Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நட்பென்னும் முடிவிலியில்!- 19

Advertisement

praveenraj

Well-known member
Member
ராஜீவ். அது தான் அவன் பெயர். நியாயப்படி இந்நேரம் சித்தாரா ராஜீவ் என்று ஆகி இருக்க வேண்டியவள், ஆனால் இன்னமும் சித்தாரா ரவீந்திரன் என்றே இருக்கிறாள். ஒருவிதத்தில் இது சந்தோசம் தான் என்றாலும் வலியும் வருத்தமும் அவளுக்கு இருக்கத் தான் செய்தது. அதில் ஐயமில்லை.

திருமணம் என்றாலே எல்லோருக்கும் ஒரு பரவசம் தான். சித்தாராவுக்கும் அப்படித் தான் இருந்தது. அதும் லவ் கம் அரேஞ்ட் மேரேஜ் என்றால் சொல்லவா வேண்டும்?றெக்கை இல்லாமல் வானில் பறந்தாள்.

முதலில் அவர்கள் (சித்தாரா கூடவே அவளின் தோழர்கள் சிலர்) ஆரமித்த ஸ்டார்ட் அப் நிறுவனத்திற்குப் பெரியதா எவ்வித ஆஃபரும் வரவில்லை. சரி இது வேலைக்காகாது என்று துவண்டுப் போனார்கள். பின்னே மாதா மாதம் இவர்கள் ஆபிஸ் பில்டிங் வாடகை கொடுக்கவே முடியவில்லை. நான்கு மாதங்கள் ஓடிவிட்டது. இதில் கரெண்ட் பில், தண்ணீர் போன்ற இதர செலவுகள் வேறு. என்ன செய்யலாம் என்று நினைக்கும் போது தான் வந்தான் அவன். அவன் ராஜிவ்.

அவனும் சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு மூன்று வருடங்களாய் ஒரு கம்பெனியில் ஒர்க் செய்து இப்போது தான் ஒரு முழு ப்ராஜெக்ட் இவனின் தலைமையில் வந்து இருக்கிறது. இதை இவன் எப்படிச் செய்து தருகிறான் என்பதில் தான் இவனின் எதிர்காலமும் இருக்கிறது.

பில்டிங் வேலை எல்லாம் முடிந்து விட்டது. இனி எல்லாம் மேல் படி வேலைதான். பெயின்டிங்,எலெட்ரிஷியன்,இன்டீரியர் டெஃகரேசன் என்று சில வேலைகள் இருக்கிறது. இதில் என்ன சுவாரசியம் என்றால் இவ்வளவு காலம் கஷ்டப்பட்டுக் கட்டிய கட்டடத்தைக் காட்டிலும் அதை எவ்வாறு ப்ரெசென்ட் செய்கிறான் என்பதில் தான் இருக்கிறது அதன் மதிப்பு. சோ அவனுக்கு நல்ல இன்டீரியர் டெகரேஷன் வேண்டும். கூடவே காஸ்ட்வைஸ் எகனாமிகளாவும் (குறைந்த செலவில் நிறைவான வேலை) இருக்க வேண்டும். அதனால் அவன் பிரபல நிறுவங்களை நாடுவதைக் காட்டிலும் பட்டிங் (ஆரம்ப நிலையில் இருக்கும்) நிறுவனங்கள் இதில் சிறப்பா இருக்கும் என்று நினைத்து அவன் அதைப் பற்றி விசாரிக்க அப்போது அவன் நண்பனின் நண்பன் மூலமாய் அவனுக்குத் தெரிய வந்தது தான் சித்தாராவின் ஸ்டார்ட் அப் நிறுவனம்.

சோ அவன் அன்றைக்கு இவர்களிடம் ஒரு மீட்டிங்கிற்காக அப்பாய்ண்ட் மென்ட் கேட்டு ஒரு காஃபீ ஷாப்பில் மீட் செய்ய முடிவு எடுத்திருந்தனர்.

.............................................................

அங்கே லோகேஷ் தனியாக போக இந்த முறை விடுவதில்லை என்று நினைத்த இஸ்மாயில் பெனாசிர் இருவரும் சற்று கோவமாகவே அவனைத் தேடிச் சென்றனர்.

