Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நீயின்றி வாழ்வேனோ 12

Advertisement

Admin

Admin
Member



பகுதி – 12

மாலை ஏழு மணி போல் தன் அலுவலக அறையில் இருந்து வெளியே வந்த சந்தானம், தன் மகன் வெற்றி எங்கேயோ வெளியே கிளம்புவதைப் பார்த்து “எங்க டா இந்த நேரத்தக்கு வெளிய போற....” என்றதும்,

வெற்றி “உங்க மருமகனுக்குத் தான் நான் இருந்தா பிடிக்கலையே..... மதியம் கூட நீங்க போனதும் சாதனாவை கூப்பிட்டு பக்கத்தில உட்கார வச்சிகிட்டான். அதுதான் கொஞ்சம் வெளிய போயிட்டு, நைட் லேட்டா வரலாம்னு பார்த்தேன்.” என்றான்.

“நீங்க ரெண்டு பேரும் யாரோ இல்லை...... அவருக்கு ஒண்ணுன்னா நீ போகணும், உனக்கு ஒண்ணுன்னா அவர் வரணும். இதுக்கு முன்னாடி போட்டி போட்டு வேலை செஞ்சீங்க, அது வேற... இனி அப்படி இருக்கக் கூடாது. நீ ஒழுங்கா பேசி பழகு....”

“ஆமாம், நான் பேசிட்டாலும், உங்க மருமகன் பதில் பேசிட்டு தான் மறுவேலை பார்ப்பான்.”

“முதல்ல கொஞ்சம் ஒருமாதிரி இருக்கும், பிறகு கொஞ்ச நாள் போனா தானா சரி ஆகிடும்.”

“நம்ம பக்கம் எந்தக் குறையும் சொல்ற மாதிரி நடந்துக்கக் கூடாது. நீ இப்ப எங்கையும் போக வேண்டாம் வீட்ல இரு.”

தன் தந்தை சொன்னதுக்காக வெற்றி வெளியில் செல்லாமல் வீட்டில் இருந்தான். அங்கே இருந்த ப்ரீதாவும், சாதனாவும் அவர்கள் பேசியதை கேட்டுக்கொண்டு தான் இருந்தனர்.

“ஏன் இப்படி உட்கார்ந்து இருக்கச் சாதனா? மாப்பிள்ளை வர்றதுக்குள்ள குளிச்சு வேற புடவை கட்டு.” என மேகலா துளைத்து எடுக்க.... அவர் பேச்சை தட்ட முடியாமல்... சாதனா எழுந்து அவளது அறைக்குச் சென்றாள்.

குளித்து மிதமான ஒப்பனை செய்து.... இள பச்சை வண்ண ஷிபான் புடவை கட்டி, கூந்தளில் மல்லிகை மலர் சூடி, அவள் கீழே இறங்கி வந்த போது.... ரிஷி வீட்டிற்கு வந்திருந்தான்.


ஐயோ ! வந்துட்டாங்களா... எப்படி வந்திருகாங்கன்னு தெரியலையே... என அவள் பதட்டத்துடன் ரிஷியைஆராய..... அவன் சந்தானத்தோடு சாதாரணமாகத்தான் பேசிக்கொண்டிருந்தான்.

சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்த சந்தானம் நேரமாவதை உணர்ந்து “சாப்பிடுவோமா மாப்பிள்ளை...” என ரிஷியை அழைக்க....

“நீங்க சாப்பிடுங்க மாமா... நான் குளிச்சிட்டு வந்திடுறேன்.” என அவன் எழுந்துகொள்ள....

“நீங்க குளிச்சிட்டு வந்ததுமே சாப்பிடுவோம். ஒன்னும் அவசரமில்லை...” என்றார் அவர்.

ரிஷி சாதனாவை பார்க்க.... “அங்க டேபிள்ள உங்க டிரஸ் எல்லாம் வச்சிருக்கேன்.” என்றாள்.

