Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோட்டுக்குள்ளே நின்றதில்லை காதல் 18 ❤️‍🔥

Advertisement

ஐ eagle eyes

Well-known member
Member
காதல் 18 ❤️‍🔥

"மங்கள தாரகை மதுர மோகிதை
மாய பூஜிதை கொண்டாள் பதியவன்
பாதுகை (பாதுகாப்பு)......!!!"


ஆடிவரும் அலை போலே அம்மன் தன் அருளை வாரி வழங்க.அவள் மூக்குத்தி காட்டும் பொன்கீற்று பக்தர்களுக்கு வழிகாட்ட,பக்தர்கள் குறை தீர்கும் மாமருந்து அவளின் இருவிழி எனக் கொண்டாள் அந்த அற்புத நல்லாள். அவளை அனைவரும் வணங்கி மணமேடை நோக்கி நகர்ந்தனர்.


கோவிலின் மண்டபத்தில் சின்ன மலர் மேடையானாலும் எழில் கொஞ்சும் சிறு தேர் போல அற்புதமாக வாசனை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.


அரக்கு சிவப்பில் பட்டுடுத்தி,மல்லிகை மணம் பரப்ப.நகையால் தன்னை நிறைக்காது காதிற்கு கம்மல்,கழுத்திற்கு சிறு ஆரம் ஒன்றும் பெரிய ஆரம் ஒன்றும் அணிந்து.

கைகளில் வண்ண வளையல்கள் நடுவே கைக்கு ஒன்று வீதம்,இரண்டு கரத்தில் இரண்டு தங்க வளையல் அணிந்திருந்தாள் ரிதம்.

அவள் இப்போது அணிந்திருக்கும் அனைத்தும் வேல் தாத்தா அவளுக்காக வாங்கிக் கொடுத்த நகைகளே.

"அவருக்கு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும் போது இவை கண்டிப்பாக உதவும்!" என்று கையோடு ரிதம் கொண்டுவந்தவை தான் இவை.

சிதம்பரம் தாத்தாவும்,ஏகனும் விதவிதமாக அவரவர் உருவாக்கிய நகைகளை அடுக்கிய போதும் அவளின் மனம் இந்த சிறு நகையில் தான் நிறைந்தது.

நெற்றி சுட்டி சிதம்பரம் தாத்தா கொடுத்தது. இடையை இறுக்கிய ஒட்டியாணம் அதன் உரிமையாளன் வடிவு செய்ததாக இருந்தது.


முகத்தில் ஒப்பனைகள் அளவாக இருக்க அதுவே அவளின் தங்கத்தில் குழைத்த செந்நிறத்திற்கு தூக்கிக் கொடுக்க.

கொட்டிக் கொடுத்தாலும்,எட்டிக்
கொடுத்தாலும்,தட்டிபறிக்க இயலா,தளிர் மலர் அழகினிலே மண்ணின் மாந்தர்கள் மயங்க.

மயங்க வேண்டிய மன்னன் அவனோ, 'உறுதி இல்லா உறவிதிலே ரசனைக்கு வழியமைக்காது; விழி திருப்பா நேர்நேர் நிறையனாக!' நின்றிருந்தான்.

பட்டு வேட்டியில் அழகனாய்,குழகனாய் குறிஞ்சி வேந்தனாய் நின்றிருந்தான் ஏகன்.

சுந்தர தோரணையில் அவன் தோன்ற; சொக்கும் பாவனையில் இவள் தோன்ற; புவி தோன்றிய காலம் தொட்டே இருமணம் இணையும் திருமணத்தில் இன்பங்கள் இடம் பெற, கலை பல வாசம் செய்ய இருவரை சுற்றி நின்றனர் நண்பர்கள் கூட்டம்.

ஏகன் புறம் நவநீ, இக்னேஷ் இருக்க.ரிதம் புறம் பிரபா,ரேணு,நிவேதா மூவரும் நின்றிருக்க.

எதிரே நாற்காலியில் சிதம்பரம் தாத்தா,வேல் தாத்தா உடன் அகரன் குட்டி பட்டு வேட்டி சட்டையில் அமர்ந்திருந்தான்.


அகரன் சட்டையின் நிறத்தில் ரிதம் புடவை உடுத்தி இருக்க.அவனுக்கு சொல்லவொண்ணா மகிழ்வு அதில்.

