Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் – 14

Advertisement

Dhanuja

Well-known member
Member
அத்தியாயம் – 14
அனைவரும் மெத்தையில் கூடி நிற்க அங்குள்ள பக்கவாட்டுச் சுவரில் சாய்ந்து நின்று கொண்டு அவனது கண்கள் அனைவரையும் ஓர் சுற்று சுற்றி வந்தது மாலாவிடம் மட்டும் ஓர் நொடி நின்று சென்றதோ என்னமோ ........ தனது தொண்டையைக் கனைத்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவன் வஞ்சியிடம் பேச்சை தொடங்கினான்.

“சொல்லும்மா வஞ்சி உனக்குக் கல்யாணத்துல சம்மதமா?” தன்னை நோக்கி பேச்சை தொடங்கவும் சற்று பயந்த வஞ்சிக்கு பேச்சே வரவில்லை அவளது நிலை புரிய

“பயம் வேண்டாம் நீ என்ன நினைக்கிறியோ அதைத் தெளிவா சொல்லலாம் உனக்கு முழு உரிமை உண்டு” கபிலன் பேச்சில் சிறு தெளிவு வர இன்று பேசியே ஆக வேண்டுமென்று அனைத்தையும் கொட்டி தீர்க்கும் முடிவுடன்.

“எனக்கு விருப்பம் இல்லங்க”

“ஏன்?”

“ஒரு கண்ணாலம் கட்டி நான் பட்ட பாடு போதும் இனி அதே தப்பை செய்ய விரும்பல”

“வஞ்சி கொண்டான் பத்தி உனக்குத் தெரியல நானே என் தம்பிய பத்தி சொல்ல முடியாது ஆனா அவன் கூட உன் வாழ்க்கை நிறைவா இருக்கும் அதுக்கு நான் உறுதி தரேன்”

“எதுக்கு இந்தக் கண்ணாலம் பேச்சு? அவர் என்ன விரும்புறாரா?” வஞ்சியின் கேள்வி புரிய ‘இதற்கு நீ தான் பதில் சொல்லனும்’ என்று வஞ்சி கொண்டானை பார்க்க

“எனக்குப் பிடிச்சு தான் கல்யாணம் பண்ண கேட்குறேன்.நீ வந்த அப்புறம் தான் வீடு,பிள்ளைங்க எல்லாம் சரியா இருக்கு நானும் ஒரு பிடிப்போடு இருக்கேன்”

“பார்த்தீங்களா இந்தக் கண்ணாலத்துக்கு அடிப்படை இது தான் இவருக்கு வேற பொண்ண பார்த்துக் கல்யாணம் பண்ணாலும் நான் பிள்ளைகளை நல்ல பார்த்துக்குவேன்”

“ஏன்ம்மா அவன் சொன்னதை முழுசா கேட்டியா? அவன் உன்னை விரும்பி தான் கல்யாணம் பண்ண கேட்குறான் குழந்தைங்களாக னு சொல்லுறது இரண்டம் பட்சம்”

“நான் சொல்ல வரது புரியலைங்க”

“சரி நீ புரியவை” என்றான் கபிலன் அவனுக்கு அடுத்த மாலா போல் தோன்றினால் வஞ்சி.சூழ்நிலை தான் வேறே தவிர இருவரும் ஒரே காரணத்தைப் பிடித்துத் தான் தொங்கினர்.

“இப்போ எல்லாம் நல்ல தான் இருக்கும் எனக்கு ஒரு பொண்ணு அவருக்கு ஒரு பொண்ணு அது இல்லாம கண்ணாலத்துக்கு நிக்கிற தங்கச்சி,தம்பி துளசி பாப்பா……,

காலம் போகப் போகக் கடமை கழுத்தை நெறிக்கும் அப்போ நாங்க சுமை ஆகிட கூடாது...”அவளது பேச்சில் கோபம் கொண்ட வஞ்சி கொண்டான் எதோ சொல்ல வர கபிலன் “பேசவிடு டா” என்று தடுக்க அமைதியானான் வஞ்சி கொண்டான்.