அவனோ எதுவும் நடவாததுப் போல் காதில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு இருக்க, அவனை உலுக்கி "இப்போ எங்களுக்கு ஒரு உண்மைத் தெரியணும்" என்று கோவமாய் கேட்த்தும்,

"என்ன உண்மை தெரியணும்?"

"அப்படி உனக்கும் அனேஷியா மேமுக்கும் என்ன தான் பிரச்சனை? கண்டிப்பா இதுல உன்னைவிட அவங்களுக்கு அதிக இம்பார்டென்ஸ் கொடுக்கறது மட்டும் காரணமில்லை. அதையும் தாண்டி எதுவோ இருக்கு. சோ எங்களுக்குத் தெரியணும்"

ஏனோ இதைக் கேட்டதுமே லோகேஷின் முகம் இன்னமும் கடுமை ஆனது. 'சரியான திமிர் பிடிச்சவ' என்று அவன் முணுமுணுக்க,

"சொல்லு லோகேஷ்? எங்களால முடியில. இன்னும் நாம அஸ்ஸாமே போல, அதும் நாம போறது ஒர்க் விஷயமா, இதுல உங்க ரெண்டு பேருக்கும் இப்படி முட்டிக்கிட்டு இருந்தா நிச்சயம் இது நம்ம வேலையை தான் பாதிக்கும். தயவு செய்து சொல்லு. எங்களால் முடியில, எதுனாலும் பேசலாம்..."

"சொல்லுடா மேம் கிட்ட வேணுனா நான் பேசறேன் ப்ளீஸ் லோக்கு..." - பெனாசிர்

"அவளுக்கு அவ்வளவு சீன் எல்லாம் கிடையாது..."

"டேய் என்ன இருந்தாலும் அவங்க நம்ம சீஃப். சோ கொஞ்சம் மரியாதையா பேசு"

"என்ன கால்ல விழணுமா? சொல்லு நெடுஞ்சாண்கிடையா கூட விழுறேன்" அதில் அவ்வளவு குத்தல் இருந்தது.

அவனோ மீண்டும் ஹெட் போன் மாட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்க்கத் துவங்கினான்.

........................................................

மணியைப் பார்க்க அது மதியம் 2 என்று காட்டியதும் துஷ்யந்த் தன்னுடைய வீட்டில் இருந்து துணிகளை எல்லாம் ஒன்றுக்கு இரண்டுமுறை சோதனைச் செய்து விட்டு அவன் போன் எடுக்க அவனின் அன்னை தான் அழைத்தார்,

"சொல்லும்மா..."

"எங்கடா கண்ணா இருக்க?'

"எங்க இருப்பேன்? கழுதைக் கெட்டா குட்டிச் சுவரு"

"ஓ அப்போ எந்த குட்டிச் சுவத்துல இருக்க?"

"அம்மா வீட்டுல தான் இருக்கேன். என்ன மேட்டரு? இந்நேரத்துல கால் பண்ணியிருக்க?"

"அதுவா என் மருமகள் வீட்டுல பேசிட்டேன்"

"வாட் நிஜமாவா?" அவன் முகத்தில் உண்மையான சந்தோசம் தோன்றியது.

"ஆமா. ஆனா..."

"ஆனா? என்னம்மா?"

......................................................................