ரிஷி சென்றதும், “நீயும் மாப்பிள்ளையோட கூடப் போய்த் தேவையானதை எடுத்து கொடுக்க வேண்டியது தான... உனக்கு அப்படி இங்க என்ன வேலை இருக்கு.” மேகலா சொல்ல...

இப்பவே போய் அவன்கிட்ட வாங்கிக் கட்டிகிறத்துக்கு.... மொத்தமா நைட்டே திட்டு வாங்கிக்கலாம் என்று தான் சாதனா அவனோடு செல்லவில்லை....

“அண்ணியும் கூடப் போனா... திரும்பி வந்த மாதிரிதான்.” ப்ரீதா கேலி செய்ய.... சாதனா வெறுமனே சிரித்து வைத்தாள்.

ரிஷி சீக்கிரமே வந்துவிட... எல்லோரும் சேர்ந்து சாப்பிட அமர்ந்தனர். உணவு முடிந்ததும் மீண்டும் ஹாலில் வந்து உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

இதுவரை வெற்றி, ரிஷி இருவருமே சந்தானத்தோடு தான் பேசிக்கொண்டு இருந்தனர். தன் தந்தை சொன்னதற்காக ஒரு முயற்சி செய்து பார்ப்போமே என்று நினைத்த வெற்றி “எப்படிப் போகுது உங்க எக்ஸ்போர்ட் பிசினஸ்?” என ரிஷியை பார்த்து கேட்க....

“நமக்குத் தான் தென்னை நாரோட அருமை தெரியலை.... அது தெரிஞ்ச வெளிநாட்டுகாரங்க நிறையவே ஆர்டர் தராங்க. அதனால நல்லாத்தான் போகுது.” என்றான் ரிஷியும் சாதாரணமாகவே....

ராஜ்மோகனிற்கு ஏக்கர் கணக்கில் தென்னந்தோப்பு இருக்கிறது. அதில் இருந்து கிடைக்கும் நாரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். தென்னை நாரை தூளாக்கி அதை நிலத்தில் மண்ணோடு கலந்தால்.... மண் இன்னும் வளமாக மாறும்.

அந்த மண்ணில் விவசாயம் செய்தால் தானியங்கள் சிறப்பாக வளரும். நிலத்தடி நீரும் வறண்டு போகாமல்... மண்ணில் நிறுத்தி வைக்கத் தேங்காய் நார் தூசி பயன்படும்.

வெளிநாட்டில் அதற்கு ஏகப்பட்ட கிராக்கி. அதனால் இவர்களுடைய தோப்பில் இருந்து மட்டும் இல்லாமல்... இன்னும் நிறையத் தோப்பை குத்தகைக்கு எடுத்து.... அதில் இருந்து கிடைக்கும் நாரையும் சேர்த்து பெரிய அளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

இது ரிஷி வெளிநாட்டில் இருந்து வந்தபிறகு அவன் தொடங்கிய தொழில்.... அதனால் அவன்தான் இதை முழுவதும் பார்த்துக் கொள்வான். அதனால் அடிக்கடி வெளிநாடுகளுக்கும் சென்று வருவான்.

வெற்றி ஒருகேள்வி கேட்டு, அதற்கு ரிஷியும் சாதாரணமாகப் பதில் சொல்லிவிட... அதே அந்த நாளின் பெரிய சாதனையாக மற்றவர்களுக்குத் தெரிந்தது. அதனால் சந்தோஷ முகமாகவே உறங்க சென்றனர்.

தங்கள் அறைக்கு வந்ததும், ரிஷி குளியல் அறைக்குள் சென்றதால்... அவன் வந்த பிறகு உடைமாற்றுவோம் என்று நினைத்த சாதனா, தான் படுக்கச் சோபாவில் தலையணையும், போர்வையும் எடுத்து வைத்தாள்.

குளியல் அறையில் இருந்து வந்த ரிஷி அதைப் பார்த்ததும் முகம் சிறுத்தான்.

“எதுக்கு நீ தனியா படுக்கிற?”

