Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் தொலைந்தேனடி

Advertisement

Brindha saksi

New member
Member
பகுதி -1

ஆத்தா கருமாரி கண் பார்த்தா போதும் பார்த்தா வினைதீரும் பாவமெல்லாம் பறந்தோடும்

என்று பக்தி மயமாக ஒலிபெருக்கியில் பாடிக்கொண்டிருந்த பாடலை நிறுத்திவிட்டு மைக்கை கையில் எடுத்தான் ஒரு இளைஞன்.

"ஹலோ.. ஹலோ மைக் டெஸ்டிங்.. 1..2..3.." என்றவன் தொண்டையை ஒருமுறை செறுமி விட்டு "பேரன்பும் பெருமதிப்பும் கொண்ட இவ்வூர் ரசிககலா பெருமக்களே இரண்டு நாட்களாய் இடைவிடாது பக்திப் பாடல்களையும், சினிமாப் பாடல்களையும் ஒலிபரப்பிக் கொண்டிருப்பது உங்கள் ராஜ ராகம் ரேடியோஸ்.. உரிமையாளர் ராஜா என்பதை பெருமையுடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்!!" என்று பேசியவனின் பின்னந்தலையில் அடித்தான் இன்னொருவன்..

"உன்னோட மைக்செட்டுங்குறதுக்காக உன் குடும்பப் பெருமையை பேசிட்டு இருப்பியாடா.. சொல்ல வந்த மேட்டர சொல்லுடா !!"

"அத சொல்றதுக்குள்ளதான் அடிச்சுபுட்டயேடா..நான் சொல்ல மாட்டேன் போ".. என்றான் அந்த மைக் செட் மற்றும் ஒலிபெருக்கியில் உரிமையாளரான ராஜா என்ற ராஜபாண்டி.

"நீ சொல்லாட்டி என்ன நானே சொல்லிடுறேன்!!" என்று மைக்கை பிடுங்கியவன் "பெரியவர்களே, சிறியவர்களே, நடுத்தர வயதுக்காரர்களே அனைவருக்கும் தெரியப்படுத்துவது என்னவென்றால், திருவிழாவின் கடைசி நாளான இன்று ஆடல் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.. அனைவரும் குடும்பத்துடன் வந்து கண்டுகளிக்குமாறு விழா கமிட்டியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.. இந்நிகழ்ச்சியை உங்களுக்கு ஏற்பாடு செய்து வழங்கியவர்கள் கட்டுக்கடங்காத காளையர்கள் சங்கம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.. இங்கனம் கட்டுக்கடங்காத காளையர்கள் சங்க தலைவர் சர்வேஷ்வரன்.. துணைத்தலைவர் ராஜபாண்டி.. செயலாளர் மணிகண்டன்.. பொருளாளர் நாகேந்திரன்.. நன்றி வணக்கம்.." என்று மைக்கை ஆஃப் செய்து கீழே வைத்தவன் திரும்பிப் பார்த்தான்.

தன் நரைத்த முறுக்கு மீசையை தடவிக் கொண்டு கழுத்தில் ஒரு பெரிய டர்க்கி டவலை போட்டபடி வெள்ளையும் சொள்ளையுமாக நின்றிருந்த ஒரு பெரியவர் "ஏண்டா மைக்செட் போடுறவன் உன் பிரண்டு.. நீ அந்த சங்கத்து தலைவன்ங்குறதுக்காக இந்த ஒரு விஷயத்தை காலையில் இருந்து நாப்பதாவது தடவை அனோன்சு பண்றிங்கடா.. ஊருக்குள்ள ஒரு சங்கத்தை வச்சுக்கிட்டு சும்மா சுத்திக்கிட்டு திரியிறீங்களே போனா போகுதுன்னு இந்த ஆடலும் பாடலும் பொறுப்பை உங்ககிட்ட கொடுத்தா உங்க அலும்புக்கு அளவே இல்லாம
இருக்கேடா!!"

