Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கண் விழித்தேன் உன் நினைவில் ep 10

Advertisement

Sesily Viyagappan

Well-known member
Member
கண் விழித்தேன் உன் நினைவில்
-- செசிலி வியாகப்பன்


அத்தியாயம் 8


அன்று......

காலையில் கண் விழித்த கனலிக்கு வீடு சற்று பரபரப்பாக இருப்பதாக தாேன்றியது. தன் இங்கு வந்த பிறகும் திருவிழா சமயத்திலும் கூட சூரிய உதயத்தை தன் குடும்பத்தினர் பார்க்க விரும்வில்லையாே என்று நினைத்திருந்தவளுக்கு இன்று தன் விட்டாரின் சுறுசுறுப்பு சற்று ஆச்சர்யத்தையே தந்தது.

காரணம் எதுவாக இருந்தாலும் அதில் தனக்கு ஒன்றுமில்லை என்பது பாேல தன் அன்றாட கடமைகளை கவனிக்கலானாள்.

குளித்துவிட்டு வந்தவளிடம் கமலி எதுவாே பேச முயற்சி செய்வது பாேல தாே ன்றிதாே என்னவாே கனலி பார்க்கும் பாெழுது அவள் முகத்திலிருந்து எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை.

காலை உணவுக்கு பின் கனலி தான் ஊருக்கு புறப்பட தேவையானவற்றை எடுத்து வைத்துக்காெண்டிருக்க, அறையினுள் வந்த திலகவதி கனலி முன் ஒரு புடவையை வைத்து

"கனலி சிக்கிரம் புடவையை கட்டிக்கிட்ட ரெடியாகு."

தன் முன் இருந்த புடவையையும் தாயையும் விசித்திரமாக பார்த்த கனலி

"எதுக்க மா இந்த புடவை?"

"இன்னைக்கு உன்ன பாெண்ணு பாக்க வராங்க, ஏற்கனவே திருவிழாவுல மாப்பிள்ளைக்கு உன்ன பார்த்துட்டாரு அவருக்கு ரொம்ப புடிச்சிருக்கு, அவர்கூட வரவங்களுக்கு உன்ன பிடிச்சிட்டா இன்னைக்கே ஒப்பு தாம்பாளம் மாத்திட்டு, வைகாசில கல்யாணம் தான்."

தான் பாேக்கில் திலகவதி பேசிக்காெண்டே செல்ல, அவர் கூற வரும் செய்தியை கேட்டதும் காேபத்தில் கண்கள் சிவக்க

"யார கேட்டு இந்த ஏற்பாடு எல்லாம் நடக்குது." காேபத்தில் பேசும் கனலியை உறுத்து பார்த்த திலகவதி

"யார கேட்கனும்." என்று கேட்டு வைக்க, அதிர்ந்த கனலி

"என்ன கேட்கனும் மா, இது என்னுடைய வாழ்க்கை, வாழப்பாேறது நான் அப்படி இருக்கும் பாேது என்ன கேட்காம நீங்க எப்படி முடிவு பண்ணலாம்." என்ற மகளின் கூரலில் இருந்த ஆதங்கத்தை சிறிதும் புரிந்து காெள்ளாமல்

"எதுக்கு டி உன்ன கேட்கனும், என்ன கேட்டு உங்க அப்பாவ எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கல. கமலி கிட்ட கேட்டு அவளுக்கு கல்யாணம் பண்ணல. நாங்க எல்லாம் வாழலயா, புள்ளை பெத்துக்கலயா. அப்படி இருக்கும் பாேது உன் கிட்ட நான் மட்டும் எதுக்கு கேட்கனும்."

திலகவதி படபடவென பேசினலும் யாராே சாெல்லிக்காெடுத்து பேசுவது பாேல இருந்தது. அது அண்ணனாக இருக்கும் பட்சத்தில் தான் கூறம் எதுவும் தாயின் செவியை அடைந்தாலும், செவியை தாண்டி செல்லது என்பதால் கனலி வேறு வழியை கையாள முடிவு செய்தாள்.

"ஓகே மா அவங்க எப்பாே வருவங்கன்னு சாெல்லு, அவங்க வரும் பாேது நான் ரெடியா இருப்பேன்."

மகள் ஒத்துக்காெண்ட சந்தாேஷத்தில்

"எனக்கு இப்பாே இப்பதான் ரொம்ப சந்தோஷமா இருக்கு. எங்க உன்னுடைய பைதியகார தனத்தை இதில காட்டிடுவியாேன்னு ரொம்ப பயந்துட்டேன்."

