Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் – 16

Advertisement

Dhanuja

Well-known member
Member
அத்தியாயம் – 16



“என்னடி உரசி கிட்டே இருக்க உரசுர காலத்துல போடான்னு விட்டுட்டு போயிட்டு.காலம் போன கடைசில லந்து பண்ணுறியா போயிடு செம கோபத்துல இருக்கேன் வாங்கி கட்டிக்காத சொல்லிட்டேன்”


“என்ன ரொம்ப பண்ணுறீங்க,இப்போ என்ன வயசாச்சு உங்களுக்கு? ரொம்பதான் அப்புறம் எதுக்கு கல்யாணம் பண்ணீங்க பக்கத்துல உட்கார கூட பேச்சு”


“என்னடி ரொம்ப மிரட்டுற”


“அப்படிதான் பண்ணுவேன்” என்ற மாலா மீண்டும் நெருங்கி அமர சிரித்து விட்டான் கபிலன் அவனது சிரிப்பை பார்த்தவள் “அப்பா சிரிச்சுடீங்களா அண்ணனும் தம்பியும் இரண்டு நாள் உம்ம்ன்னு இருந்தீங்க”


“ப்ச்…. துளசியை இன்னும் நல்ல பார்த்து இருக்கலாம்னு தோணுது பயமா இருக்கு”


“எனக்கும் அந்த குற்றவுணர்வு இருக்குங்க நான் அப்பவே கல்யாணத்துக்கு சரினு சொல்லி இருந்தா எல்லார் வாழ்க்கையும் சரியா இருந்து இருக்குமோ” என்றவள் கண்ணில் கண்ணீர்


“என்ன பேசுற எல்லாத்துக்கும் காரணம் நீ னு சொல்ல வரியா”


“பார்க்க போனா நான் தான் ஆரம்பம்”


மாலா!...


“உண்மை தாங்க இப்போ எனக்கு வேற வழியில்லன்னு தானே உங்ககிட்ட வந்தேன் அப்போ நான் தான் பக்கா சுயநலவாதி வஞ்சிக்கு இருக்கிற அக்கறை எனக்கு எங்க போச்சு” என்றவள் அழுதே விட்டாள் அவளது அழுகையில் உடைந்தவன்


“ஹே மாலா.... மாலு ..... என்ன பார்” என்று தன்னை காண செய்தவன் அவளது முகம் தாங்கி பெருவிரல் கொண்டு கண்ணீரை துடைத்து “அப்படி பார்த்தா எல்லாரும் ஒருவகையில் சுயநலவாதி தாண்டி”


“எங்க மாமாவும், சித்தப்பாவும் எங்களை வளர்த்தாங்க ஒரு அளவுக்குப் படிப்பை முடித்த உடனே தனியா வந்துட்டேன் சித்தப்பாக்குத் துணையா அப்புறம் மதுவை வளர்த்தார் ஒரு கட்டத்துக்கு மேல அவரால எங்களைப் பார்க்க முடியல அத்தையும் பாவம் தானே அவங்களுக்கும் இரண்டு பிள்ளைகள் இருக்காங்கனு சித்தப்பாவும் நானும் தான் துளசியா பார்த்துக்கிட்டோம்,


எங்களுக்குத் தெரிஞ்ச வரை பார்த்து கிட்டோம் வேலைக்கு ஆள் வச்சா ஆறு மாசம் கூட ஒழுங்கா இருக்க மாட்டாங்க சகிப்புத் தன்மை கிடையாது என்ன பண்ண சொல்லுற.நாங்க வீட்டை பார்த்தா சம்பாத்தியம் யார் பண்ணுறது வீடு முழுக்கப் பெண் பிள்ளைகள் கரையேத்த வேணாமா”அவன் சொல்லுவதும் நியாயம் தானே பருவத்தில் இருந்த கபிலனுக்குத் துளசியைக் கையாள தெரியவில்லை அவனுக்குத் தெரிந்த வரையில் பார்த்துக் கொண்டான்.