" சரி விடு பெரியப்பா.. இந்த மாதிரி திருவிழா சமயத்துல தான இப்படி ஒரு சங்கம் இருக்கிறதையே நாங்க ஊருக்குள்ள காட்ட முடியும்.. அதுதான் கண்டுக்கத.." என்று அவரின் நரைத்த மீசையை இரு பக்கமும் ஆட்டி விட்டு சென்றான் நம் நாயகன் சர்வேஸ்வரன் என்ற சர்வேஸ்.

என்ன செய்ய ஊரு பிரசிடெண்ட்க்கு இப்படி ஒரு தறுதலை பய.. அவங்க அண்ணனும் தான் இருக்கான்!! அப்பனுக்கு உதவியா கோயில்ல எம்புட்டு வேலை செஞ்சுட்டு திரியிறான்...இவன் வீணாப்போன அவன் சோக்காலிங்க மூனு பேரு கூட சேர்ந்துக்கிட்டு, பெரியவங்க சின்னவங்கன்னு வயசு வித்யாசம் பார்க்காம எல்லாரையும் லந்தடிக்கிறது... பொம்பள புள்ளைகள பார்த்தா வழுஞ்சுகிட்டு நிற்கிறது.. என்னைக்குதே திருந்த போறானோ!! என்ன செய்ய பிரசிடெண்ட் மூஞ்சிக்காக இவன ஒன்னும் சொல்ல முடியல!!" என்று புலம்பிக்கொண்டே அந்த பெரியவரும் வேலையை பார்க்க சென்று விட்டார்..

அவரின் இத்தனை பாராட்டிற்கும் உரிய சர்வேஷ் தன் நண்பன் ராஜாவுடன் மற்ற இரு நண்பர்களான மணியையும் நாகாவையும் தேடிச்சென்றனர்..

"மாப்ள நம்ம ஊரு ரொம்ப செழிப்பா தான் இருக்கும் போலயேடா.. பாத்தியா ஒவ்வொரு பொம்பளைக கழுத்திலயும் எம்புட்டு நகைனு..!!"

மாப்பிள நீ இன்னும் பச்ச மன்னா தான்டா இருக்க.. அது பூரா கவரிங்கு.. என் தங்கச்சியும் அன்னைக்கு மதுரைக்கு போய் ஒரு பை நிறைய புடிச்சிட்டு வந்துச்சு.. எதுக்குபுள்ள காச வேஸ்ட் பண்றேன்னு கேட்டேன் அப்ப தங்கத்துலயே எல்லாம் வாங்கி தர்றயான்னு கேட்டுச்சு.. இந்தாம்மா இந்த ஐநூறு ரூபாயை வச்சுக்க..இன்னும் என்ன வேணுமோ வாங்கிக்கன்னு சொன்னேன்டா.. அது செலக்ட் பண்ற நகை எல்லாம் தங்கத்துல வாங்கணும்னா ஏதாவது நகைக்கடைய போய் கொள்ளையடிச்சா தான் உண்டு!!"

"எலேய் மெதுவாப் பேசுடா.. யாருக்காவது கேட்டுசுன்னா நாள பின்ன எங்க திருட்டுப் போனாலும் உங்கூட சேர்ந்து என்னையும் புடிச்சிட்டு போயிற போறாங்க!!"

சர்வேசு நீ அம்புட்டு நல்லவனா.. எத்தனை நாள் உங்க வீட்டில் இருந்து மோதிரம் மூக்குத்தி கொலுசு னு திருடிட்டு வந்திருக்க.. நான்லாம் அப்படியா பத்தரை மாத்து தங்கம்டா!!

"அப்படியா!! உன் தங்கச்சியே வர்றா.. அவ கிட்ட உங்க அண்ணனே 68 கிலோ தங்கம் தான் அவனை கூட்டி போயி உருக்கி தலையிலிருந்து கால் வரை தங்கமா மாட்டிக்கன்னு சொல்றேன்!!" என்று அவன் சொல்லி கொண்டிருக்கும் போதே அவர்களை தாண்டி சென்றாள் ராஜாவின் தங்கை ராதிகா.