பொன்னார் மேனியன் மங்கள கயிற்றை தங்கத்தை வார்த்து செய்திருக்க அதனை கட்டவேண்டிய தேவை இல்லாது அப்படியே அணிவித்தான்.

'ஆனால்!'

அவன் சுண்டு விரல் கூட ரிதமின் மீது பட்டுவிடாது வெகு முன்னெச்சரிக்கையாக போட்டுவிட.

அவளோ,நடப்பதை கவனித்தும் அமைதியாக இருந்து கொண்டாள்.

ஐயர் ரிதம் கையில் சந்தனம் குங்குமம் கொடுத்து அதனை தானாகவே மாங்கல்யத்திலும் உச்சியிலும் இடக்கூற.

ரேணு,நிவேதா,ரிதம் ஏன் பிரபா கூட 'அதிர்ந்து' போனான்.

ஆனால் நவநீ, இக்னேஷ் சிதம்பரம் தாத்தா மூவரும் அதனை கண்டுகொள்ளாது இருந்து கொண்டனர்.

ரிதம் ஒன்றும் பேசமுடியாது அமைதியாக சொன்னதை சொல்லும் கிளி பிள்ளை போல் ஐயர் சொன்னதை செய்தாள் நிதானமாக.

நிவேதா கோபமாக பேச முன்வர.

ஏகன் தொடங்கினான்

"எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை! அதுனால தான் உன்னையே வச்சுக்க சொன்னது.சோ டோண்ட் வொரி!" என்றான்.

அவன் விளக்கம் உவப்பானதாக இல்லை; இருந்தாலும் அவன் ஒன்றை கூறிய பின் அதை விவாதிக்க கூடிய இடமும்,நேரமும் அதுவல்லவே.அதனால் அனைவரும் அமைதியாகிட.அவ்வளவு தான் திருமணம் முடிந்தது.அதன் பின்னான சடங்குகள் ஒன்றும் அங்கே நேரவில்லை.

இரண்டு தாத்தாகளையும் ஒன்றாக நிற்க வைத்து பாதம் பணிந்து எழுந்த இருவரும்
'பால்,பழம்' மட்டும் மாற்றிக் கொண்டனர் தம்பதியர்.

இந்த திருமணத்தில் பெரும் மகிழ்வை கொண்டிருந்த ஒரே ஜீவன் அகரன் மட்டுமே.அவன் ஒருவன் தான் நிம்மதியாக நிறைவாக இருந்தான்.

"மச்சான் வாழ்த்துக்கள்டா!" என்று நவநீ வாழ்த்தியவன்

"ரிதம் வாழ்த்துக்கள்மா நான் தான் நவநீத் இவனோட ஒரே நண்பன்.நீயும் கூட என்னை நண்பனா!? அண்ணனா!? ஏத்துக்கலாம்.எதுனாலும் என்கிட்ட சொல்லு நான் இருக்கேன் இவனை வெளுத்துடலாம் என்ன சொல்ற!?" என்றான் அவன்.

அந்த சூழலில் அவன் இயல்பான பேச்சும் அறிமுகமும் இதமாய் இருந்தது அதனால் புன்னகை தவழ

"ஓஹ்! அப்போ ஓகே அண்ணா கண்டிப்பா சொல்றேன்" என்றாள் ரிதம்.

அதன் பிறகு தான் அவனை உற்று பார்த்தாள் ரிதம்.அவன் கண்ணாடியும், அரைக்கால் பெர்முடாஸ் அணிந்திருக்க.
அவன் கைகளில் பல நாய்கள் கட்டும் கயிறும் இருக்க.அவன் நாய்களை பிடிக்க ஓடுவது போல ஒரு பிம்பம் தோன்றி மறைய சிரிப்பு முட்டிக் கொண்டு வந்தது அவளுக்கு.

எல்லாம் நிவேதாவின் உபயம் தான் அவள் தானே அன்று கூறினாள்,"பாடி சோடா,அறை டவுசரு, நாய் மேய்க்கிற நாய்" எனும் அடைமொழிகளை.


அவள் கூறிய பிம்பம் அத்தனையும் நவநீயின் பிம்பத்தில் பொருத்திப்பார்க்க
பதினோரு பொருத்தமும் பகுமானமாக பொருந்தியது அவனுக்கு.

