மதிய நேரத்தில் தங்களது உடைமைகளை எடுத்துக் கொண்டு ரயிலில் இருந்து இறங்கினார்கள் பால்ராஜ், மகிழம்பூவன் மற்றும் வண்ணமதி.
உடனே ரமணனுக்கு அழைப்பு விடுத்து தங்களது வரவை அறிவித்ததும், அவரும் தனது மனைவியிடம் விஷயத்தை உரைத்து விட்டுத் தன் காரை எடுத்துக் கொண்டு இவர்களை அழைத்து வரக் கிளம்பி விட்டார்.
அதேபோல்,”சஹா! அவங்க மூனு பேரையும் கூட்டிட்டு வர்றதுக்கு உங்கப்பா காரை எடுத்துட்டு ரயில்வே ஸ்டேஷனுக்குப் போயிட்டார். அவங்க கூட சேர்ந்து உட்கார்ந்து தான் நாம லன்ச் சாப்பிடப் போறோம்”என்று மகளுக்கு அறிவுறுத்தினார் கஸ்தூரி.
அதைக் கேட்டதும் கோபம் தலைக்கேறியது சஹஸ்ராவிற்கு.
ஆனால் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டு,”சரிம்மா”எனப் பதிலளித்தாள்.
அதே சமயம், ரயில் நிலையத்தை அடைந்ததும் தனது காரிலிருந்து இறங்கித், தனது தங்கையின் கணவர் மற்றும் அவரது பிள்ளைகளிடம் சென்று,
“வாங்க! பயணம் சௌகரியமாக இருந்துச்சா?”என்று அவர்களிடம் புன்னகையுடன் வினவினார் ரமணன்.
“அதெல்லாம் நல்லா இருந்துச்சு மாப்பிள்ளை”என்றுரைத்தார் பால்ராஜ்.
“சரிங்க மாமா“என்றவரோ,
வண்ணமதியிடம்,”உன் புருஷனையும், பையனையும் கூடக் கூட்டிட்டு வந்திருக்கலாம்லம்மா?”என்றார் ரமணன்.
அதற்கு அவளோ,”அவருக்கு ஆலையில் வேலை அதிகம் ஆயிடுச்சு மாமா. அதான், அவரால் வர முடியலை. செந்திலுக்கு இப்போ தான் காய்ச்சல் வந்து சரியாகி இருக்கு. அதனால் அவனையும் விட்டுட்டு வர வேண்டியதாகப் போச்சு. மாமாவும், அத்தையும் அவனைப் பார்த்துப்பாங்க”எனக் கூறினாள் வண்ணமதி.
“அப்பறம் மாப்பிள்ளை! வர, வர உன்னோட உயரம் கூடிக்கிட்டே போகுதே! அதுக்காக ஸ்பெஷலாக எதுவும் சாப்பிட்றியா என்ன?”எனத் தன் வருங்கால மருமகனிடம் கிண்டலாக கேட்க,
“ஐயோ! அப்படியெல்லாம் இல்லைங்க மாமா”என்று வெட்கத்துடன் அவருக்குப் பதில் சொன்னான் மகிழம்பூவன்.
அதில் ஹாஸ்யமாகச் சிரித்து விட்டு,”சரி. காரில் ஏறுங்க. வீட்டுக்குப் போயிட்டு மத்ததைப் பேசிக்கலாம்”என்றதும், காரில் ஏறிப் பயணம் செய்து வீட்டை அடைந்தார்கள்.
அதற்கிடையில் தனது கணவன் பூபாலனுக்குச் செல்பேசி அழைப்பு விடுத்து தாங்கள் ஊர் வந்து சேர்ந்து விட்ட தகவலைத் தெரிவித்து விட்டிருந்தாள் வண்ணமதி.
ரமணனின் வீட்டிற்கு எப்போது வந்தாலும் இந்த வீட்டை இவர்கள் மூவரும் மெய் மறந்து போய்த் தான் பார்த்து நிற்பார்கள்.
அதே சமயம், தங்களிடமும் நன்றாகப் பணப்புழக்கம் இருந்தும் கூட இம்மாதிரியான ஆடம்பர வீட்டைக் கட்டவில்லை பால்ராஜூம், அவரது மக்களும்.
