ஹாய் மல்லி,
மரபு வேலிகள்
முள்ளாய் பிணக்க...
உறவு வேலிகள்
கல்லாய் கனக்க..
மரபும் உறவும்
மாறிப் போன கலிகாலம்...
இதில் மரபுகள் கண்டால்
கனாக்காலம்...!
அதன் மரபுகள் கொண்டால்
விழாக்காலம்...!
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
ஹாய் மல்லி,
மரபு வேலிக்குள்
கட்டுக்குள் இருந்தாலும்
கட்டுக்குள் அடங்காமல்
வலம் வரும் காதல்
வேலிகள் தாண்டிட
விடையாகுமன்றோ...?
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி
ஹாய் மல்லி,
மரபு வேலிக்குள்
முடங்கி நிற்கும் காதல்...,
உறவு வேலிக்குள்
அடங்கி நிற்கும் காதல்...,
வலம் வர உலகில்
மாற்றம் வேண்டுமன்றோ...?
அதுவே....
ஏற்றம் காணுமன்றோ...?
வாழ்த்துக்கல் மல்லி, நன்றி
ஹாய் மல்லி,
காதல் வலம் வர
காயம் பட்ட நெஞ்சங்கள்....
தடம் மாறும் தஞ்சங்கள்....!
இடம் மாறி நின்றாலும்
புடம் போட்ட வஞ்சங்கள்....
மனம் தேடும் மஞ்சங்கள்...!
வாழ்த்துக்கள் மல்லி, நன்றி