செபாஸ்டினுக்கு எல்லாம் ஓரளவுக்குப் புரிந்தது. எப்படியும் தன் தந்தை இந்த பெண்ணைத் தான் திருமணம் செய்யச் சொல்லுவார் என்று , பின்னே அவருக்கு இந்த மாதிரி லிபெரல் (liberal - பரந்த கொள்கை) தாட் எல்லாம் கிடையாது. என்னதான் படித்து பெரிய ஆடிட்டராக இருந்தாலும் கொஞ்சம் இல்லை இல்லை நிறைய கன்செர்வேட்டிவ் (பழமைவாதி)தான். சோ இதிலிருந்து அவ்வளவு சுலபத்தில் தப்பிக்க முடியாது என்றும் போதாக்குறைக்கு அவன் அம்மாக்கு வேறு கொஞ்சம் உடல் நிலை சரியில்லை என்பதால் டையாலிசிஸில் (சிறுநீரக பாதிப்பு ) தான் இருக்கிறார். அவர் ஓரளவுக்கு நன்றாக இருந்தால் கூட இவனுக்காகப் பேசுவார் அவரின் உடல்நிலை காரணமாக அவரைத் தொந்தரவுச் செய்யவும் இவனுக்கு விருப்பமில்லை. ஒரு அண்ணா தான் செபாக்கு. அவர் தன் தந்தையைப் போல ca முடித்துவிட்டு ஆடிட்டிங்கில் தான் இருக்கிறார்.அதும் தங்கள் தந்தை நிறுவிய அந்த கம்பெனியைத் தான் பார்த்துக்கொண்டு இருக்கிறார். இவனையும் ca தான் படிக்க வேண்டும் என்று எவ்வளவோ முயன்றார். தன் தாயின் உதவியால் அதிலிருந்து எஸ் ஆகிட்டான். இவனின் பூர்வீகம் மயிலாடுதுறை. ஆனால் வசிப்பது கடலூரில். இவரின் ஆடிட்டிங் நிறுவனம் தமிழகம் முழுவதும் பல இடங்களில் இருக்கிறது. இவனுக்கு அந்த வாசமே ஆகாது. அதனால் தான் தப்பித்தால் போதும் என்று நினைத்து சென்னை வந்து செட்டில் ஆகிவிட்டான்.

ஜெசிந்தாவும் சென்னைத் தான் .ஜெசிந்தாவின் தந்தையும் கொஞ்சம் பெரிய ஆள் தான். அவரின் நிறுவனத்தின் (ஒரு ஏற்றுமதி நிறுவனம்) ஆடிட்டிங் பார்க்கும் நபர் செபாவின் தந்தைக்கு நெருங்கிய பழக்கம் . தன் ஆடிட்டரின் மகளின் திருமணத்திற்கு கோவை சென்றிந்த போது தான் அவரின் மூலமாய் செபாவின் தந்தை அறிமுகம் ஆனார். ஏனெனில் ஜெசியின் தந்தையின் ஆடிட்டர் ஆரம்பத்தில் செபாவின் தந்தையிடம் கொஞ்சம் வேலை செய்தார். அந்த பழக்கவழக்கத்திற்கு நல்லது செய்கிறேன் என்று தான் இரு குடும்பத்தையும் கோர்த்துவிட்டார். உண்மையில் அவர் செய்தது நல்லது தான். ஏனெனில் செபாவின் குடும்பமும் சரி ஜெசியின் குடும்பமும் சரி சமூகத்தில் நல்ல மரியாதையான குடும்பம் தான். சொத்திற்கும் ஒன்றும் பஞ்சமில்லை, போதாக்குறைக்கு இருவரும் கிறிஸ்டியன் என்பதால் மேற்கொண்டு பேசினர்.

இருவருக்கும் அடுத்தவரின் குடும்பம் பிடித்துப்போக செபாவை ஜெசி வீட்டிற்கும் ஜெசியை செபா வீட்டிற்கும் பிடிக்க சம்மந்த பட்ட இருவருக்கும் எதையும் தெரியப்படுத்தாமல் மற்ற வேலைகளை எல்லாம் பார்த்துவிட்டு சொல்லப்போனால் என்கேஜ்மென்ட் செய்துவிடலாம் என்றே செபாவின் தந்தை முடிவெடுத்துவிட்டார். ஜெஸியின் தந்தை தான் எதற்கும் சம்மந்த பட்ட இருவரும் கொஞ்சம் பார்த்துப் பேசட்டும் என்று சொல்லி இந்த சந்திப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். அதன் நீட்சி தான் செபாவிற்கு வந்த அழைப்பு.