அவனை முறைத்துக் கொண்டே மேலும் தொடர்ந்தாள் “அது மட்டும் கார ணம் இல்லை நான் வந்த நாளுல இருந்து பார்க்குறேன் சின்னவரு தான் குடும்பத்தையும்,தொழிலையும் ஓடி ஓடி பார்த்தாரு பெத்த பொண்ண கூடப் பார்க்காதவறு நாளை பின்னே எங்களுக்கு ஒன்னுனா என்னையும் என் குழந்தையையும் எப்படி பார்ப்பார்?”

வஞ்சியின் கூற்றில் பதறிய மாலா வஞ்சி!........................ நிறுத்து என்பது போல் அதட்ட அதனை அவள் காதில் வாங்கினாள் இல்லை

“அவனவன் குழந்தை இல்லாம கோவில் கோவிலா போய் தவம் இருக்குறாங்க. இங்கன என்னடானா பெத்த புள்ளைய தவிக்க விட்டு அந்த அம்மா இன்னொரு கண்ணாலம் பண்ணிக்கிச்சு இந்த ஆளு ஊர் ஊர்ரா சுத்திகிட்டு இருக்காரு இது என்ன குடும்பமா? பச்ச புள்ள பசிக்கு தவிக்குது எம்புட்டு அது அம்மாவ தேடி இருந்தா என்கிட்ட பசியாறும் எதோ இப்போதான் பார்க்க புள்ள மாதிரி இருக்கு அழகான புள்ளய கெடுத்து வச்சுடீங்க அம்புட்டும் பாவம்…..”

மனம் ஆறாமல் கொட்டிவிட்டால் என்ன இல்லை இவர்களிடம்... யாருக்கு தான் இல்லை துன்பம்..... தான் ஆடாவிட்டாலும் தன் தசை அட வேண்டுமில்லையா இங்கு அதுவும் இல்லையே.
அவளது பேச்சில் உள்ள நியாயம் சுட வஞ்சி கொண்டானால் பேச முடியவில்லை உண்மை தான் தன் கஷ்டம்,தன் நிலை,தன் வாழ்க்கை என்று எண்ணி எண்ணி அவன் வருந்த பிள்ளையை மறந்து போனது பெரும் குற்றம் தானே.

“நீ சொல்லுறது எல்லாம் சரி தான் நாங்க மூணு பேர் ஆம்பளைங்க இருந்தும் எங்க பிள்ளைகளை ஒழுங்கா பார்த்துக்க முடியல. அதுக்கு என்ன காரணம் சொன்னாலும் சரியாகாது தான்.இனிமேயாவது நாங்க ஒழுங்கா இருக்கணும் அதுக்குத் தான் இந்தக் கல்யாணம்” வார்த்தை ஜாலம் காட்டினான் கபிலன்.

வஞ்சி எதுவோ பேச வர அவளைத் தடுத்த கபிலன் “நீ பேசும் போது நான் கேட்டேன் தானே இப்போ நான் பேசுறேன் நீ கேளு. உனக்கென்ன வயசு மதுவை விட வயசு சின்னப் பொண்ணு நீ,

உனக்கு இப்போ துணை தேவை இல்லாம இருக்கலாம் போகப் போக அதாவது உன் பெண் வளர வளர உனக்கு ஒரு பாதுகாப்பு ரொம்ப அவசியம் பெண் பிள்ளையை இந்தக் காலத்துல வளர்கிறது என்பது எளிதில்ல மதுவை வளர்க்க நாங்க எவுளோ கஷ்ட பட்டோம் தெரியுமா அவ வாய் திறந்து பேசவே மாட்ட தேவைக்கு கூட.”

