Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் - 12

Dhanuja

Well-known member
Member
அத்தியாயம் – 12


கையில் போனை வைத்துக் கொண்டு அதையே முறைத்து முறைத்து பார்த்துக் கொண்டு இருந்த மாலாவின் தோள் தொட்டு உலுக்கினாள் வஞ்சி “ஏக்காவ்வ்..............”


“ப்பா ஏண்டி காதுக்கிட்ட வந்து இந்தக் கத்து கத்துற எரும மாடே…..”


“எம்புட்டு நேரம் கத்துறேன் நீ அந்தப் போனையே முறைச்சுக்கிட்டு இருக்க போக்கா நீ வர வர ரொம்பத் திட்டுற”“திட்டறதோட விடுறேனு சந்தோச படு கொள்ளாமா”


“நான் என்னத்த பண்ணுனேன்? அவுக பண்ணதுக்கு நான் என்ன செய்ய?”


“நல்ல பேசு வாய் கிழிய ஆனா நான் சொல்லுறதை மட்டும் கேட்டுறத”நேற்று முன் தினம் வஞ்சி கொண்டான் தனது திருமணம் விடயத்தைப் பற்றிக் கபிலனிடம் பேசி சொல்லி இருந்தான்.தான் பேசினால் என்ன நடக்கும் என்பதை அறிந்த மாலா வஞ்சியிடம் சென்று பேச சொல்ல முடியவே முடியாது என்று மறுத்து விட்டாள் அதற்குத் தான் மாலா திட்டுவது.


“அக்கா நீங்களே இம்புட்டுத் தூரம் பயந்துக்கும் போது நான் எப்படிக்கா பேசுறது” என்று முகம் சுருக்கி பாவம் போல் பேசியவளை அதற்கு மேல் கடிந்து கொள்ள மனம் வராமல் “சரி போ!... நானே பேசுறேன்” என்றவள் மீண்டும் போனை முறைக்கமெதுவாக மாலாவின் தோளை சுரண்டியவள் “அக்கா அவுக நல்லவங்க தானமே மது சொல்லுச்சு”


“ஆமா ரொம்ப நல்லவரு …அவ அண்ணன்ல அப்படி தான் சொல்லுவா….சரி நீ சொல்லு பெரிய தம்பி எப்படி?”“ஆத்தி சரியான முசுடு,அராத்து............. “இன்னும் சொல்லு கொண்டே போனவளை தடுத்த மாலா “போதும்… போதும்… நிறுத்து பெரிய தம்பிய விடப் பெரிய அராத்து இவரு நீ இன்னும் நேருல பார்களைத் தானே? இல்லை என்பது தலையை ஆட்ட“நேருல வருவார் பார் அப்புறம் பேசு” மேலும் எதுவோ பேச போகப் பானு அம்மா.... என்று ஒரே அலறல் அனைத்தையும் மறந்து பறந்து விட்டாள் வஞ்சி.போகும் வஞ்சியைப் பார்த்துக் கொண்டே பெருமூச்சுவிட்டவள் இல்லாத தைரியத்தை இழுத்துப் பிடித்துக் கபிலனுக்கு அழைத்துவிட்டாள் வேறு வழி பேசி ஆக வேண்டிய சூழல். மனதில் வஞ்சியின் வாழ்வு மட்டுமே எண்ணமாகக் கொண்டு காரியத்தில் இறங்கி விட்டாள்.


மறுமுனையில் போன் எடுக்கப்பட்டு “சொல்லு” என்க மாலாவிற்குத் தான் பேச்சே வரவில்லை ஓர் இரு நிமிடங்கள் பொறுத்து பார்த்த கபிலன் “ஏய்!.. பேசுறியா வைக்கவாடி” என்று உறும


“அது... அது... அது வந்துங்க.....”


“எது வந்து”


“அது...”


“என்ன போன் பண்ணி லந்து பண்ணுறியா” அவனது கோபத்தில் தயக்கத்தைத் தள்ளி வைத்து விட்டு


“நல்ல இருக்கீங்களா”


“எனக்கு என்ன குறை ரொம்ப நல்ல இருக்கேன்” (அந்த குறையில் சற்று அழுத்தம் கூடுதல் தான் போலும் ) நீ எதுக்குப் போன் பண்ணுன அதைச் சொல்லு”


“அது... என்கூட ஒரு பொண்ணு இருக்கா பெயர் வஞ்சி எங்க அக்கா ஊருல இருந்து பொழைக்க வந்தா இங்க நம்ப வீட்டுக்கு வேலைக்குச் சேர்த்து விட்டேன்...”.