ஜெசிக்காவது காலையில் எல்லாமும் சொல்லிவிட்டார்கள். செபாவிற்கு மதியம் தான் 'இந்தமாதிரி இந்தமாதிரி' என்று எல்லாம் சொல்ல அவனுக்கு வெடவெடத்துப் போனது. தந்தை மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஆனால் இன்றைய காலகட்டத்திற்குப் புரிதல் ரொம்ப அவசியம். அதற்கு இருவரும் பார்த்துப் பழக வேண்டும். போதாக்குறைக்கு அவனுக்கு இப்போதைக்குத் திருமணம் செய்துகொள்ள விருப்பம் இல்லை.மேலும் நித்யா விவானைப் பார்த்துப் பழகியவனுக்கு லவ் மேரேஜ் தான் வாழ்க்கைக்கு சரிப்பட்டு வரும் என்ற முடிவுக்கு வந்தான்.ஏனெனில் வயதில் பெரிய நித்யாவிடம் விவான் மீதான காதலை அவன் நன்கு பார்த்திருக்கிறான். மேலும் அவர்கள் எப்படிப்பட்ட கபிள்ஸ் என்றும் அவனுக்குத் தெரியும். சோ அந்த மாதிரி தான் தன் வாழ்க்கையும் இருக்க வேண்டும் என்று பல கனவுக்கோட்டைகளைக் கட்டி வாழ்ந்துக் கொண்டிருக்க இப்படி திடீரென யாரென்ன என்று தெரியாதப் பெண்ணை அதும் திருமணம் என்று யோசிக்க கூடவே ஜெசியின் அந்த அதிகார பேச்சு வேறு அவனுக்கு அவளைப் பார்ப்பதற்கு முன்பே ஒரு கெட்ட அபிப்ராயத்தைத் தந்தது மட்டும் நிச்சயம். இருந்தும் அவளைச் சந்திக்கச் சென்றான்.

அங்கே ஜெஸியும் கிட்டத்தட்ட அதே மனோநிலையில் தான் சென்றாள். அவளுக்கும் பெரிய உடன்பாடு இல்லை. என்ன செய்ய தந்தை சொல்லிவிட்டார் என்று அவனின் புகைப்படத்தைப் பார்க்க, பார்த்ததும் அவனை ரிஜெக்ட் செய்யுமளவுக்கும் அவன் இல்லை என்பதால் சந்திக்க முடிவெடுத்தாள். அப்படியென்றால் பிடித்திருக்கிறதா என்று கேட்டால் அதற்கும் அவளிடம் பதிலில்லை.

..................................................


"அப்புறோம் அன்னைக்கு அம்மா வேற சும்மா இல்லாம இவளையும் எங்களோட சாப்பிட கூப்பிட எனக்கு என்னனு புரியில ஒரு மாதிரி வெறுப்பு, கோவம். இவளும் எப்படியும் வர மாட்டேன்னு சொல்லிடுவான்னு பார்த்தா இவள் மறுத்தும் என் அம்மா விடாம இவளை வற்புறுத்திக் கூட்டிட்டு வந்துட்டாங்க.

"அடப்பாவி அப்புறோம் என்னடா பண்ணித் தொலைச்ச?" - மிரு

"அது அன்னைக்கு நானென்னும்" போதே அவனின் கண்கள் கலங்கியது. ஒரு விஷயத்தைச் செய்யும் போது நமக்கு அவ்வளவாக அதன் வீரியம் புரியாது. ஆனால் கொஞ்ச நாட்கள் கழித்து அது தரும் வலி அதிகம். அவன் முகம் மாற அவன் பயங்கர தயக்கத்தில் மௌனியைப் பார்க்க, அவளோ அவனின் நிலையை உணர்ந்து அவன் அருகில் சென்று அவன் கையைப் பிடித்துக்கொண்டு அவனை அணைத்துக்கொண்டாள். இது ஏனோ ஹேமாவை இன்னும் வருந்தச் செய்தது. அந்த குற்றயுணர்ச்சி ஒரு மாதிரி இருக்க எல்லோரும் உண்மையிலே ஏதோ பெரியதாக நடந்து இருக்கிறது என்று சீரியஸ் ஆனார்கள்.

சரியாக அப்போது பேன்ட்ரியில் கட்லெட் சமோசா விற்றுக்கொண்டு போக, ஜிட்டுவோ கட்லெட் என்று சொன்னான்,

எல்லோரும் கொஞ்சம் கொறிக்க என்ன வேணுமோ அதை வாங்கிக்கொண்டு அமர்ந்தனர். ஹேமாவும் கொஞ்சம் நார்மல் ஆகினான்.

..........................................................