அதன் பிறகு தாயிடம் விசாரித்து தெரிந்து காெண்டதிலிருந்து வாரப்பாேகின்றவனை யார் என்று கனலி யூகித்துவிட்டாள்.
மூன்று நாள்களுக்கு முன்பு அண்ணனுக்கு வேண்டியவன் என்று வந்தவனை கவனித்து இருந்தாள். அவன் தன்னை இதுவரை பார்த்திராத பாேதும், அவனை இதுக்கு முன்பு ஒருமுறை சந்தித்தும் இருக்கிறாள்.

வந்தவன் அண்ணன் அண்ணியிடம் ஜாடை பரிமாறிக்கொண்ட விதத்திலே ஏதோ தன்னைப்பற்றிய விஷயம் என்பது புரியத்தான் செய்தது.

அது என்ன விஷயம் என்பது இப்பாேது தெரிந்ததும் உள்ளுக்குள் திகில் உணர்வு எழவே செய்தது. ஆனால் தற்போது எதையும் காட்டிக் கொள்வதற்கு நேரமில்லை என்பதை புரிந்துகொண்டு செயல்பட ஆரம்பித்தாள்.

அன்று தன் அண்ணனுடன் பார்த்தவனை திருமணம் செய்து கொள்வது என்பது, வெளிச்சமே இல்லாத கும்மிருட்டில் கயிற்றின் மீது பயணம் செய்வதற்கு ஒப்பான செயலாகும்.

அவனின் சிவந்த விழிகளும், கருத்த உதடுகளும், அலைபாயும் கண்களும் அவனின் ஒழுக்கம் பற்றி எடுத்துரைக்க எப்பாடுபட்டாவது இதிலிருந்து தப்பித்து ஆகவேண்டும் என்ற எண்ணம் கனலி மனதில் உறுதியானது.

வருபவன் எனக்கானவன் இல்லை என்று நினைத்துக்காெண்டு இருக்கும் பாேதே, காரணமே இல்லாமல் கனலி காதுகளில்

எனக்கான ப்ரில்லியண்டான பாெண்ணு நீ தான்.' என்ற விஸ்வாவின் குரல் எதிராெ லித்தது. தன் முன் மண்டியிட்டு

'கனலி வில் யூ மேரி மீ.' என்று கேட்டவனிடம்

"எஸ் ஐ வில்." என்று கூற உள்ளம் துடித்தது.

பல நாட்கள் அவனின் வரவை எதிர்பார்த்த கனலி அவன் வராத எமாற்றத்தை தங்கிக்காெள்ள முடியவில்லை.

தன் மனதில் எழுந்த விஸ்வா பற்றிய நினைவுகளை ஒதுக்கி விட்டு தற்பாேதய பிரச்சனை பற்றி சிந்திக்கலானாள்.

இந்த பிரச்சனையில் இருந்து கனலி தப்புவதற்கு வழி இல்லை என்று சொல்ல முடியாது, ஆனால் தான் தேர்ந்தெடுக்கும் வழியால் தனக்கு உதவி செய்பவர்களுக்கு பிரச்சனையோ வருவதை அவள் விரும்பவில்லை.

தன் அண்ணனுக்கு தன்னை பிடிக்காது என்று கனலி நன்கு அறிவாள். அதனால்தான் முடிந்த வரை தன் அண்ணனிடம் இருந்து பிரிந்து இருந்தாள்.

பிரிந்து இருந்த இந்த ஒரு வருடத்தில் அவனுக்கு தன் மீது ஒரு துளி பாசமெனும் வந்திருக்காதா என்ற ஒரு சிறு நம்பிக்கையிலேயே இங்கு வந்தாள்.

கார்த்திக் கனலி நம்பிக்கையை தவிடு பொடியாக்கியதோடு மட்டுமல்லாமல், அவளின் வாழ்க்கையும் வாழ்க்கையையும் குழிதோண்டிப் புதைக்க காத்திருக்க, தன் ரத்த சொந்தங்களை நினைத்து கோபத்தின் உச்சிக்கே சென்றாள்.

தாய் அறையை விட்டு வெளியேறியதும் தன்னை இயல்பாக தன்னை காட்டிக் கொண்டு திலகவதி கொடுத்த சேலையை கட்டி தயாராக நின்றாள்.

அவள் தயாராக நின்ற சிறிது நேரத்திற்கெல்லாம் அறைக்குள் வந்த திலகவதி கார்த்திக் பூஜா மூவரும் உள்ளே வந்தனர்.

உள்ளே வந்தவர்கள் கனலில் தயாராக இருப்பதை ஒரு திருப்தியுடன் பார்த்து விட்டு அவள் முன் ஒரு பத்திரத்தை வைத்தனர்.

