Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மறந்தேன் உன்னால் 2

Advertisement

Divyathiru

Member
Member
மலை வணக்கம் சகோதரிகளே ,
மறந்தேன் உன்னால் போஸ்ட் போட்டுருக்கேன் வாசிச்சிட்டு கமெண்ட் பண்ணுங்க. like & comment pannunga.

மறந்தேன் உன்னால் 2

இருவரும் அவரவர் நினைவில் மூழ்கியிருந்தனர்.அந்நேரம் கதவு தட்டப்பட்ட ..........சிந்தனை கலைந்து எழுந்த கண்மணி, வேகமாக போய் கதவை திறக்க.....

வெளியில் நின்ற, "தன் பெற்றோரை மகிழ்ச்சியாக வரவேற்றாள்".

அம்மா என்று ஓடிப்போய் தன் அன்னையை கட்டிகொண்டவளுக்கு
இதுவரை இருந்த கவலைகளும் கலக்கங்களும் தீர்ந்த மாதிரி இருந்தது. "சொந்தம் குடும்பம் என்று இருந்தவர்கள் இன்று தங்களை வெளியே அனுப்பி இருக்க".........

பெற்றோரை பார்த்ததும் ,இதுவரை இருந்த கலக்கங்கள் எல்லாம் போய் மகிழ்ச்சியாக இருந்தது," இனி என்ன வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம்" என்ற தைரியமும் ஒருங்கே வந்தது. தங்களுக்கும் சொந்த பந்தம் என்று தன் தாய் தந்தை தன் உடன்பிறந்தவர்கள் இருக்கிறார்கள் என்ற எண்ணமே காரணமாக இருந்தது.

அதும் தன் அம்மாவிடம்,....... என்ன அம்மா காலையில அக்கா வீட்டுக்கு போறேன்னு சொன்னீங்க....
அங்கிருந்து இப்போதான் வந்திங்களா...................... ஆமா மணி

வந்ததும் பக்கத்துக்கு வீட்டு செல்வி ஓடிவந்து விசயத்த சொன்னதும் பதறி ஓடி வந்தோம்.

என உள்ளே வந்தவர்கள்; உடனே, "என்னதான் நடந்தது ?........ வந்ததும் கேள்விக்கணைகளை தன் மகளை நோக்கி திருப்பினார் பத்மா.

கேள்வி கேட்ட தன் தாயும் தந்தையும் பார்த்த கண்மணி; "என்ன சொல்ல என்பது போல் தன் கணவனை பார்க்க?....

.........பார்வையாலேயே சொல் என்றான்.

அம்மா அது வந்து தயங்கி நின்றவள், பெருமூச்சு ஒன்றினை விட்டு சொல்ல ஆரம்பித்தாள்; அம்மா," நான் இன்னைக்கு உங்கள பாக்க வந்தது தான் பிரச்சனை மா.......என இடைவெளிவிட்டு

அம்மா ஏற்கனவே கல்யாணத்துல நடந்த பிரச்சனையால, என்கிட்ட நம்ம வீட்டுல உள்ளவங்க யாருகிட்டயும் பேச கூடாதுன்னும் நம்ம வீட்டுக்கு வர கூடாதுன்னும் சொல்லிட்டாங்க அத்த......

.......... அதான் உங்களுக்கே தெரியுமே ...... அதையும் மீறி உங்க கிட்ட பேசிட்டேன்னு தான் அவங்களுக்கு கோபம்.

அம்மா..... அப்புறம், கொஞ்சம் பேசிட்டேன் மா........

அதற்கு அவர் தன்
மகளை தீயாக முறைக்க

............தாயின் முகத்தைப் பார்த்தவள்.......
........தயங்கிக்கொண்டே மேலும் பேசியவற்றை சொல்ல ஆரம்பித்தாள்.

இன்று காலை எழுந்தது முதல் கண்மணிக்கு ,"தன் பெற்றோர் நினைவாக இருக்க" எழுந்து தன் வேலைகளை செய்து முடித்தவள்;
தங்கள் அறையில் சோகமாக அமர்ந்து இருந்தாள்.அவள் சோகமாக இருப்பதை பார்த்த கதிர்

கட்டிலில் படுத்திருந்தவன் தன் பக்கத்தில் இருந்த மனைவியின் மடியில் தலை வைத்துக் கொண்டு
" என்ன கண்மணி என்றைக்கும் இல்லாத திருநாளா இன்றைக்கு ரொம்ப அமைதியா இருக்க" ஏற்ற இறக்கத்துடன் பேசி அவளை கிண்டல் செய்ய.....

ஐயோ போங்க மாமா.....
என சிணுங்கிக்கொண்டே போங்க போங்க நான் கவலையா இருக்கேன் என அவரது தோளில் அடிக்க ஆரம்பித்தாள்.

அய்யே," இவ்ளோ சந்தோசமா...மா........ கவலையா இருக்கிற ஒரே ஆள் உலகத்திலேயே நீ ஒருத்தியாதாம்மா இருப்ப...." என மேலும் கிண்டல் பேச

"ஐயோ போங்க மாமா" உண்மையாவே எனக்கு ரொம்ப கவலையா இருக்கு; அம்மாவை பாக்கணும் போல இருக்கு ¥என சோகமாக சொல்ல........