ஏய்.. இந்தாடி.. மாமா இங்க நிக்கிறேன் கண்டுக்காம போறவ!!" என்றதும்,

"இங்க பாரு சர்வேசு வாடி போடின்னு பேசின வாயை கிழிச்சு விட்ருவேன் கிழுச்சு.. எம்புட்டு தடவை திட்டினாலும் அடங்கவே மாட்டியா டா நீயி..!!" என்று தன் அண்ணனின் புறம் திரும்பியவள் "டேய் நீ எல்லாம் ஒரு அண்ணனாடா!? உன் கூட பொறந்த தங்கச்சிய ஒருத்தே கிண்டல் பண்ணிக்கிட்டு இருக்கியான் ஏதோ சொற்பொழிவ கேட்ட மாதிரி சிவனேனு நின்னுக்கிட்டு இருக்குற!?

எலேய் உனக்கு ஊருக்குள்ள வேற ஆளே இல்லையா.. எப்ப பாரு அவகிட்டயே வம்பிழுத்துட்டு இருக்க!! நீ வீட்டுக்கு போமா தங்கச்சி.. நான் இவன கவனிச்சுக்குறேன்..

"பாத்தியா உங்க அண்ணனே சொல்லிட்டியா.. ஊர்ல எவ்ளோ அழகான பொண்ணுங்க இருக்கப்ப சுமாரான என் தங்கச்சிய ஏன்டா பாக்குறேன்னு!!" என்று அவனை கோர்த்து விட்டதும் ராதிகா தன் முட்டைக்கண்ணி விரித்து தன் அண்ணனை முறைத்துவிட்டு "இன்னைக்கு நைட்டு வீட்டுக்கு தானா வரணும்.. வா சோத்துல பேதி மாத்திரய கலந்து வைக்கிறேன்".. என்று கழுத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு நடந்தாள் ராதிகா.

" அடப்பாவி இன்னிக்கின்னு ஒத்த கிடாவ வெட்டி ஆக்கி வெச்சிருக்கானுங்க.. அதை திங்கவிடாம செஞ்சுடுவ போலயே!!இந்த ராட்சசி பேதி மாத்திர என்ன பூச்சி மருந்தை கலந்து வச்சாலும் வப்பா.. நான் போயி அவள சமாதானம் பண்றேன்.." என்று கெஞ்சிக் கொண்டே தன் தங்கையின் பின்னால் ஓடினான் ராஜா.

சிரித்துக் கொண்டே திரும்பியவனைப் பார்த்து இரண்டு இளம் பெண்கள் ஏதோ தங்களுக்குள் குசுகுசுவென பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்..

அவ்வளவுதான் அதை பார்த்த சர்வேசுக்கு அப்படியே ஒரு வண்டி ஐஸ்கட்டியை தூக்கி தலையில வச்ச மாதிரி ஃபீல் ஆயிடுச்சு.. ரெண்டு பிள்ளைகளுமே பார்க்க விளம்பர மாடல் மாதிரி ஸ்டைலிஷா இருந்துச்சுக.. உடனே ஐயா தன்னோட கெத்தா காட்ட ஆரம்பிச்சுட்டாரு...

வேட்டியை எடுத்து அப்படியே மடித்து கட்டி, சட்டையில தொங்கிட்டு இருந்த கூலர எடுத்து மாட்டிக்கிட்டு, கை சட்ட மடிப்பு கொள்ள அமுக்கி வைத்திருந்த வெள்ளி காப்ப கீழே இறக்கிவிட்டு, மீசைய இரண்டு பக்கமும் நல்லா முறுக்கி விட்டுட்டு, பக்கத்திலிருந்த கடையோட சுவத்துல சாஞ்சு ஒத்த கால ஊனி ஒத்தக்கால மடக்கி அந்த சுவத்துக்கு முட்டுக்கொடுத்து ஸ்டைலா சாஞ்சுகிட்டு போனை எடுத்து யாருக்கோ கால் பண்றான்..

ப்பா..செம ஆளுடா நீ.. அவனை தாண்டி போற பிள்ளைக கண்ணு எல்லாம் அவன் மேல தான் இருக்கு..நீ இப்படி அமைதியா நின்னாலே உன்னை தேடி அம்புட்டு பிள்ளைகளை வரும்.. நீ ஏன்டா ஒவ்வொருத்தர் கிட்டயும் போய் வாய கொடுத்து வாங்கி கட்டிக்கிற!! சரி விடு உன்ன படச்சவன் அந்த டிசைன்ல உன்னைய உருவாக்கிட்டான் போல..

