மற்றும் ருத்ராக்ஷியை உணவுண்ண அமரச் செய்து விட்டுத் தாங்களும் சாப்பிட்டு முடித்தார்கள்.

ஒரு சிலர் உணவருந்தி விட்டுத் தான், புகைப்படங்கள் எடுத்ததால், அது முடிந்தக் கையோடு அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினர் விருந்தாளிகள்.

மண்டபத்தைக் காலி செய்யும் நேரமும் வந்து விட,

“மிருதுளா! நானும், நீயும் முதல்ல வீட்டுக்குப் போய் ஆரத்திக் கரைச்சி வச்சிடலாமா?” என்ற கவிபாரதியிடம்,

“சரிங்க ம்மா”

எனவே, முதலில் மணமக்கள் இருவரும், மணப்பெண்ணின் பிறந்தகத்திற்குச் செல்ல வேண்டும் என்பதால், ருத்ராக்ஷியின் வீட்டிற்குப் போனார்கள் கவிபாரதி, மிருதுளா மற்றும் அவரது குடும்பத்தினர்.

வீட்டிற்கு வந்தவர்களோ, துரிதமாக ஆரத்தியைக் கரைத்து வைத்துக் கொண்டனர்.

இங்கு மண்டபத்திலோ, அனைத்து பொறுப்புகளைப், பிரியரஞ்சன் மற்றும் கனகரூபினியும், மணமக்களின் தேவைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை காஷ்மீரன் மற்றும் மஹாபத்ராவும் எடுத்துக் கொண்டனர்.


- தொடரும்
 

Advertisement

Back
Top