Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இலக்கிகார்த்தி’ இளந்தென்றலோடு ஒரு கவிதை 29

Advertisement

இளந்தென்றலோடு ஒரு கவிதை 29



இரவில் மாடியில் நின்றிருந்தவன் அருகில் வந்தார் விசலாட்சி. மகனின் முகத்தை அவரால் பார்க்க முடியவில்லை பிறந்தது முதல் கால் தரையில் படாமல் மார்பில் போட்டு வளர்த்தவரே இன்று கை நீட்டி அடித்துவிட்டார். அவன் தவறு செய்தவன் தான் என்றாலும் அனைவரின் முன் அவனை அடித்தது விசலாட்சிக்கு தான் வேதனையாக இருந்தது.



மகன் எவ்வளவு வேதனை கொண்டிருப்பான் என அவர் அறியாததா. தந்தையிடம் அவர் சொல்லுக்கு உறுதி கொடுத்துவிட்டு மேலே அவன் அறைக்கு வந்தவன் அவர்கள் சென்ற பின்னும் கூட அவன் கீழே வரவில்லை. அவன் தோழர்கள் கிளம்பிய பின்னும் கூட அவன் கீழ் இறங்கி வரவில்லை. விஸ்வநாதன் மகனின் இச்செயலில் மனம் வருந்தினார்.



வேதனை கொண்ட மகனின் முகத்தை அவர் காண கூட பிடிக்கவில்லை. இருந்தாலும் தான் பெற்ற ஒரே மகனின் முகம் கவலையில் இருப்பதை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் விதுரனை தேடி அவனது அறைக்கு சென்றார், அவன் அங்கு இல்லை என்றது மாடிக்கு வந்தார்.



“கண்ணா..” அவன் தோளில் கை வைத்து அழைத்தார்.


சட்டென்று திரும்பியவன் அன்னையை கட்டியணைத்து அழுதான். “சாரி ம்மா... என் தப்பு தான்... ஆனா என் காதல விட்டுகொடுக்க முடியலைம்மா...”



“புரியுது கண்ணா... ஆனா, அம்மாகிட்ட சொல்லிருக்கலாமே கண்ணா.”



“நாளைக்கு வித்யாவுக்கு நிச்சியம் சொன்ன போது என் மனசு எப்படி துடிச்சிருக்கும் உங்களுக்கு தெரியுமா. எதாவது செஞ்சு அவள் நிச்சியத்தை நிறுத்த தான் முயற்சி செய்யனும் நினைச்சேன் ஆனா, என் மேல அவளுக்கு கோவம் வந்து வேற மாப்பிள்ளைய கல்யாணம் செய்ய ஒத்துக்கிட்ட நான் செய்வேன். அதான் உடனே கல்யாணம் செய்யலாம் நினைச்சேன் ம்மா. அது இந்த அளவுக்கு வந்து நிற்க்கும் எனக்கு தெரியாது.”



கலங்கும் மகனை எந்த வழியில் தேற்றுவது என தெரியாமல் அவனை அணைத்தப்படி இருந்தார். அவன் கண்ணீர் வற்றும் வரை அவன் முதுகை தடவி ஆறுதல் அளித்தார்.



”கண்ணா, நானும், அப்பாவும் இன்னும் சாப்பிடலை வா சேர்ந்து சாப்பிடலாம்.” மெதுவாக அவனை திசை திருப்பினார்.



“இல்லை ம்மா, அப்பாக்கு நான் அவர் முன்னாடி வர்ரது பிடிக்காது. நீங்க சாப்பிடுங்க நான் அப்புறமா வந்து சாப்பிடுகிறேன்.” அன்னையை கீழே அனுப்பி வைத்தான்.



”என்னங்க சாப்பிட்டு தூங்க்குங்க.”


“ம்ம்..”


“நீயும் உட்காரு விசலாட்சி, சேர்ந்து சாப்பிட்டுகலாம்.”



“இல்லை, கண்ணா இன்னும் சாப்பிடலை... அவனோட சேர்ந்து சாப்பிடுறேன்.”