ராஜீவை சந்திக்கச் சென்றாள் சித்தாரா. ராஜீவ்க்கு ஏனோ தூரத்தில் சித்தாராவைப் பார்த்ததுமே 'ச்சே இந்த மாதிரி பொண்ணு மீட் பண்ண வந்தால் கூட பரவாயில்ல, பேரே பாரு எவ்வளவு பழசு? கடவுளே' என்று அவன் புலம்ப தூரமாய் வந்தவள் தன்னை நோக்கி தான் வருகிறாள் என்றதும் அவன் மனமானது கொஞ்சம் இல்லை ரொம்பவும் குத்தாட்டம் போட்டது.

அவன் எதிர்பார்ப்புக்கேற்றபடியே வந்தவள் சுற்றி முற்றிப் பார்த்துவிட்டு ராஜீவுக்கு அழைக்க அருகிலே ஓசைக் கேட்டு திரும்பியவள் அவன் அட்டென்ட் செய்ய ஒரு சிரிப்பை உதிர்த்தாள் சித்தாரா. ஏனோ அதிலே கிட்டத்தட்ட பிளாட் ஆனான் ராஜிவ்.

"ஹை நான் தான் சித்தாரா"

"அப்பாடா நான் கூட உங்க பேரைக் கேட்டதுமே ஏதோ பழைய ஜெனெரேசன் ஆளுன்னு நெனச்சிட்டேன்" என்று சிரிக்க, அவன் இப்படிப் பார்ததுமே 'ப்ளிர்ட்' செய்கிறானே இவனோடு வேலை செய்வது சரிவருமா என்று தான் ஒருநிமிடம் தயங்கினாள். அதை உணர்தானோ என்னவோ அதற்கு மேல் அதிகம் வழியாமல் நேராக விஷயத்திற்கு வந்தவன் தன் தேவைகளையும் எதிர்பார்ப்பையும் அதற்கான சம்பளமும் எல்லாம் பேச சம்பளம் தவிர சீதாராவிற்கு எல்லாம் ஓகே தான். அவளைப் பொறுத்தவரையில் அது ரொம்ப கம்மியாகத் தெரிய அவளின் தயக்கத்தை உணர்ந்தவன்,

"அந்த பில்டிங்ல மொத்தம் ஆறு வீடு இருக்குங்க. நீங்க கொஞ்சம் கொறச்சு செஞ்சிக் கொடுத்தா கண்டிப்பா உங்களுக்குத் தான் லாபமாகும். ப்ளீஸ்" என்று அவன் சொல்ல, ஏனெனில் அவர்களின் டிசைன் மேனுவல் எல்லாம் அவன் பார்த்து இருந்தான். வேலைகள் எல்லாம் மிக பிரமாதமாக இருந்தது. சோ இவர்களை விட வேண்டாம் என்று தான் இப்படி அப்ரோச் செய்தான்.

அவள் காம்ப்ரமைஸ் ஆனாலும் எதற்கும் தன் சகாக்களை எல்லாம் கேட்க அவர்களும் "முதல்ல கமிட் பண்ணு சித்து, நமக்கே வேலை இல்லாம சும்மா இருக்கோம். அட்லீஸ்ட் இதையாவது நல்லா செய்வோம்" என்று அவர்கள் சொல்ல அங்கேயே அக்ரீமென்ட் சைன் செய்ய டாகுமெண்டஸ் எல்லாம் வாங்கிக்கொண்டு அவள் விடைபெற அவனும் சிரித்துச் சென்றான்.

ஏனோ இது அவளுக்கும் ஆச்சரியம் தான். பார்த்த புதிதில் பேவென வாயைப் பிளந்து வழிந்தவன் பேச ஆரமித்த முதல் விடைபெறும் வரை அவன் ரொம்ப டீசெண்டாய் தான் நடந்துக்கொண்டான். அவளும் சிரித்துவிட்டுச் சென்றாள்.

மறுநாள் டாகுமெண்ட்ஸ் எல்லாம் சரிபார்த்துவிட்டு அவர்களின் கம்பெனிக்கே சென்று ஒப்பந்தத்தைக் கையெழுத்து இட்டாள்.

அட்வான்ஸாக ஒரு செக் அவர்களுக்குக் கிடைக்க அதுவோ அவர்கள் எதிர்பார்த்த பெரிய தொகை என்பதால் எல்லோருக்கும் இன்னமும் சந்தோசம் . கர்ம சிரத்தையாக அந்த வேலையில் மூழ்கினார்கள் சித்தாரா டீம்.