“நான் உங்களோட கட்டில்ல படுத்தா உங்களுக்குப் பிடிக்குமோ... பிடிக்காதோ....”

கையில் இருந்த துண்டை அங்கிருந்த மேஜையில் வைத்து விட்டுக் கட்டிலில் சென்று சாய்ந்து உட்கார்ந்த ரிஷி “ஓ...இதுல மட்டும் தான் என்னோட விருப்பம் முக்கியமா...” என்றான் ஒரு மாதிரிக் குரலில்.

அதாவது திருமணதிற்கு எனது விருப்பம் முக்கியமாகத் தோணவில்லையா... இப்போது மட்டும் என்ன? இதைதான் அவன் மறைமுகமாகக் கேட்கிறான் எனச் சாதனாவிற்கு நன்றாகவே புரிந்தது.

இதற்கு என்ன பதில் சொல்வது? எதைச் சொன்னாலும் அவன் தவறாக எடுத்து பேச ஆரம்பிப்பான் என்பதால்.... அவள் அமைதியாக இருந்தாள்.

“சொல்லு சாதனா... கல்யாணத்துக்கு என்னோட விருப்பம் முக்கியம் இல்லையா....”

“நீங்க என்கிட்ட இந்தக் கல்யாணத்தில விருப்பம் இல்லைன்னு சொல்லலை ரிஷி....”

“ஓ... அப்ப உன்மேல தப்பு இல்லை... என்மேல தான் தப்புன்னு சொல்ற...”

“இதே, நீ வேற யாரையோ விரும்புறேன்னு தெரிஞ்சிருந்தா நான் என்ன பண்ணி இருப்பேன் தெரியுமா.... உன்கிட்ட வந்து உன்னோட விருப்பத்தைக் கேட்டிருப்பேன்.”

ரிஷியின் பேச்சில் இருந்தே... இதை நீ செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது.

எனக்கு உன்னை ரொம்ப வருஷமாவே பிடிக்கும். உன்னோடு திருமணம் என்றதும் மறுக்க மனம் வரவில்லை... என்பதை ஏனோ சாதனாவால் இப்போது அவனிடம் சொல்ல முடியவில்லை....

சொன்னாலும் அவன் புரிந்து கொள்வானா என்று தெரியவில்லை... அப்படியே புரிந்தாலும், உன்னோட விருப்பம் மட்டும் தான் முக்கியமா எனக் கேட்பான். அதனால் மௌனமாகவே நின்றாள்.

“கல்யாணம் பண்ணிட்டு எதுக்கு இந்தச் சீன்னு? உன் பின்னாடி என்னைச் சுத்த வைக்கணும்னு நினைக்கிறியா...” ரிஷி கடுமையான குரலில் கேட்க....

சோபாவில் இருந்த தலையணையை எடுத்தவள், ரிஷியின் பக்கத்தில் கட்டிலில் சென்று படுத்துக்கொண்டாள். உடை கூட மாற்றவில்லை....

இவனுக்குப் பிடிக்காதோ... என விலகி இருந்தால் அதுக்கும் குத்தம் சொல்றான் என நினைத்தவள், கண்களை இறுக மூடிக்கொள்ள... பெரிய விளக்கை அணைத்துவிட்டு இரவு விளக்கை போட்ட ரிஷி அவள் அருகில் படுத்துக் கொண்டான்.


சாதனாவின் பக்கம் திரும்பி படுத்த ரிஷி “ஆமாம், உங்க அண்ணன் என்ன திடிர்ன்னு பாச பயிர் வளர்க்கிறான்?” என்றதும்,
கண்களைத் திறந்த சாதனா “அவரோட பொண்டாட்டியோட அண்ணன் இல்லையா.... அதுக்காக இருக்கலாம்.” என்றாள்.

“பார்த்தா அப்படித் தெரியலையே.... தங்கச்சியை எதுவும் பண்ணிடுவேன்னு பயமோ...” ரிஷி கேலியாகக் கேட்க....