“அதேமாதிரி தான் நீயும் உனக்கு அப்போ ஒரு இருபது வயது தானே இருக்கும் உன்ன நம்பி உன் தம்பி,தங்கச்சி என்ன கல்யாணம் பண்ணி இருந்தாலும் யாரானானு நீ பார்ப்ப எல்லாம் நம்ப வாங்கி வந்த வரம் வேற ஒன்னும் சொல்லுறதுக்கில்ல விடு,


இனி பழசை பேச வேணாம் மாலா” மெதுவாகச் சொன்னாலும் குரல் சற்றுக் கண்டினமாக இருந்தது போல் தோன்றியது அதன் பின் அவள் அதனைப் பேசவில்லை.


இருவரும் மௌனமாகப் படுத்து கொண்டனர் எண்ணங்கள் மட்டும் கடந்த வந்த பாதையைச் சுற்றியே இருந்தது.மணம் கொண்டாலும் மனம் கொள்ளவில்லையே தொலைந்த இளமை,வாழ்க்கை ஓர் வெறுமையைக் கொடுத்தது முயன்று அதனை மறக்க போராடினர் இருவரும்.

************

அங்கு வஞ்சி கொண்டானும் இதையே தான் சொல்லி கொண்டு இருந்தான் “உண்மையா வஞ்சி எனக்கு எப்படி பார்த்துக்கறதுனு தெரியல மாமன் மகளா இருந்தாலும் கூடவே வளர்ந்து இருந்தாலும் அவகிட்ட பேச தோணல அப்பவே பேசி இருந்தா பிரச்சனையே இருந்திருக்காது எல்லாம் என்னால என்னுடைய சுயநலம் தான் காரணம்”


‘என்னடா இது ஒரு வார்த்தை தான் பேசுனேன் அதையே பிடிச்சுட்டு புலம்பி தள்ளுறாரே’ என்று பாவமாகப் பார்த்து வைத்தாள் தனது கொண்டவனை இந்த வஞ்சி கொண்டாட வந்தவனை


சற்று முன் தான் டாக்டர் சொல்லியதை வஞ்சியிடம் சொன்னான் அதனைக் கேட்டவள் ஆடினாலே ஓர் ஆட்டம் ஒவ்வொரு கேள்வியும் அவனை மண்டியிட வைத்தது அந்த அரிவையிடம்.


“என்ன சுளுவா சொல்லுறீங்க நீங்க….. உங்களுக்கெல்லாம் மனசு இருக்கா” நீயும் உன் பங்குக்குப் பேசி வைக்கதா வஞ்சி


“என்னத்த பேசி… என்னத்த பண்ண …அதுவும் ஒரு உசுரு தானே ஒரே இடத்துல கையையும் கால்லையும் கட்டி ஒரு மணி நேரம் உங்களால உட்கார முடியுமா?இல்ல படுத்தே இருக்க முடியுமா?சொல்லுங்க அது எம்புட்டு பெரிய வேதனை,, இதுல பேசவும் வராது அதுக்குப் பசின்னு கூட சொல்ல தெரியாது எப்படியெல்லாம் தவிச்சு இருக்கும்”


“ப்ச்… அப்பாவும் கபிலன் அண்ணாவும் நேரத்துக்கு அவளுக்கு எல்லாம் கிடைக்கிற மாதிரி பார்த்துப்பாங்க வஞ்சி”


“அதுமட்டும் போதுமா பணம் இருந்து என்ன பண்ண ? தெரியாம தான் கேட்குறேன் பெரிய மாமா,சின்ன தம்பிக்கு இருக்குற பொறுப்பு உங்களுக்கு ஏன் இல்லை கல்யாணம் பண்ண தெரியுது வேணான்னு பல் குடிக்கிற பிள்ளையைத் தூக்கிட்டு வர தெரியாது பொண்டாடடிக்கு இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கத் தெரியுது...” உண்மையை உரக்க பேசியவள் மேல் கோபம் கொண்டவன்.