“ஏன் இன்னும் சாப்பிடலையாம்... வந்து சாப்பிட சொல்லு.” அவர் போனால் போகிறதென்று சொல்ல



“நீங்க முதல சாப்பிடுங்க என் மகனோடு நான் சாப்பிட்டுகிறேன்.”



“மகனை சொன்னா அம்மாவுக்கு எங்க இருந்து தான் அவ்வளவு கோவம் வருதுனு தெரியலை.”



”ஓடாதீங்க நில்லுங்க... ஏங்க ஓடாதீங்கனு சொல்லுறேன்ல.” வேகமாக ஓடியபடி இருந்த ராமை ரோகினி நிற்க்க சொல்லியும் நிற்க்காமல் ஓடினான்.



“உன் மகனுக்கு நல்லா வேனும்... அவனை எல்லாம் எப்படி தான் பெத்தயோ..”



“தப்பு செஞ்சா என் மகன், நல்லது செஞ்சா உங்க மகனா. நல்லா இருக்கே நியாயம்... ரோகினி இங்க கொஞ்சம் வா ம்மா.” என ராமின் தாய், தந்தை அழைக்க



“ஒரு நிமிஷம் அத்தை... உங்க மகனுக்கு கொடுக்க வேண்டிய பாக்கிய கொடுத்துட்டு வரேன். ஏங்க ஓடாதீங்க எனக்கு ஏற்கனவே உடம்பி சரி இல்லை.” அவள் எதை சொன்னால் அவன் ஓடாமல் இருப்பானோ அதை சொன்னாள்.



“அய்யோ ரோகி ம்மா உனக்கு என்னாச்சு செல்லம்...” அவளிடம் பதறியபடி ஓடி வந்தான்.



“ம்ம்... மாட்டிக்கிட்டீங்களா... எதுக்கு ஜாக்கிங் ஜான்சிட்ட இன்னைக்கு பேசுனேங்க. அப்படி என்ன சொன்னீங்க அவகிட்ட.”



“நான் என்ன ரோகி சொல்ல போறேன், எப்படி உங்க வீட்டுல உங்க ஹஸ்பண்ட் வேலை பார்க்குறாரு கேட்டேன் அதுக்கு அந்த அம்மா இப்படி புருஷன்வே நம்ம வீட்டுக்கு கூப்பிட்டு வரும்னு எனக்கு தெரியாதும்மா. ஆமா அவன் வந்து உன்கிட்ட என்ன சொன்னான்.”



“ஏன் மா என் வீட்டுல நான் நல்லா இருக்கது பொருக்காதா உன் வீட்டுக்காரருக்கு. அவன் உன்னை பத்தி என்ன சொன்னானோ, என் மனைவி என்கிட்ட அதை செஞ்சு கொடு இதை செஞ்சுகொடுனு ஒரே பாட்டு.”



“நீ எனக்கு தினமும் செஞ்சு கொடுக்கிற விரைட்டியான புட் நல்லா இருக்கும்னு சொன்னேன். அதை போய் அந்த அம்மா சொல்லும் நான் எதிர் பார்க்கலை ரோகிமா.”



“நல்லா சொன்னீங்க… போங்க..” என அவள் சொல்லி முடித்து எழுகையில் தலையை பிடித்துகொண்டு அமர்ந்துவிட்டாள்.



“ஏய் என்ன டி ஆச்சு... அப்பா, இங்க வந்து ரோகினியை பாருங்க. அவ தலையை புடிச்சிட்டு உட்கார்ந்துட்டா.” என மருத்துவரான தன் தந்தையை அழைத்தான் ராம்



ரோகினியின் கையை பிடித்து பார்த்தவர் சிரிப்புடன் மனைவியின் காதில் சொல்லிவிட்டு, இருவரின் முகத்தை பார்த்து,



“என்ன நீங்க இரண்டு பேரும் பேசிக்கிறேங்க அப்படி என்ன ஆச்சு ரோகினிக்கு.”



