Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் – 5

Advertisement

Dhanuja

Well-known member
Member
அத்தியாயம் – 5
வஞ்சி அடித்த அடியில் மண்டை உடைந்து ஐந்திற்கும் மேற்பட்ட தையிலிட்டு படுக்க வைக்கப் பட்டிருந்தான் வஞ்சிக்கொண்டான்.மாலா தடுப்பதற்குள் அவனது மண்டையை நன்கு பதம் பார்த்திருந்தாள் வஞ்சி

வஞ்சி அவனைத் தவறாக எண்ணியது தப்பில்லை ஏனென்றால் அவன் யார் என்று தெரியாது அவனைப் பற்றிய தகவல் எதுவும் சொல்ல படவில்லை அதற்கு அவசியமும் இல்லை என்பது மாலாவின் கருத்து.

மாலா பெரியவர் என்று விழித்ததும் எதோ மதுவின் அப்பா என்றே எண்ணி இருந்தாள்.அதனால் வந்த வினை தான் ….. அது மட்டுமா பார்க்க வஞ்சி கொண்டான் ஏதோ பஞ்சத்தில் அடிபட்டவன் போல் இருந்தான் மழுக்கப் படாத தாடியும், மீசையும், காதில் சிறு கடுக்கனுமாக அழுக்கான உடை அணிந்து இருந்தவனைப் பார்த்து அவள் சந்தேகம் கொண்டது தப்பில்லை தான்….

**********************
மாலாவின் வீட்டில் தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருந்தாள் வஞ்சி சிறியவளை ஏந்தியவாரே முறைத்துக் கொண்டு இருந்தாள் மாலா மாலாவை பார்ப்பதும் பின் குனிந்து கொள்வதுமாக இருந்தவளை “சூதனமா இருக்க வேண்டியது தான் அதுக்குன்னு இம்புட்டுச் சூதானம் ஆகாதுடிம்மா” மாலா அவளை வார பாவம் போல் பார்த்த வஞ்சி

“ஐயோ!.... அக்கா நான் என்னத்த கண்டேன் நீங்க அவுங்கள பத்தி ஒண்ணுமே சொல்லல துளசி பக்கத்துல பார்க்கவும் கையும்,ஓடல காலும் ஓடல அதேன்”

“அடி கூறுகெட்டவளே உடையவன் வீட்டுல இருக்கும் பொது யார் தைரியமா வீட்டுக்குள்ள வருவா? சரசம்மா இருக்கு, மது இருக்கா அதெல்லாம் யோசிக்க மாட்டிய நீ”

“அக்கா அவரைப் பார்த்தா அந்த வீட்டு ஆளு மாதிரி தெரியல நான் என்ன பண்ணட்டும் ஆளு ஒரு கோலம், தலை ஒரு கோலமா இருந்தா” வாஞ்சியின் பதிலில் மீண்டும் மாலா முறைக்கத் தலையைக் குனிந்து கொண்டாள்

“நல்லா வக்கணையா பேசு ஒருத்தன் மண்டைய உடைச்சு புட்டு வந்து இரண்டு நாள் ஆகுது பிள்ளைங்க என்ன பண்ணுதுனு தெரியல உன்ன நம்பி தானே பிள்ளைங்க இருக்கு போகலானு யோசுச்சா உடையவன் தம்பி கிட்ட சொல்லனுமா வேணாமா? இணைக்காவது வேலைக்குப் போவியா என்ன”

“போகப் பயமா இருக்குக்கா”

“இது என்ன சின்னப் பிள்ளையாட்டம் உடையவன் தம்பிகிட்ட எல்லாம் பேசிட்டேன் வஞ்சி கொண்டான் தம்பியே விடுடானு சொல்லிடுச்சாம் பிறகு என்ன கிளம்பு.நீ இல்லாம பானு சரியா சாப்பிடாம ஒரே அடம் பண்ணுதாம்,

அப்பவே சொன்னேன் வேலை மட்டும் தான் உன் குறி கொஞ்சம் விலகி இருன்னு கேட்டியா இரண்டு நாள் பழக்கத்துல பால் சப்ப கொடுத்து பழக்கி வச்சு இருக்க அந்த நினைவுல இரவைக்கு நீ இல்லனதும் ஏங்கி போய் இருக்கு”

