Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தியாயம் – 10

Advertisement

Dhanuja

Well-known member
Member
அத்தியாயம் – 10
முடிந்த மட்டும் மாலா வஞ்சியை முறைத்து வைத்தாள்.சற்று முன் வீர வசனம் பேசிவிட்டு வெளியில் வந்த வஞ்சியை வழி மறித்து மோதி நின்ற வஞ்சி கொண்டான் சிறுதும் தயக்கமின்றி சர்ச்சைக்குரிய இடத்தைத் தீண்டியவரே குழந்தையைப் பறித்துச் சென்றான்.

அவனது செயலில் அதிர்ந்தவள் செயலற்று நிற்க மாலா தான் வஞ்சி கொண்டான் பின்னே கெஞ்சி கொண்டு சென்றாள் “தம்பி… தம்பி….என்ன தம்பி இது?”

“நான் சொல்லிகிட்டே இருக்கேன் அவ அந்தப் பேச்சு பேசிட்டு போரா ஆமா எனக்குக் குடும்ப நடத்த தெரியல தான் அதான் சொல்லித்தரச் சொல்லுறேன் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லுங்க” ஆ!... வென்று வாய் பிளக்க வைத்தான் மாலாவை

அவனது பேச்சில் தனது சுயம் துளைத்து நிற்க.வஞ்சி கொண்டான் செயலால் கோபம் கொண்ட வஞ்சியோ அவனைக் கொன்று விடும் நோக்கத்தோடு “இங்கன பாருங்க …செத்த நில்லுங்க…..” என்று கத்த அவளை மதித்தான் இல்லை
வீட்டுக்குள் நுழைந்தவன் குழந்தையை மடியில் கிடத்தி “அப்பா விட்டு போய்டுவியா நீ” அதனிடம் சண்டை பிடிக்க மதுவின் கையில் இருந்த பானுவும் ஓடி வந்து அவன் மேல் ஏறிக் கொண்டது.

இரு குழந்தையையும் தாங்கியவரே வஞ்சி கொண்டான்.நிச்சியமாக ஓவிய காட்சி தான் வேர்கள் தனித்து இருந்தாலும் இப்போது ஒரே மரமாகப் பின்னி கிடந்தது அதனை ரசிக்கத் தான் மனமில்லை சமூகம், மக்கள், வாழ்கை நெறி என்று பெண்கள் மருகி நிற்க எங்கிருந்து ரசிப்பது.

வஞ்சி,இந்தாருங்க நான் என் வேலையதேன் ஒழுங்கா செஞ்சேன்.பச்ச மண்ணு அதுகிட்ட பாசமா நடந்து கிட்டது ஒரு குத்தம்மா?எனக்குக் கண்ணாலம் ஆகி இருந்தா?என் புருஷன் கூட இருந்தா என்ன செய்வீங்க?

“நல்ல கேள்வி ஆனா அது தான் இல்லையே இருந்தா கதை வேற தான்”

“இப்போ இருக்குனு நினைச்சுக்கிடுங்க எல்லாம் சரியா வரும்.எனக்குக் கண்ணாலத்துல விருப்பமில்ல ஒருமுறை பண்ணாதே ஏழு சென்மத்துக்குப் போதும்...அப்புறம் இது சினிமா கிடையாது என்ன கட்டாயப் படுத்திக் கண்ணாலம் பண்ணிக்க உங்க வாழ்கை முறை வேற என்னோடது வேற நடப்பு இருக்கு புரிஞ்சு நடந்துகிடுங்க”
“பேசி முடிச்சிட்டியா பசிக்குது சாப்பாடு போடு” என்க இவனை எந்த வகையில் சேர்ப்பது என்பது போல் பார்த்து வைக்க தங்கை,தம்பியின் முகத்தில் இளம் கீற்றுப் புன்னகை தமயன் இலகுவாகப் பேசி பார்க்க மனம் குளிர்ந்தது உடன் பிறப்புகளுக்கு.

