அவனின் அந்த தீர்க்கமான வார்த்தைகளைக் கேட்டுத் திடுக்கிட்டாலும், தங்களுக்குச் சிறு வயதிலேயே திருமணம் பேசி வைத்து இருந்தாலும் கூட, அந்தப் பெண்ணின் விருப்பம் இல்லாமல் அவள் தன்னைக் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்யக் கூடாது என்றவனின் உறுதியைக் கண்டுத் தன் வளர்ப்பு சோடை போகவில்லை என்றெண்ணிப் பெருமிதம் அடைந்தார் பால்ராஜ்.
தாங்கள் மூவரும் ஊருக்குச் சென்றதும் இதை ரமணன் மற்றும் கஸ்தூரியிடம் தெரிவிக்க விழைந்தார்.
நாட்கள் கடந்து விட பால்ராஜ், மகிழம்பூவன் மற்றும் வண்ணமதியும் ஊருக்குச் செல்லும் நாளிற்கு முந்தைய நாள் மதிய வேளையில் தனது மனைவியை அவளது தாய் வீட்டிற்குக் கூட்டிக் கொண்டு வந்திருந்தான் பூபாலன்.
அவர்களை வரவேற்றுக் குடிக்கத் தண்ணீர் அளித்து விட்டு,”செந்திலைக் கூட்டிட்டு வரலையா மாமா?”என்று தன் அக்கா மகனைப் பற்றி விசாரித்தான் மகிழம்பூவன்.
“மதி ஊருக்குக் கிளம்புறதுக்காகத் துணி எல்லாம் எடுத்து வைக்கிறதைப் பார்த்துட்டு அப்போவே அழுக ஆரம்பிச்சிட்டான். அதனால் எங்கப்பா அவனைக் கடைக்கு அழைச்சிட்டுப் போயிட்டார் மாப்பிள்ளை. அதான், அவனை இங்கே கூட்டிட்டு வர முடியலை”என்று பதிலளித்தான் பூபாலன்.
“அப்படியா மாப்பிள்ளை? பாவம் பிள்ளை”என்று தன் பேரனுக்காகப் பரிதாபப்பட்டார் பால்ராஜ்.
அவர்களது பேச்சு தன் பக்கம் திரும்பி விட்டால் குழந்தையை இப்படித் தவிக்க விட்டு விட்டு வரும் அளவிற்கு என்ன அவசியம்? என்று தன்னுடைய தந்தையும், தம்பியும் தன்னைத் திட்ட ஆரம்பித்து விடுவார்கள் என்ற பயத்தில் பேச்சை மாற்றும் விதமாக,”என்ன சாப்பாடு செஞ்சி வச்சிருக்கே மகிழு? நான் உன் கையால் சமைச்ச சாப்பாட்டை நான் ருசிச்சு எத்தனை நாளாச்சு?”என்று தம்பியிடம் கேட்டவாறே எழுந்து அடுக்களைக்குள் புகுந்து கொண்டாள் வண்ணமதி.
“சாம்பார் தான் வச்சேன்க்கா. அதுக்குத் தொட்டுக்க, மோர் மொளகா இருக்கு”என்றதும்,
“ஏதாவது கவுச்சி எடுத்துச் செஞ்சிருக்கலாம்ல?”என்றாலும் கூடத் தட்டில் சோற்றைப் போட்டுக் கொண்டு,
“ஏங்க! நீங்களும் சாப்பிட்றீங்களா?”எனத் தனது கணவனிடம் கேட்டாள் வண்ணமதி.
அதற்கு,”நான் இப்போ கிளம்பிடுவேன்லம்மா. அதனால் அங்கே போய் சாப்பிட்டுக்கிறேன்”என்றவனுக்குக் குடிக்க மோரைக் கொண்டு வந்து தந்தான் மகிழம்பூவன்.
அவனிடம் தெரிவித்து விட்டு அதை வாங்கிப் பருகியவனோ,”அப்போ நான் வீட்டுக்குக் கிளம்புறேன் மாமா, வர்றேன் மாப்பிள்ளை”என்றவனோ,
“மதி! நான் போயிட்டு வர்றேன்”என்று மனைவியிடமும் கூறி விட்டுப் புறப்பட்டான் பூபாலன்.
“சரிங்க” என்றவளோ, உணவுண்டு முடித்து விட்டுத் தன் கைகளைக் கழுவிக் கொண்டு வந்து,”அவங்களுக்கு ஏதாவது பரிசு கொண்டுப் போகலாம்ல? எதையாவது வாங்கி வச்சிருக்கீங்களா?”என்று மற்ற இருவரிடமும் வினவினாள் வண்ணமதி.