கனலி கண்கள் பத்திரத்தை பார்த்ததும் என்னவென்று கேள்வியாக தன் தாயை பார்க்க அவரோ,

"அது வந்து கனலி உன் கல்யாணத்துக்கு ஏகப்பட்ட செலவு இருக்கு, அதுமட்டுமில்லாமல் அண்ணனுக்கு இன்னொருத்தன் கிட்ட கைகட்டி வேலை பார்க்க பிடிக்கல. அதனால சொந்தமா தொழில் தொடங்கலாம் இருக்கான்."

தாய் சுற்றிவளைத்து என்ன கூற வருகிறார் என்பதை ஓரளவு புரிந்து கொண்டாலும்,

"அதுக்கு எதுக்கு மா இந்த பத்திரம்."

"அண்ணன் நினைக்கிற மாதிரி செய்ய நிறைய பணம் தேவைப்படுது. அதனால இந்த ஊர்ல இருக்கிற சொத்து எல்லாத்தையும் வித்துடலாம்னு முடிவு பண்ணி இருக்கான்.

அதுக்கு உன் கையெழுத்து வேணுமா, நீ இதுல கையெழுத்து போடு." என்று கூற தன் முன் இருந்த பத்திரத்தை பார்த்த கனலி

"அம்மா இது வெத்த பத்திரமா இருக்கு இதுல எதுவுமே எழுதல அப்படி இருக்கும் பொழுது நான் எப்படி இதுல கையெழுத்து போட முடியும்." என்று

தனக்குள் எழுந்த சந்தேகத்தை உறுதி செய்ய கனலி கேள்வி கேட்க, அதற்கு திலகவதி பதில் சொல்லும் முன்பு குறுக்கிட்ட பூஜா


"கனலி இப்படித்தான் அம்மா ஏதாவது சொன்னா பதில் கேள்வி கேப்பாங்களா. நான் என்னுடைய அம்மா ஏதாவது சொன்னா மறுபேச்சு பேசாமல் அப்படியே செய்வேன்." என்று நல்ல பிள்ளையாக பேசி வைக்க பேசி வைக்க அதைக்கேட்ட திலகவதி

"பார்த்தியா அண்ணி எப்படி குடும்பத்துக்கு கட்டுப்பட்டு நல்ல பொண்ணா இருக்கிறா. அது மாதிரி நடந்துக்க நீயும் பழகிக்கோ.

அதுதான் உனக்கும் நல்லது, நீ போற வீட்டுல எங்களுக்கும் பெருமையா இருக்கும்." என்று

இந்த உலகத்திலேயே தன் மருமகள் மட்டும்தான் நல்ல பெண் என்ற ரீதியில் பேசிக் கொண்டே செல்ல அதை நிறுத்தும் விதமாக

"என்னால இப்போ கையெழுத்துப் போட முடியாது." என்று சொல்ல

"கார்த்திக் பாத்திங்களா அம்மா நான்தான் ஏற்கனவே சொன்னேன் தானே, இவளுக்கு என்ன கண்டாலே ஆகாது. இப்போ நான் இவளுடைய நல்லதுக்காக தான இவ்வளவு கஷ்டப்படுகிறேன்.

எனக்கு தொழில் தொடங்க ஆசைதான், அதை இன்னும் கொஞ்ச நாளுக்கு அப்புறம் கூட தொடங்கி விடுவேன். ஆனா இவளுக்கு இப்ப வந்திருக்கிற சம்பந்தம் ரொம்ப நல்ல இடம்.

அதுக்காகத்தானே இப்போ நம்ம அப்பாவுடைய சொத்து விக்கணும்னு சொல்றேன் அது கொஞ்சமாவது புரிஞ்சுகிட்டு பேசுறாளா." என்று கார்த்திக் தன் அடுத்தகட்ட நடிப்பை ஆரம்பிக்க திலகவதி பேசும் முன்பு குறுக்கிட்ட கனலி

"எனக்கு அண்ணா மேல பாசம் இல்லன்னு யாரு சொன்னா. நான் இப்போ கையெழுத்து போட முடியாதுன்னு தான் சொன்னேனே தவிர எப்பவுமே கையெழுத்து போட முடியாதுன்னு சொல்லல.

என்னுடைய கையில் அடிபட்டு இருக்கு, அதனாலதான் இப்ப என்னால கையெழுத்து போட முடியாது." என்று

கனலி தன் கட்டைவிரலை காட்ட அதில் ஈரத்துணி ஒன்று விசுத்தி சுற்றி வைக்கப்பட்டு இருந்தது. அதன்மேல் இருந்த ரத்த கரை அவள் கையில் அடிபட்டு இருப்பதை உணர்த்த ஒரு நிமிடம் தாயாக பதறிய திலகவதி

"அச்சச்சோ எப்படி அடிபட்டிச்சு, என்கிட்ட ஏன் முதலையை சொல்லல." என்று கேட்க

"காலையில குளிச்சிட்டு வரும்பொழுது பாத்ரூம் கதவுல நீண்டு கொண்டு இருந்த கம்பி கையை கிழிச்சிட்டு, அதான் வேற ஒன்னும் இல்ல."