அவரது பேச்சில் கண்ணில் நீர் பெறுக “நான் வேணுன்னு செயலாக்கா வயசு வாரிய பெண் பிள்ளைகள் இருக்கு அதான் கொஞ்சம் இளகி கொடுத்தேன் பாவம் அதுங்க பொம்பள இல்லாத வீடு வேற நான் என்ன செய்யட்டும் சொல்லுங்க”

“எனக்கு எல்லாம் புரியுது வஞ்சி ஆனா எல்லாரும் ஒரே மாதிரி யோசிக்க மாட்டாங்க இப்போ சொன்ன பாரு பொம்பள இல்லாத வீடுன்னு. அது தான் இங்க பிரச்சனை நீ என்ன நல்லது பண்ணாலும் அது பார்வைக்குத் தப்பாதான் தெரியும்,

சரி விடு இனி பேசி ஒன்னும் ஆகப் போறதில்லை சீக்கரம் கிளம்பி போயிட்டு வா குட்டி என்கிட்ட இருக்கட்டும்” என்றவர் குழந்தையைத் துளியில் போட்டு ஆட்ட வஞ்சி கிளம்பி உடையவன் வீட்டுக்கு சென்றாள்.
*********************************
வீடு வரைக்கும் விரைந்து வந்தவள் வீட்டுக்குள் நுழைய பயமாக இருந்தது.தன்னை சமாளித்துக் கொண்டு உள்ளே செல்ல துளசியின் ஓசை மட்டும் கேட்டது அக்....கா உ...யூ ....... என்று கத்தி மிழற்றிக் கொண்டு இருந்தாள் அவளது குரல் கேட்டு ஓடி சென்று பார்க்க அங்கே மலம் கழித்துக் கை, கால்கள் என்று இடுப்பு வரை உலப்பி வைத்து விட்டு வஞ்சியைப் பாவம் போல் பார்க்க

அவளது பாவனை நெஞ்சை அறுக்க விரைந்து அவளிடம் சென்றவள் அவளது முகத்தை ஏந்தி ரொம்ப நேரம் இப்படி இருக்கியா பாப்பா?… கஷ்டமா இருக்கா?…. யாருமில்லையா?... இருசாமி தண்ணி வச்சுட்டு வரேன்” என்றவளுக்குக் கண்ணில் குருதி தான்.எத்தனை கனமான சூழ்நிலை இது பதின் வயது பெண் கை கால் செயலற்று பேச முடியாமல் இருக்கும் பெண் தனது உடல் உபாதை கூடச் சொல்ல முடியாத நிலை ஓவென்று அழுக வேண்டும் போல் இருந்தது வஞ்சிக்கு.

துளசியின் நிலையை எண்ணும் பொதுத் தான் பட்ட துன்பம் எல்லாம் சிறு துகளாகத் தான் தெரிந்தது.அழுதுக் கொண்டே சுடு நீர் வைத்து எடுத்து வந்தவள் சேலையை இடுப்பில் சொருகி கொண்டு அனைத்தையும் எடுத்து போட்டு சின்னப் பருத்தி துணியை வைத்து தொடைத்துச் சுத்தம் செய்ய.

வாடை குடலை பிராட்டியது சிறு பிள்ளையென்றாலும் வஞ்சியின் முன் தன்னை ஒப்பு கொடுக்க முடியவில்லை.காலை இறுக்க மூடி கொண்டாள் அதனைப் பார்த்த வஞ்சி “பாப்பா நான் தானே கால ஒழுங்கா வைங்க கொஞ்ச நேரம்” என்றவள் பேச்சு கொடுத்துக் கொண்டே அனைத்தையும் சுத்தம் செய்து

துளசிக்கு வாசனை கொண்ட பவுடர் போட்டு துணியை மாற்றி விட்டு செல்ல அவளது செயலை கண்டவாறு நின்று கொண்டு இருந்தான் வஞ்சிக்கொண்டான் அவனைப் பார்த்ததும் உதறல் எடுத்த உடம்பை கட்டு படுத்தி நின்று கொண்டு இருந்தாள் வஞ்சி
அவனது அசையாத பார்வையைப் பார்த்தவள் தன்னைச் சமாளித்துக் கொண்டு “மனுச்சுக்கிடுங்க சார் நீங்க துளசி பாப்பா அண்ணன்னு தெரியாது நான் வேலைக்கு வந்து இரண்டு வாரம் தானுங்க ஆகுது அதேன் யாருனு தெரியாம பண்ணிட்டேன்” என்றவள் கை கூப்ப

அவளைப் பார்த்தவாறே உள்ளே வந்தவன் அவளிடம் நெருங்கி வர பயந்து கண்களை இறுக்க மூடி கொண்டாள்.அவனது வசம் நாசியின் உச்சம் தொட்டு அவனது நெருக்கத்தை உணர்த்த உடலில் வியர்வை ஆறாகப் பெருகியது.