வஞ்சி கொண்டான் அலட்சியம் எரிச்சலை கிளப்ப மீண்டும் சண்டை போட வந்தவளது புடவையை இழுத்து தூக்க சொல்லி பானு அவளது முகம் பார்த்து நிற்க அனைத்தும் மறந்து போனது அரிவை பெண்ணுக்கு “எஞ்சாமி பசிக்குதா அம்முக்கு?” என்றவளை முறைத்துக் கொண்டு நின்றாள் மாலா

‘இது திருந்தாத கேசு’ என்று எண்ணியவர் மதுவை கண்களால் அழைத்து விட்டு துளசி இருக்கும் அறைக்குள் செல்ல வஞ்சி மற்றும் வஞ்சி கொண்டான் பிள்ளைகளுடன் தனித்து விட பட்டனர் வேண்டுமென்றே தான் மாலா விட்டு சென்றார் அவரும் ஒரு முடிவுக்கு வந்து இருந்தார்.அது என்னவென்றால் இனி வஞ்சியின் வாழ்கை அவர்கள் வசமென்று,

இருந்தாலும் சிலவற்றைப் பேசி தெளிவு கொள்ள வேண்டும்.வஞ்சியிடம் பேசுவது என்பது அத்தனை சுலபம் அல்ல என்று தெரிந்தாலும் பேசியே ஆக வேண்டும்.தனக்கு கிட்டாத வாழ்கை அவளுக்காவது அமைய வேண்டும்.

இந்த வீட்டில் இன்னும் ஆள் உண்டு அவர் மூலம் தான் மாலா பழக்கம் அவரை எண்ணியவளுக்குத் துக்கம் தொண்டையை அடைக்க.எத்தனை பெரிய சொர்கம் தான் இழந்தது எண்ணியவர் கண்ணில் இருந்து குருதி பெருக அதனை உள் எழுத்து கொண்டாள்.

தனித்து விடப்பட்ட வஞ்சி கொண்டான் ஒன்றுமே நடவாதது போல் “என்ன பெயர் இவளுக்கு”

“....” மௌனம் கொண்டது பெண்

“உன்னைத்தான் கேக்குறேன் வஞ்சி என்ன பெயர்” சற்று அதட்டலாகக் கேட்க

“இன்னும் பெயர் வைக்கல”

“ஓ!......அப்போ என் பொண்ணுக்கு நான் தான் வைக்கனும்” என்றவன் அவளுடன் விளையாட அவனது அலட்சிய போக்கு கோபத்தை கொடுக்க.

“நீங்க பண்ணுறது சரியா?”

“எனக்குச் சரினு தோணுது”

மனுஷன் பேசுவான இவன்கிட்ட என்று எண்ணியவள் வேகமாக மாலாவை நோக்கி சென்றாள்.பிள்ளையிடம் பேசி கொண்டு இருந்தவன் அவள் செல்லவும் அவளை நோக்கி தனது பார்வையை செலுத்தினான்.

அவளைக் கொஞ்சி கெஞ்சி கல்யாணம் செய்யவெல்லாம் நேரமும் இல்லை வயதும் இல்லை வரிசை கட்டி கொண்டு பொறுப்புகள் நிற்க எங்கிருந்து தொடங்கி எதைச் சரி செய்வது என்று தெரியாமல் திணறி கொண்டு இருந்தான்.

அது சரி பெற்ற பிள்ளையை மறந்து திரிந்தவன்…….உண்ண உடுக்க மறந்து இருந்தவன்……… பொறுப்பில்லாமல் கிடந்தவன் ……….வஞ்சியைப் பார்த்தவுடன் பொறுப்புகள் அனைத்தும் வரிசை கட்டி கொண்டு நிற்க அவனும் என்ன செய்வான் பாவம்.

மாலாவை பார்த்து “அக்கா” என்று பேச துவங்கியவளை கை நீட்டி தடுத்தவள் “முதல பிள்ளைகளுக்குச் சாப்பிட கொடு அப்புறம் மது ரூமுக்கு வா பேசி முடிவெடுக்கலாம்” என்றவர் துளசிக்கு துணி மாற்றி அவளுக்குச் சாப்பிடும் முன் கொடுக்க வேண்டிய மாத்திரையை மதுவின் உதவியுடன் கொடுக்க ஆரம்பித்தார்.

பிள்ளைகள் பசியை உணர்ந்த வஞ்சியும் வாயாடாமல் வேலைகளைச் செய்தாள்.உடையவனும் வேலை முடிந்து வர வெகு நாட்களுக்குப் பிறகு அந்த வீட்டில் அனைவரும் ஒன்று கூடி உண்டனர்.துளசிக்கு உணவை கொடுத்து படுக்க வைத்து அனைத்தும் ஒழுங்கு செய்து வர வெகு நேரம் பிடித்தது.

பானுவும் வஞ்சியின் கொடுக்கும் உறங்க இருவரையும் மதுவின் அறைக்கே தூக்கி கொண்டு வந்தவள் “மது நீ கொஞ்ச நேரம் துளசி கிட்ட படுத்துகீறியா நான் கொஞ்சம் நாழி கழுச்சு வரேன்”

சரியென்பது போல் தலையை ஆட்டியவள் படுக்கையை எடுத்து கொண்டு துளசி அறை செல்ல மாலா உள்ளே நுழைந்தார் இரு பெண்களும் சிறுது நேரம் மௌனம் கொண்டனர்.
********
“நான் சொல்லுறத கொஞ்சம் அமைதியா கேளு வஞ்சி”

“ஹ்ம்ம்….”