அடிக்கடி வேலையின் நிமித்தமாய் சித்தாராவும் ராஜீவும் சந்தித்துக்கொள்ளும் நிலைமை வந்தது.

இதுவரை அஃபிஷியலாக மட்டும் பேசிக்கொண்டிருந்த அவர்கள் முதன் முதலில் பெர்சனல் பக்கங்களை ஷேர் செய்யத் துவங்கினர்.

..................................................

எல்லோரும் கொஞ்சம் நார்மல் ஆக அப்போது கையில் ஒரு சிப்ஸ் பேக்கட்டுடன் வந்த இளவேனில் அதைப் பிரிக்க முடியாமல் இருக்க ஜிட்டு வாங்கி பிரித்து அவளிடம் கொடுத்துவிட்டு கதைப் பேசத் துவங்கினர்.

ஹேமா கொஞ்சம் நிம்மதியாக கதையைச் சொன்னான். அதற்கு காரணம் இருக்கிறது, இவர்கள் விட்ட இடைவெளியில் ஹேமா ஏனோ மனம் சரியில்லாமல் ரெஸ்ட் ரூம் பக்கம் போக எப்போடா இவன் போவான் என்று காத்துக்கொண்டிருந்த மௌனி அவன் போனதுமே பின்னாலே போனாள்.

எல்லோருக்கும் ஓரளவுக்குப் புரிந்தது. ஆனால் நம்ம மங்குனி அமைச்சர் எதையும் புரியாமல் பின்னாலே போக இதித்ரி தான் அவனைத் தடுக்க,

"ஹே விடு நான் ரெஸ்ட் ரூம் போகணும்"

"அப்போ ரைட் சைட் போ"

"ஹே அது ரொம்ப தூரம்"

"லூசு லூசு அங்க ஹேமா போயிருக்காரு"

"ஏன் ஹேமா போனா நான் போகக் கூடாதா? நாங்கயெல்லாம் ஹாஸ்டெல்லயே ஒரு ரூம் தான். அவன் போனதும் நான் போயிருக்கேன் நான் போனதும் அவன் போயிருக்கான் நாங்க ரெண்டுபேரும் கூட..."

"டேய்..." என்று செபா கத்த,

முதலில் புரியாதவன் பின்பு புரிந்து, "அட @#$. ரெண்டு பேரும் பல நாள் ஓபன் பாத்ரூமா மரத்தடியில பிஸ் அடிச்சு இருக்கோம். நான் மரத்துக்கு இந்த பக்கம் அடிப்பேன் அவன் மரத்துக்கு அந்த பக்கம் அடிப்பான்" என்று ஏதோ பெரிய தான தர்ம
காரியம் செய்ததைப்போல் பெருமையா சொல்ல எல்லோரும் அவனை முறைத்தனர்.

லேடிஸ் எல்லோரும் அவனைப் பார்த்து முகம் சுளிக்க, "ஒரு இந்திய குடிமகன் அவசரத்துக்கு மரத்துல பிஸ் அடிக்கக் கூடாதா? அய்யஹோ இந்தக் கொடுமையை நான் எங்கே சென்று முறையிடுவேன்?"என்று சுத்தத் தமிழில் பெரிய டைலாக் பேசினான்.

"இந்த பக்கம் போகத்தனு சொன்னது ஒரு குத்தமா?" இதித்ரி கவலைப்பட, எல்லோரும் அவனின் பேச்சில் சிரிக்கவும் செய்தனர். ரைட் சைட் திரும்புவதைப் போல் திரும்பி வேண்டுமென்றே லெப்ட் சைட் ஓடிவிட்டான் அந்த கேடி!

டேய் டேய் என்று எல்லோரும் கோரஸ் பாடினர்.

.......................................


"அப்புறோம் ராஜீவ், உங்களைப் பற்றி நீங்க எதையுமே சொல்லலையே?"

"என்ன சொல்லணும்?"

"உங்க பேமிலி, ஃப்ரண்ட்ஸ், ஆம்பிஷன், பேஷன், இதைப்பற்றி...