“டேய் நீ அப்பா, ஆக போற... ரோகினி அம்மா ஆக போறா.” குழந்தையின் வரவை தெரிவிக்க.



”உண்மையா ப்பா... ஏய் இந்த நிலமையில என்கூட ஓடி பிடிச்சு விளையாடுற. சந்தோஷமா இருக்கு ரோகிமா.” மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டு மகிழ்ந்தான் ராம்.



குடும்பத்தில் ஒரு நல்வரவு உண்டாகி உள்ளாது. அதை நினைத்து ராமின் குடும்பம் மகிழ்ச்சியில் இருந்தது.



”என்ன பவானி ஏன் இங்க வந்திருக்க... தூக்கம் வரலையா.” தோட்டத்தில் அமர்ந்திருந்த மகளை பார்த்து கேட்டார். பவானியின் தாய் கோதை



“இன்னைக்கு நான் விது வீட்டுல தான் இருந்தேன் ம்மா. அங்க என்ன நடந்ததுனு உங்களுக்கு தெரியுமா..”



“தெரியும், ரோகினி சொல்லிட்டா... நீ ஊர்ல இருந்து வந்ததும், நேரா விதுரனை தான் பார்க்க போவேனு எனக்கு தெரியாதா.”



“அதுக்கு அடுத்து என்ன நடந்ததுனு உனக்கு ரோகினி சொல்லிட்டாளா.”



“ம்ம்.. சொன்னா, விதுரனோட கல்யாணம், எல்லாத்தையும் சொன்னா ரோகினி.”



“விதுரன் இப்படி பண்ணுவானு நான் நினைக்கலை ம்மா. அங்கில் அவனை அடிச்சதை இன்னும் நம்ப முடியலைம்மா.”



”தப்பு பண்ணா எல்லார் அம்மாவும், அப்பாவும் அடிக்க தான் செய்வாங்க, ஏன் நீ தப்பு பண்ணாலும் நான் அடிக்க தான் செய்வேன்.”



“அம்மா, அப்படி என்ன தப்பும் நான் செய்ய மாட்டேன். அந்த தப்ப உன்கிட்ட சொல்லிட்டே செய்வேன் போதுமா.”



“செய்வ.. செய்வ.. அப்பா இல்லாத பொண்ணுனு உனக்கு செல்லம் கொடுத்தது தப்பா போச்சு... அப்படி தப்பு மட்டும் பண்ணு அப்பறம் இருக்கு உனக்கு.”



”நாளைக்கு விது வீட்டுக்கு போகனும் ம்மா.. அவன் ரொம்ப பீல் பண்ணிட்டு இருப்பான். ராமும் வரேன் சொன்னான்.”



“சரி, எப்போ அந்த அந்த பொண்ண அழைச்சிட்டு வராங்களாம்.”



“ஒரு நல்ல நாள் பார்த்து அழைச்சிட்டு வர்ரதா சொன்னாங்க அங்கில் எப்போனு தெரியலை. ஏன் ம்மா..”



“எதாவது கிப்ட் கொடுக்கலாம் தான்.. அப்படியே விசலாட்சியும், விசு அண்ணாவையும் பார்த்துட்டு வரலாம் ரொம்ப நாள் ஆச்சு.”



“ம்ம்... நாளைக்கு ஆண்டிகிட்ட கேட்டு சொல்லுறேன்.”


கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவளின் மனம் அவன் உடன் இருந்த நாட்களுக்கு தான் பயணம் செய்தது. முதல் நாள், அவனை வெறுத்தாள், அடுத்த நாள் அவனை வதைத்தாள், தொடர்கின்ற நாளில் அவனை கண்டுகொள்ளவில்லை. ஆனால் அவனோ அவளுக்கு பிடித்தது எது, பிடிக்காதது எது என பார்த்து பார்த்து செய்தான்.



புனிதாவின் மூலம் அவள் சரியாக சாப்பிட்டாளா, இல்லையா, எங்க இருக்கிறாள், என்ன செய்கிறாள் என ஒவ்வொரு நிமிடத்திலும் அவளின் பாதுக்காப்பை கேட்டுகொண்டான்.


