Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் – 18

Advertisement

Dhanuja

Well-known member
Member
அத்தியாயம் – 18
காலனும் கடவுளும் கை கோர்த்து காரிகை பெண்ணை தங்களுடன் அழைத்து சென்று இன்றோடு ஒரு மாதமாகி விட்டது.துளசி என்ற பெண் வாழ்ந்ததற்கு அடையாளமாக அவளது கட்டில் மட்டுமே அவ்வப்போது அதனை தான் வெறிக்க வெறிக்கப் பார்த்து வைப்பாள் வஞ்சி.

கபிலன், உடையவன்,வஞ்சி கொண்டான் மூவரும் தங்களுக்குள் தனது உடன் பிறப்பை எண்ணி எண்ணி மருகி நிற்க.வஞ்சியால் அவ்வாறு இருக்க முடியவில்லை சிறுது காலம் பழக்கம் என்றாலும் அவளுக்குத் தாயக இருந்தவள் அல்லவா அதனால் அழுது கரைந்தால் யாராலும் அவளை நெருங்க முடியவில்லை மீறி நெருங்கினாள் தனது ஆதங்கத்தைக் கொட்டி கலங்கடித்தாள் மாலா கூடச் சற்று விலகி தான் நின்றாள்.

துளசிக்கு செய்யும் ஒவ்வொரு சடங்கையும் பலமாக எதிர்த்தாள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அத்தனை சொந்தங்களையும் கேள்வி கிட்டே திணறடித்தாள். அன்றும் அப்படிதான் துளசிக்கு முப்பது என்று சொல்லி அவளுக்குப் பிடித்த பதார்த்தங்களை வைத்து சாமி கும்பிட ஏற்பாடு செய்ய

வஞ்சிக்கும் கோபம் பொத்துக் கொண்டு வந்தது அவர்கள் வைத்த அனைத்தையும் தட்டிவிடக் கபிலன் பெரியம்மா முறை உள்ள ஒருவர் “ஏன் தட்டி விடுற பார்க்க போனா உன் நாத்தனாருக்கு நீ தான் எடுத்து கட்டி செய்யணும்… என்னடா வஞ்சி எல்லாத்தையும் பார்த்துகிட்டு பேசாம இருக்க” என்று கடிந்து கொள்ள

“ஒருத்தர் வாழும் போது செய்யறது தான் பாசம்,உதவி இறந்த பின் படைச்சு என்ன செய்ய அவ உயிரோடு இருக்கும் போது எல்லாம் செஞ்சுட்டேன் அது போதும் எனக்கு அப்புறம் அவ நந்தனார் இல்ல என் பொண்ணு” என்றவள் அழுது கொண்டே தனது அறைக்குச் செல்ல.

அனைவருக்கும் என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை உண்மை தானே ஒருவர் இருக்கும் போது அவருக்கு நிறைவாக அன்பு கொடுத்து உதவி செய்வதே உத்தமம் அல்லவா.படிப்பில்லை என்றாலும் பகுத்தறிவு கொண்டு உயர்ந்து நின்றாள் வஞ்சி அதன் பின் ஒருவரும் அவளிடம் நெருங்க முயற்சிக்க வில்லை.
*********************************
வீட்டில் உள்ளவர்கள் தங்களைத் தேற்றிக் கொண்டு அவரவர் வேலையில் மூழ்கி விட வஞ்சி மட்டுமே துளசி இறப்பில் இருந்து மீளவில்லை.அவளது சோர்வு பானு மற்றும் இனியளை பாதிக்கச் செய்ய மாலா ஒரு முடிவுடன் வஞ்சிடம் நெருங்கினாள்.
"வஞ்சி...." எங்கோ வெறித்துக் கொண்டு இருந்தவள் மாலா வின் அழைப்பை கவனிக்கவில்லை அவளது தோற்றம் கோபத்தைக் கொடுக்கக் குரலை சற்று ஏற்றினாள் மாலா

“வஞ்சி!...........”

“ஹான் அக்கா!”

“என்ன அக்கா நீ செய்யுறது உனக்கே சரியா இருக்கா போனவளை யோசிக்கிற நீ இருக்குறவங்கள விட்டுட்ட.இந்த இரண்டு பிள்ளையும் சரியா சாப்பிட்டு எத்தனை நாள் ஆகுதுன்னு தெரியுமா?” அப்போது தான் மாலாவின் இடுப்பில் உள்ள இனியாளை பார்த்தால்.பிள்ளையின் முகம் சோர்த்து இருந்தது உடல் கூடச் சற்று இழப்பம் போல்....

கண்ணில் நீர் பெறுக “என்னக்கா நான் செய்ய என்னால மறக்க முடியல புள்ள எப்படி தவிச்சு போச்சு பார்த்தீங்க தானே”

“கொடுமை தான் வஞ்சி ஆனா இப்படி யோசுச்சு பார் அவ பருவம் எய்தி மாசா மாசம் இதே கஷ்டத்தைப் பட்டுக் கொஞ்சம் கொஞ்சமா சாகுறதை விட அவ இத்தோடு போனானு மனசை தேத்திக்க வேண்டியது தான்” மாலா சொல்வதும் உண்மை தானே என்று மூளை எண்ணினாலும் மனம் ஏற்க மறுக்கிறதே என்ன செய்ய.