“ஏய்!... இன்னொருத்தர் மனைவி அவ என்கூடச் சேர்த்து வைத்து பேசாத”


“அடேயப்பா இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை… என்ன மனுசங்க நீங்க எல்லாம் உங்கள நியாயம் படிதிக்காதீங்க”


“உண்மைதான் தப்பு என் பேருல இருக்கு ஆனா துளசியை நாங்க முடிந்த வரை நல்ல பார்த்துக்கத் தான் முயற்சி பண்ணுனோம்”


“நல்ல பார்த்தீங்க சரி துளசிய விடுங்க மதுவை நல்ல பார்த்துக்கிட்டிங்களா? வயசு பொண்ணு மாதிரியா இருக்கா.நான் வந்தப்போ எப்படி இருந்துச்சு தெரியுமா.கிராமத்துல கூட முன்னேறி வயசு பொண்ணுக இப்புடி இருக்குங்க தெரியுமா ஆனா இந்தப் புள்ள என்ன உடுப்பு போடுறோம் பொட்டு வச்சோமா இல்லையானு கூடத் தெரியாம சாப்பிடுற சாப்பாடு கூட என்னனு தெரியாம தின்னுட்டு போகுது.


“நானும் அப்படிதான் இருந்தேன் பெத்தவ இல்லனா இப்படி தான் சீரழியனும் போல” என்றவன் கண் கலங்கி நிற்க அதற்கு மேல் அவளால் சண்டை பிடிக்க முடியவில்லை.துளசியின் பிறப்பே இறப்பை நோக்கி தான் என்று தெரிந்த பிறகு இவர்களிடம் பேசி என்ன பயன் இருக்கும் வரையில் அவளை நல்ல மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும் முடிந்த வரை உயிர் பிச்சை ஏந்தி கடவுளிடம் மண்டியிட வேண்டியது தான் வேறு வழியில்லை.


அவனது கவலை அவளையும் கலங்க வைக்க எட்டி நின்றவள் மெதுவாக நடந்து வந்து அவனிடம் அமர்ந்தாள்.கிராமத்தின் அழகே இயல்பு தானே அது வெகுவாகப் பொருந்தியது நமது வஞ்சிக்கு.நெடு நாள் அவனுடன் வாழ்ந்தவள் போல் இணக்கம் கொண்டு இக்குடும்பத்தை நடத்தியது பெரும் ஆச்சிரியம்.


மாலாவிற்கும் ஆச்சிரியம் தான் எத்தனை ஆண்டுகள் பழக்கம் இருந்தும் அவளால் வஞ்சியைப் போல் இருக்க முடியவில்லையே என்ற வருத்தமும் உண்டு.வெகுளி குணமும், எதையும் நேர்மையுடன் செய்யும் திடமும், உடைத்து பேசும் மனமும் இருந்தால் எல்லாம் சாத்தியமே என்று கூற்றுக்கு வஞ்சியே சாட்சி.

*******************************

அழகான விடியல் ஆனால் துயில் கலைய தான் அவ்வீட்டின் மக்களுக்கு மனம் வரவில்லை.வெகு நாட்கள் இழந்த தூக்கத்தைத் தூங்கி கொண்டு இருந்தனர் போலும்.வழமை போல் பானுவும், இனியாவும் முழித்துத் தங்களது பெற்றவர்களின் துயில் களைய செய்ய முயற்சித்துக் கொண்டு இருந்தனர்.


பானு வஞ்சியின் மாராப்பை பிடித்து இழுத்து காலை உணவுக்கு அடி போட இனியவோ தந்தையின் மார்பில் படுத்துக் கொண்டு அவனது சூட்டினில் குளிர் காய்ந்து கொண்டு இருந்தது.இருவரின் சேட்டையில் துயில் கலைந்த வஞ்சியும் கொண்டானும் பிள்ளைகளைப் பார்த்து சிரித்துவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்தவாறு இருந்தனர்.


இது போல் ஒரு அழகான காலை முன்னாளில் உள்ளதா என்று இருவரும் யோசித்து இருக்கப் போனவை போகட்டும் இனி நாங்களே உங்க வாழ்கை என்பது போல் பிள்ளைகள் இருவரும் முகத்தையும் திருப்பித் தங்களைக் காண செய்தனர்.


