Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் – 4

Advertisement

Dhanuja

Well-known member
Member
அத்தியாயம் – 4

வஞ்சி அந்த வீட்டில் வேலை துவங்கி சரியாகப் பத்து நாட்கள் கடந்து விட்டது.சரசுவை விட அவ்வீட்டை நன்கு அறிந்திருந்தாள் உயிருள்ள ஆட்கள் தொடங்கி உயிரற்ற பொருட்கள் வரை அத்துப்படி யார்யாருக்கு என்ன பிடிக்கும் எப்படிப் பேசினால் சரிவரும் என்பதை கண்டு கொண்டு நடந்தாள்.

மதுவின் வயதுக்குத் தக்க பேசி அவளது வழமை வேலையைச் சரிவரச் செய்யச் சொல்லி பார்த்து கொண்டாள்.மது காலேஜ் படித்தாலும் படிப்பில் உள்ள கருத்து உடுக்கும் உடையிலும் உண்ணும் உணவிலும் இருக்காது.தாய் கண் கொண்டு வளரும் பருவம் என்பதால் தாயற்ற அவளுக்குச் சொல்லி கொடுக்க யாருமில்லை வந்த அன்றே அதனைக் கண்டு விட்டாள் வஞ்சி.

ஒவ்வொரு நாளும் இரவு மதுவின் புண்ணுக்கு மருந்து வைத்துச் சரியாகப் பார்த்து கொண்டாள்.அதன் விளைவால் இப்போது புண் நன்றாக ஆறி விட்டது.பழக வஞ்சி மென்மையாக இருந்தாலும் யாரிடமும் நெருக்கம் காட்டி பழக்கம் இல்லாததால் அமைதியாக இருந்தால் மது.

தாய் பாசத்தின் நெடி வஞ்சியின் ஒவ்வொரு செயலிலும் கண்டாள் அரிவை அதனால் அவள் சொன்னதைத் தட்டாமல் செய்தால் மது.பானு சொல்லவே வேண்டாம் வஞ்சியின் கொன்டு.

துளசியும் பாசத்தைத் தனது கை கொண்டு அவளது கன்னம் வருடி சிரித்துக் காட்டுவாள்.வஞ்சியின் பேச்சு வேலைகளைக் கொண்டு இருந்தாலும் அதில் இருக்கும் பாசம் சிறியவர்களை கட்டி தான் போட்டது.

உடையவனுக்கு வஞ்சியின் செயல் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதியவில்லை வழமை போல் தன்னை மறந்து ஓடி கொண்டு இருந்தான் உடையவனை தவிர்த்து பார்த்தால் அத்தனையும் பெண் பிள்ளைகள் என்பதால் அவ்வீட்டின் சூழ்நிலையைச் சரியாக நாடி பிடித்துவிட்டாள் வஞ்சி.எல்லாம் சரியாகத் தான் சென்றது வஞ்சி கொண்டான் வரும் வரை....

மாலா வழமை போல் வேலைகளை முடித்து விட்டு காத்தாட திண்ணையில் அமர்ந்து கொண்டு வஞ்சியின் பிள்ளையைக் கொஞ்சி கொண்டு இருந்தாள்.இப்பொழுதெல்லாம் அவளின் ஜாகை சின்னக் குட்டியுடன் தான் வேலைகளைக் கூட ஆர போட்டுச் செய்யப் பழகி கொண்டாள்.

கிடைக்கும் நேரமெல்லாம் உடையவன் வீட்டுக்கு சென்று வஞ்சியிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டு வந்து விடுவாள்.வஞ்சியும் மாலாவின் தனிமை உணர்ந்து கொடுத்து விடுவாள் இன்றும் அது போல் வாங்கி வந்தவள் திண்ணையில் அமர்ந்து கொஞ்சி கொண்டு இருக்க அரக்க பறக்க ஓடி வந்தாள் வஞ்சி.

மூச்சு வாங்கி நின்றவளை கண்ட மாலா “என்ன வஞ்சி ? எதுக்கு இப்படி ஒடியார”

“அக்கா சின்னப் பாப்புக்கு மேலு சுடுது நானும் மருந்து கொடுத்துப் பார்த்துட்டேன், கை வைத்தியமும் பண்ணி பார்த்துட்டேன் ஒன்னும் வேலையாகல வாங்களேன் ஆஸ்பத்திரிக்குப் போகலாம்”

“ஐயோ!.... நீ பாப்பாவ பிடி நான் உடையவன் தம்பிக்கு போன் போட்டுட்டு வரேன்” என்றவர் தனது போனை எடுத்து உடையவனுக்கு அழைத்து விடயத்தை சொல்ல அவனும் கிளம்பி விட்டான்.

“வஞ்சி நீ இரு நான் தம்பிகூடப் போயிட்டு வரேன் என்ன”

அவரை மறுத்து பேச வழியில்லாமல் பானுவை மாலாவிடம் கொடுக்க அதுவோ வஞ்சியின் கழுத்தை இறுக்கக் கட்டி கொண்டு வரமாட்டேன் என்று ஊரை கூட்டியது மாலா திகைத்து முழித்துக் கொண்டு இருக்க அதற்குள் உடையவன் வந்து விட்டான்.

