Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பே நீ புயலா? மழையா? பூந்தென்றலா? -அத்தியாயம் 1

Advertisement

Poornima Madheswaran

Well-known member
Member
அத்தியாயம் 1:


கெளசல்யா சுப்ரஜா ராம பூர்வா

சந்த்யா ப்ரவர்த்ததே

உத்ஹிஷ்ட நரஷாத்துலகர்தவ்வ்யம் தவ்யமாந்திகம்


கோவில் ஒலிநாடாவில் சுப்ரபாதம் ஒலித்துக்கொண்டு இருக்க அந்த அதிகாலை வேலையில் குளித்துவிட்டு, அதை கேட்டுக்கொண்டே தன் வீட்டு வாசலை கூட்டி கொண்டு இருந்தாள் உமா மகேஸ்வரி.



பெயருக்கு ஏற்றார் போல் கோவக்காரி மட்டுமல்ல பாசக்காரியும் கூட. அன்பாக பழகுபவர்களிடம் அன்பைகாட்டுவாள். மிகவும் நேர்மையான குணம் கொண்டவள். எளிதாக கூறினால் முகம் பார்க்கும் கண்ணாடி போன்றவள். அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் அவள் மேல் மரியாதையும், மதிப்பும் உண்டு காரணம் ஒற்றை ஆளாக இருந்து தன் இரண்டு தம்பிகள், தங்கைக்கு அத்தனையும் பார்த்து பார்த்து செய்பவள். அவள் தம்பிகள், தங்கை தான் அவள் உலகம்.




"மூன்று வருடங்களுக்கு முன்பு இவளை பார்த்தவர்களுக்கு இவள் தான் உமா மகேஸ்வரி என்றால் யாரும் நம்பமாட்டார்கள்" அந்த அளவு மாறியிருந்தாள்.



“தங்கநிறம். சராசரி உயரம். நல்ல அழகு. நல்ல உழைப்பாள் கொடி போன்ற உடல் வாகு. MSc(maths) முடித்து உள்ளாள். படிப்பிற்கு தகுந்த வேலையை மட்டும் பார்ப்பவள் அல்ல அனைத்து விதமான வேலையையும் செய்வாள்”. காலை எழுந்தவுடன் ஆரம்பமான வேலை தூங்கும் வரை இருக்கும். உழைப்பிற்கு அஞ்சாமல் உழைப்பாள்.



வாசல் கூட்டி, கோலம் போட்டவள் அதை முடித்து விட்டு வீட்டிற்குள் சென்று சாமி படத்திற்கு விளக்கு ஏற்றி வணங்கி கொண்டு இருக்கும் பொழுது பால் வந்துவிட்டது.



"அண்ணா!", "இதோ வந்துடேன் இருங்க... ஏணா? இப்படி மணி அடித்தால் ஊரே வந்துடும் அண்ணா". "அட போமா, நீ நேரமா எழுந்தரிக்கரமாதிரியா? எல்லா வீட்டுளையும் எழுந்தரிக்கராங்க? ஒருத்தர் ஐந்து மணிக்கு, ஒருத்தர் ஆறு மணிக்குனு எழுந்திரிக்கராங்க அதுதான் ம்மா வேகமா மணி அடிக்கிறேன். இது எல்லாம் பழக்கிடுச்சு ம்மா சரி நாவரேன்" என்றவரிடம். சரிங்க அண்ணா நாளைக்கு இந்த வார காசு வாங்கிக்குங்க?. "சரிமா நாளைக்கு வாங்கிக்கிரேன் என்று சென்றுவிட்டார்".




உள்ளே சென்றவள் அடுப்பில் பாலை வைத்துவிட்டு பக்கத்து அறையில் உறங்கும் தங்கை மற்றும் தமையன்களை எழுப்ப சென்றாள்.