"சரி விடு கையெழுத்து தானே ரெண்டு நாளைக்கு அப்புறம் கூட போட்டுக்கலாம். இப்போ மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்துருவாங்க அதை பார்க்கலாம்." என்று வெளியேற அவர் பின்னே கார்த்திக் வெளியேறினான்.

அவர்கள் இருவரும் சென்ற பின்பும் அங்கே நின்ற பூஜா கனலி ஆராய்ச்சி பார்வை பார்த்துக் கொண்டு நிற்க, அவளை கண்டுகொள்ளாமல் தன் கண்களுக்கு மையிட்டு தன்னை அழகு படுத்திக் கொண்டு இருந்தாள்.

அவளின் செயலை கண்டு மனதுக்குள் புழுங்கிய பூஜா

"ஆட்டம காட்டுற கனலி பாக்கலாம் உன்னுடைய ஆட்டம் இன்னும் எத்தனை நாளைக்குன்னு, உன் கிட்ட கையெழுத்து வாங்கி இந்த சொத்தை எல்லாம் எங்க பேருக்கு மாத்திகிட்டு உன்னு என்ன பண்றேன்னு." என்று மனதுக்குள் நினைத்து விட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

சொந்தங்கள் புடைசூழ மாப்பிள்ளை வர அனைவரையும் வரவேற்று அவர்களுக்கு என்று இருந்த நாற்காலியில் மாப்பிள்ளை அமர மற்றவர்கள் விரிக்கப்பட்டிருந்த பாயில் அமர்ந்து இருந்தனர்.

வந்தவர்கள் அனைவரும் கனலி குடும்பத்தாரிடம் பேசி சிரித்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் தன் தாயின் சிரிப்பை ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த கனலி மனதில் தாய்க்காக சற்று பரிதாபம் கூட வந்து மறைந்தது.

இன்னும் சிறிது நேரத்தில் தான் பேசப் போகும் பேச்சினால் தனக்கும் தாயுமான உறவு மொத்தமாக முடிந்து விடக்கூடும்.

அப்படி நடக்கும் பொழுது தாயாரால் தன்னுடைய நிரந்தர பிரிவை தாங்க முடியுமா? என்று வருந்திய கனலி அடுத்த நிமிடம் இதற்காகவெல்லாம் பார்த்தால் தன்னுடைய வாழ்வு நிச்சயம் அண்ணன் அண்ணியின் நரி தனத்தில் சிக்கி சின்னாபின்னமாகி உறுதி என்பதை நினைத்து தன் மனதை கல்லாக்கி கொண்டாள்.

பெண்ணை அழைத்து வருமாறு வெளியில் இருந்து குரல் கேட்க கனலி அழைக்க வந்த கமலி அவர் காதுகளில் குனிந்து,

"கனலி இந்த கல்யாணத்தை ஒத்துக்காத, அண்ணன் கொடுத்த பத்திரத்தில் கையெழுத்து போடாத.அப்பா சொத்து முழுக்க உன் பெயரை எழுதி வச்சிருக்காரு அத உன்கிட்ட இருந்து பறிக்கத்தான் இந்த நாடகம்.

இங்க இருந்து எப்படியாவது தப்பித்து போயிடு." என்று கிடைத்த அந்த சில வினாடிகளில் தங்கையிடம் கூறிவிட்டு தன் முகத்தை சாதாரணமாக மாற்றிக் கொண்டாள்.

இந்த வீட்டில் தனக்காக யோசிக்க ஒரு ஜீவனாவது இருக்கின்றது என்ற சந்தோஷத்தில் கனலிக்கு போதுமானதாக இருந்தது.

வெளியே வந்தவள் அனைவருக்கும் பொதுவாக வணக்கம் வைத்துவிட்டு நிமிர்ந்தாள். அவள் வரும் வரை தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தவர்கள், அவள் வந்த பின்பு திருமணம் பற்றிய பேச்சு ஆரம்பமானது.

