Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆதிரையின் கண்மணி நீ வரக் காத்திருந்தேன் - Episode 13

Advertisement

Aathirai

Well-known member
Member
(Episode-13)

அடுத்து வந்த நாட்களில் அர்ஜுன், ரவி, அஞ்சலி மற்றும் தோழிகள் மூவரும் நல்ல நண்பர்கள் ஆனார்கள்.. அஞ்சலி அவ்வளவாக ஆண்களிடம் பேசியதில்லை.. ஆனால், அர்ஜுனிடம் மட்டும் வெகு இயல்பாக அவளால் பழக முடிந்தது... அதற்குக் காரணம், அர்ஜுனின் குணம் தான்...

கிளாஸ் இன்சார்ஜ் எதைக் கூறினாலும் அர்ஜுன், அஞ்சலியை டிஸ்டர்ப் செய்யாமல் அவனே எல்லாவற்றையும் செய்து விடுவான்.. ஆனால், அவர் கேட்டால் இருவரும் சேர்ந்தே செய்தோம் எனக் கூறி விடுவான்.. அதற்க்காக அஞ்சலியும் அப்படியே விட்டுவிடாமல் தன்னால் முடிந்ததைச் செய்வாள்..

அர்ஜுன், தினமும் அஞ்சலியின் பக்கத்தில் இருக்கும் போது சொர்க்கத்தில் இருப்பதைப் போல் உணர்வான்.. இருந்தாலும், அவளிடம் மிக கண்ணியமாக நடந்து கொள்வான்.. நாட்கள் மிக சந்தோஷமாக இருந்தது அர்ஜுனுக்கு.. அன்று விடுமுறை நாள், அர்ஜுன் அஞ்சலிக்கு போன் செய்தான்..

“ஹலோ... சொல்லு அர்ஜுன்..” என்றாள் எதிர்முனையில் அஞ்சலி..

“ஆங்.. அஞ்சலி, சாரி.. உன்ன ஏதும் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா..?” என்றான் அர்ஜுன் தயங்கியபடி..

“ஹும்ம்... போன் பண்ணிட்டு டிஸ்டர்ப் பண்ணிட்டேனான்னு கேட்டா, என்ன சொல்றது அர்ஜுன்..? அப்படியெல்லாம் இல்ல.. என்ன விஷயம்னு சொல்லு...”

“ஓகே மா.. சார் ஒரு புக் குடுத்து கிளாஸ்ல இருக்க எல்லாருக்கும் ஜெராக்ஸ் காபி போட்டுத் தர சொல்லிருந்தாருல்ல.. அதுல கொஞ்சம் டௌட்ஸ் இருக்கு.. அதான் உன்ன கேக்கலாம்னு போன் பண்ணேன்..”

“ஓ.. அப்படியா.. நான், சார் சொன்ன பேஜஸ் எல்லாமே அந்த புக்ல நோட் பண்ணியிருந்தேனே அர்ஜுன்.. அதுல ஏதும் மிஸ் ஆயிடுச்சா..?”

“தெரில அஞ்சலி.. நீ நோட் பண்ணதால உனக்குத்தான் அது கரெக்டா தெரியும்னு நெனைக்கறேன்.. ப்ளீஸ் மா, டிஸ்டர்ப் பண்றதா நெனைக்காதே.. நீயும் கொஞ்சம் ஜெராக்ஸ் கடைக்கு என் கூட வந்தா நல்லா இருக்கும்..” என்றான்..

அஞ்சலி சற்று யோசித்துவிட்டு, “ம்ம்... ஓகே அர்ஜுன்.. எங்கேன்னு சொல்லு நான் வரேன்...” என்று அவனிடம் கேட்டுக்கொண்டு போனை வைத்தாள்...

மாலை 6 மணி இருக்கும்.. வீட்டில் மது மற்றும் ஷாலினியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள் அஞ்சலி.. அவள் செல்லும் போது ரூபா அங்கே இல்லை.. மதுவிடம் கேட்டபோது வெளியே சென்றதாய்க் கூறினாள்... அங்கிருந்து ஷேர்-ஆட்டோ பிடித்து அர்ஜுன் சொன்ன ஜெராக்ஸ் கடைக்கு வந்து சேர்ந்தாள் அஞ்சலி... அவள் வரும் முன்னரே அங்கே இருந்தான் அர்ஜுன்..

“ஹாய் அஞ்சலி.. ஸாரி, உன்ன தேவையில்லாம டிஸ்டர்ப் பண்ணிட்டேன்..” என்றான் அர்ஜுன் ஒரு சிறு புன்முறுவலுடன்...

“ஹும்ம்.. போன்லயும் இதே தான் சொன்ன, இப்பவும் அதே டயலாக்கா..?? நான் தான் அப்படியெல்லாம் இல்லன்னு சொன்னேனே.. லீவ் இட் அர்ஜுன்.. புக் எங்கே..? குடு, பாக்கலாம்..” என்று அவனிடமிருந்து புக்கை வாங்கினாள்..

“ஓ.. இந்த பேஜ நான் நோட் பண்ணேனே அர்ஜுன்.. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... இது எப்படி மிஸ் ஆச்சு..” என்று யோசித்தவளாய் நின்றாள்...

அங்கே அர்ஜுனோ மனதுக்குள் சிரித்தவாறு அவளை ரசித்துக் கொண்டிருந்தான்... அவளைப் பார்க்க வேண்டும் போல் இருந்ததால், வேண்டுமென்றே இதைச் செய்திருந்தான் அர்ஜுன்.. இருந்தும் எதுவும் தெரியாததைப் போல் நின்றான்...