இளா, "எழுந்திரி நேரம் ஆச்சு பார்? என்றவளிடம் இதோ அக்கா! ஐந்து நிமிடம், அது எல்லாம் முடியாது எழுந்து முகம் கழுவிவா சூடா கற்கண்டு பால் தரேன்", என எழுப்பி அனுப்பிவிட்டு அடுத்த பாயில் உறங்கும் தம்பி அகிலனைஎழுப்பினாள்... அவன் விரைவாக எழுந்து விட்டான். அடுத்தவனை எழுப்புவதற்குள் பால் பொங்கும் சத்தம் கேட்டு அடுப்பை அனைத்து விட்டு வந்து, அந்த வீட்டின் கடைக்குட்டியை எழுப்பினாள். அவனை எழுப்புவது தான் மிகவும் கஷ்டம். அமுதன், "எழுந்திரிக்கலைனா நாளைக்கு மீன் பிடிக்க ஆத்துக்கு கூட்டிகிட்டு போகமாட்டேன். சரி நீ தூங்கு போ எனக்கு என்ன" என்றவுடன் எழுந்தவன்,




“அக்கா! நான் எழுந்துவிட்டேன், என்று ஓடிப்போய் பல் துலக்கி விட்டு வந்து சமத்தா பால் அருந்திக்கொண்டு இருந்தான்”. அவனை பார்த்தவர்களுக்கு சிரிப்பு அடக்கமுடியவில்லை. அந்த அளவுக்கு இருந்தது அவன் செயல். அந்த வீடு உயிர்போடு இருக்க முக்கிய காரணம் இவன் தான்.





“இளந்தென்றல் என்ற அம்மு. வயது 23. M.Com இறுதி கட்டத்தில் உள்ளால்”. அடுத்து “அகிலன் என்ற கண்ணன். வயது 19. BSC(Maths) second year”. அடுத்தது “அமுதன் என்ற குட்டி. வயது 12. 7th standard”.





அனைவரும் சேர்ந்து பால் குடித்து கொண்டு இருக்கும் பொழுது உமா, இன்னைக்கு என்ன செய்யலாம் சொல்லுங்க. இளா, “சாப்பாடு, எண்ணெய் கத்திரிக்காய் போதும் அக்கா” என்றான், இல்லகா today “இஞ்சி துவையல் வேணும் என்றான் அகிலன்”. No, நீங்க யார் சொல்றதும் இல்ல எனக்கு “பூரி வேணும் என்றான் அமுதன்”.




சரிசரி சண்டை போடாம நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க என்றாள் உமா.





"சரிகா", "நேற்று யார் மெனு சொன்னது?" என்றவளிடம்....





"நான் தான் சொன்னோன் என்றான் கண்ணன்", அப்ப இன்றைக்கு நீ சொன்ன மெனு இல்ல. அதற்கு முதல் நாள் யார் மெனு?, அது நான் அக்கா என்றால் இளா. அதற்கு முதல் நாள் என் மெனு என்றால் உமா. “அப்போது இன்றைய மெனு குட்டி சொன்ன பூரி தான் என்றால் உமா. அதற்கு எழுந்து சந்தோசத்தில் ஆடி தமக்கையிடம் செல்லம் கெஞ்சியவனிடம், சரிசரி நீங்க எல்லாம் படிங்க நான் போய் வேலைய கவனிக்கிறேன் என்று பால் குடித்த டம்ளார்களை எடுத்துக்கொண்டு சென்றுவிட்டாள் சமையலை கவனிக்க” அவர்கள் வீடு மெத்தம் மூன்று சிறுசிறு அறைகள் கொண்ட வீடு.





அவள் அனைத்து வேலையையும் செய்து விட்டு வரும்போது மணி7.30 பின் தமையன்களை குளிக்க அனுப்பி விட்டு வந்து, தங்கை உடன் சேர்ந்து அவர்களின் மதியஉணவினை எடுத்து பையில் வைத்து விட்டு காலை உணவிற்காக தட்டில் எடுத்து வைக்கும் போது இருவரும் ஒருவர்ஒருவராக வந்துவிட்டனர். அடுத்து அம்மு குளித்து வந்த பின்
அனைவரும் சாப்பிட்டு விட்டு கல்லூரி, பள்ளிக்கு சென்று விட்டார்கள்.

அவர்கள் சென்ற உடன் உமாவும் புறப்பட்டு ஒரு பாத்திரத்தில் சில பூரியை போட்டுக்கொண்டு, கதவினை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டாள்.





வழியில் தோழி மல்லிகாவை அழைத்து கொண்டு வயல் வேலைக்கு சென்று விட்டாள். போகும்போது அவள் வளர்க்கும் நாயை அவிழ்த்துவிட்டு விட்டாள்... அதுதான் அந்த வீட்டை காவல் காக்கும்.