சர்வேஷ் போன் பேசி முடித்த இரண்டு நிமிடத்தில் அவன்முன் வாயெல்லாம் பல்லாக இரு இளைஞர்கள் வந்து நின்றனர்...

பங்கு யாரோ ரெண்டு பொண்ணுங்க உன்னையே வெறிச்சு வெறிச்சு பாக்குதுகன்னு சொன்னியே.. எதுதாப்புல நிக்கிதுகளே அதுக தானா.. சூப்பர் ஃபிகரா இருக்குதுங்கடா.. வாடா போய் பேசலாம்!! என்றான் நாகேந்திரன்.

"மிஸ்டர் நாகு உங்களுக்கு கல்யாணமாகி ஒரு குழந்தைக்கு அப்பாவாயிட்டீங்க.. அதனால அந்த இரண்டு பிள்ளைகளயும் கரெக்ட் பண்ற வேலையை நாங்க பாத்துக்குறோம்.. நீ பேசாம எங்ககூட மட்டும் இரு போதும்.. வாடா மச்சான் போகலாம்!!"என்று சர்வேஷின் கையை பிடித்து இழுத்து சென்றான் மணிகண்டன்.

"ஏண்டா லவ் பண்றேன்னு ஒத்த வார்த்தை தான் சொன்னேன்..எல்லாரும் சேர்ந்து என்னென்னமோ பேசி என்ன அவ தலையில கட்டி வச்சுட்டீங்க.. இப்ப நீங்க மட்டும் ஜாலியா சுத்திட்டு இருக்கீங்க... குடும்பஸ்தன்னு சொல்லி என்னய ஒதுக்கி வச்சுடுறீங்க.. இருங்கடா உங்க மூனு பேத்துக்கும் சீக்கிரம் கல்யாணம் பண்ணி வச்சு நான் பட்ட கஷ்டத்தை உங்களையும் பட வைக்கிறேன்!!" என்று புலம்பிக்கொண்டே அவர்களுடன் சென்றான் நாகு .

"பாக்க வெளியூர் பொண்ணுங்க மாதிரி இருக்கீங்க யார் வீட்டுக்காவது விருந்தாளியா வந்துருக்கீங்களா!? வழி தெரியாமல் தொலஞ்சுட்டீங்களா!? நாங்க வேணா ஹெல்ப் பண்ணவா.. ஏன்னா இந்த ஊர்லயே பொது சேவை செய்றதுனா அது நாங்க மட்டும் தான்.. அது தான் எங்க வேலயே .. என்று வழிந்துகொண்டே பேசி முடித்தான் மணி.

"ஆமா நாங்க தேனியிலிருந்து வந்திருக்கோம்.. என் பிரென்ட் வீடு இங்கதான் இருக்கு.. திருவிழாவுக்கு எங்கள இன்வைட் பண்ணி இருந்தா அதான் வந்தோம்.. தொலஞ்சுலாம் போகல..என் பிரண்டு ஐஸ்கிரீம் வாங்கிட்டு வரேன் போனா அதான் நாங்க நின்னு பேசிட்டு இருந்தோம்.

"ஓ.. தேனிகார பிள்ளைகளா!!சரி சரி.. இல்ல என்ன பார்த்து ஏதோ உங்களுக்குள்ள பேசி சிரிச்சிகிட்டே இருந்திங்க.. என்னைய உங்களுக்கு முன்னாடியே தெரியுமா!?" என்றான் சர்வேஷ் கூலர்ஸை கழட்டி தன் சட்டையில் மாட்டியபடி...