“அவரும் உங்க தங்கச்சியைத் தான் கல்யாணம் பண்ணி இருக்கார். நியாபகம் இருக்கட்டும்.” என்றாள் சாதனா பதிலுக்கு...

“அதாவது ப்ரீதாவை காட்டி அண்ணனும், தங்கச்சியும் என்னை மிரட்றீங்களா...” என்றவன், எழுந்து அமர....

சாதனா தானும் எழுந்து அமர்ந்தவள் “நீங்க விளையாட்டுக்கு பேசினீங்க, பதிலுக்கு நானும் விளையாட்டுக்கு பேசினேன் ரிஷி...” என்றாள் சமாதானமாக.

“ஆனா...காலையில உங்க அண்ணன்....” என ரிஷி மீண்டும் ஆரம்பிக்க....

“போதும்.” என்று தன் கையால் அவன் வாயை மூடியவள், உடனே துள்ளிக்கொண்டு கையை எடுத்தாள்.

“என்ன டி?”

“ச்சு... இது மீசையா இல்ல முள்ளா... இந்தக் குத்து குத்துது.” என்றாள் உள்ளங்கையைத் தடவியபடி....

“ஹாஹா....” எனச் சிரித்த ரிஷி “இன்னைக்குத் தான் மீசையை ட்ரிம் பண்ணேன். அதுதான்.” என்றான்.

“போதும், பல்லு சுளிகிக்கப் போகுது.”

“வலிக்குதா...”

“பின்ன வலிக்காம...”

“அப்படியா...” என்றவன், வேண்டுமென்றே அவள் முகத்தை அருகில் இழுத்து, கன்னத்தில் மிசையை வைத்து உரச.... மீசை மட்டும் இல்லை அவன் இதழ்களும் சேர்ந்து உரச, சாதனாவிற்கு இன்ப வேதனையாக இருந்தது.

அவனிடம் இருந்து அவள் விலகப் பார்க்க... ரிஷி விட்டால் அல்லவா... அவள் மறு கன்னத்திலும் அவ்வாறு செய்ய.... கூச்சம் தாங்காமல்... அவனைப் பிடித்துத் தள்ளியவள் தானும் கட்டிலில் விழ....


அவள் எழுந்து கொள்ள முடியாமல்.... அவளின் இரு பக்கமும் கைகளை ஊன்றி, அவள் மேல் பட்டும் படாமல் கவிழ்ந்து படுத்தவன், அவள் கழுத்திலும் குறுகுறுப்பு மூட்டினான்.

சாதனா சத்தமாகச் சிரிக்க ஆரம்பித்தாள்.

“ஐயோ ! ஹாஹாஹா.... ரிஷி.... ஹாஹா...”

அவளது சத்தம் கேட்டு எதிர் அறையில் கட்டிலில் படுத்திருந்த வெற்றி துள்ளி எழுந்தான்.

“என்னங்க இப்ப?” அப்போது தான் அவன் அருகில் வந்து படுத்திருந்த ப்ரீதா சலிப்பாகக் கேட்க....

“இல்லை.... சாதனா ரூம்ல இருந்து எதோ சத்தம் வரலை... ஒருவேளை அழறாலோ....”

வெற்றி சொன்னதை வைத்து உன்னிப்பாகக் கவனித்த ப்ரீதா “அழுகலை... உங்க தங்கச்சி சிரிக்கிறாங்க.” என்றாள்.

தன் தங்கை சிரிக்கத்தான் செய்கிறாள் என்று நன்றாகத் தெரிந்ததும் தான் வெற்றி மீண்டும் படுத்தான்.

“உங்க தங்கச்சியை யாரும் ஒன்னும் பண்ணிட மாட்டாங்க. கவலைப்படாம தூங்குங்க.”

ப்ரீதாவின் குரலில் லேசான பொறாமை இருக்க.... அதைப் புரிந்து கொண்ட வெற்றி “உங்க அண்ணன் அவளை நல்லா பார்த்துகிட்டா நான் ஏன் டி அவளைப் பத்தி கவலைப்படப் போறேன்.” என்றான்.

