Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

J
Reaction score
17

Profile posts Latest activity Postings About

  • தேனிலவு கண்டு மோக உறவு கொண்டு இன்பத்தேன் உண்டு
    பின் விளைவால் இரண்டு மகன்கள் எனை அப்பா என்றனர்
    என் மனைவி அன்பு உணவால் என்னை கட்டி போட்டாள் பிள்ளைகளை அருமை தாய்மை உணவால் வளர்த்தாள் இப்போது அவர்கள் வளர்ந்து விட்டார்கள் என் மனைவி
    வீட்டுக்கு உழைத்து மெலிந்தாள் , நான் குறிக்கோளின்றி பிழைப்பு முடித்து பின்னர் ஞானம் பெற்று வாழ்கிறேன்!

    joyram
    நான் குழந்தையாக இருக்கையில் என் தாய்தான் என் குரு
    சின்ன பயனாக இருந்தபோது என் தந்தை தான் என் குரு
    பள்ளி படிக்கையில் பல ஆசிரியர்கள் என்னுடைய குருக்கள்
    ஆனால் கல்லூரி படிக்கையில் காணவில்லை ஒரு குரு கூட
    பின்னர் காதல் வந்தது மனதில் ஆனால் காதலி வரவில்லை
    வேலை கிடைத்து கூலி கிடைத்தது திருப்தி மட்டும் இல்லை
    மரு மனம் இல்லாமல் திருமணம் புரிந்தேன் மற்றவர் போல
    அதன் பின் பல மனித இயற்கையின் நெகிழ்வுகள் நடந்தன
    (thodargirathu)
    அன்பை சுரந்து என்னை மறந்தாள்(3)
    உண்ணுகையில் விரலை வாயில் திணித்தாள்
    முதல் இரவில் பாலுடன் அருகில் அழைத்தாள்
    காற்று போகாமல் என்னை கட்டி அணைத்தாள்
    நான் மயங்கிய உடன் விளக்கை அணைத்தாள்
    இனிமையான காதல் கணைகளை தொடுத்தாள்
    என் கைகள் பட்டு மிரண்டாள், பின்பு புரண்டாள்

    இவ்வளவு கனவினை கொடுத்தவள் பறந்தாள்
    கவிதை தாளை கிழித்தாள், என்னை மறந்தாள்
    இவ்வுலகை விட்டு அவள் எங்கே சென்றாள்???

    ஆனந்த ராம்
    அன்பை சுரந்து என்னை மறந்தாள்(2)
    பின் என் கையோடு அவளின் கை கோர்த்தாள்
    விலகினாள், சில நாள் என்னை விலக்கினாள்
    மீண்டும் என்(கவிதை)மேல் காதல் கொண்டாள்
    என்னை தொட்டாள், கவிதையை முத்தமிட்டாள்
    கவிதையை கிள்ளினாள், என்னை தள்ளினாள்
    ஒரு நாள் இரு நாள் என பல நாள் இருந்தாள்
    நான் மண நாள் காண பயனாய் அமைந்தாள்
    மணமேடையில் என் பக்கத்தில் அமர்ந்தாள்
    தாலி கட்டுகையில் என் கண்களை கண்டாள்
    மாலை நலங்கில் என் கைகளை அழுத்தினாள்
    அன்பை சுரந்து என்னை மறந்தாள்
    ஒரு நாள் ஒரு ஆள், கையில் பேனா-வாள்
    நானே அந்த ஆள் என்று அவள் அறிவாள்
    கொடுத்தாள் என்னிடம் வெள்ளைத்தாள்
    எடு பேனா-வாளை, அதுவே உன் அரிவாள்
    நான் எழுதி கொல்பவன் என உணர்ந்தாள்
    என்னை கவிதையில் சொல் என பணித்தாள்
    எழுதியதை கண்டு படித்தாள், பின் சிரித்தாள்
    அறுவையான அறுசுவை நீ என விவரித்தாள்
    நான் அதிர்ச்சியுற்றேன் அவள் கவனித்தாள்
    நீ அருமையான சுவை என்று சமாளித்தாள்
    என்னை வைத்த விழி வாங்காமல் பார்த்தாள்
    அன்பு நடனத்தின் அரிய அபிநயம் நான்
    ஆசையின் நடுவிலுள்ள கீழ்தளம் தான்
    இசையே இசைக்காத ஒரு ஏக்கம் நான்
    ஈகைக்கு வேண்டப்பட்ட நண்பன் நான்
    உறவோடு ஒட்டா ஒரு உறவினர் நான்
    ஊமை எனினும் ஒரு பேச்சாளன் நான்
    எதிரியே இல்லாத ஒரு பகைவன் நான்
    ஏன் பிறந்தேன்?அறியவேண்டாம் நான்
    ஐம்புலனின் ஆறாவது காவலாளி நான்
    ஒன்றும் அறியா ஒன்று அதுதான் நான்
    ஓ போட்டால் ஓடிவரும் மனிதன் நான்

    ஆனந்த ராம் எனும் Joyram
  • Loading…
  • Loading…
  • Loading…
Top