“ஹ்ம்ம்.... மேல சொல்லு”


“இப்போ வஞ்சி தம்பி அந்தப் பொண்ண கல்யாணம் பண்ணிக்கக் கேக்குது நீங்க தானே இந்த வீட்டுக்கு பெரியவர் அதான் உங்கள கேட்கலாம்”


“அடேயப்பா... என்ன மதிச்சு நீயா போன் போட்டு கேட்குற இதை நான் நம்பணுமா” ஐயோ!... என்று இருந்தது மாலாவிற்கு இவர் நான் பேசினால் கிழித்துத் தோரணம் காட்டாமல் விட்டமாட்டார் என்று தான் பயந்து பின் வாங்கியது ஆனால்... அவள் எண்ணத்தை வலுப்பது போல்“அவனவன் இரண்டு மூணு கல்யாணம் பண்ணுறான் இங்க நாற்பது வயசாகுது ஒன்னுக்கு வழியில்ல என்னத்த சொல்ல”


“யாரு பண்ண வேணான்னு சொன்னது” என்று மூணு முணுக்க“ஏண்டி பேச மாட்ட என் இளமை போச்சு… வாழ்கை போச்சு… எல்லாம் உன்னால இதுல பேச்சு வேற” அவனது குற்றச்சாட்டில் கோபம் பொங்க “உங்கள யாரு பண்ண வேணான்னு சொன்னது”


“ஏன்? நீ தான்”“ப்ச்… நான் சரினு இரண்டு வருசத்துக்கு முன்னாடி வந்து நின்னேன் நீங்க தான் போடின்னு சொல்லிடீங்க”


“ஆமாடி நாப்பது வயசுல நீ என்ன கல்யாணம் பண்ணிக்குரேனு வந்து நிற்ப நான் உடனே வாடி தங்கமே பண்ணிக்கணுமா இன்னும் இருபது வருஷம் கழுச்சுப் பண்ணிக்கலாம் அறுபது என்ன சொல்லுற” அவனது நக்கல்,கோபம் இயலாமை அனைத்தும் புரிந்தாலும் அழுகையாக வந்தது


“கபி....” அவளது உரிமையான அழைப்பு இதத்தை கொடுக்க


அவனும் மென்மையாக “சொல்லு....” என்றான் அன்றைய நாட்களின் நினைவு இருவரையும் தீண்டி செல்ல சுகமாகத் கரைந்தனர்.


மீண்டும் “கபி” என்றவள் அதற்கு மேல் முடியாமல் கதறி அழுக அழைப்பை துண்டித்து விட்டான். இருவரின் இழப்பும் சரிசமம் என்பதால் ‘உன்னால் தான்’ என்று இருவரும் ரணத்தைக் கீறி விட்டு கொண்டனர் அதில் கபிலனின் பங்கு சற்று கூடுதல் போலும்.


போனை வைத்தவள் நேராகத் துளசி அறைக்குள் நுழைந்து கதவை அடைத்து கொண்டாள் கொஞ்சம் மனம் விட்டு கத்தி அழுக வேண்டும் போல் இருந்தது துளசி படுக்கையின் அருகே உள்ள நாற்காலியில் அமர்ந்து அப்படி ஒரு அழுகை பெண்.


துளசி மௌனமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள் ஆடி கொண்டே இருக்கும் தனது கையைக் கொண்டு மாலாவை சமாதானம் செய்யப் போராடியது அந்தப் பேதை மனம் .ஆ... மா,,, லா.... என்று ஒலியெழுப்ப அப்போதுதான் சற்று தணிந்தாள்


அழுகையை நிறுத்த முடிந்தாலும் கண்ணில் இருந்து நீர் வடிந்த வண்ணமே இருக்கத் துளசி தன் கை கொண்டு அவளது கண்ணீர் துடைத்து விட மீண்டும் அழுகை வரும் போல் இருந்தது.


என்ன என்று புருவத்தை உயர்த்தித் துளசி கேட்க அவளிடம் மறைக்காமல் சொன்னால் ஏனென்றால் எது செய்தாலும் அவள் அண்ணன்கள் இவளிடம் சொல்லிவிட்டே செய்வார்கள் கபி தினமும் ஒரு மணி நேரம் இரவு உரையாடுவான் யார் கருத்தும் கவராமல்.


“உங்க கபி அண்ணன் ரொம்பத் திட்டுறாரு வரட்டும் அடிச்சு மண்டையை உடைக்குறேன்”தனது நாக்கை மடக்கி பத்திரம் காட்டினாள் துளசி


“ஓ!.. உங்க அண்ணன் அடிச்ச நீ அப்பிடியா மாலா பொய் கோபம் கொண்டு அதுவும் சிரித்துக் கொண்டே ஆமாம்” என்று தலையை ஆட்டியது வலிக்காமல் அவளது கன்னம் கிள்ளி“குடும்பமே பெரிய சண்டியரோ எல்லாத்தையும் ஆட்டி படைக்க இருடி வரேன்”


கண் மூடி அதற்கும் துளசி பதிலடி கொடுக்கச் சஞ்சலம் கொண்ட மனம் துளசியின் சைகையில் சற்றுத் தெளிந்தது.மாயம் செய்யும் அந்தத் தேவதை பெண்ணின் நெற்றியில் முத்தமிட்டு அவளை அனைத்து கொண்டாள் மாலா இனி என் குடும்பம் என்ற எண்ணம் வலு பெற்றது.