“மல்லிகாவும் சாதாரண குடும்பத்தை சேர்ந்தவள் தான். அன்பானவள். வயது 25. BSe(chemistry) முடித்துவிட்டாள். அம்மா இல்லை. ஒற்றை மகள். அப்பா பண்ணையார் வீட்டில் வேலை செய்பவர்”.





அமைதியாக சென்று கொண்டு இருக்கும் பொழுது அதை கலைக்கும் பொருட்டு மல்லிகா, “ஏன்புள்!, எப்பதா நம்ம நிலை மாறும்? நாம்பளும் மத்தவங்க மாதிரி நிம்மதியா வாழ்வது?. பொறந்த இடம் தான் இப்படி பஞ்சபாட்டுனு பார்த்தா வர இடம் கூட இப்படி தான் வருது புள்ள".





"எல்லாம் நம்ப தலையில் என்ன எழுதி இருக்கோ அது மாதிரிதான் அமையும் பொழம்பாம வாபுள்ள".




“அடபோடி!”, ஏன்டா பொறந்தோம்னு இருக்கு. போடி “நான் என்ன கோடிகோடியா பணமா கேட்டேன்? சொந்தமா ஒருவீடு, நல்ல வேல, குணமான மாப்பிள்ளை, தங்கமான குடும்பம் இது தான கேட்டேன். அது கூட அமையமாட்டிங்குது” என்றவளிடம்...





“உன் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லா அமையும் புள்ள, நீ சந்தோசமா இருப்ப பாரு என்றால்”….





அடியே!, “உமா சொல்ல மறந்துட்டேன் நம்ம பண்ணையார் பெரிய மகன் வெளிநாட்டு இருந்து நாளைக்கு வராராம் அதநாள் நமக்கு வேலை இனி தினமும் இருக்கும்” என்றவளிடம்...




"யார் வந்தா நமக்கு என்ன வேலை இருந்தா சரி. அப்பறம் நாளைக்கு ஆத்துக்கு பேலாம் நீ நேரமா வீட்டுக்கு வந்துவிடு இந்த குட்டி ஒரே அடம், நாளைக்கு கூட்டிக்கிட்டு போலாம்னு சொன்னோன்? நாம என்ன வெளி ஊரா போக போறோம் இங்கதான, என்னபுள்ள வரியா?"... "சரி புள்ள நாளைக்கு எங்க அப்பா வீட்டுக்கு வராது பண்ணையார் வீட்டில வேலை அதிகம் இருக்காம் காலைல சொல்லுச்சி. சரி புள்ள வா எல்லா வந்துட்டாங்க வயல்ல இறங்ககாட்டியும் சீக்கிரம் ஓடுபுள்ள காசு புடிப்பாங்க என்று கூறிய உமாவை பார்த்ததும் இரக்கம் சுரந்தது மல்லிக்கு , “இன்னும் எவ்வளவு காலந்தா இந்த புள்ள பாடுபடும் கடவுளே இவளுக்கும், இவள நம்பி உள்ள அந்த பிள்ளைகளுக்கும் நீ தா கருப்பா நல்ல வழிகாட்டனும்”.




அடியே!... வாடி “வேகமா ஓடுநாதான்டி அவங்கள புடிக்கமுடியும் இல்லை காசு போச்சிடி”. இதோ வாறேன் இருடி... மாரியக்காவ கூப்பிடறேன் என்றவளிடம்,
சீக்கிரமா கூப்பிடு மல்லி.




"அக்கா! மாரியக்கா, தனம் இதோ வரோம் இருங்க".






“அடியே! சீக்கிரம் வாடி! காட்டுகாரரு வராரு வேகமா வாங்கடி”. பையகொண்டா மல்லி நா எடுத்துக்கிறேன், பரவாயில்லவா அதோ வந்தாச்சு புள்ள பாரு, அந்த ஆளு பண்ணையார் கூட பேசுது தப்பிச்சோம்.





அப்பாடா வந்தாச்சி பைய தா மல்லி மரத்தில மாட்டிவிட்டு நான் வாறேன். "ஆமா!, இந்தா மாட்டு இல்ல எறும்பு ஏறிக்கும் உமா என்று கூறிக்கொண்டே வந்தவளுக்கு மூச்சு வாங்கியது சிறிது கீழே உட்காந்து தம்மை ஆசுவாசபடுத்திக்கொண்டு இருக்கும் பொழுது காட்டுக்காரர் வந்துவிட்டார். அவர் வந்ததும் கூலி பேசி நடவு ஆரம்பிக்கப்பட்டது.





