உன்னாலே உனதாகிறேன்! டீஸர் 2

Advertisement

Ashokaa

Well-known member
Member
ஹலோ மக்களே,

‘உன்னாலே உனதாகிறேன்‘ கதையோட இரண்டாவது டீஸர். படிச்சுட்டு சொல்லுங்க.

அன்புடன்,

அசோகா 🥰

உன்னாலே உனதாகிறேன் !

”மச்சா, நா யோசிச்சுதே இந்த முடிவுக்கு வந்தே. எம் மனதுல இருக்கத சொல்றே. கேட்டுட்டு பெரியவுக நீங்க, ஒங்க முடிவுகள சொல்லுங்க. ஏ அப்பாவுக்கும், என் தம்பி மகனுக்கும் சம்மதமுன்னா எங்க வீட்டுக்கு வந்த மருமகள நாங்க திருப்பி அனுப்பல. எங்க மருமகள, ஏந்தம்பி மகனுக்கு கட்டிக் கொடுங்க. எந்தம்பியும் அவே சம்சாரமும் தவறுனதுக்கு அப்புறம் அவனயும் எம்மவனாத்தே வளக்குறே“ என்று மேலும் பேச்சை இழுக்காமல் மனதில் நினைத்ததை பட்டெனக் கேட்டுவிட்டார் கதிர்வேலன்.

எல்லோரும் ஒரு நிமிடம் என்ன சொல்வதெனத் தெரியாமல் தடுமாறினாலும் அனைவரின் பார்வையும் இப்போது அருகிருந்த அவரின் அப்பா முருகய்யாவையும், சுவரோரம் தனியே நின்றிருந்த பேரனையும் துளைத்தது.

அவன் மறுகனமே மறுப்பாய் தலையசைத்தாலும் தாத்தாக்கு மட்டும் புரியுமாறு கண்ணால் சைகை செய்தாலும் அவர் எதையுமே கண்டுகொள்ளவில்லை. அதேசமயம் அவர் அப்படி எல்லாம் எதுவும் உடனே சொல்லிவிடவுமில்லை.

“அப்பா, நீங்க என்ன நெனைக்கிறீங்க? மருமகள உங்க பேரனுக்கு… ம்ம்ம், நம்ம வீட்டுக்கு வந்த மருமகப்பா. என் பேரன் எங்கூட வேணும்ப்பா. சரின்னு சொல்லுங்கப்பா.” என்ற கதிர்வேலன் தன் அப்பாவைப் பார்த்தார். மெல்ல கூட்டத்தை தன் கண்களால் ஒருமுறை வலம் வந்த முருகைய்யா, சில நொடிகள் யோசனையில் தயங்கி, பெருமூச்சொன்றை விட்டப்படி பேசத் தொடங்கினார்.

“வேலு, நீ சொல்றதும் சரித்தே. வாழ வந்த மகாராசியையு, ஏ கொள்ளு பேரனையு அவுகளோட அனுப்ப வேணா. எம்பேரே உம்மருமவள கண்டிப்பா கட்டிக்குவான்“ என்று அவர் பேசி முடிக்கவுமே அந்தயிடத்தைவிட்டு சட்டென அகன்றிருந்தான் அவன். அவன் நடையின் வேகத்தில் சிக்கிய வெள்ளை வேஷ்டி கூச்சலிட்ட ‘சரசர‘ சத்தம் சொல்லியது அவன் கோவத்தை.

கூடியிருந்த அனைவரின் கவனமும் அவனின் அந்த கோவத்தில் தாத்தாவின் புறம் திரும்ப, “ஐய்யோ, பெரியப்பா, சின்னவனுக்கு விருப்பமில்ல போலயே? கோவிச்சுட்டு போறான்.” இவர்களின் உறவுமுறை பெரியவர் ஒருவர் கிட்டத்தட்ட கத்தினார்.​
 
உறவாய் வந்து
உரிமையாய் இருந்து
உதிர்ந்த கனவுகளின் துண்டுகளாய்
உன் துணையின்றி
உயிரற்ற நிலையில்
உள்ளம் நிஜத்தை
உலுக்குகிறது.....
 
உறவாய் வந்து
உரிமையாய் இருந்து
உதிர்ந்த கனவுகளின் துண்டுகளாய்
உன் துணையின்றி
உயிரற்ற நிலையில்
உள்ளம் நிஜத்தை
உலுக்குகிறது.....
உள்ளம் உலுக்கும் நிஜம் உணர்வுகளை உறைய செய்யும். உரிமையுடன் உற்றவன் வருவான் உன்னை உனக்காகவே உயிராய் நேசிப்பான்.

நன்றி அக்கா 🤗
 

Advertisement

Advertisement

Back
Top