Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

உன்னில் சிக்க வைக்கிற part II -01

Advertisement

lakshu

Well-known member
Member
உன்னில் சிக்க வைக்கிற II -01

சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில்... மாலை ஆறு மணிக்கு..

பயணிகளின் கவனத்திற்கு பெண்குரல் ஒலித்துக்கொண்டிருக்க... பயனிகளை அழைத்துக்கொள்ள காத்திருப்போரும்... ஊருக்கு வழியனுப்ப வந்தவர்களுக்கும் நின்றிருந்தன... கூட்ட நெரிசல் அதிகமாக இருந்த அந்த ப்ளாட்பார்மில் பலதரப்பட்ட மொழிகளில் மக்கள் பேசிக்கொண்டிருந்தன..

பாட்டி...பாட்டி இரண்டரை வயது குழந்தை ரேணுகாவின் நெஞ்சில் சாய்ந்து தேம்பி தேம்பி அழுதுக்கொண்டிருந்தான்..

அவன் தலையை தடவி அழாதடா பப்பு... மாமா இன்னும் த்ரி டேஸ்ல அங்க வருவேனாம்..
நாம பீச்க்கு போலாமா..சிவா அவனிடம் கூற..

எதையும் காதில் வாங்காமல் அவனின் பாட்டி ரேனுகாவை தோளில் முகத்தை புதைத்து அழுகை தொடர்ந்தான்...

லைட் ப்ளூ டேனிம் ஷர்ட், ஜீன்ஸ் போட்டு தன் கட்டை விரலை முகவாட்டில் வைத்தபடி தன் பையன் செய்யும் கச்சேரியை பார்த்துக்கொண்டிருந்தான் இனியன்...

என் ராஜா, என் கண்ணு அழாதடா பாட்டிக் கூடவே நீயிருப்பா.

ஒரு கண்ணை திறந்து தன் தகப்பனை பார்த்து சிரித்துவிட்டு மறுபடியும் அழுதான்..
மாமா எல்லாம் உங்களால தான் பச்சபுள்ளையை இப்படி அழ வைக்கிறீங்க.. எதுக்கு அவனை கூட்டிட்டு போறீங்க.. சிவா இனியனை பார்த்து கேட்டான்..

இங்க பாரு சக்தி நிறைமாதமா இருக்கா... எப்படி அத்தையை கூட்டிட்டு போக முடியும்.. கொஞ்ச நாளைக்குதான், அங்கேயே ஸ்கூல் சேர்த்திருக்கேன்... பார்க்கனும் நினைச்சா ப்ளைட் பிடிச்சி வாங்கடா... இவனுக்காக நான் கலக்டர் வேலையை விட்டு இங்கேயே உட்காரமுடியும்..

டேய் அழுகையை நிறுத்துடா.. தன் மகனை அதட்டி சொல்ல.. கப்பென்று வாயை மூடினான் பப்பு.

சின்னபிள்ள கூட அழுகையை நிறுத்திடுச்சு... நீயேன்டா இப்படியிருக்க தன் தோளில் சாய்ந்து தேம்பிக்கொண்டிருந்த மோகனை பார்த்துக் கேட்டான் இனியன்..

மாமா.. இறுக்க கட்டிப்பிடித்தான் மோகன்..

ப்ளஸ் ஒண்ணு படிக்கிற.. உன்னை டாக்டருக்கு படிக்கவைக்கனும் தேனு ஆசைப்பட்டா மோகன்... லீவ்ல மாமாகிட்ட வாடா.. புரிஞ்சிக்கோ.. நீயே மாமாவ புரிஞ்சிக்கல..
ஸாரி மாமா... தினமும் போன்ல் பேசனும் நான் வையிட் பண்ணிட்டேயிருப்பேன்..
ஏன்டா இன்ஸ்டால கேர்ஸ் ப்ரண்டே இல்லையா.. மாமாகிட்ட பேச நேரம் இருக்கா..