"ஒரு நிமிஷம் நன் பேசலாமா?" என்ற கனலில் குரலில் அனைவரும் நிமிர்ந்து பார்க்க,

"நீங்க எல்லாரும் பேசி முடிவு பண்றதுக்கு முன்னாடி நான் மாப்பிள்ளை கிட்ட பேசணும்." என்று அனைவரின் முன்பே கேட்டு வைக்க, இவள் ஏதோ வில்லங்கமாக செய்யப் போகின்றாள் என்பதை உணர்ந்த பூஜா

"கனலி பொண்ணா அடக்க ஒடுக்கமா இருக்க பாரு. நானெல்லாம் வீட்டு ஆம்பளைங்க இருக்கும்பொழுது பேசவே மாட்டேன்." என்று தன் அமைதியை நிரூபிக்க முயற்சி செய்ய கனலி

"இப்ப கூட வீட்டுல நிறைய ஆம்பளைங்க இருக்காங்க அண்ணி, அவங்க முன்னாடி நீங்க பேசுறீங்களே." என்று கூற அதில்

'உனக்கு தேவை வந்தா நீ பேசும் பாேது எனக்காக நான் பேசுவேன்.' என்ற அர்த்தத்தை அனைவருமே புரிந்து காெண்டனர். கனலி தூரத்து உறவினர் ஒருவர்

"அம்மாடி பூஜா இது ஒன்னும் அந்த காலம் இல்லை, இந்த காலத்துல பொண்ணுங்களுக்கும் பேசுறதுக்கு எல்லா உரிமையும் இருக்கு.

இப்போ என்ன கனலி மாப்பிள்ளை கிட்ட பேசணும்னு விருப்பப்படுற. பேசட்டும் அதுல எதும் தப்பு இருக்குற மாதிரி எனக்கு தெரியல." என்று கூற, கனலி உறவினர்கள் பலரும் அந்தக் கருத்தை ஆதரித்தனர்.

அதற்குமேல் எதுவும் பேச முடியாமல் பூஜா அமைதியாக தன் மாமியாரிடம் சென்று நின்று கொண்டாள்.

"நீ போய் மாப்பிள்ளை கிட்ட பேசிகிட்டு வா மா." என்று உறவினர்கள் அனுமதி வழங்க

"இல்ல மாமா எனக்கு தனியா பேச வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. நான் கேட்க வேண்டியத எல்லாரும் முன்னாடியே வச்சு கேட்டுக்குறேன்." என்று கூறிவிட்டு மாப்பிள்ளையாக அமர்ந்திருந்தவனிடம் திரும்பி

"உங்க பேரு என்ன?" என்று கேட்க அவனருகில் அமர்ந்து இருந்த அவனது தாயார்

"என்னமா என் பையனோட பெயர் கூட உனக்கு தெரியாதா."

"எனக்கு இன்னைக்கு நிச்சயதார்த்தம் அப்படி என்கிற விஷயமே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் தெரியும். அப்படி இருக்கும்பொழுது உங்க பையன பத்தி எப்படி தெரிஞ்சுக்க முடியும்." என்று கனலி பேசுவதை கேட்டபடி பேசாமல் அந்த மாப்பிள்ளை அமர்ந்து இருக்க கனலி அவரிடம்

"சார் நான் உங்க கிட்ட தான் கேட்டேன். உங்களுக்கு பேச்சு வராதா."

"எனக்கு நல்லாவே பேச்சு வரும், என்னுடைய பேரு ரகுபதி."

"நீங்க என்ன படிச்சு இருக்கீங்க."

"பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங்."

"எங்க வேலை பார்க்கிறிங்க."

சென்னையில் ஒரு புகழ் பெற்ற கம்பெனியின் பெயரை கூற, அதில் கனலி

'மீனு வலையில வசமா வந்து சிக்கிக்கிச்சு.' என்று நினைத்துக்கொண்டாள்

"எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க."

"45 ஆயிரம்.
சொந்தமா பெரிய வீடு ஒன்னு சென்னையில இருக்கு."

"என்ன கல்யாணம் பண்ணிக்க எவ்வளவு வரதட்சணை எதிர்பார்க்கிறீங்க." என்று மேலும் மேலும் கேள்விகளை கேட்டுக்கொண்டே செல்ல அவள் கேள்வியில் அவன் ரகுபதி எரிச்சல் அடைந்தாலும்

"நான் பணத்துக்காக ஆசைப்படுறவன் கிடையாது. நீ எனக்கு கிடைக்கிறது கோடி ரூபா கிடைக்கிற மாதிரி. என்னால உன்ன பாத்துக்க முடியும்." என்று சினிமா வசனம் பேச கடலில் சிரிப்பு வருவது போல் இருந்தது.

இருக்கும் இடத்தை மனதில் கொண்டு சிறுத்தை கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்து இருந்தாள்.