அவன் மீது கோவம் கொண்டாலும் புனிதா சொல்வது போல் பிடிக்காமல் கல்யாணம் செய்தாலும், அவன் அவளைவிட்டு தள்ளியே இருந்தான். தாய், தந்தையிடம் தன் தவறை ஒத்துகொண்டாலும் அதற்க்கு அவர் அடித்த அடியில் இருந்தே அவள் தெரிந்துகொண்டால் அவன் வீட்டில் செல்ல பிள்ளையாக வளர்ந்தவன் என்று.



அவன் தந்தையின் சொல்லுக்காக அவன், அவளை பிரிய கூட முன் வந்தான். ஆனால் தன்னால் மட்டும் ஏன் அவனை விட்டு விலக முடியவில்லையே ஏன்? அம்மா சொல்வது போல் மஞ்சள் கயிறின் மகிமையோ, இல்லை அவன் மீது ஏற்ப்பட்ட பரிவா? என அவள் வித விதமாக யோசித்தாலும் அவனை ஏன் விட்டு விலகு முடியவில்லை என்றே கடைசியில் அவளது யோசனை வந்து நின்றது.



”என்ன வித்யா இப்படி உட்கார்ந்திருக்க, தூங்கலையா..”


“இல்லை ம்மா தூக்கம் வரலை...”

“என்ன பழசையே நினைச்சிட்டு இருக்கியா..”



“இல்லை ம்மா... யோசிச்சுட்டு இருக்கேன்.”



“எதை பத்தி... அந்த தம்பி எப்படி அடி வாங்குனுச்சுனா.. இல்லை நீ எப்படி அந்த தம்பிய விட்டு விலக முடியலைனா.” வித்யாவின் முகத்தை சரியாக கணித்து கூறினார்.


வித்யாவின் அமைதியை பார்த்தே தான் இறுதியில் சொன்ன வார்த்தையில் தான் மகள் யோசனையில் இருக்கிறாள் என தெரிந்துகொண்டார்.



“அந்த தம்பி மேல உனக்கு காதல் வந்ததா இல்லையானு எனக்கு தெரியாது. ஆனா அந்த தம்பி உன் மனசளவு இடம் பிடிச்சிருக்குனு அர்த்தம். அது உனக்கே தெரியாம இருக்கலாம். உன் மனசுல ஏதோ தூண்டுதல்ல தான் அந்த தம்பியோட அப்பா, உன் கழுத்துல இருக்குற தாலியை கழட்ட சொன்னதும் உன் முகத்துல வந்த தவிப்பு எனக்கு தெரியும். அதைவிட எங்க அந்த தம்பியே உன் கழுத்துல இருக்க தாலியை கழட்டிடுமோனு உனக்கு பயம் அதான் நீ உடனே வேற கல்யாணத்துக்கு மறுத்த.”



“எப்படி ம்மா நான் வேற கல்யாணம் பண்ணிக்க முடியும். நானும் ஒரு பொண்ணு தான்... எனக்கும் எல்லாம் வலி இருக்கும். கட்டாய கலாயாணமா இருந்தாலும் அவரை தவிர வேற ஒருத்தனை என் பக்கத்துல நிக்க வைச்சு கூடா பார்க்க முடியாது.”



“அதான் உன்னை அறியாம அந்த தம்பி உன் மனசுல இடம் பிடிச்சிருக்கு.”


“அப்படி எல்லாம் இல்லமா... அவன கண்டாலே எனக்கு பிடிக்கலை.”



“முதல்ல அந்த தம்பிய மரியாதை இல்லாம பேசுறதை நிறுத்து. ஒழுங்கா அந்த தம்பிக்கு மரியாதை கொடு, அவர் உன் புருஷன் சரியா.”



“ப்ச்சு ம்மா... பழகிருச்சு அவன் கூட இருந்த நாள்ல.”