“நான் நாலும் யோசுச்சு தான் இந்த முடிவுக்கு வந்து இருக்கேன் நீ பெரிய தம்பிய கல்யாணம் பண்ணிக்கோ”

“அக்கா!............”

“நான் சொல்லுறதை முழுசா கேளு அப்புறம் உன் முடிவு”

“கல்யாணம் பண்ணா ஒருத்தனுக்குப் பொண்டாட்டிய இருக்கலாம் தேவை இல்லாத ஏச்சு பேச்சும் வராது நான் சொல்லுறது புரியும் நினைக்கிறேன்”

“ஏன்க்கா நீங்க இல்லையா? நீங்க மானமா பொழைக்கலையா?”

“நான் வேற வஞ்சி”
“எல்லாம் ஒன்னு தான் பார்க்க போனா என்ன விடக் கல்யாணம் பண்ணாம இருக்குற உங்களுக்குத் தான் பிரச்சனை அதிகம்”

“உண்மை தான் ஆனா எனக்கு நல்ல மனுசங்க கிடைச்சாங்க என் தங்கிச்சிங்கள பக்கத்துக்கு வீட்டுல விட்டுட்டு தான் வேளைக்குப் போவேன் அம்புட்டு சனமும் அவுக பிள்ளைங்க மாதிரி பார்த்தாங்க நானும் கவலை இல்லாம என் கடமையை செஞ்சேன். எனக்கும் தொந்தரவு இருந்துச்சு தான் நான் தைரியமா இருந்தேன் எவனும் என்ன ஒன்னும் பண்ண முடியாது அந்தத் தைரியம் உனக்கு இருக்கா சொல்லு” என்க தலையைக் குனிந்து கொண்டாள் வஞ்சி.

“உனக்குத் தைரியம் பத்தாது, சின்ன வயசு அதுவும் பொண்ண பெத்து வச்சு இருக்க உனக்கு ஒரு நல்ல வாழ்கை அமையும் பொது நான் ஏன் தடுக்கணும்.இந்த மாதிரி சூழ்நிலை வரலைனா கண்டிப்பா உன்ன நான் கடைசி வரைக்கும் வச்சு பார்த்து இருப்பேன் அதுக்கு எனக்குத் தெம்பு இருக்கு ஆனா இப்போ சூழ்நிலை வேற மாதிரி இருக்கு”

“உங்களுக்கு இது சரி வரும்னு தோணுதாக்கா? இப்போ எல்லாம் நல்லதா தோணும் குடும்பம் நடத்தும் போது தான் தெரியும்.மது,துளசி,பானு அவுங்கள கொண்டு தான் இந்தக் கண்ணாலம் இந்த மூணு பொண்ணுங்க பத்தாதுன்னு என் பொண்ணு கடமை இருக்கு விவரம் தெரியாத வரைக்கும் பிள்ளைகளுக்குச் சரி அப்புறம்?,

சூழ்நிலை எப்போ வேணாலும் மாறும் எப்படி வேணாலும் மாறும் யாருக்கும் யாரும் உத்தரவாதம் கொடுக்க முடியாது.இப்போ சொல்லலாம் உன் பொண்ணு என் பொண்ணு மாதிரின்னு நாளு போகப் போக வெறுமை தான் வரும்.சுமை கூடும் பொது நாங்க தேவை இல்லாத சுமையா கூடத் தெரியலாம்”

“சரி தான் வஞ்சி இதே நிலைமைல தான் நானும் இருந்தேன் இதே மாதிரி தான் யோசுச்சேன்” என்றவர் மேலும் தொடர முடியாமல் சிறுது நேரம் தன்னைக் கட்டுப் படுத்திக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார்.

“என் நிலை வேற வஞ்சி மது கல்யாணம் பண்ணி போயிட்டா இதுங்க மூணும் தான் பணத்துக்குப் பஞ்சமில்ல.உடையவனைக் கட்டிக்கப் போற பொண்ணும் நல்ல மாதிரி தான் அவளும் உனக்குத் துணையா இருப்பா

“அக்கா.....”

“நான் சொல்ல வரதை கேளு உன்ன கட்டாயப் படுதலை ஆனா உனக்கும் உன் பொண்ணுக்கும் இதை விடப் பாதுகாப்பான இடம் வேற இல்லை.இரண்டாவது கல்யாணம் அசிங்கம் யோசிக்காம அது ஒரு பாதுகாப்புன்னு மட்டும் யோசி”

“அப்போ என்ன தப்ப பேசுனது உண்மை ஆகாத?”