“ம்ஹூம். அப்படியே வாங்கிக் கொண்டுப் போனாலும், இந்தச் செலவெல்லாம் உங்களுக்கு எதுக்குன்னுச் சொல்லிடுவாங்களே உங்க மாமாவும், அத்தையும்! அதனாலேயே எதுவும் வாங்கிட்டுப் போற யோசனை இல்லம்மா”என்றுரைத்தார் பால்ராஜ்.
அதைக் கேட்டதும் தனது அத்தை, மாமாவை எண்ணிப் பெருமை அடைந்தவளது முகம் விகசித்தது.
“ஆமாப்பா. அவங்க எப்பவுமே அப்படித் தானே? என் கல்யாணத்தில் கூட எந்தக் குறையும் இல்லாமல் எல்லா முறையையும் செஞ்சாங்களே! ஆனாலும் ஏதாவது வாங்கிட்டுப் போவோம். இல்லைன்னா வீட்டிலிருந்து கூடச் செஞ்சி எடுத்துட்டுப் போகலாமா?”என்று கேட்டாள் வண்ணமதி.
“அதெப்படி முடியும்க்கா? நாம நாளைக்குக் காலையில் நாலு மணிக்கே எழுந்து கிளம்பனும். அப்பறம் எப்படி?”என்று தமக்கையிடம் வினவினான் மகிழம்பூவன்.
“ஏதாவது ஈஸியா செய்ற மாதிரி இருக்கிற பலகாரம் எதையாவது செஞ்சி எடுத்துட்டுப் போவோம். அதுவும் ஒரு நாள் வச்சி சாப்பிடறா மாதிரி இருக்கனும்”என்று கூறியவளோ,
சிறிது நேரம் யோசித்து விட்டு,”ஆஹ்! ஞாபகம் வந்துடுச்சு. நெய் பணியாரம் சுட்டு எடுத்துட்டுப் போகலாம். இங்கே மாவு இருக்கு தானே?”என்றாள் வண்ணமதி.
“இருக்குக்கா”எனப் பதிலளித்தான் இளையவன்.
“அப்போ நான் இப்போவே அதைச் செஞ்சித் தூக்குச் சட்டியில் போட்டுப் பத்திரப்படுத்தி வச்சிடறேன்”என்றுரைத்து விட்டு அதைச் செய்வதற்காக சமையல் அறைக்குள் சென்றவளைப் பின் தொடர்ந்து போய் தாங்களும் அவளுக்குத் தேவையான உதவியைப் பால்ராஜூம், மகிழம்பூவனும் செய்தார்கள்.
வேலை முடிந்ததும் தேநீரைத் தயாரித்து மூவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டே அதைப் பருகி முடித்தனர்.
“நீங்க போய்த் தூங்குங்க. நான் நம்மப் பண்ணைக்குப் போய்ப் பார்த்துட்டு வந்துட்றேன்”என்று தெரிவித்து எழுந்து சென்று விட்டான் மகிழம்பூவன்.
அவர்களுக்குச் சொந்தமான மாட்டுப் பண்ணையோ அவர்களது தெருவிற்குப், பக்கத்துத் தெருவில் இருக்கிறது. அதிலிருந்து தான், இவர்களுக்கு அதிகமான இலாபம் கிடைக்கும்.
ஆனால் தங்களது வீட்டிற்கு அருகில் இருந்த இடத்தில் தாங்கள் முதன் முதலில் வாங்கிய மாடுகளின் சந்ததிகளை வைத்து வளர்த்துக் கொண்டிருப்பதால் தங்களால் விரிவுபடுத்தப்பட்டப் பண்ணையை அடுத்த தெருவில் இடம் வாங்கி வைத்துள்ளனர்.
அங்கேயிருந்து கிடைக்கும் பாலைத் தான் அந்தக் கிராம மக்கள் அனைவரும் வாங்கிச் செல்வர்.
அதனாலேயே நாள் தவறாமல் அங்கே சென்று வேலைகள் சரியாக நடக்கிறதா? என்று சோதித்து விட்டு வருவான் மகிழம்பூவன்.
இப்போதும் கூடத் தாங்கள் மூவரும் ஊருக்குக் கிளம்புவதால் அதற்கு முந்தைய நாள் அங்கே சென்று வேலையாட்களிடம் சில அறிவுரைகளை வழங்க எண்ணித் தனது இருசக்கர வாகனத்தில் அந்தப் பண்ணையை அடைந்து உள்ளே சென்றான்.