"பாக்க அழகா ஹண்ட்ஸாமா இருந்தீங்க.. அதான் சைட் அடிச்சோம்..ஏன் உங்களுக்கு புடிக்கலையா!? "

"ஐயையோ யார் அப்படி சொன்னா.. நல்லா சைட் அடிங்க..வேணும்னா உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயி ரெண்டு நா கூடவே வச்சிருந்த கூட சைட் அடிங்க.. அதுக்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்..!!"என்றதும் இரு பெண்களும் சில்லறையை சிதர விட்டது போல் சிரிக்க,

"இப்டிலாம் சிரிச்சா எங்க நிலம என்ன ஆகுறது.. கொல்றிங்க போங்க..உங்க பேரு என்னனு தெரிஞ்சுக்கலாமா!?"

"பேரெல்லாம் நல்ல பேர்தான்..ஆமா நீங்க கட்டுக்கடங்காத காளையர்கள் சங்க தலைவர் தானே!?"

"பாருடா எங்க சங்கம் தேனி வரைக்கும் ஃபேமஸ் ஆயிடுச்சா!!"

எங்க ஊர்ல இருக்கவங்களுக்கெல்லாம் இதை பத்தி தெரியாது.. எங்க பிரண்டு தான் சொன்னா..

யாருங்க உங்க பிரண்டு?..ஏன்னா நான் பெருசா எந்த பொண்ணுங்க கிட்டயும் பேசுறதில்லை பழக்கவழக்கம் வச்சிக்கிறது இல்ல.. இப்ப வரைக்கும் சிங்கிள் தான்.. போன் நம்பர் தரேன் நோட் பண்ணிக்கோங்க..ஃப்ரீயா இருக்கப்ப கால் பண்ணி பேசலாம்..

என்னது நீங்க சிங்கிளா!? இல்லையே கமிட்டட்னு கேள்விப்பட்டோமே!!அதுவும் பன்னண்டு வயசுல இருந்து ஒரு பொண்ண லவ் பண்ணிட்டு இருக்கீங்கன்னு தகவல் வந்துச்சே...

யாருங்க இப்படி தப்பான தகவல் எல்லாம் பரப்பி விட்டது.. உங்க பிரண்டா??அந்த பிள்ள பேர் என்ன!?

"பேர் எல்லாம் எதுக்குங்க.. ஆளே உங்க பின்னாடி தான் நிற்கிறா.. பார்த்து தெரிஞ்சுக்கங்க!!" என்றதும் சர்வேஷ் ஸ்டைலாக தன் பின் பாதத்தை தரையில் ஊண்டி ஒரு சுத்து சுத்தி திரும்பிப்பார்க்க தன் எதிரில் நின்றவளை கண்டு விழி விரித்தான்..

சி..லு..க்கு.. நீயாடி...!! உன் பிரண்டா இவளுக கோர்த்து விட்டுட்டாலுகளே!" என்று வாய்க்குள்ளேயே முணங்க, மணியும் நாகுவும் இவ கிட்ட வாய குடுத்து யார் வாங்கி கட்டுகிறது என்று நினைத்து ஆளுக்கு ஒரு பக்கம் ஓடுவதற்காக ரெடியாக அவர்களின் இருவரின் கையையும் பிடித்தான் சர்வேஷ்..

" என்ன நடந்தாலும் சரி நண்பனுக்கு துணையா இங்கேயே தான் நிக்கணும்!!

எதுக்கு.. அந்த புள்ள உன்னய விட்டுட்டு எங்கள தான் கிழி கிழின்னு கிழிக்கும்.. அதுக்கு நாங்க உங்கூட இருக்கணுமாக்கும்!!

எஸ் அப்கோர்ஸ்.. ஹீரோவுக்கு பிரண்டுனா எல்லாத்தையும் சகிச்சிட்டு தான் போகணும்..

அப்படி ஒரு பிரண்ட்ஷிப்பே எங்களுக்கு தேவை இல்லடா!!"என்று மூவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க அவர்களுக்கு எதிரில் நின்றவளோ தன் தாவணி முந்தானையை எடுத்து சுற்றிக்கொண்டு தலையை சாய்த்து புருவத்தை உயர்த்தி வாயை சுழித்து நக்கலாக மூவரையும் பார்த்து சிரித்தாள்.
 
Nirmala vandhachu ???
Best wishes for your new story ma
Nice start ???
 
Top