"அண்ணா எனக்கு உன்னுடைய போன ஒரு நிமிஷம் தரியா." என்று தன்னிடம் இருந்த பாசமுள்ள பெண்ணாக கனலி கேட்க, கார்த்திக் மனதில் கொள்ளும் ஒரு எச்சரிக்கை மணி அடிக்கவே செய்தது.

ஏனெனில் நினைவு தெரிந்த நாள் முதல் கனலி கார்த்திகை என்றும் அண்ணன் என்று இவ்வளவு மரியாதையாக அழைப்பது கிடையாது.

சுற்றி உறவினர்கள் வேடிக்கை பார்க்க வேறு எதுவும் செய்ய முடியாது போனை தர அதில் யாருக்காே அழைத்த கனலி அழைப்பு எடுக்கப்பட்டதும் அதை ஸ்பீக்கர் மோடுக்கு மாற்றிவிட்டு பேச ஆரம்பித்தாள்.

"ஹலோ யார் பேசுறீங்க."

"தீபு நான் கனலி பேசுறேன்."

"கனலி எப்படி இருக்க, நீ இல்லாம எங்களுக்கு ரொம்ப போர் அடிக்குது. எப்ப தான் லீவ் முடிஞ்சு உன்னை பாப்போம் இருக்கு."

"தீபு பேச்சைக் குறை நான் உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் கேக்குறதுக்கு தான் கால் பண்ணேன்."

"என்ன விஷயம் ஏதாவது பிரச்சனையா."

"பிரச்சனை எல்லாம் இல்லை, உன்னுடைய சித்தப்பா சென்னையில வேலை பார்க்கிறதா சொன்னேன்ல அவர் எந்த கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள்." என்று கேட்க அதற்கு

தீபிகா ரகுபதி கூறிய அதே கம்பெனியின் பெயரை கூறினாள். கூறிவிட்டு

"எதுக்காக இதையெல்லாம் கேட்கிற கனலி."

"எனக்கு ஒருத்தரை பத்தி விசாரிக்க வேண்டியது இருக்கு அதான் கேட்டேன். உங்களுடைய சித்தப்பா நம்பர் எனக்கு கிடைக்குமா."

"சித்தப்பா நம்பர் எதுக்கு கனலி, சித்தப்பா என் பக்கத்துல தான் இருக்காங்க. அவங்க கிட்ட நீயே கேளு, நான் இப்போ சென்னையில தான் இருக்கேன். ஒரு நிமிஷம் இரு அவர்கிட்ட கொடுக்கிறேன்."

தீபிகா எடுத்துக்கொண்டு ஒரு நிமிட இடைவெளியில் ரகுபதியின் முகம் பயத்தால் வெளுத்து இருக்க, அவன் பெற்றோரகா வந்தவர்கள் கையைப் பிசைந்து கொண்டு அமர்ந்து இருந்தனர்.

நடப்பதையெல்லாம் எதோ நாடகத்தை பார்ப்பதுபோல கனலி உறவினர்கள் அனைவரும் அமர்ந்து இருந்தனர்.

"ஹலோ நான் தீபிகா சித்தப்பா பேசுறேன்."

"ஹலோ அங்கிள் நான் தீபிகா பிரென்ட் கனலி."

"சொல்லுமா ஏதோ என் கிட்ட முக்கியமா யாரைப்பற்றியும் கேட்கணும்னு சொன்னியாமே."

"ஆமா அங்கிள் நீங்க வேலை பார்க்க கம்பெனியில ரகுபதி அப்படின்னு ஒரு இஞ்சினியர் வேலை பாக்குறாரு, அவரை பற்றி எனக்கு கொஞ்சம் டீடெயில்ஸ் தெரியணும்."

"இல்லையா என்னுடைய கம்பெனியில ரகுபதி அப்படின்னு யாரும் வேலை பார்க்கல மா."

"இல்ல அங்கிள் உங்களுடைய கம்பெனியில் தான் வேலை பாக்குறாரு.
மெக்கானிக்கல் இன்ஜினியர்.
45 ரூபாய் சம்பளம் வாங்குறார்."

"அப்படி ரகுபதி என்கிற பேருல ஒருத்தர் என்னுடைய கம்பெனியில் வேலை பாக்குறது வாய்ப்பே இல்லை.
நான் அங்க தான் கிட்டத்தட்ட இருபத்தி மூணு வருஷமா வேலை பார்க்கிறேன். அங்க இருக்கிற எல்லாரையும் எனக்கு நல்லா தெரியும். வேணுமுன்னா என்னுடைய டிரைவர் ஒருத்தன் இருக்கான் அவனுடைய பேர்தான் ரகுபதி.
வேற யாரும் எனக்கு தெரிஞ்சு ரகுபதின்னு அங்கு இல்லை."