“முதல இதுங்க இரண்டுக்கும் உன் கையால சாப்பாடு ஊட்டி விடு” என்றவர் அவளை திசை திருப்ப கொஞ்சம் கொஞ்சமாகப் பிள்ளைகளிடம் தன்னைத் தொலைத்துக் கொண்டு இருந்தால் வஞ்சி

காலமும் நேரமும் யாருக்கும் நான் நிற்க மாட்டேன் என்று காலில் இறக்கை கட்டி கொண்டு பறக்க கொஞ்சம் கொஞ்சமாக இறப்பை மறந்து துளசி நினைவுகள் மட்டுமே பொக்கிஷமாகச் சேமித்து வைத்து கொண்டாள் வஞ்சி தாய் என்ற சொல்லுக்குத் தான் எத்தனை வீரியம்.தாய் மாதிரி என்ற சொல்லுக்கே வஞ்சி கொட்டிய அன்பு அப்பப்பா.....
*********************************
வாழ்கை தொடங்கிய வேகத்தில் துளசியின் இழப்பு கபிலனையும் வஞ்சி கொண்டானையும் சோர்வடையத் தான் செய்தது.ஆண்களுக்கு அடுத்து என்ன என்ற யோசனையின்றியே கழித்தனர்.சுகமோ துக்கமோ அதிகமா வெளி படுத்த தெரியாத மதுவோ இன்னும் சுருண்டு போனாள்.அது சரி அவர்களைச் சரி செய்ய வேண்டிய கடமையை மறந்து வஞ்சி சோகத்தில் இருக்க இவர்களை யார் பார்ப்பது.
மாலாவின் உதவியால் சற்று தெளிந்த வஞ்சி இப்போதான் தன்னைச் சுற்றி உள்ளவர்களைக் கவனித்தால் அதிலும் தனது கணவனை எண்ணி ஐயோ!.... இவர் இருக்குற நிலைமையில பேசியே ஒரு வழி செய்திட்டோமே என்ற குற்ற உணர்வு வர இரவு அவர்கள் தனிமையாகக் காத்திருந்தாள்.

மாலாவும் ஒரு அளவிற்கு வஞ்சி வந்து விட்டாள் என்பதை அறிந்து மாலா இப்போதான் தன் வாழ்க்கையைப் பற்றிய யோசனை வந்து அவளைப் பூதாகரமாக மிரட்டியது எண்ணியதை பேச துளசி நிகழ்வு இடம் கொடுக்கவில்லை ஆனால் பேசியே ஆகா வேண்டும் என்ற கட்டாயம் என்ன செய்வது என்று மருகி நின்றாள் பேரிளம் பெண்.

இரவும் வந்தது எந்த வித பேச்சுக்கள் இல்லாமல் அனைவரும் உண்டதை பார்த்த வஞ்சிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை ஒரு மாத காலத்தில் மீண்டும் அந்த வீடு பழைய நிலைக்குத் தள்ள பட்டது தான் கொடுமை.அதிலும் மதுவை கண் கொண்டு பார்க்க முடியவில்லை இளைத்து கருத்து போய் இருந்தாள்.

சும்மாவே தோற்றத்தில் கவனம் செலுத்தமாட்டாள் இப்போது சுத்தம்.அவளை விட உடையவன் நிலை தான் மோசம்.பொறுப்பாக அந்த வீட்டை கவனித்த உடையவனா இது என்பது போல் நடந்து கொண்டான் பேச்சுச் சுத்தமாக நின்று போனது.
குடும்பத்தின் நிலை அரிவையைப் பயம் கொள்ள வைக்க இது சரி வராதே இப்படியே போனா என்ன கதிக்கு என்றவள் மருகி நின்றது ஒரு நொடி தான் பின்பு தன்னை நிதானித்துக் கொண்டு அடுத்து என்ன என்று திட்டத்தை வகுத்து கொண்டாள்.
***********************
தனிமையில் கபிலனிடம் பேச முயற்சி செய்து கொண்டு இருந்தாள் மாலா கட்டிலில் சாய்வாக அமர்ந்து கொண்டு தனது போனில் மூழ்கி இருந்தவனை நெருங்குவதும் பின்பு விலகுவதுமாக இருந்தவளை நிமிர்ந்து பார்த்தவன் “என்ன பேசனும் பாரத நாட்டியம் ஆடிக்கிட்டு இருக்க”

“அது... கபி …நான் உங்க கூடக் கொஞ்சம் பேசனும் ஆனா நீங்க எப்படி அந்த விஷியத்தை எடுத்துக்குவீங்கன்னு பயமா இருக்கு”

“முதல சொல்லு பார்ப்போம்”

“அது... நான்.... நம்ப ஒரு லேடி டாக்டர் கிட்ட போயிட்டு வரலாமா” அவள் சொன்னதைக் கேட்டு கபிலன் பெரியதாக எதுவும் அலட்டி கொள்ளவில்லை அவனும் அதை யோசித்தான் தான் ஆனால் வெளியில் சொல்லவில்லை

“என்ன தீடிர்னு”

“எனக்கு வயசு போச்சு அதுக்காகக் குழந்தை இல்லாம இருக்க முடியுமா?”