“பழகும்.. பழகும்.. மரியாதை முக்கியம் வித்யா. அவங்க பெரிய குடும்பம்.. பரம்பரையா பணக்காரங்க... அதுக்கேத்த மாதிரி நடந்துக்க. நாம எல்லாமே பெரிசா செய்யனும் வித்யா.. அதுக்கு தான் அப்பா, சபரிய கூட்டிட்டு பேங்க் போயிருக்காங்க.”



“அம்மா, அவங்க வரட்டும் அடுத்து எல்லாம் பேசிக்கலாம். அப்பா ஏன் இப்போ பேங்க் போகனும், அவங்க வந்த பின்னாடி அவங்க கேட்டா செய்யலாம்.”



“அப்படி இல்லை வித்யா அவங்க கேட்க்காம தான் நாம செய்யனும் அது தான் முறை. முறையா கல்யாணம் செய்திருந்தா முறையா நடந்திருக்கும் எல்லாம் சம்பிரதாயமும். ஆனா, இப்போ இப்படி நடக்கனும் விதி.”



“அம்மா, அவங்க பணாக்காரங்கனு சொல்லுறீங்க அப்புறம் எப்படி நம்மகிட்ட வரதட்ச்சனை எல்லாம் எதிர்பார்ப்பாங்க. அப்படி பட்டவங்க இல்லைம்மா அவங்க அப்படி இருந்தா அவன் என்னை தினமும் கொடுமை பண்ணிருக்கனும்.”



“பார்க்கலாம்... நாளைக்கு அவங்க போன் பண்ணி எப்போ வரேனு சொல்லுறாங்கனு பார்த்து அனைத்தையும் செய்து முடிக்கனும்.” என்று லலிதா மகளிடம் சொல்லிவிட்டு சென்றார்.



”கண்ணா நானும் அப்பாவும் வெளியே கிளம்புறோம் நீ எழுந்து சாப்பிட்டு ரெஸ்ட் எடு. இன்னும் கொஞ்ச நேரத்துல பவானி வரேனு சொல்லிருக்க, ராமும் வரானா. சோகமா முகத்தை வைக்காம கொஞ்சம் ரிலாக்‌ஷா இரு. அம்மா சீக்கிரம் வந்திருவேன் சரியா.” தூங்கிகொண்டிருந்தவனை எழுப்பி அவனிடம் சொன்னார்.



“இவ்வளவு காலையில எங்கம்மா போறீங்க... ஏதாவது முக்கியமான பங்க்‌ஷனா.”



“விசலாட்சி உன் மகனை கொஞ்சுனது போதும் வா டைம் ஆகுது.. இப்போ போனா தான் ஷாப்பிங்க் முடிச்சிட்டு வர முடியும்.” மகனுக்கும், தாய்க்கு இடையில் அடுத்த வார்த்தையில் பேச விடாமல் இடையிட்டார்.



“இதோங்க்... ஒரு நிமிஷம்.. நீங்க கார் எடுங்க வந்திருவேன்.” கணவனிடம் சொல்லிகொண்டே மகனை பார்த்தார்.



“என்னம்மா அப்பாவ உங்களை ஷாப்பிங்க் கூப்பிட்டு போறாரு உலக அதிசயம் தான்.. என்ன காரணம் ம்மா.”



“எல்லாம் நம்ம வீட்டுக்கு வர போர மருமகளுக்கு தான் ஷாப்பிங்க். சரி கண்ணா பேச டைம் இல்லை நான் வந்து உனக்கு எல்லாம் சொல்லுறேன்.” விதுரனிடம் இருந்து சென்று வருவதாக சொல்லிவிட்டு கிளம்பினார்.



அவன் மெதுவா எழுந்து குளித்து, கீழே வர அதே நேரம் பவானியும், ராமும் வர...



“வாங்க டா சரியான நேரத்துக்கு தான் வந்திருக்கீங்க. இப்போ தான் சாப்பிட போகலாம் நினைச்சேன் வந்திட்டுடேங்க சேர்ந்து சாப்பிடலாம் வாங்க.” அவர்களை அவன் அழைத்தான்



”இப்போ தான் புல் கட்டு கட்டிட்டு வந்தேன் விது.. பத்தாததுக்கு ராம் எனக்கு பிடிச்ச ஸ்வீட் வேற வரும் போது வாங்கி கொடுத்து இன்னும் பில் பண்ணிட்டான். நீ சாப்பிடு நான் பரிமாறுரேன்..”