அவன் அவளை ஒரு மாதிரி பார்க்க, "சித்தாரா உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்..."

என்ன என்பதைப் போல் அவனைப் பார்த்தாள்,

"அது ஐ அம் சாரி"

அவன் எதற்கு மன்னிப்பு கேட்கிறான் என்று புரியாமல் அவள் விழிக்க,

"ஆக்சுவல்லி அன்னைக்கு நான் உங்கள முதன்முதலா பார்த்த அப்போ உண்மையிலே உங்களை சைட் தான் அடிச்சேன்"

அவள் கண்கள் மட்டும் விரிய,

"ஹே பர்ஸ்ட் நான் பேசிடுறேன். நான் பேசிக்கல்லி நல்ல பையன் தான். இருந்தாலும் எல்லோரையும் போல காலேஜ்ல பொண்ணுங்கள பார்த்து சைட் அடிக்கிறதோட நிறுத்திப்பேன். எனக்கு நேர்ல பேசுறதெல்லாம் பிடிக்காது. பிடிக்காது என்பதைக் காட்டிலும் பயம்" என்று அவன் சொல்ல,

அவனின் முழியைப் பார்த்து ஏனோ சித்தாராவிற்குச் சிரிப்பு வந்துவிட,

ஏனோ அவள் சிரிப்பில் தொலைந்தவன், "நம்புங்க நான் உண்மையிலே டம்மி பீஸ் தான்" என்று சொல்ல அவளோ வாய்விட்டே சிரித்தாள்.

"படிச்சேன். கொஞ்ச நாள் சும்மா இருந்தேன் அப்புறோம் வேலை தேடுனேன், இதோ இப்போ நான் வேலை செய்யுற கம்பெனில முதல்ல ஜூனியர் என்ஜினீயரா சேர்ந்தேன் அப்புறோம் மூணு வருஷம் ஓடிடுச்சி. ஆனா இந்த பொண்ணுங்க கிட்ட பேசுறது மட்டும் எனக்கு செட் ஆகவே இல்ல. அப்போதான் இந்த ப்ரொஜெக்டை என் தலைமையில கொடுத்தாங்க, அன்னைக்கு காலையில் தான் என் பேட்ச் மேட்டை பார்த்தேன். சரியான டம்மி பீசுங்க..."

அவள் அவனைப் பார்க்க, "அட என்னைய விட அவன் டம்மி தாங்க. உண்மையிலே அவன் கூட ஒரு பொண்ணோட போனான். கேட்டா வுட்பினு சொல்லிட்டுப் போறான். செமயான மூட் அவுட் அப்போதான் உங்க கிட்ட மீட் பண்றேன்னு சொன்னது ஞாபகம் வந்தது. அங்க ரெஸ்டாரெண்ட்ல நீங்க வரதுக்கு முன்னாடி ஒரு கபிள்ஸ் இருந்தாங்க. ஏனோ அவங்களைப் பார்க்கும் போது 'ச்சே நாம எப்ப இந்த மாதிரி எல்லாம் சுத்த போறோம்னு' ஒரு ஏக்கம் வந்தது சரினு திரும்பினா தூரத்துல நீங்க வந்தீங்க. செம அழகுங்க நீங்க..."

வந்த வெட்கத்தை மறைத்து முறைத்தாள்,

"நிஜமாங்க. பிலீவ் மீ. அப்போது யோசிச்சேன், 'ச்சே இந்த மாதிரி பொண்ணு கூட எல்லாம் நான் பேச ஒரு வாய்ப்புக் கூட கிடைக்காதுனு' ஃபீல் பண்ணிட்டு அப்போ உங்க பேர் ஞாபகம் வந்தது, 'சித்தாரா ச்சே எவ்வளவு பழங்காலத்துப் பேர்' அப்படி நினைக்கும் போது தான் 'ச்சே இப்போ நான் மீட் பண்ணப் போற பொண்ணு நீங்களா இருக்கக்கூடாதான்னு' யோசிச்சேன். அதே மாதிரி நீங்க என்கூட வந்து பேசுனீங்களா கடவுள் இருக்கான் குமாருனு நான் ஒரே குஷி ஆகிட்டேன். அது தான் அன்னைக்கு உங்கள ஒரு மாதிரி வெச்ச கண்ணு வாங்காம பார்த்தேன்..."