அவனைப் பார்த்ததும் மரியாதை நிமித்தமாக தொழிலாளிகள் அனைவரும் அவனுக்கு வணக்கம் வைத்தனர்.
அதை தலையசைத்துப் பெற்றுக் கொண்டு அலுவலகத்திற்குள் நுழைந்து நாற்காலியில் அமர்ந்து விட்டு, அங்கே இருந்த பண்ணையின் மேலாளரிடம்,”வளவன்! நான் நாளைக்குக் காலையிலேயே கிளம்பி ஊருக்குப் போறேன்னு உங்களுக்குத் தெரியும் தானே?”என்று கேட்டான் மகிழம்பூவன்.
“தெரியும்ங்க ஐயா”என்றார் பவ்யமாக.
“அப்போ நான் திரும்ப வர்ற வரைக்கும் இங்கே எல்லாமே எப்பவும் போல ஒழுங்காக நடக்கனும்! நான் திரும்பி வந்ததும் வேலை சரிவர நடக்கலைன்னு என் காதுக்கு ஏதாவது சேதி வந்துச்சுன்னா நான் என்னப் பண்ணுவேன்னு உங்களுக்குத் தெரியும் தானே?”என்றவனின் கண்களில் வெளிப்பட்ட தீட்சண்யத்தில் உடல் நடுங்க,
“நல்லா தெரியும் ஐயா. வேலை தடைபடுறதுக்கு வாய்ப்பே இல்லாமல் நாங்க எல்லாரும் நல்லா பார்த்துக்குவோம்!”எனப் பதிலளித்தார் வளவன்.
“ம்ஹ்ம். நல்லது. அப்பறம் மாடுங்களுக்கு எதுவும் ஆகக் கூடாது! அதுங்க தான் நம்ம எல்லாருக்கும் படியளக்குற சாமிங்க! அதுங்களுக்கு ஏதாவது நோய் வந்தா கண்டிப்பாக எனக்குத் தாக்கல் சொல்லிடனும்”என்று அவருக்குக் கட்டளையிட்டான் மகிழம்பூவன்.
“சரிங்க ஐயா”என்றதும்,
மற்றக் கணக்கு, வழக்குகளைக் கவனமாகப் பார்த்து முடித்து விட்டு மேற்படி முக்கிய அறிவுரைகளை வழங்கிய பின்னர் தன் வீட்டிற்குச் சென்று சேர்ந்த நேரம், அவனது தந்தையும் தமக்கையும் அவரவர் அறையில் உறங்கி விட்டதை அவதானித்து விட்டுச் சத்தம் எழுப்பாமல் தனது அறைக்கு வந்து கட்டிலில் படுத்துக் கொண்டான்.
அதிகாலையிலேயே எழுந்து மூவரும் கிளம்பி உடைமைகளை எடுத்துக் கொண்டு ரயிலேறி விட்டதை ரமணனனிடம் தெரிவித்து விட,
அவரோ தனது அன்றைய அலுவல்கள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு அவர்களது வருகைக்காக காத்திருந்தார்.
அதே சமயம், படுக்கையில் இருந்து எழுந்து பல் துவக்கி விட்டுத் தனது இரவு உடையிலேயே வந்து சோபாவில் அமர்ந்த சஹஸ்ராவோ,”மிசஸ். கீதா. எனக்கொரு காபி கொண்டு வாங்க”என்று தங்கள் வீட்டில் வேலை செய்யும் முதன்மை சமையல் ஆளுக்குக் குரல் கொடுத்தாள்.
“என்ன சீக்கிரம் எழுந்து வந்துட்ட”என்றார் கஸ்தூரி.
“ஆமாம்மா. இன்னைக்கு ஆஃபீஸூக்குச் சீக்கிரம் போகனும். நிறைய வேலை இருக்கு. அதான்”என்று அவரிடம் கூறினாள் சஹஸ்ரா.
“எவ்வளவு வேலை இருந்தாலும் நீ இன்னைக்கு ஆஃபீஸூக்குப் போக கூடாது சஹா!”என்று மகளிடம் கறாராக உரைத்தார் ரமணன்.
“ஊஃப்! ஏன்ப்பா?”என்று கேட்டு விட்டுத் தன்னிட வேலையாள் கொண்டு வந்து கொடுத்த காபிக் கோப்பையை வாயில் வைத்து உறிஞ்சினாள் சஹஸ்ரா.