(மக்களே மணப் பொருத்தம் மொத்தம் பதினொன்று தான்.நாம் தான் பத்து என்று எண்ணிக்கொண்டு உள்ளோம் )

அவள் சிரிப்பை அடக்குவது புரிந்த நவநீ தான் பேசியதை கேட்டுத்தான் அவளுக்கு சிரிப்பு வருவதாக நம்பி

"ரிதம் நான் பேசறதை கேட்டு எல்லாருக்கும் சிரிப்பு வர்றது சகஜம் தான்.அதை ஏன் அடக்குற நான் எதும் நினைக்க மாட்டேன் நீ சிரிச்சுக்கோம்மா!" அனுமதி வழங்க

ரிதமின் பின்னால் அவள் காதருகே ஒதுங்கிய நிவேதாவோ சும்மாயிராது
"டேய் பாடி சோடா அவ என்னடா உன்னை பார்த்து சிரிக்கிறது.உன்னை பார்த்து ஊரே சிரிக்கும்டா!" முணுமுணுக்க.

அதை கேட்டிருந்த தோழியரோ இதற்குமேல் 'முடியாதடா சாமி' என்று கலகலவென்று நகைத்தனர்.


"உன்னை பார்த்து இந்த உலகம் சிரிக்கிறது!" என்று அவள் பாட.

இதில் நிவேதா பாடிய பாடல் வேறு சிரிப்பை அடக்க நெடுநேரம் ஆனது.அதில் பிரபாவும் கூட இணைய வேண்டிய சூழல் அங்கே.


'பொறுத்தது போதும் பிரபாகரா பொங்கி சிரி!' என்று அவனுக்கும் வாய்ப்பை வாரி வழங்கினாள் நிவேதா.

வயிறு வலிக்க சிரித்து முடித்து மணப்பெண் அலங்காரம் களையாதவாரு கண்ணின் நீர் துளியை ரேணு துடைக்கும் போதுதான் கண்டாள் தன்னை விடாது பார்க்கும் கூர் விழியனை.


"எதற்காக இவ்வாறு பார்க்கிறான்!?" என்பதே அறியாது போனது அவளுக்கு.

ஆனால்,ஊர்வலத்தில் அசையும் 'தேர்' போல கூட்டத்தில் நின்றாலும் அவள் தனியே தெரிந்தாள் அவன் கண்களுக்கு.

"ஒருவேளை மாயையோ!? மனதின் கற்பிதமோ!? மந்திரமோ!? எதுவோ ஒன்று அவனை அவள் புறம் திருப்ப!"

'அது!' 'எது!?' என்ற ஆராய்ச்சியில் அவளை ஆழமாய் பார்த்திருந்தான் பட்டுடை மேனியன்.


'ஒட்டிக் கொண்டு கைகள் செய்யா ஆராய்ச்சி எல்லாம்;வீச்சு விழியால் புரிந்து அவள் நாணம் தூண்டினான்!' தூண்டில் விழியன்.

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி நீர் செல்லும் பாதையில் வளையும் நாணலாய் அவளுக்குள் எதுவோ புலம்பெயர தவித்து நின்றாள் பூங்காரிகை.

காலை உணவு வீட்டில் தான் என்பதால் வீடு திரும்பினர் அனைவரும்.

அது ஏகன்,தாத்தா,அகரன் முன்பிருந்த வீடு அல்ல.

இது ஏகன் தனக்காக கட்டிய அல்ல எழுப்பிய கோட்டை.ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நாடுநாடாக தேடித் தேடி கொணர்ந்து கட்டசெய்த அவன் கோட்டை.

வீடு வந்து சேர்ந்த போது ரேணு நிவேதா இருவரும் ஆரத்தி சுற்ற 'தனக்கு பொட்டு வைக்க வேண்டாம்!' என்று கைநீட்டி தடுத்திருந்தான்.

இவனின் செய்கைகள் ஒவ்வொன்றும் அவன் திமிரை காண்பிக்க.ரிதம் அவனிடம் இருந்து தள்ளியே இருந்தாள்.

அவளுக்கு இரண்டே குறிக்கோள் தான்.

