Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணு மூன்று

Advertisement

Kalaiyarasi

Active member
Member
அணு மூன்று:-
269
270மொட்டை மாடிக்கு சென்றவனுக்கு ஆத்திரம்னா ஆத்திரம் உங்க வீட்டு எங்க வீட்டு ஆத்திரம் இல்லங்கோ.... எல்லாம் அங்க நம்ப பொண்ணு நின்னுட்டு இருந்த கோலத்தை பாத்துதான்...

திமிரு திமிரு உடம்பு புல்லா திமிரு ஏறிப்போய் சுத்தரா கடன்காரி....

என்ன எழில்மாறன் வந்துட்டு ஒன்னும் பேசாம நிக்கறீங்க??? நம்ப ஆளுக்குத்தான் பின்னாடியே கண்ணிருக்கே திரும்பவே இல்லையே

எவன் பொண்ணு பாக்க வந்தாலும் இப்படித்தான் சீவி சிங்காரிச்சிட்டு வந்து நிப்பியா???

இதனால நான் கோவம் படுவேன்னு நினைசீங்கனா... உங்க மிஸ்டக் பாஸ்... கண்டிப்பா யாரு வந்திருந்தாலும் இதைவிட ஒரு கோட்டிங் அதிகமா குடுத்து தான் நின்னிருப்பேன்.... கெத்தா சொல்ல

(டேய் டேய் கொலைகாரப் பாவி என்னடா பண்ற அவள விடுடா ஐயோ நான் சின்ன பொண்ணுடா)

அவள் சொன்ன அடுத்த செகண்ட் அவள பின்னாடி இருந்து முன்னாடி திருப்பியவன் அவளோட உதட்டை அழுத்தமாக பிடித்து...

அப்டியா!!!! இந்த உதடு இருக்கே உதடு என்ன ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுது அதோட பேச்சாள... என்ன பண்ணலாம் இத... என்று யோசிப்பது போல் சொன்னவன் அவள் பதிலளிக்க எங்க டைம் குடுத்தான்... அவளோட உதட்டுல தான் கவிபாட ஆரம்பிச்சுட்டானே???

இதுல அதிசயம் என்னனா நம்ப வாயாடி எதும் பண்ணாம அமைதியா இருந்தது தான்....

அவன் முத்த போராட்டத்தை நிறுத்தியவன் அவளை கேலியாக ஒரு பார்வை பார்த்து,

வேற யாரா இருந்தாலும் இப்டிதான் அமைதியா இருப்பியா என் அழகி!!!!

ஆமான்னு சொல்லத்தான் நம்ப ஆளு வாய் எடுத்தா ஆனா அதுக்குள்ள அவன் சொன்ன வார்த்தையில் கப்சிப்புனு ஆயிட்டாளே உயிர் முக்கியம் மக்களே...

அப்படிதான் சொல்லி பாரேன் உன்னைய இங்கைவே கொன்னு பொதச்சிட்டு போயிட்டே இருப்பேன்... நீ எனக்கு மட்டும்தான்!!!! நான் உனக்கு மட்டும்தான்!!! இதுல சும்மான்னு கூட நடுவுல யாரும் வர நான் அனுமதிக்க மாட்டேன் அண்டர்ஸ்டாண்ட்... என அவள் கழுத்தில கையை வைத்து அழித்திண்டே சொல்ல,

ஒரே ஒரு நிமிஷம் தான் அதிர்ச்சியாகி நின்னது கூட அவனை தள்ளி விட்டுட்டு

சீ இப்படித்தான் பொண்ணு பாக்கற எல்லார் கிட்டயும் நடந்துக்குறீங்களா.... சீட்.... என முறைத்து கொண்டே கேட்க

ஆமாண்டி!!! என்ன பண்றது பொண்டாட்டி சரியில்லைன்னா.. இன்னொருத்தனுக்கு பொண்டாட்டி ஆக போறவ கிட்டலாம் இந்த மாதிரி தான் நடக்க வேண்டியதாகும்... ஏன்னா எங்க அம்மாலாம் என்ன பொம்பள பொறிக்கியால வளர்த்து விட்டு வச்சி இருக்காங்க அப்டியே... அடிங்க அடிச்சேன்னு வச்சுக்கோயேன் பல்லெல்லாம் தெறிச்சு போய்டும்...

எங்க அடிங்க பாக்கலாம்... அதுவரைக்கும் நான் சும்மா இருப்பேனா என்ன??? எகிறி கொண்டே கேட்க... (சும்மா நின்னுட்டு இருக்காளேன்னு சந்தோஷப்பட்டேன் அதுக்குள்ள சொறிஞ்சி விட்டுட்டியே ??)

ரியலி..... என்று புருவத்தை உயர்த்தி கேட்டவன் அதே சாக்கில் அவள் இடுப்பை பிடித்து இன்னும் நெருக்கத்தில் நிறுத்தி இருந்தான்....

நான் கிஸ் அடிக்றதா பத்தி தான்பா சொன்னேன் என அப்பாவி போல் மூஞ்சை வச்சி சொன்னவன்.... நீயும் அடிப்பேன்னா எனக்கு ஒரு அப்ஜெக்க்ஷனும் இல்லயே!!?? நீதான் இனி சொல்லணும்.. யாரு பஸ்டு ஆரம்பிக்கலாம்னு என்று அவள் உதட்டின் பக்கத்தில் நெருங்க,

அவன் பேச்சில் பேன்னு நின்னவள்... அடுத்து அவன் செய்ய போகும் செயலை யூகித்து அவனை உதறி தள்ளி அவனுக்கு எட்டாத தூரமென்று நகரந்து நின்றித்திருந்தாள்....

அவள் செயலில் வாய்விட்டு சிரித்தவன்....
ஹா ஹா என்னடி பொண்டாட்டி முன்னெச்சரிக்கையா??? என்னைக்கா இருந்தாலும் நீ எனக்குதான்.... அதனால ரொம்பல்லாம் சீன் போடாதா என்ன!!! அச்சோ பாரு... உன்ன பாத்ததும் சொல்ல வந்த விஷயத்தெல்லாம் மறந்துட்டேன்.. கீழ கல்யாணத்துக்கு சம்மந்தம்னு கேட்டா ஆமான்னு சொல்லணும் புரியுதா... இல்ல வேற எதனா சொன்னேன்னு வச்சுக்கோயேன்... என பொறுமையாகதான் சொன்னான்....

ஹி ஹி நம்ப செல்லக்குட்டி அப்படியெல்லாம் ஒத்துக்குமா என்ன???

முடியாதுனு சொன்னா??? பாருங்களேன் வீம்பு வேற ஒன்னும் இல்ல....

வெறி சிம்பிள்.... உன் கழுத்துல தொங்கிட்டு இருக்க தாலிய கழட்டி கொடுத்துட்டா போயிட்டே இருப்பேன்னு சொன்னது மட்டும்தான் தெரியும்... அடுத்து அவன் கேட்டதோ காதில் வந்த கொய்ன்னு ஒரு சத்தத்தை தான்??....

(யார்ரா அதுனு பார்த்தா.... அடிஆத்தி இவ என்ன காளி மாதிரி நிக்குறா ?? மீ எஸ்கேப் நீயே சமாளிச்சிக்கோ பா)


உயிர்க்கும்.....
அணுவணுவாய்....
 
Top