“ம்ம்... எல்லாமே ஓகே... இது ஒன்னு தான் மிஸ்ஸிங்.. இப்போ ஜெராக்ஸ் பண்ண குடுத்துடு அர்ஜுன்.. வேற ஏதும் டௌட் இருக்கா..?” என்றாள்...

“ம்ஹும்ம்.. அவ்ளோ தான் அஞ்சலி.. ஒரு நிமிஷம் வெயிட் பண்ணு.. குடுத்துட்டு வரேன்..” என்று கடைக்குள் சென்றுவிட்டு சிறிது நேரத்தில் வெளியே வந்தான் அர்ஜுன்..

“குடுத்துட்டேன்.. ஒரு அரைமணி நேரம் கழிச்சு வர சொன்னாங்க..”

“ஓ.. சரி.. அப்போ நான் கிளம்பறேன் அர்ஜுன்..” என்றாள் அஞ்சலி..

“ஹே.. இரு அஞ்சலி.. இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம் இல்ல.. உடனே கிளம்பனுமா.. ப்ளீஸ் மா.. ஃபர்ஸ்ட் டைம் வெளில மீட் பண்றோம் இல்ல.. ஜஸ்ட் ஹாவ் ஒன் ஐஸ் கிரீம்..??” என்று அவளைக் கெஞ்சலாய்ப் பார்த்தான் அர்ஜுன்..

அவன் அப்படிக் கேட்டதும் அவளால் மறுக்க முடியவில்லை.. சரி என்றாள்.. இருவரும் அருகே இருந்த ஐஸ் கிரீம் ஷாப்பிற்கு சென்றனர்.. அது அங்கே இருக்கும் பெரிய ஐஸ் கிரீம் ஷாப்.. உள்ளே ஹோட்டல் போல் இருந்தது.. இருவர் எதிர் எதிரே அமரும் சீட்டில் சென்று இருவரும் அமர்ந்தனர்.. சர்வர் வந்தார்..

“நீ என்ன சாப்பிடற அஞ்சலி..?”

“எனக்கு ஸ்ட்ராபெர்ரி ப்ளேவர்ல எதுன்னாலும் ஓகே..” என்றாள்..

“ஓகே.. டூ ஸ்ட்ராபெர்ரி கப்...” என்று சர்வரிடம் ஆர்டர் செய்தான்..

“நீ வேற ஏதாவது சொல்லிக்கலாம் இல்ல.. நீயும் ஏன் அதே சொன்ன.?” என்றாள் அஞ்சலி.. அர்ஜுன் சிரித்துக்கொண்டே சொன்னான்..

“எனக்கும் ஸ்ட்ராபெர்ரி தான் பிடிக்கும் அஞ்சலி.. பட், உனக்கும் அது தான் பிடிக்கும்னு இப்போ தான் தெரிஞ்சுது..” என்றான்.. சிரித்தாள் அஞ்சலி..

இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே, திடீரென்று அஞ்சலியின் முகம் மாறியது.. அங்கே, அவளை நோக்கி வந்தது ரூபா.. அவள் ரூபாவை அங்கு எதிர்பார்க்கவில்லை..

“ஹே அஞ்சலி.. ஹாய் அர்ஜுன்.. ரெண்டு பேரும் எப்போலிருந்து இப்படி ஐஸ் கிரீம் ஷாப்க்கு வர ஆரம்பிச்சிங்க..??” என்றாள் ரூபா கிண்டலாக..

“இல்ல ஜெராக்ஸ் எடுக்க வந்தோம்.. சும்மா நான் தான் ஐஸ் கிரீம் சாப்பிடலாம்னு கூப்பிட்டேன்..” என்றான் அர்ஜுன் சமாளித்தவாறு..

“ஓ.. ஓ.. ம்ஹ்ம்ம்.. ஓகே.. ஓகே.. அஞ்சலி, நெஜமா உன்ன நான் இப்படி எதிர்பார்க்கல.. பரவால்ல கொஞ்சம் முன்னேறிட்ட.. ஸாரி.. ஸாரி.. நான் வேற கரடி மாதிரி உங்கள டிஸ்டர்ப் பண்றேன்.. பை.. பை...” என்று கூறி விட்டு சிரித்தபடியே சென்றாள் ரூபா..

என்னதான் ரூபா, அஞ்சலிக்குத் தோழி என்றாலும் அஞ்சலியின் மீது அவளுக்கு சிறிது பொறாமை எண்ணம் உண்டு.. அதை அவள் இப்படிக் காட்டிவிட்டாள்.. அவள் அப்படிச் சொன்ன மறு கணமே அஞ்சலி எழுந்து விட்டாள்.. அர்ஜுனிடம் சொல்லிவிட்டுக் கிளம்பியும் விட்டாள்..


அர்ஜுனுக்கு தான் என்னவோ போல் ஆகிவிட்டது.. என்ன இந்த ரூபா, இப்படியுமா இருப்பாள், இதற்கும் அஞ்சலி அவள் தோழி என்று நினைத்தான்... ஹும்ம்.. தான் ஒன்றை நினைத்து வேறு ஒன்று நடந்து விட்டதை நினைத்து தன்னைத் தானே நொந்து கொண்டான் அர்ஜுன்...
 
Top