ஒரு நொடி அவளை நன்கு பார்த்தவன் துளசியிடம் சென்று அவளது கை வருட….அவளோ தனது மடியை காட்டி படுத்துக்கொள்ள என்பது போல் சொல்ல
அன்று போலவே இடுப்பில் தலை வைத்து படுத்துக் கொண்டான் கையை ஆட்டி ஆட்டி அவன் தலையைக் கொதி கொடுத்தாள் துளசி.பயத்தில் கண்களை மூடி நின்ற வஞ்சியோ சிறுது நேரம் சென்று கண் விழிக்க அவன் துளசியுடன் படுத்திருப்பது தெரியவும் தன்னைச் சமாளித்துக் கொண்டவள் வெளியில் சென்று விட்டாள் ஓட்டமாக.

நெஞ்சில் கை வைத்துக் கொண்டு நின்றவள் நிதானம் கொள்ளச் சில நொடிகள் பிடித்தது “ஆத்தி என்ன இவரு இந்தப் பார்வை பார்க்குறாரு” என்றவள் மேலும் சில நொடிகள் கடந்து அடுக்கலைக்குள் நுழைந்தாள்

பானு நன்கு உறங்கி கொண்டு இருப்பதால் மேல் வேலை பார்க்க சென்று விட்டாள் சரசு இன்று விடுமுறை போலும் மதிய உணவென்று எதுவுமில்லை உடனே பொறுப்பைக் கையில் எடுத்தவள் பானுவுக்குப் பருப்பு சோறு வைத்து விட்டு,ஒரே தக்காளி சாதம் செய்து ,உருளை பொரித்துச் சிறிதளவு தயிர் சாதம் செய்து கொண்டாள்.

சாப்பாடு செய்தால் நேரம் பிடிக்கும் இப்பவே மணி ஒன்றை நெருங்க பானு முழிப்பதற்குள் அனைத்தையும் செய்தவள்.துளசிக்கு ஊட்டி விடச் சாதம் எடுத்துக் கொண்டு வர வஞ்சிகொண்டான் துளசியின் கை பிடித்து அமர்ந்திருந்தான்.
தயங்கியவாறே துளசி சாப்பாடு என்று சொல்ல தலையை நிமிர்ந்து பார்த்தவன் கையை மட்டும் நீட்டினான்

“அது.. அது .. துளசிக்கு” என்றதும் அவளை ஒரு பார்வை பார்க்க அதில் தானாகக் கிண்ணத்தை அவன் கையில் கொடுத்துவிட்டு என்ன செய்யேன்று நிற்க

“துளசி அக்....கா...” என்று அழைக்க

“என்னடா” என்றவளிடம் கண் காட்டி ஊ....... என்க அவளது தாடை பற்றி அண்ணா ஊட்டணுமா அப்போதான் துளசி சாப்புடுவீங்களா.. சாப்புடுங்க சாப்புடுங்க….” என்றவள் வஞ்சிக்கொண்டனை தயங்கி பார்த்தவாறே “பாப்பாக்கு தண்ணி அங்கன வச்சு இருக்கேன் எடுத்துக்கோங்க” என்றவள் அவனைப் பார்க்க

தலையை ஆட்டினான் சரியென்பது போல் துளசியைத் தலையணை வைத்து அமர வைத்தவன் அவளுக்கு ஊட்ட ஆரம்பிக்க அவனது பொறுப்பான செயலை ஆச்சிரியமாகப் பார்த்து நின்றவளை கலைத்தது பானுவின் அழு குரல் உடனே ஓடி சென்றவள் பானுவை தூக்க