அதேபோல், வண்ணமதி இருந்த வரையில் அவள் தான் சமைப்பாள். மற்ற இருவரும் அவளுக்கு உதவுவார்கள். ஆனால் அவள் திருமணமாகிச் சென்று விட்டதும் சமையல் வேலையைத் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டான் மகிழம்பூவன்.
அதே சமயம் அவர்களது வீட்டு வேலைக்கு என்று தங்களது பால் பண்ணையில் வேலை செய்யும் ஒருவரின் மனைவியை மட்டும் தான் தந்தையும், மகனும் அனுமதித்து உள்ளனர்.
இப்போது அந்த அந்த வீட்டின் வாசலிற்கு வந்து தங்களைச் சிரித்த முகத்துடன்,”வாங்கண்ணா. வா மகிழு! வா மதி!”என்று வரவேற்ற கஸ்தூரியிடம்,
“எப்படி இருக்கம்மா? சஹா பொண்ணு நல்லா இருக்கா?”என விசாரித்தார் பால்ராஜ்.
“நாங்க நல்லா இருக்கோம்ண்ணா”என்றவரோ,
அவர்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்துப் பருகச் செய்து,
“சஹா உள்ளே தான் இருக்காள். இருங்க. கூட்டிட்டு வர்றேன்”என்று அவர்களிடம் சொல்லி விட்டு மகளைத் தேடிச் சென்றார் கஸ்தூரி.
தன்னவளைப் பற்றிய பேச்சைக் கேட்டதும் அனிச்சையாகத் தன் உடல் சிலிர்த்ததை உணர முடிந்தது மகிழம்பூவனால்.
அவளை எப்போது நேரில் பார்ப்போம் என்றெண்ணிக் காத்திருந்தவனின் பொறுமையை மிகவும் சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்த சஹஸ்ராவோ,
தன் அறைக்குள் வந்திருந்த அன்னையிடம்,”அவங்க எவ்வளவு மணி நேரமாக டிராவல் செஞ்சிட்டு வந்திருக்காங்கம்மா? ரூமுக்கு அனுப்பி ரெஸ்ட் எடுக்க வைங்க. அதுக்கப்புறம் நான் அவங்க கூடப் பொறுமையாகப் பேசுறேன்”என்று கூறி அவரை ஏமாற்ற நினைக்க,
“அவங்க இங்கே ஒரு வாரம் தங்கப் போறாங்க! அதனால் ஊருக்குக் கிளம்புற வரைக்கும் எப்போ வேணும்னாலும் ரெஸ்ட் எடுத்துப்பாங்க. நீ எந்தக் காரணமும் சொல்லாமல் இப்போ என் கூட வர்ற! அவ்வளவு தான்!”எனத் தீர்க்கமாக உரைத்து அவளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு முன்னறைக்குச் சென்றார் கஸ்தூரி.
தன் மனம் கவர்ந்தவளின் மணத்தை வைத்தே அவளது வருகையை அறிந்து கொண்டதும், தனது குனிந்த தலை நிமிராமல், இதயம் பலமாகத் துடிக்க, அப்படியே அமர்ந்து இருந்தான் மகிழம்பூவன்.
ஆனால் தன்னுடைய முகத்தில் செயற்கையான சிரிப்பை வரவழைத்துக் கொண்டு வந்தவளோ, பால்ராஜ்ஜைப் பார்த்ததும் நிஜமான புன்னகையுடன்,”வாங்க மாமா! எப்படி இருக்கீங்க?”என்று அவரிடம் நலம் விசாரித்தாள் சஹஸ்ரா.
அதில் முகம் மலர,”நான் நல்லா இருக்கேன்ம்மா. நீ எப்படி இருக்கே? என்னடா ஆஃபீஸில் அதிக வேலையா? இவ்வளவு சின்ன வயசில் எல்லா பொறுப்பையும் எடுத்துக்கிட்டு உங்கப்பாவுக்கு உறுதுணையாக நீ இருக்கிறதை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கு!”என்று அவளைப் பாராட்டினார்.
“நம்ம மகிழும் இவளை மாதிரி தானே மாமா? அவனும் தன்னோட தொழிலில் கொடி கட்டிப் பறக்குறானே!”என்று தனது வருங்கால மருமகனைப் பாராட்டிப் பேசினார் கஸ்தூரி.
அதில் காதில் புகை வர மகிழம்பூவனை ஏறிட்டுப் பார்த்தாள் சஹஸ்ரா.
ஆனால் அவளது வதனத்தைக் கண்டு உறைந்து போயிருந்தவனோ தன்னவளின் கோபப் பார்வையைக் கூட மெய் மறந்து ரசித்துக் கொண்டிருந்தான்.
தனது குரலைச் செருமிக் கொண்ட சஹஸ்ராவோ,”எப்படி இருக்கீங்க மகிழம்பூவன்?”என்று அவனிடம் வினவிய பிறகு தான் தனது சுயத்திற்கு வந்து,
“ஹாங்! நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க அழகி?”என்றதுமே மூக்கு விடைக்க,
“என் பேர் அழகி இல்லை. சஹஸ்ரா!” என அவனிடம் அழுத்திக் கூறினாள்.
அதில், ரமணனும், கஸ்தூரியும் சங்கடத்துடன் பார்க்க,
பால்ராஜூம், மகிழம்பூவனும் அவளது சிறுபிள்ளைத் தனமான கோபத்தைக் கண்டுப் புன்னகைத்தனர்.
அப்போது அங்கிருந்து வண்ணமதியைப் பார்த்து விட்டு,”ஹாய் வண்ணமதி!”என்றுரைத்தாள் சஹஸ்ரா.
உடனே அவளும் மிடுக்கலுடன்,”ஹாய் சங்குப்பூவழகி!”என்று அழுத்தம், திருத்தமாக மொழிந்தாள்.
அதைக் கேட்டவுடன் கண்களில் கோபக்கனலுடன்,”ஹேய்!”என்று அவளைச் சத்தம் போட்டாள் சஹஸ்ரா.
ஆம்! அவளது உண்மையான பெயர்,’சங்குப்பூவழகி’தான். தன் அண்ணன் மகளுக்கு ஆசையாக அந்தப் பெயரை வைத்திருந்தார் மல்லிகா.
அந்தக் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்குமே சஹஸ்ராவை அந்தப் பெயரைக் கொண்டு அழைப்பது தான் விருப்பமாக இருந்தது.
சஹஸ்ரா சிறுமியாக இருக்கும் வரையில் எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால், தனது கல்லூரிப் படிப்பில் அடியெடுத்து வைத்தவுடன்,’சங்குப்பூவழகி’என்றப் பெயர் அவளுக்குப் பிடிக்கவில்லை.
அதனாலேயே, தனது பெற்றோரிடம் பிடிவாதம் பிடித்து, உணவுண்ணாமல் உண்ணாவிரதம் இருந்து தன்னுடைய பெயரை,’சஹஸ்ரா’என்று மாற்றிக் கொண்டாள்.
அதில் அவளுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு அவள் மேல் அதிருப்தி ஏற்பட்டாலும் கூட அவளின் விருப்பத்தை மதித்து அதை ஏற்றுக் கொண்டார்கள்.
தான் மிகவும் கஷ்டப்பட்டுத் தனது பெற்றோரிடம் மன்றாடி தன்னுடைய பெயரை மாற்றிக் கொண்டுப் பழைய பெயரை அடியோடு மறந்து, மறைத்து வைத்திருக்கும் இந்த நேரத்தில் அதை மறுபடியும் ஞாபகப்படுத்தும் விதமாக அந்தப் பெயரைச் சொல்லித் தன்னை விளித்த வண்ணமதியின் மேல் கடுங்கோபம் கொண்டாள் சஹஸ்ரா.
ஆனால் அவளது கோபத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல்,”என்ன? உன் பேர் அது தானே? எங்கம்மா வச்சப் பேர்! சங்குப்பூவழகி! அதைச் சொல்லித் தானே நான் உன்னைக் கூப்பிட்டேன். அதுக்கு ஏன் இப்படி கோபப்பட்ற?”என்று தன் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டுக் கேட்டாள் வண்ணமதி.
அது அவளை மேலும் கிண்டல் செய்வதைப் போல் இருக்க,“உன்னை…”என்று அவளிடம் செல்ல யத்தனித்த மகளை,
“சஹா! அமைதியாக இரு! அவ உன்னோட மாமா பொண்ணு! ரொம்ப நாள் கழிச்சு இன்னைக்குத் தான் நம்ம வீட்டுக்கு வந்திருக்கிறாங்க! அவ ஏதோ உன் கிட்ட ஜாலியாகப் பேசினா நீ அதை இப்படித் தான் சீரியஸா எடுத்துக்கிட்டுக் கத்துவியா?”எனக் கூறி அடக்கி விட்டு,
அவர்கள் மூவரிடமும்,”இவ இப்படி நடந்துக்கிட்டதுக்கு நான் உங்ககிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்”என்று சங்கடத்துடன் கூறினார் கஸ்தூரி.
“பரவாயில்லம்மா. அவ எங்களோட மருமக தானே? இவங்க மூனு பேரும் சின்ன வயசில் இருந்து பழகுறவங்க தானே? அதான், ஒருத்தருக்கு ஒருத்தர் சண்டைப் போட்டுக்கிறாங்க! நாங்க ஒன்னும் நினைக்கலை. விடுங்க”என்று அவரைச் சமாதானம் செய்தார் பால்ராஜ்.
அதில் தனது கோபம் குறையச் சஹஸ்ராவைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பை உதிர்த்தாள் வண்ணமதி.
ஆனால் தன்னவளின் வாடிய முகத்தைக் கண்டு அவளுக்காகப் பரிதாபப்பட்டான் மகிழம்பூவன்.
அதனால் அவளிடம் சென்று,”அக்காவுக்காக நான் உங்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன் சஹஸ்ரா”என்று அவளது போலிப் பெயரைச் சொல்லிப் பேசவும்,
அதில் அவளது கோபம் பனி போல் கரைந்து போனது.
ஆனாலும் தனது செருக்கை விட்டுத் தராமல்,”இட்ஸ் ஓகே மகிழன்”என்றாள் சஹஸ்ரா.
இதைக் கண்ட மற்றவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
மகிழம்பூவனின் வார்த்தைகளுக்குச் செவிமடுத்து விட்டாளே என்று சஹஸ்ராவை வியப்புடன் பார்த்தார்கள்.
தங்களுக்காக ஒதுக்கிக் கொடுத்த அறைக்குள் போய்த் தங்களைச் சுத்தப்படுத்திக் கொண்டு, உடை மாற்றி விட்டு வந்தனர் பால்ராஜ், வண்ணமதி மற்றும் மகிழம்பூவன்.
“சாப்பிடலாம் வாங்க”என அனைவரையும் டைனிங் டேபிளிற்கு வரவழைத்து தன் கையாலேயே உணவைப் பரிமாறினார் கஸ்தூரி.
உணவுண்டு முடித்ததும், தனக்கு வேலை இருப்பதாக காட்டிக் கொண்டு அறைக்குள் அடைந்து கொண்டாள் சஹஸ்ரா.
அதில் முகம் சுருங்கினாலும், அவளது சுபாவம் அது தான் என்று எண்ணிச் சமாதானம் அடைந்து கொண்டான் மகிழம்பூவன்.
அதற்குப் பிறகுத், தனது தமக்கையிடம்,”நீ அவ கூட ரொம்ப சண்டைப் போடாதக்கா!”என்று கேட்டுக் கொள்ள,
உடனே,”ஓஹோ! உன் வருங்கால மனைவியை நான் ஏதாவது சொன்னா, வம்பிழுத்தா உனக்குக் கஷ்டமா இருக்கா? சரிப்பா, நான் இனிமேல் அவளை எதுவும் சொல்லலை”என்று அவனிடம் கூற,
“அக்கா! நீ என்னைத் தப்பா எடுத்துக்காத”என்றவனைக் கையமர்த்தி,
“நான் எதுக்குத் தப்பா எடுத்துக்கப் போறேன்! அவ உன்னை எடுத்தெறிஞ்சுப் பேசும் போது எனக்குக் கோபம் வந்துருச்சு. அதான். இனிமேல் நான் பார்த்துக்கிறேன்டா”என அவனுக்கு வாக்களித்தாள் வண்ணமதி.
- தொடரும்
ஹீரோயினோட உண்மையான பேர் எப்படி இருக்கு டியர்ஸ்?