வந்தவன் வஞ்சியிடம் நெருங்கி பானுவை தூக்க அது அவனது கையை தட்டி விட்டது. இதனை எதிர்பார்க்காத உடையவன் ஒரு நொடி அதிர்ந்து மாலாவை பார்க்க அவர் வஞ்சியைத் தான் கண் இமைக்காமல் பார்த்து வைத்தார்.அவர் மனம் அடித்துச் சொல்லியது இது சரியாக முடிய போவதில்லை என்று ஆனால் ஒரு மனம் பேராசை கொள்ளத் தான் செய்தது.

இருவரையும் சங்கடமாகப் பார்த்த வஞ்சி “நானும் வரேன் எனக்கு மனசு கேக்கல மாலாக்கா” அதற்கு மேல் அவர் எதுவும் சொல்வதிற்கில்லை வஞ்சியின் மகளை இடுப்பில் வைத்துக் கொண்டு அவரும் உடையவனுடன் சென்றார்.

காரை ஓட்டி கொண்டே உடையவன் சிந்தனையில் இருந்தான் மனம் எங்கெங்கோ செல்லும் வேளையில் மருத்துவமனை வர அதன் பின் சரியாக இருந்தது மூவருக்கும்.குழந்தையைப் பற்றிக் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் வஞ்சியே சொல்ல இருவரும் அவளை தான் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அனைத்தும் முடித்து வெளியில் வரும் போது உடையவன் முன்னே செல்ல அவன் சிறுது தூரம் செல்லும் வரையில் அமைதியாக இருந்த அவன் தொலைவு சென்றவுடன் மாலா வஞ்சி கை பற்றி “வஞ்சி நீ பானுக்குப் பால் கொடுக்கிறியா” மாலாவின் கேள்விக்கு தலையைக் குனிந்து கொண்டாள் வஞ்சி அதுவே சொன்னது “ஆம்” என்ற பதிலை

“இங்கன பார் வஞ்சி நான் இன்னும் முழுசா அந்தக் குடும்பத்தைப் பத்தி உங்கிட்ட சொல்லல அதுக்கு அவசியமும் இல்லை.உன் எல்லையைத் தாண்டாத”

“அக்கா பச்ச மண்ணுக்கா அது தவிக்கும் பொதுப் பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியல” என்றவள் அன்று பானுவே பால் அருந்தியதை சொல்ல மாலா நெகிழ்ந்தாலும் அதனை வெளி காட்டாது எச்சரித்தார்.

“அது சின்னப் புள்ள தாய் இல்லா பிள்ளை அதான் நீ பாசமா பார்த்ததும் உங்கிட்ட அந்த அன்ப தேடுது ஆனா நமக்குன்னு ஒரு எல்லை இருக்கு அதை மனசுல வச்சு நட வஞ்சி.சுய கட்டுப்பாடு வேணும் எந்தச் சூழ்நிலை வந்தாலும் தடுமாறி நிற்க கூடாது என்ன”

“சரிங்க அக்கா” என்றவளை அழைத்துக் கொண்டு சென்றார்.மூவரும் சேர்ந்து வர துளசியுடன் இருந்த சரசு விடை பெற்று சென்றார்.பானு வஞ்சியை விட்டு அசையாமல் அடம் செய்யப் பெரியவர்கள் தான் தவித்துப் போனார்கள்.

மாலாவும் வஞ்சியும் உடையவன் வீட்டில் இருப்பது என்பது சாத்தியமில்லாது ஒன்று ஆனால் குழந்தையை என்ன செய்ய என்று பெண்கள் முழித்துக் கொண்டு நிற்க

உடையவன் தான் தெளிவு கொண்டு “அக்கா பாப்பாவ தூக்கிட்டு போயிட்டு காலையில கொண்டு வாங்க” அவனது பேச்சில் வஞ்சி மகிழ அரண்டு விட்டார் மாலா

“தம்பி என்ன விளையாட்டு இது நாளைக்கி என்ன நாள் தெரியுமா மத்த நேரமா இருந்தா கூடப் பரவாயில்லை சரினு பாப்பாவை தூக்கிட்டு போவேன் பெரியவர் வர நேரம் இது சரிவராது தம்பி” அவரது பயம் அவருக்கு.

அவனது நிலையைப் பார்த்த வஞ்சி "அக்கா நம்பப் பாப்பாவ தூக்கிட்டுப் போகலாம் பெரியவர் வந்தா நான் எடுத்து சொல்லுறேன்"

என்னது!.... நீ எடுத்து சொல்லுறியா என்று அதிர்ந்தவர் “வஞ்சி கூறு இல்லாம பேசாத அவர் கிட்ட .................." என்றவர் எதுவோ சொல்ல போக மாலாவை தடுத்த உடையவன் “நீங்க போங்க வஞ்சி நம்பக் காலையில பேசிக்கலாம்" என்க இனி ஒன்றும் செய்ய இயலாது என்று எண்ணிய மாலா அமைதியாகச் சென்று விட்டாள்.