“உங்க மாமாவும், அவர் பிள்ளைங்களும் வந்துட்டு இருக்காங்க. மதியம் வந்து சேர்ந்துருவாங்க. அதான்”என்றதுமே,
“அவங்க வர்றாங்கன்றதுக்காக நான் ஏன் ஆஃபீஸூக்குப் போகாமல் இருக்கனும்ப்பா?”என்றவளோ, கையிலிருந்த கோப்பையைக் கீழே வைத்து விட,
“இப்போ எதுக்குக் காபியைக் குடிக்காமல் கீழே வைக்கிற?”என்று அவளிடம் கேட்டார் கஸ்தூரி.
“எனக்குப் பிடிக்கலம்மா”எனப் பதிலளித்தாள் சஹஸ்ரா.
“வேஸ்ட் பண்ணாம ஒழுங்காக அதை எடுத்துக் குடி”என்று அவளுக்கு அறிவுறுத்திய தாயிடம்,
“பிடிக்கலைன்னா விடுங்கம்மா”என்றவளைத் தீர்க்கமாகப் பார்த்து,
“காபியை எடுத்துக் குடிச்சிட்டுக், குளிச்சி, ரெடியாகி வந்து பிரேக்ஃபாஸ்ட் சாப்பிடு. இன்னைக்கு ஃபுல்லா நீ வீட்ல தான் இருக்கனும். நீ எங்கிட்ட மத்த விஷயங்களுக்காக சலுகை வாங்கி இருக்கிற தானே? இப்போ அதுக்காக நான் பிரதி உபகாரமாக கேட்கிற விஷயம் இது தான்! அப்பறம் உன் இஷ்டம் சஹா”என்று மகளிடம் எதைப் பேசினாள் வழிக்கு வருவாள் என்பதை நன்றாக அறிந்திருந்ததால் அந்த வித்தையைச் சரியான நேரத்தில் உபயோகிக்கவும் செய்திருந்தார் ரமணன்.
அதில் வேக மூச்சுக்களை வெளியிட்டு,”ஓகேப்பா”என்றவள் காபிக் கோப்பையில் இருந்த ஆறிப் போன காபியைக் கடகடவென குடித்து விட்ட பிறகே அங்கேயிருந்து போனாள் சஹஸ்ரா.
“இவ இப்போவே இப்படி அவங்கப் பத்தின விஷயத்தை எடுத்தாலே எடுத்தெறிஞ்சுப் பேசிட்டுப் போறாளே! அவங்க வந்ததுக்கு அப்பறம் எப்படி நடந்துக்கப் போறாளோன்னு எனக்குப் பதறுதுங்க!”என்று கலக்கத்துடன் கூறிய மனைவிக்கு,
“அதெல்லாம் ஒழுங்காக தான் நடந்துக்குவா! என்ன தான் நம்மப் பொண்ணு இப்படி தாம், தூம்ன்னுக் குதிச்சாலும் எந்தச் சூழ்நிலையில், எப்படி நடக்கனும்னு அவளுக்கு நல்லா தெரியும்! அதனால் நீ அவளை நினைச்சுக் கவலைப்படாதம்மா”என்று கூறி நம்பிக்கை அளித்தார் ரமணன்.
“சரிங்க”என்றவரோ, பால்ராஜ் மற்றும் அவரது பிள்ளைகளுக்குப் பிடித்தமான உணவுகளைத் தங்கள் சமையல்காரர்களிடம் சொல்லிச் சமையல் வேலையை ஆரம்பிக்குமாறு கட்டளையிட்டு அங்கேயே நின்று அதை மேற்பார்வை செய்யத் தொடங்கினார் கஸ்தூரி.
அதே சமயம் தனது தங்கையின் கணவன் மற்றும் அவர்களது பிள்ளைகளுக்குத் தேவையான அறைகளைத் தயார்படுத்துமாறு வேலையாட்களுக்கு அறிவுறுத்தி விட்டு அவர்களின் வருகைக்காக காத்திருந்தார் ரமணன்.
தந்தையின் அறிவுரைப்படி குளித்து, உடை மாற்றி விட்டுக் காலை உணவை உண்டு முடித்து விட்டுத் தனது காரியதரிசி மோனிகாவிடம், தன்னால் இன்று அலுவலகத்திற்கு வர முடியாது என்ற தகவலைத் தெரிவித்து, தன்னுடைய வேலைப் பற்றிய விவரங்களை அடுத்த நாளுக்கு மாற்றி வைக்குமாறு உத்தரவிட்டாள் சஹஸ்ரா.
- தொடரும்

Last edited: