Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

நள(ன்)தமயந்தி - 1

Advertisement

SatyaSriram

Well-known member
Member
நள(ன்)தமயந்தி
அத்தியாயம் - 1

“மதியத்துக்கு என்ன செய்யட்டும் கண்ணு?” என்று கேட்டபடியே வந்தார் அன்னலட்சுமி. இவரின் பெயருக்கேற்றார் போல் அந்த வீட்டில் உள்ள அனைவருக்கும் அன்னமிடுபவர்.
“அன்னம்மா, எது வேணா செய்ங்க.. நான் கிளம்பறேன்.. மதியத்துக்கு எனக்கு ஒண்ணும் வேண்டாம்.” என்றவாறே கிளம்பினாள் தமயந்தி.
“கண்ணு! என்னமா ஒண்ணுமே சாப்பிடாம போறியே..! இரு கண்ணு! ரெண்டு இட்லி சாப்பிட்டு போ..”
“நான் நிறைய நிறைய சாப்பிட்டு தான் இப்போ இந்த நிலையில இருக்கேன்.. கவலைப்படாதீங்க அன்னம்மா விடுங்க.!.” என்றபடியே சென்றவள் பின் திரும்பி, “உயிர் வாழ்வதற்கு தேவையான அளவு சாப்பிட்டுட்டேன் அன்னம்மா..! “ என்றபடியே வெளியேறினாள் தமயந்தி.
கண்களில் நீருடன் நின்றிருந்த அன்னத்திற்கு “அன்னம்மா இன்னிக்கு எனக்கு பிடிச்ச சமையல் செஞ்சுட்டு அப்படியே ஏதாவது ஒரு ஸ்வீட் செய்ங்க.. நெய் கொஞ்சம் நிறைய ஊத்தி காரட் ஹல்வா.. செய்து வைங்க.. சாப்பிட்டவுடனே ஸ்வீட் சாப்பிட்டா அதோட சுகமே தனிதான்..” என்று சப்பு கொட்டும் தமயந்தி தான் நினைவிற்கு வந்தாள்.
மூன்று வேளையும் மணக்க மணக்க சமைத்ததை ருசித்து உண்ணும் குடும்பத்தினருக்கு, உணவு என்பது ‘பெயருக்கு’ என்றானது குறித்து அன்னத்திற்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது.
“அன்னம் ஒரு க்ளாஸ் பால் கொண்டு வாங்க, அம்மா எழுந்துட்டாங்க..” என்ற சத்தம் கேட்டு. “இதோ வரேன் அய்யா.” என்று சொல்லி விட்டு சமையலறையில் இருந்து பால் எடுத்துக் கொண்டு சென்றார்.
“என்ன அன்னம், தமயந்தி எங்க, இன்னும் எழுந்திரிக்கலையா?” என்று சுந்தரம் அழுத்தி கேட்கும்போதே புரிந்துக்கொண்ட அன்னம், “ஆமாங்கய்யா இன்னும் எழுந்திரிக்கலை.” என்று பொய் கூறினாள்.
“அன்னம் நான் அவளைப் பார்த்து ஒரு வாரம் ஆகிப் போச்சு, எந்திரிச்ச உடனே வர சொல்லு அன்னம்.” என்றாள் மீனாட்சி.
“மீனு நேத்தும் இதே தான் சொன்ன அவ எந்திரிச்சு வந்துப் பார்த்தப்ப நீ தூங்கிட்டு இருந்த.., அதுக்காக இன்னிக்கு நீ ரெஸ்ட் எடுக்காம இருக்காத.. நீ ரெஸ்ட் எடு அவ வந்து பார்த்துட்டு கடைக்கு கிளம்பி போவா, கவலைப்படாதே நாளைக்கு சன்டே தான் அவ வீட்டுல தான் இருப்பா.. நாளைக்கு பார்த்துக்கலாம்.” என்று நீளமாக பேசி முடித்தார் சுந்தரேசன்.
“போன சன்டே தான் அவளைப் பார்த்தேன்.. ஒரு வாரம் ஆகிடுச்சு. தினமும் மதியத்துல போன் செய்து பேசறதை இங்க வந்து பேசலாமில்லை. பெத்த மனச எப்ப தான் புரிஞ்சுப்பா?”
“விடு மீனு அவளும் தான் என்ன செய்வா பாவம். நானும் கடைக்கு போய் ஹெல்ப் செய்யறது இல்லை. அவளே தனியா எதைத்தான் சமாளிப்பா? நீ இப்படி சொல்லிக்கிட்டு இருந்தா அவளுக்கு தானே இன்னும் கஷ்டம். நாமே அவள புரிஞ்சுக்கலைன்னா வேற யாரு புரிஞ்சுப்பா?”
ஒரு பெருமூச்சுடன் அவரை கவனித்திருந்த மீனாட்சி, “அன்னம் அவள சாப்பிட வச்சு அனுப்பு, புள்ள ரொம்ப இளைச்சிடுச்சு.” என்றார்.
“சரிங்கம்மா, நான் போய் உங்களுக்கு கஞ்சி செஞ்சு கொண்டுவரேன்.”
“அன்னம் இன்னிக்கு கஞ்சி வேண்டாம்ன்னு நேத்தே சொன்னேனே, மறந்துட்டீங்களா? வெந்தய இட்லி செய்ய சொன்னேனே..!!” என்றார் சுந்தரம்.
“ஆமாம் அய்யா!!, ஏதோ நினைவுல சொல்லிட்டேன். தமு கண்ணு சாப்பிடாம கிளம்பினா..!!” என்று ஏதோ சொல்லவந்த அன்னத்தை மீனாட்சியின் பேச்சு இடையிட்டது.
“என்னது தமயந்தி கிளம்பிட்டாளா, அதுவும் சாப்பிடாமலா? என்ற மீனாட்சியின் கைபிடித்து, “அய்யோ இல்லம்மா, நம்ம கண்ணு சாப்பிடாம கிளம்பிட போகுதேங்கற தான் சொல்லவந்தேன், பதட்டத்துல இப்படி சொல்லிவிட்டேன் வேற ஒண்ணுமில்ல கவலைபடாதீங்கம்மா... தமயந்தியை சாப்பிட வச்சு தான் கடைக்கு அனுப்புவேன். இப்போ நான் போய் வேலை செய்யறேன்.” என்றபடியே கீழே இறங்கினார் அன்னம்.
அன்னம் இந்த வீட்டுக்கு வந்து இருபது ஆண்டுகள் ஆகிறது. இவர் இங்கே வரும்போது அவருக்கு வயது நாற்பது, இங்கு வருவதற்கு முன்பே கணவரைப் பறிகொடுத்திருந்தார். குழந்தைகள் எதுவும் இல்லாதவர். உறவுகளின் புறக்கணிப்பால் தற்கொலைக்கு முயன்றவரை மீனாட்சி தான் தடுத்து இங்கே அழைத்து வந்திருந்தார்.
மீனாட்சி, சுந்தரேசனின் தர்ம பத்தினி. மதுரையில் கோயில் கொண்டிருக்கும் மீனாட்சியிடம் இருக்கும் அதே கருணையையும், பரிவையும் கொண்டவர். கணவர் சுந்தரேசனிடமும், மகள் தமயந்தியிடமும் மிகுந்த பிரியமும், பாசமும் வைத்திருப்பவர்.
சுந்தரேசன் அவருடைய பால்ய கால நண்பன் தர்மேந்திரனுடன் இணைந்து துணி கடையை நடத்தி வந்தார்.. குடும்பத்தின் மீது இவருக்கு இருக்கும் பற்றையும், அக்கறையையும் பார்க்கும்போது, மீனாட்சிக்கேற்ற சொக்கநாதராகவே நமக்கெல்லாம் தோன்றும்.
நண்பன் தர்மாவிற்கு நெருங்கிய உறவேதும் இல்லாமல் போனதும் தன்னுடனே வீட்டிற்கு அழைத்து வந்தார். தர்மாவும் மீனாட்சியை சொந்த தங்கையாகவே ஏற்று, அவரிடமும், மருமகள் தமயந்தியிடமும் மிக அன்பாக இருந்தார். இப்பொழுது அவர் உயிருடன் இல்லை. மூன்று மாதத்திற்கு முன்பு தான் மாரடைப்பால் காலமாகியிருந்தார்.
இருவரும் இணைந்து தொழில் செய்ததால் வரும் லாப - நஷ்டத்தை சரிசமமாகவே பகிர்ந்து வந்தனர். தர்மா திருமணம் ஆகாதவர். அவருக்கு வாரிசு என்று சொன்னால் அது தூரத்து (இரண்டு மூன்று விட்டு) உறவில் இருந்த அண்ணன் காசிநாதனின் மகன் நளன் மட்டுமே. அண்ணன் காசியையும், அவரது மகன் நளனையும் மிகவும் பிடிக்கும் அவருக்கு. தனக்கு வாரிசு என்று நளனை தூக்கி வைத்துக் கொண்டே, எப்போதும் அண்ணன் காசியிடம் சொல்லிக்கொண்டே இருப்பார்.
அண்ணன் காசியின் மறைவிற்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக சொந்தம் விட்டு போனதால் நளன் இருக்கும் இடம் அவருக்கு தெரியவில்லை. அண்ணனின் மனைவி விசாலாட்சி, பிறந்த வீட்டுடன் சென்று விட்டதாலும், இவரும் கடையை விரிவு படுத்த முனைந்து கொண்டிருந்ததாலும் இவரால் சொந்தத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
இறக்கும் தருவாயில் “சுந்தரா, நளன் கிடைச்சா இந்த சொத்தில் இருக்கும் இரு பங்கில் ஒன்றை அவனிடம் கொடுத்து விட்டு, மற்றொன்றை தமயந்திக்கு கொடுத்துடு டா.” என்றதுடன் சுந்தரேசனிடம் அவர் எழுதியிருந்த இரு உயில்களையும் கொடுத்திருந்தார்.
தர்மா கொடுத்திருந்த உயிலை சுந்தரேசன் இன்னமும் படித்திருக்கவில்லை. அதனால் தர்மா எழுதியிருந்த, ‘தனக்கு பின்னால் இக்கடையின் மூலம் வரும் லாப – நஷ்டம் முழுவதும் தமயந்திக்கே போய் சேரும்.’ என்ற விஷயத்தை சுந்தேரசன் அறிந்திருக்கவில்லை.
சுந்தரேசனும் நளனை தேடிக் கொண்டிருக்கிறார். அவரால் முழு மூச்சுடன் இவ்வேலையை செய்ய முடியவில்லை. மனைவி மீனாட்சியின் உடல்நிலையே அதற்கு காரணம். ஆறு மாதங்களுக்கு முன் வரை நன்றாக தான் இருந்தார் மீனாட்சி. நடந்து முடிந்திருந்த பிரச்சினையின் விளைவால் அவரின் தேக ஆரோக்கியம் பாதித்து அவரை படுக்கையில் கிடத்தியது.
திருச்சியில் மெயின் கார்ட்கேட்டில் இருக்கும் ‘சுந்தரதர்மா சில்க்ஸ்’ கடையை இப்பொழுது தமயந்தி தான் கவனித்து வருகிறாள்.
தமயந்தி படித்தது பி.காம். படிப்பில் அவள் சுமார் ரகம் தான். அதனால் மேல் படிப்பு படிக்க அவளுக்கு விருப்பம் இல்லை. பள்ளியின் முதலிலிருந்து கல்லூரி இளநிலை வரை ஏதோ ஒரு அதிர்ஷ்டத்தில் தான் அவள் தேறியிருந்தாள். இதுவரை தோல்வியை கண்டதில்லை. இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன் படித்திருந்தால் அபவ் அவரேஜ் ஸ்டுடென்ட் ஆக இருந்திருப்பாள்.
அவளுக்கு படிப்பில் இருக்கும் ஆர்வத்தை விட கடையில் மாமா தர்மாவிடம் கடையைப் பற்றி அறிந்துக்கொள்வதிலே தான் ஆர்வம் அதிகம் இருந்தது. பன்னிரெண்டாம் வகுப்பின் போதே கடைக்கு சென்று வியாபாரத்தை கற்றுக்கொண்டாள். கல்லூரி படிப்பை முடித்ததும் கடையை மாமா தர்மாவுடன் இணைந்து அவளே நிர்வகிக்க ஆரம்பித்தாள்.
படிப்பில் அவள் ஜொலிக்கா விட்டாலும், வியாபார நுணுக்கங்களை நன்றாக அறிந்துகொண்டு, மேலே கடையை சற்று பெரிதே விரிவு செய்து வியாபாரத்தை பெருக்கி அதில் அவள் வெற்றியையும் கண்டிருந்தாள்.
மற்றும் அவள் அம்மா மீனாட்சியிடம் இருந்து நிறைய நற்பண்புகளையும் கற்றிருந்தாள். நேர்மை, கருணை, எல்லோரிடத்திலும் நட்புடன் பழகுவது, கோபத்தையும் அமைதியான முறையில் வெளிப்படுத்துவது, உணவை வீணாக்காமல் சாப்பிடுவது என்பதும் அதில் அடக்கம்.
அவளின் அழகைப் பற்றி சொல்வதானால், ஐயந்தரையடி உயரம், எலுமிச்சை நிறம், இடைவரை நீண்டிருக்கும் கூந்தல், வில் போன்ற புருவம், மீன் போன்ற கண்கள் என்று இப்படியெல்லாம் என்னால் அவளை வர்ணிக்க முடியாது தான்.
அதற்காக, பக்கத்து வீட்டுப்பெண் போன்ற தோற்றம், மாநிறம், மறுபடியும் திரும்பிப் பார்க்கவைக்கும் அழகு என்றும் வர்ணிக்க இயலாது.
இக்கதையை படிக்க ஆரம்பிக்கும் போது நீங்கள்(பெண்கள்) ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக்கொள்ளுங்கள். உங்களைப் போன்றே தான் தமயந்தி இருப்பாள். ஏதாவது ஒரு வகையில் அவள் உங்களைப் போன்றிருப்பாள். (படிப்பில் அவளுக்கு இருக்கும் நாட்டத்தில் அவளுள் நான் என்னை கண்டேன்.. அதனால் எனக்கு அவள் என்னைப் போன்றே இருந்தாள்.ஹா.ஹா!!..ஹா..!!)
நாம்(பெண்கள்) எல்லோரும் ஒவ்வொரு விதத்தில் எப்போதும் அழகானவர்களே.!!! கண்ணாடியில் ஒரு முறை உங்களின் முகத்தைப் பார்த்துவிட்டு கதையை மேற்கொண்டு படிக்க ஆரம்பியுங்கள். ஏதாவது ஒருவிதத்தில் அவளுள் நிச்சயம் நீங்கள் உங்களை காணலாம்.
தமயந்தியின் குடும்பத்தை மிகுந்த பணக்காரர்கள் என்று சொல்ல முடியாவிட்டாலும், அவர்களை உயர் மத்தியதர குடும்ப ரகத்தை சேர்ந்தவர்கள் என்று சொல்லலாம்.
கடையில் லாபம் நிறையவே வந்தாலும், அவ்வபோது கடையை விரிவு செய்தது, கூடவே பணியாளர்களின் ஊதியம் மற்ற எல்லா கடையை விட மிக அதிகமாகவே வழங்கியது என்று செய்துக்கொண்டு இருந்ததால் இன்னமும் அவர்கள் உயர் மத்தியதர வகுப்பிலேயே இருந்தனர்.
சுந்தரேசன், தர்மா இருவருக்குமே கடன் என்பது அறவே பிடிக்காது. கிடைக்கும் லாபத்தில் சிறிதுசிறிதாக தான் கடையை பெரிது படுத்தியிருந்தனர். தமயந்தியும் அவர்களின் வழிமுறையையே பின்பற்றிவருகிறாள். பணியாளர்களின் ஊதியத்தை தாராளமாக வழங்குவதால், எவருமே இக்கடைய விட்டு சென்றதில்லை.
 
உங்களுடைய அழகான
"நள(ன்)தமயந்தி"-ங்கிற
அருமையான லவ்லி
நாவலை மீண்டும் படிக்க
ரீரன் தந்ததற்கு ரொம்பவே
சந்தோஷம், சத்யாஸ்ரீராம் டியர்
 
Last edited:
Top