ஆம் துணிந்து விட்டால் மாலா வாழ்க்கையைக் கபிலனோடு வாழ்ந்து பார்க்க என்ன பேசினாலும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று முடிவோடு.யார் பேசினால் என்ன… தான் நடுத் தெருவில் அன்று நின்ற பொது யார் வந்தார் வஞ்சியால் தான் இந்த நிலைமை என்று சூழ்நிலை அமைந்தாலும் ஒருவரும் தன்னைக் காக்க வரவில்லையேதனக்கே இப்படி ஓர் நிலை ஏற்பட்டால்?....... அன்று கபிலன் சொன்னது எத்தகைய உண்மை இதோ இன்றோடு ஒரு வாரம் முடிந்து விட்டது இங்கு வந்து. எப்படியும் இங்கு நடந்தவை அனைத்தும் செய்தியாகத் தனது உடன்பிறப்புகளுக்குச் சென்று இருக்கும்


அனைத்தும் அறிந்து அவர்கள் என் நிலையை என்ன என்று அறிய விரும்பாமல் இருப்பது அத்தனை வலியை கொடுத்தது.திருமணம் முடிந்தால் உறவுகள் சற்றுத் தூரம் தான் அவரவர் குடும்பம் வேலை,வாழ்கை என்று அடுத்தவரை யோசிக்க விடாமல் காலம் ஓடும் இது வழமை என்றாலும்.


தன்னை வாழ வைத்தவளையே மறக்க வைக்கும் காலத்தை என்ன சொல்ல.தன் அக்கா… உடன் பிறந்தவள்… எத்தனை நாள் தூக்கமின்றி வேலை செய்து தங்களைக் காப்பாற்றி இருப்பாள்.அரை வயறு உண்டு தங்களுக்கு உயிர் கொடுத்தவள் அல்லவா அவளை மறக்கலாமா?.....


இன்னும் மனம் தான் இழந்தவையை எண்ணி ஓலம் மிட்டு அழுக துடிக்க நினையாதே மனமே என்று அதற்குக் கட்டளையிட்டு அடக்கிவிட்டு நிமிர்ந்தவள் துளசி தன்னையே பார்த்துக் கொண்டு இருப்பதைப் பார்த்து சிறு புன்னகை சிந்தி அவள் காதோரம் சென்று “உங்க அண்ணாவை கல்யாணம் பண்ணிக்கவா” என்க


அவளோ சந்தோசம் மிகுதியில் ஒரே கூச்சல் அவள் சத்தம் வெளியில் உள்ளவர்களை அழைக்க ஐயோ!.... என்று துளசியை அடக்கிய மாலா


“என்ன மாட்டி விட்டுறாத துளசி உங்க அண்ணன் வரட்டும் நீ அவர்கிட்ட சொல்லு சரியா”


அதுவும் பெரிய மனுஷியாகப் பாவனைச் செய்து கொண்டு உதட்டை சுளித்து அலட்சியமாகச் “சரியென்று ஆட்ட” அவள் கன்னத்தில் இடித்தவள் “ரொம்பத் தான்” என்று சிரித்தாள் அதுவும் சிரித்தது கிள்ளையாக.பிள்ளை சிரிப்பில் இறைவனை காணலாம் என்பது எத்தகைய உண்மை என்பதை இன்று கண்டு கொண்டாள் மாலா.இச்சிரிப்பை காலமும் கடவுளும் எத்தகைய வஞ்சகம் செய்ய போகிறார்கள் என்பதனை அறியாமல் அந்த பேதையின் சிரிப்பை ரசித்து பார்த்திருந்தாள்.
 
saroja

Well-known member
Member
நல்லா இருக்கு பதிவு
ஏன் இப்படி இந்த குடும்பத்தில்
எல்லாருமே கஷ்டப்படறாங்கா
இன்னும் என்ன கஷ்டம்
வருமோ பாவம்
 
Dhanuja

Well-known member
Member
நல்லா இருக்கு பதிவு
ஏன் இப்படி இந்த குடும்பத்தில்
எல்லாருமே கஷ்டப்படறாங்கா
இன்னும் என்ன கஷ்டம்
வருமோ பாவம்
Thanks ma 😌
 
Top