“யாருக்கு உன்ன நல்லவன்னு நிரூபிக்கப் போற முதல்ல அவுங்கெல்லாம் உனக்கு யாரு?..... சொல்லு வஞ்சி?”

“..........”

“பேசுறவங்க நீ நல்ல இருந்தாலும் பேசுவாங்க நல்ல இல்லாட்டியும் பேசுவாங்க. அவுங்க பேச்சுக்கு நீ காது கொடுத்தா வாழவே முடியாது.சரி நான் கேக்குறதுக்குப் பதில் சொல்லு நீ சரியான பதில் சொல்லிட்டா இந்தக் கல்யாணம் வேணாம்” அப்பாடா என்று வேகமாக தலையை ஆட்டியவளை கூர்மையாகப் பார்த்தவர் தனது கேள்வி கணைகளைத் தொடுத்தார்.

“நம்ம இங்க இருந்து போய் உனக்கு வேற வேலை பார்த்து வைக்கிறேன்னு வை அங்கையும் எதோ ஒரு பிரச்சனை வருது என்ன பண்ணுவ?”

“உண்மை தானே தெரிந்த குடும்பம் என்பதால் தான் இங்கு வந்தது இங்கே இப்படி என்றால்…..”

“சரி நீ வேலைக்கி போக வேண்டாம் நான் தையல் கத்து தரேன்னு வை எத்தனை நாள் என் தயவுல இருப்ப எனக்கு எதாவது ஒண்ணுன்னா என்ன பண்ணுவ தனியா இந்த ஊருல இருந்து புள்ளைய வளர்த்துருவியா?”

“உங்களுக்கு எதுவும் ஆகாது”

“முட்டாள் தானமா பேசாத வஞ்சி இன்னக்கி இருப்பார் நாளைக்கி இல்ல அந்த மாதிரி போய்கிட்டு இருக்கு.நீ உலகம் தெரியாத புள்ளையா இருக்க நிதர்சனம் புரிஞ்சு நட,அங்கன பொழைக்க முடியாம தான் இங்க வந்த இங்க முடியலைன்னா எங்க போவ”

‘அக்கா சொல்லுறது உண்மை தானே இங்கனையும் முடியலைன்னா எங்கன போறது’ என்று எண்ணினாள் அரிவை
“தைரியம் பிறவி குணம் கிடையாது தனக்கு ஒரு ஆபத்துனா முதல நீதான் போராடனும் அடுத்தவன் ஒரு அடி அடிக்கிற முன்னாடி உன் கை அடித்து இருக்கனும்.அழுது வடியாம எது வந்தாலும் பார்த்துக்குவேன்னு சொல்லு இந்தக் கல்யாணம் வேணாம் நம்பப் போய்டலாம்,

பிள்ளை வளர வளர பொறுப்புகள் கூடும்.ஒரே பொண்ணு தானேனு நினைக்காத அந்த ஒரு பொண்ண காமந்து பண்ணி வளர்க்க பாதி ஜீவன் போய்டும் அந்த மாதிரி இருக்கு நம்பச் சமூகம் இன்னும் ஆண்டுக் கூடக் கூட நிலை இன்னும் மோசம் ஆகுமே தவிர இலகாது நான் சொல்லுறது புரியுதா”

“ஹ்ம்ம்…… “என்று தலை ஆட்டியவளை பார்க்க பாவமாகத் தான் இருந்தது.இருந்தாலும் இளம் குருத்தாக நிற்கும் அவளைத் தனியே விட மனம் ஒப்பவில்லை.அவர் திருமணத்திற்குத் தயங்கியதே குழந்தைகளைக் கொண்டு இந்த திருமணமா? என்பதற்காகத் தான் ஆனால் வஞ்சி கொண்டான் நடவடிக்கை அப்படி இல்லையென்று தோன்றியது.

“இது எல்லாத்தையும் விடு வஞ்சி எனக்கு இந்தக் குடும்பத்தை எப்படி தெரியும்னு உனக்குத் தெரியுமா?”

“தெரியாது” என்பது போல் தலையை மட்டும் ஆட்ட மாலா அவர்களது பழக்கத்தைச் சொல்ல சொல்ல ஆ! வென்று வாய் பிளந்து நின்றாள் வஞ்சி

இது என்னடா கிணறு வெட்ட பூதம் வருது!.....
 
வஞ்சி கொண்டான்
மனச தொடுறானே

அருமையான பதிவு
 
Top