மஞ்சள் நடவு நடும் போது மாரியக்கா, "ஏங்கடி! விடியங்காடி எந்திரிச்சி வேலைய முடிச்சு வர இவ்வளவு நேரமா உங்களுக்கு? நாங்க உள்ள இறங்கி இருந்தா இங்க கூலி புடிப்பாங்க தெரியுமுள்ள சீக்கிரம் வரலாமுள்ள?".





"அட வேகமாதாகா வந்தோம் நேரமாகிடுச்சி என்றால் உமா".





ஏண்டி மல்லி... “பண்ணையார் பெரிய மகன் வெளிநாட்டுள இருந்து ஏதோ ஆா்டராம்! அது முடிச்சு போட்டு நாளைக்கு விடியலுக்கு ஊருக்கு வராராம்?”...



"அவர் போய் இரண்டு வருஷம் ஆச்சு மெல்ல இப்பதான் வராருனு ஊருக்குள்ள பேச்சி வருது அப்படியா!" என்ற தனத்திடம்...




"ஆமாடி!", "இனி ஊருக்குள்ள எவனாவது குடிச்சுபோட்டு வந்தா அடி கிடைக்காது?"...




“அதான் எல்லாம் பொட்டி பாம்பா அடங்கி வேலைக்கு போய்டாங்க இந்த ஆம்பளைங்க என்றால் மல்லி”. அது என்னவோ உண்மை தான் இனி இந்த ஊரு பிள்ளைகளுக்கு கண்டிப்பா நல்லது நடக்கும் என்றார் மாரிக்கா.






“சின்னவரு கூட ஏதோ இந்த வேலையாக தா! காங்கேயத்துல தங்கி பள்ளிக்கூடமும் கல்லூரியையும் பாத்துக்கராராம்?”. அவரும் வரவாரத்தில ஊருக்கு வந்துவிடுவாராம் அப்படியா?. அப்பறம்நம்ம "பஞ்சாயத்து தலைவர் மகன் கூட வராராம்!". அப்பறம் அவங்க தங்கச்சிய அத்தை பையனுக்கு கட்ட எண்ணம்போல என்றால் தனம். இதை எல்லாம் கேட்ட உமாவிற்க்கு சிரிப்பு வந்தது.






உமாவின் சிரிப்பை பார்த்த தனம், "ஏன்புள்ள சிரிக்கர? சொன்னா நாங்களும் சிாிப்போம் இல்ல?"...






அது ஒன்னுமில்ல தனம், “மதிய பொழுதுகுள்ள பண்ணையார் வீட்டு விசயத்தை எல்லா புட்டுபுட்டு வைக்கரீங்க அதான் சிரிப்பு வந்தது”.






"அடி போடீ நம்மள மாதிரி வேலை செய்பவர்களுக்கு அலுப்பு தெரியாம இருக்க இப்படி ஏதாவது போசவேண்டியதுதான்" என்றார் மாரிக்கா.






இவர்கள் இப்படி பேசினாலும் கைகள் அதன் பாட்டுக்கு வேலையை செய்தது. பின்அனைவரும் மதிய உணவை உண்ண சென்றனர். இது தான் கிராமத்து மக்கள். கல்லம்கபடம் இல்லாதவர்கள். பயிர்களை உயிராய் நினைப்பவர்கள்.





“இந்த கிராமம் பழனியிலிருந்து காங்கேயம் செல்லும் பாதையில் அமைந்துள்ளது அழகிய கிராமம் அல்லியூர்(எனது கற்பனை)”. பசுமையான கிராமம், மலை மற்றும் ஆறு, ஓடைகள் உள்ளது. இரண்டு போகம் விலையும் பூமி. பல மக்களுக்கு இப்படி ஒரு ஊர் இருப்பது தெரியவாய்ப்பு குறைவு. ஜாதி வெறி இங்கு இல்லை. மிகவும் அருமையான, அமைதியான கிராமம்.




IMG-20170324-WA0000.jpg



அன்பு தொடரும்.....
 
Last edited:
உங்களுடைய "அன்பே நீ புயலா?
மழையா? பூந்தென்றலா?"-ங்கிற
அழகான அருமையான புதிய
லவ்லி நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பூர்ணிமா மாதேஸ்வரன் டியர்
 
Last edited:
Top