“நீங்க உங்க தங்கச்சிக்காகத் தான நம்ம கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்க.”

தன் மனைவியின் பக்கம் திரும்பி படுத்த வெற்றி “உன்னை எனக்கு முன்னாடியே தெரியும். ரிஷியோட தங்கையைப் பத்தி தெரிஞ்சிக்கனும்னு ஒரு ஆர்வம். அப்பா நம்ம கல்யாணத்துக்குக் கேட்ட போது... உண்மையிலேயே உன்னைப் பிடிச்சதுனால தான் சரின்னு சொன்னேன்.”


“நான் சாயங்காலம் பேசினது உன்னை ஹர்ட் பண்ணிடுச்சுன்னு நினைக்கிறேன். சாரி.”

வெற்றி மனம் திறந்து பேசியதும், ப்ரீதாவின் கலக்கம் மறைந்தது. அவள் தன் கணவனை ஆசையுடன் கட்டிக் கொண்டாள்.

சாதனாவிற்கு ச் சிரித்துச் சிரித்து மூச்சு விட முடியவில்லை.... அவள் ரிஷியின் கேசத்தைப் பிடித்து அவன் தலையைத் தூக்க.... அவள் திணறுவதைப் பார்த்து ரிஷியும், அவனின் விளையாட்டை நிறுத்தினான்.

இருவரின் முகமும் நெருக்கமாக இருக்க.... சாதனா அவனின் முகத்தைத் தன் கரங்களால் பிடித்த படி அவனையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

ரிஷியின் பார்வை அவள் உடலெங்கும் பாய... அப்போது தான் சாதனாவிற்குத் தான் புடவை கட்டி இருக்கிறோம் என்ற நினைவே வந்தது. அவள் குனிந்து தன்னை ஆராய... எதிர்பார்த்தது போலப் புடவை அங்கங்கே விலகி இருந்தது.

சாதனா புடவையைச் சரி செய்யும் எண்ணத்தோடு அவளின் கைகளைக் கொண்டு செல்ல... அவளைத் தடுத்த ரிஷி “அதெல்லாம் நேத்தே நல்லா பார்த்தாச்சு.” என்றான் குறும்பு புன்னகையுடன்.

அவன் நேற்று உடை மாற்றும் போது நடந்ததைச் சொல்கிறான் என்று புரிந்த சாதனாவிற்கு முகம் சிவக்க.... அவனைத் தன் மேலிருந்து விலக்க முயன்றாள்.

ரிஷிக்கு அவளிடம் இருந்து விலகத்தோன்றவில்லை. சாதனாவின் கழுத்தில் இருந்த கனமான தாலியும். நெற்றி வகுட்டில் இருந்த குங்குமமும் அவளிடம் அவனுக்கு இருந்த உரிமையைச் சொல்ல... ஏன் விலக வேண்டும் என்று மனம் முரண்டியது.

அதுவரை அணைவாக வைத்திருந்த கைகளைத் தளரவிட்டு சாதனாவின் மீது தன் உடலின் மொத்த அழுத்தம் கொடுத்தவன், அவளின் இதழில் அழுத்தமாக முத்தமிட.... சாதனாவிற்கு உடலெங்கும் புது இன்பம் பாய்ந்தது.
அவள் இதை எதிர்ப்பார்க்கவே இல்லை. முதலில் அவன் முத்தத்தில் தினறியவள், பின்பு அதில் முழுவதும் கரைந்தே போனாள். ரிஷி எப்படி எல்லாவற்றிலும் பிடிவாதமாக இருப்பானோ... இப்போதும் அப்படித்தான். அவன் விரும்பியது கிடைக்கும் வரை அவளை விடவே இல்லை.


சாதனாவிற்கு த் தன்னையே அவனிடம் கொடுப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதுவும் அவளுக்குத் தன் கணவனை மிகவும் பிடிக்கும். பிறகு கேட்கவும் வேண்டுமா....