“சரி எனக்கும் வயசு போச்சு என்னால குழந்தை இல்லாம போனா” அவனது குதர்க்கம் உணர்ந்து யோசிக்காமல் பதில் உரைத்தாள்.

“பானு இனியால் மது போதும்”

“ஹ்ம்ம்... சரி நாளைக்குப் போகலாம்” என்றவன் படுத்துக்கொள்ள

“உங்களுக்குக் கோபம் இல்லையே”

“இருக்கே என் பாதி வாழ்கை வீணா போச்சே அந்தக் கோபம் நிறைய இருக்கு நானே பேசனும் தான் இருந்தேன் அதுக்குள்ள நீ பேசிட்ட” என்றவன் படுத்துக் கொள்ள அவனை நெருங்கி படுத்தவள் கபி ...........................

“ஷ்.... மனசும் உடம்பும் ரொம்பச் சோர்ந்து போய் இருக்கு பேசாம அமைதியா தூங்கு” என்றவன் அவளது நெருக்கத்தை சுட்டி காட்டி இந்த நெருக்கம் போதும் இப்போதைக்கு என்றவன் கண்களை மூடி கொண்டான்.கண் மூடி கொண்டவனைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் மாலா.
********************
இங்கு வஞ்சி கொண்டானிடம் மாட்டி கொண்டு முழித்துக் கொண்டு இருந்தாள் வஞ்சி தனது அறைக்கு வந்து தனிமையில் அவனிடம் பேச வேண்டுமென்று எண்ணியவள் பிள்ளைகளைத் தூங்க வைத்து விட்டு மெதுவாக வஞ்சி கொண்டானிடம் நெருங்கி "என்னங்க" அது மட்டும் தான் அவள் சொன்ன வார்த்தை

“ஏய் யாரு நீ ? எதுக்கு என்ன கூப்பிடுற? உனக்குத் துளசி மட்டும் தானே பொண்ணு நானும் என் பொண்ணுங்களும் உனக்கு யாரு? எங்களை உன் கண்ணுக்கு தெரியல அப்படி தானே துளசி எனக்கும் பொண்ணு தாண்டி நீ கத்தி அழுது சகட்டு மேனிக்கு எங்களைத் திட்டி ஆத்திகிற ஆனா நாங்க சொல்ல முடியுமா உள்ள வச்சுக்கிட்டே சாகுறோம்” துளசியின் இறப்பு ஒரு மாத கால வாஞ்சியின் விலகல் அனைத்தும் அவனை கடுமையாக தாக்கியது போலும் வெடித்தான் வஞ்சி கொண்டான்.

“ப்ச் என்னால முடியலைங்க”
“எனக்கு மட்டும்……………..”

“சரி வெசன படாதீங்க கொஞ்சம் நான் பேசுறதை பொறுமையா கேளுங்க”

“ஒரு இரண்டு நாளுக்கு என் கிட்ட எதுவும் பேசாத போயிடு” அவனது பேச்சு அவளுக்கும் கோபத்தை கொடுக்க

“ப்ச் யோவ் என்ன ரொம்பப் பண்ணுற”

“யோவா என்னடி மரியாதைத் தேயுது”

“சொல்லுறதை கேக்கலான இந்த மரியாதையும் இருக்காது வசதி எப்படி”

“அடிப்பாவி” என்றவன் முகத்தில் சிறு புன்னகை அவனது சிரிப்பை பார்த்தவள் தானும் சிரித்து மெதுவாக பேச்சை தொடங்கினாள் “என்ன மனுச்சுகிடுங்க உங்கள பாடா படுத்திப் புட்டேன்”

“அதெல்லாம் இல்ல நீ இல்லனா அந்த மாதிரி சூழ்நிலையைக் கடந்து வந்து இருக்க மாட்டோம்”இருவரிடமும் சிறுது நேர மௌனம்

“பழசை விடுங்க நான் இப்போ பேசவந்ததே வேற நான் வந்த புதுசுல எப்படி இருந்ததோ அதே மாதிரியே இருக்கு இந்த வீடு எல்லாத்தையும் சரி பண்ணனும்”

“ஹ்ம்ம் நானும் அண்ணன் கிட்ட இதைப் பத்தி பேசனும்… மதுவை கொஞ்சம் பார்த்துக்கோ வஞ்சி அவளை யோசுச்சா தான் ரொம்பக் கவலையா இருக்கு”

“நீங்க சொல்லனுமா நான் பார்த்துகிறேன்”

வஞ்சி என்று அவளது கைகளை பற்றி கொண்டவன் நீ கூட இருந்தா நான் எல்லாத்தையும் சரி பண்ணிடுவேன் தனது கைகளைப் பிடித்து நின்றவன் உணர்வுகளை படிக்கத்தான் எண்ணினாள் பாவம்.
 
Top