“அப்படி என்ன உனக்கு வாங்கி கொடுத்தான்.. இது வரைக்கு ஹோட்டல் போனகூட இந்த ராம் வாங்கி தரமாட்டான். மழை வரப்போகுது உனக்கு ஸ்வீட் வாங்கி கொடுத்திருக்கானு சொல்லிருக்க.”



“நீயே கேளு என்ன விஷயம்னு... என்கிட்ட சொல்லவே இல்லை.”



”என்ன டா விஷயம்.. எனக்கு ஸ்வீட் கொடுக்காம அவளுக்கு மட்டும் வாங்கி கொடுத்திருக்க.” விதுரன் ராமிடம் கேட்க



“அது.. அது..” என ராம் வெட்க்கட்டுகொள்ள.



“சகிக்கலை... ஒழுங்க விஷயம் என்னனு சொல்லு.” விதுரன் கோவம் பட



“நீ மாமா ஆகப்போற டா... பவானி அத்தை ஆக போறா.” என ராம் சொல்ல


“என்ன டா... ரோகினி கர்ப்பமா இருக்காளா...” விதுரனும், பவானியும் ராமின் அருகில் வந்து கேட்க.


”ம்ம்.. ஆமா நேத்து தான் கன்பார்ம் ஆச்சு.. அப்பா சொன்னார் செக் பண்ணி.”


“டேய் மச்சான்... நீ அப்பாவாகிட்ட.. பவானி இனி இவனை தொல்லை கொடுக்க ஒரு குட்டி பாப்பா வரபோகுது. சூப்பர் டா ராம்.. கங்க்ராட்ஸ் டா ராம்..” என விதுரனும், ராமும் மாறி மாறி வாழ்த்து கூற அவனுக்கு மகிழ்ச்சி இன்னும் அதிகமானது.



“தாங்க்ஸ் டா... தாங்க்ஸ் பவானி..”



“இந்த நேரத்துல ரோகினி கூட இருக்காம எதுக்கு இங்க வந்த ராம். முதல கிளம்பு வீட்டுக்கு, போய் ஹாஸ்பிட்ட அழைச்சிட்டு போ ரோகினிய.”



“போகனும் விதுரா, அதுக்கு முன்னாடி உங்க ரெண்டு பேர்கிட்ட இந்த விஷயத்தை சொல்லிட்டு போகலாமே தான் வந்தேன்.”



“அதான் சொல்லிட்டயே.. கிளம்பு டா ரோகினி உன்னை தான் தேடுவா.” என பவானி சொல்ல



“சரி கிளம்புறேன்.. இந்தா விதுரா ஸ்வீட்..” என அவன் வாயில் ஊட்டிவிட்டான். பதிலுக்கு விதுரனும் ராம்க்கு ஊட்டிவிட்டான்.



“அங்கில், ஆண்டி எங்க டா விதுரா.”



“அவங்க இரண்டு பேரும் ஷாப்பிங்க் போயிருக்காங்க. வர்ரதுக்கு நேரம் ஆகும் ராம்.. நானே சொல்லிக்கிறேன்.”



“சரி டா.. சிஸ்டர்கிட்டயும் சொல்லிடு.. சிஸ்டர் வந்ததும் உன்னையும், வித்யாவையும் விருந்து அழைக்கனும் ரோகினியும் , அம்மாவும் சொன்னாங்க டா.”



“சரி டா, நான் சொல்லுறேன்..”


ராம் கிளம்பியதும், பவானியும் விதுரனும் மட்டுமே இருந்தனர்.



“என்ன முடிவும் எடுத்திருக்க விது..” உணவு அருந்திகொண்டிருந்த விதுரனிடம் பவானி கேட்க.