அவளது முகத்தைப் பார்த்த கதிருக்கு என்ன தோன்றியதோ, சரி மா ," கொஞ்சம் பொறுமையா யோசித்த கதிர் "ஏதோ முடிவெடுத்தவனாக ;ஒரு அரை மணி நேரத்துல நான் வேலைய முடிச்சிட்டு வரேன் ரெண்டு பேரும் கோயிலுக்கு போறதா சொல்லிட்டு உங்க அம்மாவீட்டுக்கு போயிட்டு வந்துடலாம் அவளின் கண்ணம் பற்றி சொல்ல

மாமா ....
.......அது வந்து,.
..... ஏற்கனவே அத்தை தினமும் சொல்லிகிட்டே இருப்பாங்க...
," அம்மா வீட்டுக்கு போகணும், அக்கா வீட்டுக்கு போகணும் ,அம்மா அப்பாவ பாக்கணும் அவங்க கிட்ட பேசணும் அப்படின்னு இருந்தா மறந்திடு ; அப்படின்னு சொல்லிகிட்டே இருப்பாங்க," இதுல நாம ரெண்டு பேரும் அங்க போனா என்ன ஆகுமோ? பயமா இருக்கு மாமா... என அவனின் கைகளை பிடித்து சொன்னாள்.

இருந்தும் எத்தனை நாள் ஒரே ஊரில் பக்கத்து தெருவில் இருந்துகொண்டு," தன் தாயை தந்தையை பார்க்காமல் இருப்பது........." என்று கவலையாக இருந்தது கண்மணிக்கு.

அவளது முகத்தைப் பார்த்து அவளது மனதைப் படித்த கதிரவன்......

சரி சரி...... இனி எதை பத்தியும் யோசிக்காத.. நீ கிளம்பி ரெடியா இரு நான் பாத்துக்குறேன்....

என்று அவளிடம் சொல்ல அவளும் சந்தோஷமாக தலையாட்டினாள். அவளது சிரித்த முகத்தை பார்த்து கதிரவனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது .அவளது கன்னத்தை தட்டி சந்தோசமாக அவன் வெளியில் கிளம்பி சென்றான்.

கொஞ்ச நேரத்தில் திரும்பி வந்து சித்தியிடம் சொல்லிக் கொண்டு இருவரும் கோயிலுக்கு சென்றனர். திரும்பி வரும் வழியில் கண்மணியின் பெற்றோர் வீட்டுக்கும் சென்று வர,

எதிரில் கடைக்குப் போய்விட்டு திரும்பி வந்த தன் சித்தியின் கண்களில் சிக்கிக் கொண்டனர் இருவரும்.

இருவரையும்," தன் அண்ணன் வீட்டில் இருந்து வெளி வருவதை பார்த்து கோவமாக விருவிருவென வீட்டிற்கு வந்து..... தனது பாட்டை ஆரம்பித்துவிட்டார்".

அப்போதுதான் வயலுக்கு

சென்றுவிட்டு உணவு உண்ண வந்தார் பெருமாள்.

வந்ததும் தங்கம் தன் கச்சேரி ஆரம்பிக்க,

கை கால் கழுவ சென்ற பெருமாள் இவரது சத்தம் கேட்டு முன்னறைக்கு வர ,அவரைப் பார்த்ததும்
ஒப்பாரி வைக்கவே ஆரம்பித்து விட்டார்......அவர் என்ன என்பது போல் பார்க்க....
எப்போதுமே அவர் அப்படித்தான். அதிகம் வார்த்தைகள் செலவழிக்க மாட்டார். ஆனால் ஒருவரும் தட்டி சொல்ல முடியாதபடி அவர் பார்வையிலும் அவர் பேச்சிலும் ஆளுமை அதிகமாக இருக்கும்.

ஏங்க.....
" உங்க பேச்சுக்கு கொஞ்சமும் மரியாதை இல்லாம இதுங்க ரெண்டும் அங்க அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டு வருதுங்க."

கல்யாணத்தன்னிக்கு தான் அவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு ......... அப்போதும் அந்த வீட்டு நினைப்பு உனக்கு இருக்கக் கூடாதுன்னு நானும் தினமும் சொல்லிக்கிட்டு இருக்கேன் அவ அதை கூட பொருட்படுத்தாம
அவ அந்த வீட்டுக்கு போயிட்டு வந்து இருக்கா.

என திட்டி கொண்டு இருக்க
சரியாக வெளியில் சென்ற இருவரும் வீட்டிற்கு வந்தார்கள்

அவர்கள் இருவரையும் பார்த்ததும்,..... தங்கத்திற்கு கோபம் அதிகமாக வரும் அதிகமாக வார்த்தைகளை கடத்தி திட்ட ஆரம்பித்துவிட்டார். அவர் திட்ட ஆரம்பித்ததும் அக்கம்பக்கத்து வீட்டினர் வீட்டின் முன் கூடிவிட்டனர். ஏதோ பிரச்சனை அதனால் தான் சத்தம் கேட்கிறது என்று.