ஒன்று தன் தாத்தா உடல் நலம் பேணுதல்; மற்றையது அகரன் தன்னுடன் இருக்கும் வரை அவனை மகிழ்வாய் பார்த்துக் கொள்ளுதல்.அதுமட்டும் தான் அவளின் மூளையில் பதிந்தது.அதைத்தாண்டி அவள் வேறு எதையும் சிந்திக்கவில்லை.

'வலது அடி வைத்து வாசல் வந்த வாகை மலரை சூரியனாய் சுடுவானோ!? அல்லது தேவ மாலை என்று நெஞ்சமதில் சூடுவானோ!?'

ஏகனின் ரிதமாய் அவளும்; ரிதமின் ஏகனாய் அவனும்; 'ஏகரிதமாய்' இருவரும் 'மாறும் காலம் என்றோ!?'

தோழியர் இருவரும் தங்களால் முடிந்த அளவு ரிதம் உடன் நேரம் செலவிட்டனர்.

அகரன் ரேணு, நிவேதா யாரிடமும் நெருங்கி செல்லவில்லை; ரிதம் ஒருத்தியை தவிர அவன் யாரிடமும் செல்லாது சமத்து பிள்ளையாக அவளிடம் அமர்ந்து கொண்டான்.

நேரம் மடங்கும் மாலைக்கு நகர....

ரேணுவை அழைத்த சிதம்பரம் தாத்தா இரவின் முறைகள் பற்றி அவளை தயார் செய்திட கூற.

அவளும் ரிதமை குளிக்க அனுப்பிவிட்டு கணவன் உடன் இணைந்து அனைத்தையும் தயார் செய்ய சென்றாள்.

நிவேதா தோட்டத்தில் அமர்ந்திருந்தாள்.

"ஏங்க தனியா இருக்கீங்க உள்ள இருக்கலாம் இல்ல!?" என்றபடி வந்த இக்னேஷை கண்டதும் அவளுக்கு 'மாடு புடி மாரி மச்சான்' ஞாபகம் வர.

சிரிப்பை அடக்கிக் கொண்டு," என்ன கேட்டீங்க!? தனியா இருக்கேனா இல்லையே! இதோ இங்க இருக்காங்க இல்ல அவங்களை உங்களுக்கு தெரியலையா!?" என்று வெற்றிடத்தை கைகாண்பிக்க.

'யாருமில்லா வெற்றிடத்தை கைகாட்டி யாரை காண்பிக்கின்றாள்?' இவள் இக்னேஷ் திருதிருக்க.

"என்னங்க இவங்க உங்க கண்ணுக்கு தெரியலை!?" மீண்டும் நிவேதா கேட்க


"என்னங்க என்னனென்னவோ சொல்றீங்க!?எனக்கு ஒன்னுமே தெரியலங்க!"
ஒரு கணம் மிரண்டு போனான் அவன்.

"ஹாஹாஹா.... "

ஆடவன் பயத்தில் பம்முவதை கண்டு 'சிரிசிரி' என்று சிரிக்கத் தொடங்கினாள் நிவேதா.

அவள் கூறியது போல் 'யாரும் உள்ளனரா!?' பார்வையை சுழற்றியவன் திடீரென்று ஒலித்த அவள் சிரிப்பொலியில் ஓரடி துள்ளி குதித்து நிற்க.

அதில் பெண்மயில் மேலும் சிரிக்க.

" ஏங்க என்னங்க இப்படியா சிரிப்பாங்க? பயந்துட்டேங்க!"

"ஹையோ..ஹையோ.. நான் சொன்னேன்னு உங்களை யாரு பேக்கு மாதிரி இருட்டுக்குள்ள காட்டெருமை தேட சொன்னது!?"

"ஏங்க என்ன வச்சு காமெடி பண்றீங்களா!?" அவன் பாவமாய் கேட்க

அவளோ,"ச்ச..ச்ச.. அப்படிலாம் ஓபன்னா சொல்லிட முடியாது. ஆனா தோராயமா சொல்லலாம்!" சிரித்துக்கொண்டே

"சரிங்க அப்போ நான் உள்ள போறேன்!" என்று அவனிடம் இருந்து விடைபெற்றாள் நிவேதா.