"ஆனா பதிலுக்கு உங்க பார்வையே சொன்னது, நீங்க என்னத் தப்பா நினைக்கறீங்கன்னு. சோ நான் பேசவேண்டியதை மட்டும் பேசிட்டுப் போயிட்டேன். பட் இப்போ இந்த ஒரு மாசமா நாம தினம் தினம் மீட் பண்றது பேசுறதுனு எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. கூடவே நீங்க என்னைத் தப்பா நெனச்சி இருப்பீங்களோனு நினைக்கும் போது உங்க கிட்ட எல்லாமும் சொல்லிப் புரியவெக்கணும்னு ரெண்டு மூணு முறை பேச வந்தேன். ஆனா முடியில... ஆனா இன்னைக்கு எப்படி பேசுறேன்னு கூட எனக்குப் புரியில" என்றவன் இதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விட்டு இலகுவானான்.

சித்தாராவிற்கு இது ஆச்சரியம் தான். உண்மையில் அவள் அன்று அவனைத் தவறாகவேதான் நினைத்தாள். ஆனால் இந்த ஒரு மாத காலமாக அவன் பழகுவது ஏனோ அவளுக்கு உறுத்தவில்லை. இது நிஜம் தான். இதுவரை எப்படியோ ஆனால் இப்பொது அவனின் இந்த இன்னொசென்ஸ் கூடவே நேர்மை இரண்டும் பிடித்தது. இதுவரை இருந்த ஒரு பிம்பம் மறைந்து வேறு ஒரு ஆளாய் தெரிந்தான் ராஜீவ்.

எல்லாம் சொல்லியும் அவள் எதுவும் பேசாமல் இருப்பது அவனுக்கு ஒரு மாதிரி இருக்க அவனோ தயங்கித் தயங்கி அவளைப் பார்த்தான்,

"ஓகே சாரி ராஜீவ். இன்பேக்ட் அன்னைக்கு உங்க கிட்ட பேசின பிறகு கண்டிப்பா இந்த ப்ரொஜெக்ட் வேணாம்னு தான் இருந்தேன். ஆனா என் ஃப்ரண்ட்ஸ் தான் என்னை ஒத்துக்க வெச்சாங்க. இருந்தும் எனக்கு ஒரு தயக்கம் இருந்தது உண்மைதான். ஆனா அதன் பிறகு நீங்க எனக்கு வேற மாதிரி தான் தெரிஞ்சீங்க. இன்பேக்ட் இப்போ வரை உங்க மேல எனக்கு ஒரு குட் இம்ப்ரெஸ்ஸன் தான் இருக்கு. ஆனாலும் அன்னைக்கு நீங்க அப்படிப் பார்த்தது எனக்கு ஒரு உறுத்தலாவே இருந்தது. எது நிஜம்னும்? எங்க நீங்க நடிக்கறீங்களோனு நிறைய சந்தேகம். பட் யூ ப்ரூவ்ட் தட் ஐ அம் ராங்" (நான் எண்ணியது தவறு என்று நீங்கள் நிருபித்து விட்டிர்கள்)

இந்த வார்த்தை ஏனோ அவனுக்குள் ஒரு நிம்மதியைத் தந்தது.

அதன் பிறகு அவனும் எதுவும் சொல்லவில்லை (இதைப் பற்றி) அவளும் எதுவும் பேசவில்லை. மீண்டும் தங்கள் வேலைகளில் இருவரும் மும்முரம் ஆனார்கள்... (பயணங்கள் முடிவதில்லை...)
 
சித்தாரா, ஹேமா..ஜெபா....இவர்களுக்கிடையே...
லோகு, அனு....
தியா வேற எட்டி பார்ததுட்டு போறான்...
இந்த எபியை சரியா கேட்ச் பண்ணிட்டேன்...;)
 
சித்தாரா, ஹேமா..ஜெபா....இவர்களுக்கிடையே...
லோகு, அனு....
தியா வேற எட்டி பார்ததுட்டு போறான்...
இந்த எபியை சரியா கேட்ச் பண்ணிட்டேன்...;)

அப்பாடா?? நன்றி...
 
Top