தூக்கம் இன்னும் தெளியாமல் ஒரே அழுகை பானு குட்டி “இங்கன பாருங்க வஞ்சியம்மா வந்துருக்கேன்” என்க ஒரு நொடி அழுகையை நிறுத்தி அவளைப் பார்த்து மீண்டும் கத்தியது.கை,கால்களை உதைத்து சகத்தியவளை கீழே இறக்கி விட்டாள் அதற்கும் என்னை விடாதே என்பது போல் அவள் முந்தியை இழுத்து ஒரே அழுகை

“என்னடா குட்டி எதுக்கு அழுகை குருவி பார்க்கலாமா தோட்டத்துக்குப் போகலாமா” என்று வித விதமாகச் சமாதானம் செய்ய ஒன்றுக்கும் அசையவில்லை சின்னது.வஞ்சி பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் தனது குரலை உயர்த்தி கொண்டே அலறியது

“பானு குட்டி என்னதான் வேணும் எதுக்கு அழுகுறீங்க நீங்க அழுதா நானும் அழுவேன்” என்றவள் விளையாட்டாக “அம்மா” என்று அழுக மீண்டும் ஒரு நொடி தனது கதறலை நிறுத்தி வஞ்சியை உத்து பார்த்தவிட்டு அடுத்த நொடி ஒரே கத்து பொறுமை இழந்த வஞ்சி

“அடியேய்!.... எதுக்குடி என் மூஞ்சிய பார்த்து பார்த்து அழகுற அம்புட்டு மோசமா இருக்கேனா” என்று குழந்தையிடம் நியாயம் பேச.அப்போதுதான் சாப்பிட வந்த உடையவன் கண்ணில் இருவரும் பட்டனர் என்ன தான் செய்கிறாள் என்றவன் காதில் வஞ்சி பேசியது விழ சத்தமாகச் சிரித்துவிட்டான்.

“என்னங்க வஞ்சி பானு கூட மல்லுக்கட்டிக்கிட்டு இருக்கீங்க”

“ஐயோ நம்ம பேசுனது கேட்டுட்டார் போலவே” என்றவள் அசடு வலிந்துவாரே “அதுங்க தூங்கி முழுச்சதுல இருந்து ஒரே அழுகை அதான்”

“ஏன்?” என்றவன் பானுவை கை நீட்டி அழைக்க அது வஞ்சியின் தோளில் முகம் புதைந்து அவளது மாராப்பை ஒரு கை கொண்டு விலக்க அப்போதுதான் பொறித் தட்டியது வஞ்சிக்கு உடனே குழந்தையைத் தூக்கி கொண்டு மது அறைக்குள் ஓட
எதிர்பாரா நேரத்தில் அவள் ஓடவும் என்னவோ ஏதோ என்று உடையவனும் ஓட அங்கே கண்ட காட்சியில் திரும்பி நின்று கொண்டான் உடையவன்.துளசிக்கு உணவை கொடுத்து விட்டு வந்தவன் உடையவன் ஓடுவதைப் பார்த்து அவனும் விரைந்து வந்தான்.

உடையவன் திரும்பி கொள்வதைப் பார்த்தவன் “அப்படி என்ன” என்ற எண்ணத்தோடு எட்டி பார்க்க அங்கே தனது மகள் வஞ்சியிடம் அமுதுண்ண அவர்களையே வெறித்துவாறு நின்று விட்டான்.

உடையவன் அவனது நிலை கண்டு எதுவும் சொல்லாமல் சென்று விட்டான் மனதில் பல குழப்பம் வஞ்சியை எண்ணி.வஞ்சி கொண்டானோ தன்னிலையில் இல்லை சில ஆண்டுகள் கழித்துக் கண்ணில் ஈரம் பூக்க தான் பெற்ற பிள்ளையை வைத்தக் கண் வாங்காமல் பார்க்க

தனது தந்தையின் வரவை உணர்ந்த பானுவோ தன்னை மூடி இருந்த முந்தியை விலக்கி எடுத்து நான்கு பற்கள் தெரிய உண்ட அமுதோடு சிரித்து வைக்க அதை பார்த்த வஞ்சி கொண்டான் அப்படியே சரிந்து அமர்ந்து விட்டான். அவனை அங்கு எதிர் பார்க்காத வஞ்சியோ பதறி எழுந்து திரும்பி கொண்டாள்.


 
Top