“அதான் சொன்னேல அவளை நான் ஏற்க தயாரா இல்லைனு. அப்புறம் என்ன புதுசா முடிவு எடுத்திருக்கேனானு கேட்க்குற.”


“ஆனா, அது சரியான முடிவு இல்லை டா.”



“வேற வழி இல்லை...”


“அப்போ என் வாழ்க்கையோட எதிர்கால வழியில நீங்க இருக்க மாட்டீங்கனு சொல்லுறீங்க.” பவானி, விதுரனுக்கும் இடையில் வந்த குரலில் விதுரன் சட்டென்று திரும்பி பார்க்க அங்கே நின்றிருந்தாள் வித்யா.


இவள் எப்போது இங்கே வந்தாள் என பவானியும், விதுரனும் பார்க்க. அங்கே கண்களில் நீருடன் வித்யா நிற்க. பவானி அந்த இடத்தைவிட்டு விலகி சென்றாள்.


“எப்போ வந்த.. வித்யா”



“நீங்க, என்னை ஏற்க தயாரா இல்லைனு சொல்லும்போதே நான் வந்துட்டேன். ஏன் உங்களுக்கு என்னை ஏற்க கூடாதுனு ஒரு எண்ணம் சொல்லுங்க.”



“என் அப்பாவோட முடிவு அதான்..”



“ஆனா அவங்களே என்னை ஏற்க தயாரா இருக்கும் போது, நீங்க ஏன் என்னை தள்ளி வைக்குறீங்க சொல்லுங்க.”


”என்னால எதுவும் சொல்ல முடியாது... உன்னை விட்டு நான் விலகுறது உறுதி.. உனக்கு பிடிச்ச வாழ்க்கையா நானே அமைச்சு கொடுக்கிறேன். மத்தவங்களுக்காக என்கூட வாழனும் அவசியம் இல்லை உனக்கு.”


”இப்போ எதுக்கு இங்க வந்தனு சொல்லு வித்யா.”



கண்ணீரை துடைத்துகொண்டு அவள் அன்னை நேற்று பேசியதையும், அவனிடம் சொல்லிவிட்டாள்.


“நீங்க என்ன எதிர்ப்பார்க்குறீங்கனு சொல்லிட்டா என் அப்பா அதுக்கான ஏற்ப்பாடு செய்ய முடியும். அதான் கேட்க்க வந்தேன்.. வந்த இடத்துல இப்படி நீங்க என்னை பிரிஞ்சு போக போறீங்கனு தெரியாது.”



“என், அம்மாவும், அப்பாவும் அந்த மாதிரி எல்லாம் எதிர்ப்பார்க்க மாட்டாங்க.. இப்போ கூட இந்த வீட்டு மருமகளுக்கு தான் ஷாப்பிங்க் பண்ண போயிருக்காங்க. நாங்க எதுவும் எதிர்ப்பார்க்கலை, அப்படியே இருந்தாலும் உன்னை மட்டும் தான் இந்த வீட்டுக்கு அழைச்சிட்டு வர என் அம்மா எதிர்ப்பார்க்குறாங்க. நீ கிளம்பு.. நான் என் அம்மாக்கிட்ட சொல்லுறேன்..”


வாசலை தாண்டி போனவளை நிறுத்தினாள் பவானி,


“அவன் மனசுல நீ தான் இருக்க, அவன் ஏதோ ஒரு கோவத்துல அவங்க அப்பா மனசை கஷ்ட்டப்படுத்திட்டோம் பீல் பண்ணுறான். அவன் சொன்னதை எல்லாம் மனசுல வைக்காத வித்யா. அவன் கண்டிப்பா உன்னைவிட்டு விலக மாட்டான். அப்படி அவன் செய்தானா நான் இருக்கேன் உனக்கும், அவன் கூட சேர்ந்து வாழ வைக்குறது என் பொறுப்பு. நிம்மதியா வீட்டுக்கு போ..” கவலையில் இருந்தவளை, அவளது பேச்சில் கொஞ்சம் தேற்றி அனுப்பினாள் பவானி.



தொடரும்……..




 
Top