இப்படி ஒரு திருப்புமுனையை கனலியே சற்றும் எதிர்பார்க்கவில்லை.

"உங்களுடைய டிரைவர் பத்தி டீடைல்ஸ் சாெல்ல முடியுமா அங்கிள்."

"அவனுக்கு வயசு ஒரு 28 லிருந்து 30 குள்ள இருக்கும்.
அவனுக்கு அப்பா அம்மான்னு யாருமே கிடையாது.
படிப்பு கூட அஞ்சு ஆறு படிச்சிருக்கான்னு கேள்விப்பட்டேன்.
வேற எதுவும் எனக்குத் தெரியாது மா."

"சரி அங்கிள் தீபா கிட்ட அப்புறம் பேசுறேன்." என்று தொடர்பை துண்டித்து விட்டு தன் அண்ணனிடம் கொடுத்தாள்.

"கனலில் என்ன நடக்குது இங்க." என்று திலகவதி கேட்க

"சொல்றேன் மா சொல்லாமல் எங்கே போகப்போறேன்." என்று கூறிவிட்டு அனைவரையும் ஒரு முறை பார்த்த கனலி

"நான் இதுக்கு முன்னாடியே இதோ இங்க நிக்கிறவன பார்த்து இருக்கேன். இவன் என்னுடைய ஃப்ரெண்ட் தீபிகா சித்தப்பா வீட்டுல வேலை பாக்குற ஒரு டிரைவர்.

நீங்க எல்லாரும் நினைக்கிற மாதிரி இன்ஜினியர் கிடையாது. படிப்பறிவு, அப்பா, அம்மா சொந்தமாக வீடு எதவும் இவனுக்கு கிடையாது." என்று

ரகுபதி பற்றிய விஷயங்களை புட்டு புட்டு வைத்த கனலி உறவினர்கள் அனைவரும் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.

அதன்பிறகு அந்த இடத்தில் ஒரு பெரிய கலவரமே நடந்து முடிந்தது. அந்த நாடகக் குழுவினர் அனைவரும் சென்றபிறகு கனலி வீடு ஏதோ புயல் அடித்து ஓய்ந்தது போன்று இருந்தது. இவ்வளவு பிரச்சனை நடந்த பின்பும் கார்த்திக் தன் முகத்தை வருத்தமாக வைத்துக்கொண்டு

"எனக்கு இவன் இவ்வளவு கெட்டவன்னு தெரியாது அம்மா, தெரிஞ்சிருந்தா என்னோட தங்கச்சி வாழ்க்கையை நானே இப்படி கெடுக்க பார்த்திருப்பேனா." என்று கூற

அவன் பக்கத்தில் இருந்த அவனது சதிபதி பூஜா, அவன் நாடகத்தின் சரிபாதி ஏற்று அழுது ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள். இதையெல்லாம் காண சகிக்காத கனலி தனது தூரத்து சொந்தமும் ஊர் பெரியவருமான விநாயகப் பெருமானிடம் வந்து

"மாமா எனக்கு ஒரு முக்கியமான விஷயம் பேசி முடிக்க வேண்டியது இருக்கு. நீங்க தான் இந்த ஊருக்கு தலைவரு, நியாயம், தர்மம் எல்லாத்தையும் சரியா சொல்ல உங்களைத் தவிர வேற யாரும் இங்க இல்ல.

உங்க கிட்ட கேட்டு முடிவு எடுத்தா சரியா இருக்கும்." அவரிடம் பேச்சை ஆரம்பிக்க கனலி பேச்சில் உச்சி குளிர்ந்த விநாயகர் பெருமாள்


"சொல்லுமா கனலி என் மச்சான் பொண்ணு நீ உனக்காக இந்த மாமா எதனாலும் செய்வேன்.
அடுத்த முகூர்த்தத்திலேயே உனக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை பார்த்து நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்."

"இல்ல மாமா என்னுடைய கல்யாணத்தைப் பத்தி உங்ககிட்ட கேட்க வரல."

"வேற என்னமா வேற எதுனா சொல்லு, இந்த மாமே உனக்கு உதவி பண்ணு தயாரா இருக்கிறேன்."

"அப்பாவோட விவசாய இடத்தை நீங்களே ஒரு நல்ல ஆளா பார்த்து குத்தகைக்கு கொடுத்துடுங்க. அதுல வர பணத்த அம்மா, சித்தி ரெண்டு பேருக்கம் பாதி பாதியா குடுக்குறதுக்கு எல்லா ஏற்பாட்டையும் நீங்கதான் எனக்காக பார்த்து செய்யணும்."