“அம்மா மம்மு” பானு தெளிவாகச் சொல்லி அவளது சேலையை விலக்கி போராட வஞ்சி கொண்டானை சங்கடமாகப் பார்த்தவாறே மகளிடம் வம்பு செய்தாள்


“ஏய் என்ன காலையில…. தர முடியாது போ…” பானு கேட்கும் போதெல்லாம் அவளைத் தவிர்க்க செய்ய வஞ்சிக்கு பிடிக்கும்.மகள் அவளிடம் சண்டை பிடித்து அவளே இழுத்து வைத்து அமுதுன்னும் போது அவளுக்கு அத்தனை நிறைவு மாலா கூடத் திட்டிவார் பழக்கத்தை விடு உணவு பழகு என்று அவள் தான் விட மனமின்றிப் பானுவை ரசித்தாள்


வஞ்சி சொல்லில் கோபம் வந்தது அந்த வாண்டுக்கு வழமை போல் கோபத்தில் சேட்டை செய்து அவளது மாராப்பை விலக்கி தன்னைப் பொத்தி கொண்டு உண்ண மகளது சேட்டையைப் பார்த்த வஞ்சி கொண்டான் சத்தமாகச் சிரித்து விட்டான் ஹா.. ஹா… ஹா… ஹா….


தந்தையின் சிரிப்பில் இனியா மிரண்டு தலையைத் தூக்கி பார்க்க அதே சிரிப்புடன் “உனக்கு மம்மு வேணாமா” என்றதும் இடமும் வளமும் ஆட்டி வேண்டாமென்றது அதற்கும் அவன் சிரித்து வைக்க.தனது மகளின் செய்கையில் கோபம் கொண்ட வஞ்சி “கொழுப்பை பாரேன் அம்மானு வாடி அப்புறம் இருக்கு உனக்கு”


“வேணாம் சொல்லு இனி குட்டி நம்பப் பருப்பு புவ்வி சாப்பிடலாம்” என்றவனைப் பார்த்து முறைத்தாள் வஞ்சி.இருவருக்கும் இது மறுமணம் என்று சொன்னால் நம்ப இயலாது அத்தனை பந்தமாகப் பொருந்தி போயினர் இல்வாழ்க்கையில் அவன் குழந்தை, அவள் குழந்தை என்ற பேச்சுக்கு இடமின்றி ஓர் உயிராக நின்றதை என்ன சொல்ல…..


மீண்டும் ஒருவரை ஒருவர் பார்த்தவரே தங்களைத் தொலைத்துக் கொண்டு இருக்க அவர்களைக் கலைத்தது மதுவின் அலறல்.வஞ்சி தான் முதலில் பதறி எழ போகத் தனது சொர்கம் பறிபோன நிலையில் பயந்து அழுக ஆரம்பித்து விட்டாள் பானு.


“இரு வஞ்சி நான் பார்க்கிறேன் நீ பிள்ளைகளைப் பார்” என்றவன் கீழே செல்ல அங்கே கண்ட காட்சியில் அவனுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை


கடவுள் அடுத்த அத்தியாயத்தைத் துவங்கி விட்டான் என்றே தோன்றியது அவனுக்கு.பழைய வஞ்சி கொண்டனாக இருந்தால் உடைந்து இருப்பான் இப்போது இருப்பவன் பொறுப்புள்ள தங்கப்பன் அதுவும் நான்கு பெண் பிள்ளைகளின் தகப்பன் அல்லவா அதனால் அடுத்து என்ன என்று யோசிக்க வேண்டி சிறு நொடிகள் எடுத்துக் கொண்டான்.


அதற்குள் உடையவன்,கபிலன் மாலா மூவரும் வந்தனர் வஞ்சி என்னவோ ஏதோவென்று இரு பிள்ளைகளையும் தூக்கி கொண்டு வர.மாலா விரைந்து சென்று இரு பிள்ளைகளும் வாங்கிக் கொண்டாள்.துளசி அறையில் அனைவரும் இருப்பதைப் பார்த்து விரைந்து சென்றவள் அங்கே கண்ட காட்சியில் மயங்கி சரிந்தாள்.
 

Advertisement

Top