சந்தனத்தில் இளம்சிவப்பு கரைவைத்த சேலையில் சுந்தர சோலையாய் மிளிர்ந்த ரிதமைக் கண்ட வேல் தாத்தாவிற்கு மனம்முழுதும் மகளின் ஞாபகம் தான்.


"ஏன்டி ரிதம் இந்த தாத்தா திடீர்னு அம்பியா மாறி அப்ரானி மாதிரி பார்கறாரு. உன்ற தாத்தன் கச்சேரியை தொடங்கிட்டாருடி.
இனி பாரு கூத்தை!"
நிவேதா மொழிய.


பேத்தி அவர் பாதம் பணிய,
"தங்கம் மாப்பிள்ளையை பத்திரமா பார்த்துக்கணும் கண்ணு!" என்று ரிதமிற்கும்;

"தம்பி என் பொண்ணு தப்பு பண்ணினா கோபமில்லாம பொறுமையா சொல்லுங்க பிள்ள புரிஞ்சுக்கும்!" ஏகனுக்கும் அறிவுரை வழங்க பேத்தியை தன் மகளாக பாவித்து அறிவுரை வழங்க.


தன்னை மகளாய் எண்ணி பார்க்கும் தாத்தாவின் அன்பில் உருகித்தான் போனாள் 'ஊர்த்துவகை' அவள்.

சிதம்பரம் தாத்தா
காலில் விழுவதற்கு முன்பே அவர்,

"அதெல்லாம் இருக்கட்டும்மா...நீண்ட ஆயுளும்,நிறைந்த ஆரோக்கியமும், கொண்டு குறையா செல்வத்தோட வாழனும்!" என்று வாழ்த்த.

புன்னகை முகமாக அவரின் வாழ்த்தை ஏற்றிருந்தாள் ரிதம்.
 
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💖 💖 💖 ரிதமின் கண்ணாலத்திற்கு.
ஓ ஓ ஓஹோ தொரை தொடாம தாலிகட்டிட்டாரோ?
பொட்டு வக்கமாட்டானாமே?.
நம்பிக்கை இல்லையாம்?.
அப்பறமெது மேல நம்பிக்கை வரும் பணத்துமேலையா?😤😤😤😤😤😤😤😤. எனக்கு நங்குநங்குன்னு மண்டைல நாலு கொட்டைதான் குடுக்கனும்னு தோணுது 🫤🫤🫤🫤
 
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 💖 💖 💖 ரிதமின் கண்ணாலத்திற்கு.
ஓ ஓ ஓஹோ தொரை தொடாம தாலிகட்டிட்டாரோ?
பொட்டு வக்கமாட்டானாமே?.
நம்பிக்கை இல்லையாம்?.
அப்பறமெது மேல நம்பிக்கை வரும் பணத்துமேலையா?😤😤😤😤😤😤😤😤. எனக்கு நங்குநங்குன்னு மண்டைல நாலு கொட்டைதான் குடுக்கனும்னு தோணுது 🫤🫤🫤🫤
வேண்டாம் மக்களே வேண்டாம் பாவம் இன்றைக்கு அவன் கல்யாண மாப்பிள்ளை அந்த காரணத்திற்காக வேண்டினும் அவனை மன்னித்து விடலாம் 🤣🤣🤣🤣🤣
 
பொன்னார் மேனியன் மங்கள கயிற்றை தங்கத்தை வார்த்து செய்திருக்க அதனை கட்டவேண்டிய தேவை இல்லாது அப்படியே அணிவித்தான்.

'ஆனால்!'

அவன் சுண்டு விரல் கூட ரிதமின் மீது பட்டுவிடாது வெகு முன்னெச்சரிக்கையாக போட்டுவிட.

டேய் டேய் ....ஏகா...


உனக்கே இது ஓவரா படல்லியாடா.....

இப்போ சீன் போட்டுட்டு - அப்புறம் தொட வந்தே - ஆப்புதான் உனக்கு - பார்த்துக்கோ :mad::mad::mad:
 
டேய் டேய் ....ஏகா...

உனக்கே இது ஓவரா படல்லியாடா.....

இப்போ சீன் போட்டுட்டு - அப்புறம் தொட வந்தே - ஆப்புதான் உனக்கு - பார்த்துக்கோ :mad::mad::mad:
உன் உசுருக்கு நான் உத்திரவாதம் இல்லைடா ஏகா😥😥😥😥
 
Top