"யாரு சொத்தை யாரு பார்க்கிறது." என்று கார்த்திக் கனலி இடம் பாய கனலி

"இது இப்பாே என்னுடைய சொத்து அதை யார் பார்த்துக்கொள்ளனும்னு நாம் முடிவு பண்றேன். இத உன் கிட்ட கேட்கனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை." என்று கூறிவிட்டு விநாயகர் பெருமாளிடம்

"மாமா அப்பா சாகறதுக்கு முன்னாடி இந்த சொத்து எல்லாத்தையும் என்னுடைய பேர்ல எழுதி வச்சிருக்காரு.

ஏன் எதுக்குன்னு எனக்கு காரணம் தெரியாது. இருந்தாலும் அவரு என்னுடைய பெயரில் சொத்தை எழுதி வச்சதனால நான் அவருடைய இடத்திலிருந்து சில பொறுப்ப செய்தாக வேண்டும்."
"சரிமா அதுக்கு நான் என்ன செய்யணும்."

"இது அப்பா சித்தப்பா ரெண்டு பேருக்கும் பொதுவான சொத்து. சித்தப்பா தன் குடும்பத்தை அப்பா பாத்துக்குவார் என்கிற நம்பிக்கைல அவர் சொத்தை அப்பா பேருக்கு அவர் மாற்றிக் கொடுத்தார்.

இப்போ அப்பா அந்த சொத்து என்னுடைய பேர்ல எழுதி வச்சி இருக்காரு. அப்படி இருக்கும் பொழுது நான் ரெண்டு பேரும் விட்டுட்டு போன கடமையை சரியா செய்யணும்.

எனக்கு இந்த சொத்து மேல் எந்த ஆசையும் இல்லை."

"அப்படின்னா உங்க அண்ணன் பேர்ல எழுதி வைக்க வேண்டியதுதானே." என்று பூஜா எங்கே சொத்து தங்கள் கையை விட்டு சென்று விடுமோ என்று பேச

"அப்படினா எழுதி வச்சுட்டா எங்க எல்லாரையும் பார்த்துக்குவானா அந்த நம்பிக்கை எனக்கு சுத்தமா இல்ல."

"அதுக்கு இப்போ நீ என்ன பண்ண போறே."என்று திலகவதி கேட்க

"இப்போதைக்கு விவசாய நிலத்தை குத்தகைக்கு விடப் போறேன். அதுல இருந்து வரும் வருமானம் உனக்கும் சித்திக்கும் சரிபாதியாக போகும்.

அதை வச்சி உங்களுடைய வாழ்க்கையை நீங்க பாத்துக்கங்க இனியன் படிப்பு, யாழினி கல்யாணம் என்னுடைய வாழ்க்கைனு வரும்பொழுது இந்த சொத்தை எல்லாம் பிரிச்சு அவங்க அவங்க கையில நான் கொடுத்துடுவேன்." என்று கனலி கூற அவளை அடிக்க கை ஓங்கிய திலகவதி

"இதுக்கு நா ஒருகாலமும் சம்மதிக்க மாட்டேன்."

தாயின் கைகளைப் பிடித்து தடுத்து நிறுத்திய கனலி

"உங்க சம்மதத்தை எதிர்பார்த்து நான் நிக்கல. சாெத்த ரெண்டு பங்கா பிரித்து ஒரு பங்கு இனிக்கும் யாழினிக்கும், இன்னொரு பங்கு எனக்கு கமலி கார்த்திக் மூணு பேருக்கும். இதுதான் என்னுடைய முடிவு இதுல எந்த மாற்றமும் இல்லை."

கனலி ஆரம்பித்து வைத்த சொத்து பிரச்சனை வீட்டில் கொழுந்துவிட்டு எரிய பிரச்சனை பஞ்சாயத்து வரை சென்று நின்றது.

அங்கும் கனலி தான் தன் நிலையில் உறுதியாக இருக்க பஞ்சாயத்தார் கனலிக்கே ஆதரவாகவே இருந்தனர்.

பெங்களூர் கிளம்பும் முன்பு தன் அண்ணனிடம்

"உன்னுடைய கேவலமான புத்தி எனக்கு சின்ன வயசுல இருந்து தெரியும். அப்படி இருக்கும் பொழுது நான் எப்படி ஏமாறுவேன்னு நீ நினைச்ச.

இதோட அடங்கி இருந்தான் உனக்கு கிடைக்க வேண்டியது உன்னுடைய கைக்கு வந்துரும். அதைவிட்டுட்டு கோர்ட் கேஸ்னு பாேனா உனக்கு எதுவும் கிடைக்காது." என்று எச்சரித்துவிட்டு பெங்களூர் திரும்பினாள்
 
Top