“எங்களை விடு எங்களுக்காவது எங்க மாமா இருந்தாங்க இதோ இங்க இருக்காளே” என்று மாலாவை சுட்டி காட்டியவன் “உன்ன மாதிரி நான் அவளைக் கல்யாணம் பண்ண கேட்கும் போதுத் தங்கச்சி, தம்பி, குடும்பம் அது, இதுனு முடியாதுனு சொல்லிட்டா உன்ன மாதிரி தான் கேட்டா போகப் போக நான் உங்களுக்கு சுமை ஆகிடுவேன் ஆனா இப்போ?

மாஞ்சு மாஞ்சு வேலை பார்த்து, ஒரு வேலை சாப்பிட்டு, தூங்காம உழைத்து என்ன கண்டா.பார்த்து பார்த்து வளர்ந்த தம்பியும், தங்கிச்சியும் உன்னைய பார்த்துக்க முடியாது எங்களால நீ வெளிய போயிடு வீட்டை விட்டு அனுப்பிட்டாங்க உண்டா? இல்லையானு? கேளு” வஞ்சி அதிர்ந்து மாலாவை பார்க்க மாலா கண்ணில் கண்ணீர் பெருகியது.

“சொல்லமாட்டா அவ…….. அவ தைரியமா இருந்த மாதிரி நீ இருக்கலாம் நினைக்காத அவளுக்கு நான் இருந்தேன் அவளுக்கே தெரியாம அவளை என்ன வட்டத்துக்குள்ள கொண்டு வந்தேன் அதுக்கு எனக்கு உதவ சில நல்ல மனசங்களும் இருந்தாங்க ஆனா உனக்கு யார் இருக்கா யோசி”

“இவள மாதிரி முட்டாள் தனமா முடிவெடுத்த இவ கதிதான் உனக்கு ம்….. இன்னொன்னு சொல்லுறேன் உன்ன பயமுறுத்த சொல்லல உண்மையா சொல்லுறேன் மாலாவை நம்பி நீ முடிவெடுக்காத அவளை நான் கல்யாணம் பண்ண போறேன் காலம் கடந்து போச்சுனாலும் மீது உள்ள வாழ்க்கையை அவளோடு வாழனும்” என்க

மாலா சடாரென நிமிர்ந்து பார்த்தாள் கண்ணில் கண்ணீர் ஆனால் இம்முறை மனம் மலர்ந்து கிடந்தது.மதுவுக்கும் வஞ்சிக்கும் கூட மகிழ்ச்சியில் கண்ணில் நீர் நின்றது ஆண்கள் இருவருக்கும் இது தெரிந்த செய்தி என்பது போல் நின்றனர்.

“இனி முடிவு உன் கையில வஞ்சி யோசுச்சு சொல்லு இரண்டு நாள் எடுத்துக்க ஆனா நல்ல பதில் சொல்லு” என்றவன் பார்வை உடையவனிடம் செல்ல

“அண்ணா நான் ஒன்னுமே சொல்லல கொஞ்சம் டென்ஷன்ல இருந்தேன் அதான் அவளைத் திட்டிட்டேன் பரிட்சை முடியட்டும் அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம்” என்று அலறினான் உடையவன்.வீட்டில் சூழ்நிலை சரி இல்லாத சமயத்துல பேச வந்த மாமன் மகளைச் சரமாரியாகத் திட்டி அனுப்பி வைத்து விட்டான்.அவள் தந்தையிடம் சொல்ல அவர் பிடித்து விட்டார் கபிலனை அவனையும் வளர்த்தது அவர் தானே ‘உங்கள வளர்த்தத்துக்கு நல்லாவே எங்களைப் படுத்துறீங்கடா’ என்று கத்திவிட்டுப் போனை அனைத்து விட்டார்.
“இனி ஒருதரம் உன் கோபத்தை அவ கிட்ட காட்டாத சொல்லிட்டேன்” என்றவன் வஞ்சி கொண்டனிடம் திரும்பி “உன்னையும் தான் நாளை மறுநாள் மாமா கிட்ட போய் மன்னிப்பு கேட்டு பேசுற… பண்ண தப்பு நீயும் அவளும் பெரியவங்கள கேட்காம முடிவெடுத்து எல்லாம் பண்ணிடீங்க அதை அவர் சரி பண்ணா நீ அவரைப் பேசுவியா” என்றிட

