Nice update ma
சிஸ் இப்பதான் அவன் ஷாலினிய வுட்டறலாம்னு நெனைச்சானாம். அதுவும் அவனோட திருகு தளம் சாலாக்கு தெரியறதுக்கு முன்னாடியே.நான் நினைத்த மாதிரி பிரகாஷ் ஷாலினியை exploit பண்ணலை. Fine. So ஷாலினிக்கு பாதிக்கப்பட்டவள் status கிடையாது. அவ தான் இவனோட statement படி முதலில் இந்த முறையற்ற செயலுக்கு தூண்டுகோல்.
இது எனக்கு இன்னும் ரொம்ப பிடிச்சுருக்கு.
ஏன்னா அவ கொஞ்சம் நல்லவளா இருந்து இவனுக்காக திருந்தினா கூட இவனுக்கு நிம்மதி கிடைச்சுடும். இப்ப அப்படியில்லை. இவனுக்கு நிம்மதி கண்டிப்பா கிடைக்காது. இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு.
அவ சரியில்லைன்னு தெரிஞ்ச ஒடனே விசாலாட்சி கிட்ட சொல்லிதானே இருக்கணும்ன்னு கேள்வி கேட்க நினச்சேன். ஆனால் கதை படிக்கப் படிக்க தான் பிரகாஷ் ஒத்தை கல்யாணத்தைப் பண்ணி stress -சால தவிக்கறது புரியுது. விசாலாட்சி இவனோட stress-ஐ தணிக்கப்போய் தானே ரெண்டு பிள்ளைங்க பொறந்துச்சு. அதையெல்லாம் பார்க்கறது கஷ்டம்னா பிள்ளைங்களே பெத்துகிட்டு இருக்க கூடாது. அதுக்கு தீர்வு ஒரு movie-ல காமிக்கறது போல 'SIFRA'-மாதிரி ரோபோவோட தான் உறவு வெச்சுக்கணும்.
இந்த வாந்தி பேதி எல்லாம் ஒருவருக்கு வந்தால் அது தனியாக அதுவே வியாதி இல்லை அது அவங்களுக்கு வந்துருக்குற வியாதியோட வெளிப்பாடுன்னு சொல்லுவாங்க. அப்படித் தன் இருக்கு இப்ப பிரகாஷ் பேசுறது. ஏதோ அவனோட மன அழுக்கையெல்லாம் வாந்தி எடுத்துகிட்டு இருக்கான்.
சொல்லறதுக்கில்லை பிரகாஷோட stress buster ஷாலினி ஏதாவது வீடியோ எடுத்து கூட வெச்சு இருக்க வாய்ப்பிருக்கு.
டேய் பிரகாஷ் உடனே அந்த வீடியோவை உனக்கு அவ சும்மா குடுத்துடுவான்னு நினைக்காத. Performance ஒன்னோடதா இருந்தாலும் படம் பிடிக்க effort போட்டது அவ. So அதை நீ அவ கிட்ட விலைக்கு தான் வாங்க முடியும். வாங்கி வெச்சு கண்ணு குளிர பாரு. நல்லா stress குறையும்.