இரவெல்லாம் அழும் குழந்தையை வஞ்சியின் மார்பில் பால் உண்டு தூங்க மாலாவிற்கு ஐயோவென்று இருந்தது வஞ்சியின் நிலையில் தான் இருந்தாலும் இதே கதை தான் நடக்கும் ஆனாலும் பிள்ளையின் தகப்பனை எண்ணி பயம் தான் வந்தது.

வஞ்சிக்கொண்டானை எண்ணி எண்ணி தூக்கம் கெட்டுக் கிடந்தார் மாலா.காலமும் கடவுளும் செய்து வஞ்சத்தை எண்ணி மருகினார் இனி தான் ஒன்னும் செய்ய முடியாது என்று எண்ணியவர் நெஞ்சில் வஞ்சியின் நன்மையே.என்ன ஆனாலும் வஞ்சி எனது பொறுப்பு என்று தனக்குத் தானே சொல்லி கொண்டவர் கண்களை மூடி தூங்க முயன்றார்.

************************

காலையில் கண் விழித்த வஞ்சியின் மகள் மெதுவாகச் சென்று மாலாவின் மீது படுத்துக் கொண்டு தனது தாயை பார்த்துக் கொண்டு இருந்தது.எதிர்பாரா நேரம் தன் மீது விழுந்த பாரத்தைக் கண் திறந்து பார்த்தவள் நெஞ்சில் அத்தனை பரவசம் மேலும் கைகளைக் கட்டி இறுக்கி கொண்டாள் பிள்ளையை.

“என்ன சின்னக் குட்டி பசிக்குதா” என்றவர் எழுந்து அமர அவரைக் கட்டி கொண்டு தோளில் சாய்ந்து கொண்டது.இரவு பானு தூங்கவில்லை வஞ்சியையும் தூங்க விடவில்லை என்பதால் இருவரும் கட்டி கொண்டு சுகமான நித்திரையில் இருக்க அவர்களைச் சில நொடிகள் பார்த்தவர் பின்பு வஞ்சி கொண்டான் நினைவு வர பதறி அடித்து எழுந்தார்.

“ஐயோ!.. வஞ்சி!... வஞ்சி!... எழும்புடி”

“என்னக்கா” என்றவள் பிரிக்க முடியாத இமைகளைப் பிரித்துக் கேட்க

“சீக்கரம் முகம் கழுவிட்டு வா உடையவன் தம்பி வீட்டுக்குப் போகலாம் பெரியவர் வந்து இருப்பாரு” அவளது பதற்றத்தை பார்த்து “சரிக்கா” என்றவள் வேகமாக சென்று முகம் அலம்பி வந்து குழந்தையை

தூக்கி கொண்டு மாலாவின் பின் விரைந்தாள் இருவரும் ஓடாத குறையாக உடையவன் வீட்டுக்குள் நுழைய அங்கே அப்படி ஓர் அமைதி துளசி ஆ!.. உவென்று மிழற்றும் சத்தம் கூட அல்லது இருந்தது.

வஞ்சி பானுவை இறக்கி விட்டுத் துளசியிடம் செல்ல அவளது இடுப்பில் தலை வைத்து ஒருவன் படுத்துக் கொண்டு இருந்தான்.அவுளோதான் கையில் கிடைக்கும் பொருளை எடுத்து அவனது தலையில் அடிக்க நல்ல தூக்கத்தில் இருந்தவன் அலறி அடித்து எழுந்தான் தலையில் ரெத்தம் வந்தது

“எரும மாடு யாருடா நீ எப்படி உள்ள வந்த புள்ளக் கிட்ட படுத்து இருக்க அவளுக்கு வாய் திறந்து சொல்ல தெரியாது டா பாவி இந்த மாதிரி புள்ளைகளையும் விட்டு வைக்க மாட்டிங்களாடா” என்றவள் அவனைப் பேச விடாது சரமாரியாக அடித்துப் பிய்த்து எடுத்து விட்டாள்.

ஒட்டு மொத்த கோபத்தையும் காட்டி கொண்டு நிற்க அண்ணன் அடிவாங்குவதைத் தடுக்க முடியாமல் துளசி படுக்கையில் கை கால் அசைத்து ஒருமாதிரி சத்தம் எழுப்ப அனைவரும் ஓடி வந்தனர்.

மாலா அங்கு நடக்கும் காட்சியைப் பாத்து “அடி ஆத்தி” என்று நெஞ்சில் கை வைத்தவர் “ஏய் வஞ்சி நிறுத்து…. நிறுத்துடி…..” என்றவர் கையில் உள்ள இரும்பு கம்பியை பிடுங்கி போட்டவர் தனது சேலையைக் கிழித்து வஞ்சி கொண்டானிடம் சென்று பெரிய தம்பி இதை வச்சு முதல தலையைக் கட்டுங்க” என்க

“என்னது பெரிய தம்பியா” என்று கையில் உள்ள இரும்பு நழுவி விழ அதிர்ந்து நின்றாள் வஞ்சி….

























 
Top