கிராமத்தில் எப்போதும் அப்படித்தான் ஏதோ பக்கத்து வீட்டில் சத்தம் கேட்கிறது," எனக்கு என்ன இருக்க மாட்டார்கள்".

உடனே வீட்டிற்குள் சென்று என்ன பிரச்சனை? எதற்காக பிரச்சனை? எனக் கேட்டு சண்டை போடுவர்களை பிரித்து விட்டு சமாதானம் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

அதை தான் இங்கேயும் நடந்தது.

பக்கத்து வீட்டுக்கார வயதான பாட்டி ஒருவர் வீட்டுக்கு ஓடி வந்து, தங்கம் என்னத்தா? எதுக்கு இவ்வளவு சத்தம் போட்டுட்டு இருக்க பிள்ளைகளை....? எனக் கேட்டுக் கொண்டு அவரை அமைதிப்படுத்த முனைந்தார்.

"எங்கே தங்கமா அமைதியாவது அப்படி ஒன்னு நடக்குமா என்ன...?"

அந்த பாட்டியை பார்த்ததும் மீண்டும் கத்த ஆரம்பித்தார்.
........ அத்த அவங்க ரெண்டு பேரையும் வீட்டை விட்டு வெளியே போக சொல்லுங்க..... என் புருஷன் பேச்சை கேட்காத ,"அவங்களுக்கு இந்த வீட்டில இருக்க தகுதியே இல்ல சொன்ன பேச்சைக் கேட்காத அவங்களுக்கு எங்க வசதிபடுதோ?... அங்க போய் இருக்க சொல்லுங்க"....... இப்போ இந்த வீட்டை விட்டு வெளியே போ சொல்லுங்க............. என கத்த ஆரம்பித்தார்.

அவர் பேசுவதைக் கேட்டு எல்லோரும் அதிர்ந்து நிற்க ,"அதில் மிகவும் காயப்பட்டு போனது என்னவோ கதிர் தான்......."

அவனைப் பார்த்த கண்மணிக்கு மிகவும் வருத்தமாக போனது. தனக்காக பார்க்கபோய் இப்போது தன்னுடன் அவனும் வெளியில் வர வேண்டும், என்று கவலையாக இருந்தது.

இருந்தாலும்," அவர் பேசுவது பிடிக்காமல் அத்தை என்ன பேசுறீங்க? என்னத்த தப்பு பண்ணிட்டோம்?
"என்ன எங்க அம்மா வீட்டுக்கு போனது அவ்வளவு பெரிய தப்பா என்ன......." என கேள்வி கேட்டாள்

அதுவரை அமைதியாக இருந்த பெருமாள்," என்ன நினைத்தாரோ தெரியாது......"

அவரும் பேச ஆரம்பித்தார்

" அம்மா கண்மணி தங்கம் சொல்லுறதும் சரிதான்," எப்போ எங்க பேச்சை மீறி ரெண்டுவரும் வெளிய போயிட்டு வந்தீங்களோ.....?

...........அப்பவே அவ சொல்வது சரியா போச்சு உங்க இஷ்டப்படி வாழ நீங்க தனியா தான் போகணும் ".
என தன் பேச்சை முடித்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார்.

அதன் பிறகு எதுவும் பேசத் தோன்றாமல், கதிர் கண்மணியின் கைகளைப் பிடித்துக் கொண்டு தங்கள் அறைக்குச் சென்று தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு வெளியில் வந்து விட்டனர்.

என்று ஒருவழியாக நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தவள். பின்பு, தாங்கள் வெளியில் வந்ததும் கதிரியின் பெரியப்பா லிங்கம் தான்......

பண்ணை வீட்டின் சாவியை கொண்டு வந்து தந்து தங்களை இங்கு அழைத்து வந்ததாகவும் சொல்லி முடித்தாள் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை தங்களை பழிவாங்க தங்கம் எடுத்த முடிவுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இருவரும் நின்றனர்.

ஆனால் எல்லார் மனதிலும் நின்றது ஒன்றே ஒன்றுதான் ராஜனை பழிவாங்க தங்களை வெளி அனுப்பியது என்று. ஆனால் ராஜனை பழிவாங்க," இன்று, அவர் செய்த செயளில் அதிகமாக காயப்பட்டது என்னவோ கதிர் தான் ...... தன் அதுவும்பழிவாங்கும் எண்ணத்தில் தன் பிள்ளை கதிரை அவர் மறந்து விட்டார்.

மறப்பான்.
 
Last edited:

ஆனால் எல்லார் மனதிலும் நின்றது ஒன்றே ஒன்றுதான் ராஜனை பழிவாங்க தங்களை வெளி அனுப்பியது என்று. ஆனால் ராஜனை பழிவாங்க," இன்று, அவர் செய்த செயளில் அதிகமாக காணப்பட்டது என்னவோ கதிர் தான் ...... தன் அதுவும்பழிவாங்கும் எண்ணத்தில் தன் பிள்ளை கதிரை அவர் மறந்து விட்டார்.

மறப்பான்.

Nirmala vandhachu ???
 
Top