காலையில் வழக்கம் போல் ரிஷி தான் முதலில் கண் விழித்தான். சாதனா அடித்துப் போட்டது போல் உறங்கிக்கொண்டு இருந்தாள்.

பல் துலக்கி முகம் கழுவி வந்தவன், தன் தங்கையின் குரல் கேட்டு, கதவை திறந்து கொண்டு வெளியில் சென்றான்.

“ஹாய் அண்ணா எழுந்துட்டியா.... காபி கொண்டு வர சொல்லவா...” என்றவள், ரிஷி சம்மதமாகத் தலை அசைத்ததும், வேலை ஆளை அழைத்துக் காபி வரவழைத்தாள்.

ரிஷி மாடி ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டே காபி குடிக்க.... அப்போது அங்கே வெற்றியும் வந்து அமர்ந்தான்.

“காலையில டிபன் சாப்பிட்டதும், அம்மா வர சொன்னாங்க. ஆமா அண்ணி எங்க? குளிக்கிறாங்களா....” ப்ரீதா ரிஷியிடம் கேட்க....

“நல்ல நாளிலேயே எழுந்துக்க மாட்டா... அதுவும் நேத்து...” என நினைத்த ரிஷிக்குச் சிரிப்பு வர அதை அடக்கியவன் “உங்க அண்ணி இவ்வளவு சீக்கிரம் எழுந்து குளிக்கிறதாவது.” என்றான் கேலியாக...

“அப்ப இன்னும் எழுந்துக்கலையா.... எப்பவும் இப்படி லேட்டா தான் எழுந்துப்பாங்களா....”

“என்னை ஏன் கேட்கிற? அங்க கேளு...” என்றான் ரிஷி வெற்றியை காட்டி....

“என்னங்க, அண்ணி எப்பவும் லேட்டா தான் எழுந்துப்பாங்களா....
அம்மா வேற சீக்கிரம் வர சொன்னாங்க.” ப்ரீதா தவிக்க....

வெற்றி “அவ நைட் ரொம்ப நேரம் படிச்சிட்டு லேட்டா தான் தூங்குவா... அதனால காலையில லேட்டா தான் எழுந்துப்பா....அதே பழக்கம் ஆகிடுச்சு.” என்றான்.

“அண்ணா, போய் அண்ணியை எழுப்புங்க.”

“நீ முதல்ல கிளம்பு.” என்ற ரிஷி பேப்பரை வைத்துவிட்டு அறைக்குள் சென்றான்.

சாதனா இன்னும் உறங்கிக்கொண்டு இருந்தாள். ரிஷி தான் குளித்துக் கிளம்பிய பிறகே அவளை எழுப்பினான்.

சாதனாவிற்கு எழுந்து கொள்ளவே மனம் இல்லை.... இன்னும் நேற்று இரவில் இருந்து அவள் வெளிவரவில்லை... அவள் ரிஷியை காதலாகப் பார்க்க.... ஆனால் அவனோ முழு உடையில் தயாராகிச் செல்லில் எதோ பார்த்துக் கொண்டு இருந்தான்.

ரிஷியின் பார்வை சாதனாவின் மீது விழ.... இன்னும் அவள் எழுந்து கொள்ளாமல் இருப்பதைப் பார்த்தவன் “நேத்தே ப்ரீதா வீட்டுக்கு போகணும்னு ஆசையா கிளம்பி இருந்தா.... இப்பவும் காலையில இருந்து எப்ப போவோம்னு துடிச்சிட்டு இருக்கா.... ஆனா நீ இன்னும் கிளம்பாம இருக்க...”

ரிஷியின் கண்டிப்பான பேச்சு சாதனாவின் இனிய நினைவுகளை விரட்ட.... அவள் எழுந்து வேகமாகத் தயாராக ஆரம்பித்தாள்.
 
ரிஷியை புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம் போலவே... அவன் செய்யறதெல்லாம் பார்த்தா சாதனாவை பழிவாங்குற மாதிரி தெரில... அவனின் மாற்றத்தை நம்பவும் முடில நம்பாமலும் இருக்க முடியல?
 
Top