“சரி போறேன்” என்றவன் கோபமாகக் கிளம்பி செல்ல போகும் அவனைத் தான் வஞ்சி பார்த்துக் கொண்டு இருந்தாள் ரொம்பப் பேசிட்டோம் எல்லாரும் பேசுனா எங்கன போவாங்க என்று மனம் சொல்ல தவித்துப் போனாள் அரிவை.

“உடையா அவன் கூடப் போய் இரு வரேன்” என்று கபிலன் சொல்ல சிறு தலையசைப்புடன் தனது அண்ணனை நோக்கி சென்றான்.மது அங்கு நடப்பவையை கொண்டு வாழ்க்கை பாடத்தை கற்றால் போலும் அசையாமல் நின்று இருந்தாள் அவளை அருகில் கை நீட்டி அலைத்தவன் தனது தோளில் சாய்த்துக் கொள்ள.

அவளும் அவனை அனைத்துக் கொண்டால் அப்பொழுதும் பெண் மௌனம் கொள்ள “என்னடா மேற்கொண்டு என்ன செய்யப் போற”

“யோசிக்கல அண்ணா”

“ஏன் வேலைக்குப் போகுற ஐடியா இல்லையா அடுத்து எதாவது படிக்கலாம்
தானே”

“ப்ச்… ஒரு வருஷம் வீட்டுல இருக்கேன் அப்புறம் மாப்பிள்ளை பாருங்க நான் உங்க கூட இருக்கணும் நம்ப எல்லாம் சேர்ந்து இருந்து ரொம்ப வருஷம் ஆச்சு”

அவளது நிலை புரிய தடுமாறிப் போனான் கபிலன் அவளை இறுக்கி அனைத்து உச்சில் முத்தமிட்டு அனைத்து கொண்டான்.அதற்குள் உடையவன் ஓடி வந்து “அண்ணி பாப்பா அழகுற” என்க

அவனது விழிப்பை கருத்தில் வைக்காமல் கீழே சென்றால் வஞ்சி அதுவே சொன்னது அவளது எண்ணத்தைச் சிரித்துக் கொண்டான் கபிலன். மதுவும் அவள் பின்னேயே செல்ல எஞ்சி நின்றது அவனும் அவனுடைய அவளும் மட்டுமே.

அவன் அவளையே பார்க்க அவளோ சுத்தி முத்தி யாரும் இருக்கீறார்களா என்று பார்த்துக் கொண்டே வந்தவள் யாருமில்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டு ஓடி சென்று கபிலனை இறுக்கி அணைத்தாள்

இந்நேரம் காதல் ரசம் சொட்டி இருக்க வேண்டும்….. கபிலன் சிலிர்த்து நிற்க வேண்டும்….. ஆனால் அவனோ “ப்பா என்னடி நாற்பது வயசுல பயந்து பயந்து வந்து கட்டி பிடுச்சு இருக்க.... இன்னும் என்ன முழுசா ஏத்துக்க ஒரு ஐயம்பது வயசு….. அப்புறம் கல்யாணம் பண்ண ஒரு அறுபது வயசு அதுக்கு அப்புறம் புள்ள பிறந்தால்?….. அது பேத்தியா புள்ளையானு கேட்பாங்க அவனது நக்கல் புரிந்தாலும் அதில் வலியும் இருக்க அமைதியாக இறுக்கி கொண்டாள்.

அவனோ அணைக்கவுமில்லை விலகவுமில்லை.....
 
சீக்கிரம் கல்யாணத்த முடிங்கப்பா
கபிலனுக்கும் மாலாவுக்கும்
 
Top