போங்க.. மாமா, நைட் சாப்பிட்டாம தூங்க கூடாது.. தினமும் எக்ஸ்ர்சைஸ் செய்யனும்..
ம்ம்.. என்று தலையை ஆட்டினான்... இன்னும் மோகனையே பார்த்தால் அழகை வந்துவிடும் போல் இருந்தது இனியனுக்கு..

சரிடா நீ ஒழுங்கா படிக்கனும்.. மாமா வரட்டா. அவன் உச்சதலையில் முத்தமிட்டான் இனியன்..

இதை பார்த்த பப்புக்கு பொறாமை வந்துவிட்டது, பாட்டியிடமிருந்து தந் தந்தையிடம் தாவினான்.. மோகன் போ.. எங்கப்பா என்று கட்டிக்கொண்டான் அந்த சின்னவாண்டு..
போடா எங்க மாமா.. மோகனும் இனியனை பப்புவையும் சேர்த்து அணைத்துக்கொண்டான்..

எல்லாரையும் சமாதானம் செய்துவிட்டு கடைசியில் தன் அத்தை ரேனுவிடம் வந்தான் இனியன்..

கண்கள் கலங்க இனியனை பார்த்தாள் ரேனு... தேனு நம்மளை விட்டு போய் இரண்டு வருஷம் ஆகபோது.. நீ இன்னும் ஒத்தையில இருக்க இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோடா.. இப்படி தனிமரமா பார்க்கவா நான் உயிரோட இருக்கேன்..

டார்லிங்... எத்தனை முறை சொல்லறது.. நான் உயிரோட இருக்கேன்னா என் தேனும் உயிரோட தான் இருக்கா.. எனக்கு நம்பிக்கையிருக்கு அவ என்கிட்ட வருவா.. என் மூச்சே அவதான் டார்லிங்..

தன் பெண்ணை இழந்து மனமுடைந்து இனியனுக்காக எல்லாவற்றையும் மறந்து அவள் பேரன் பப்புதான் தனக்கு எல்லாமே நினைத்தாள் ரேனு..

அனைவருக்கும் டாட்டாவை காட்டி தன் மகனை தூக்கிக்கொண்டு ரயில் ஏறினான் இனியன் தமிழ்நாட்டைவிட்டே அடுத்த மாநிலத்திற்கு...

இரவு தன் மகனுக்கு பாலை கொடுத்துவிட்டு தன் மடியில் படுக்க வைத்தான்...
ப்பா...ப்பா இனியனை அழைத்தான்.

ம்ம்..

அம்மா வேணும், ரயில் ஏறியவுடன் சுற்றியிருப்பதை நடந்து சென்று பார்த்தான் பப்பு, பக்கத்து கம்பார்ட் மெட்டில் தாய் குழந்தையிடம் இருப்பதை, அவர்களிடம் விளையாடுவதை, அதை நினைத்துதான் கேட்டான்.

வழக்கமாக சொல்லு பொய்தான், சரளமாக இனியன் வாயிலிருந்து வந்தது..
அம்மாதானே, படிக்க போயிருக்காங்க... சீக்கிரம் வந்திருவாங்க என் லட்டுவ பார்க்க..

அவனை தூக்கி கண்ணத்தில் முத்தமிட்டான் இனியன், நீ தூங்குறீயா.. டைமாயிடுச்சு.அவனை தூக்கி தன் தோளில் போட்டு தட்டினான்.

அந்த இரவில், காற்றில் அவன் கேசம் கலைய அவனுடனே வரும் நிலவை பார்த்துக் கொண்டேயிருந்தான்.. அவன் உதடுகள் தேனு என்று உச்சரிக்க..

எங்கடி போனா இந்த மாமாவ விட்டு, உயிர்போகுதுடி நீயில்லாம நம்ம பையனுக்காக தான் இருக்கேன்... எல்லோரும் சொல்லுறாங்க நீ செத்துட்டேன்னு ஆனா நீ சாகலன்னு எனக்கு மட்டும்தான்டி தெரியும்... இந்த மாமாவிட்டு எப்படி இருக்க... உன் பையன் பிரஜீன் அம்மா வேனும் அம்மா வேனும் கேட்க சொல்ல தொலைஞ்சி போறேன்டி..

கனாவிலே முளைக்கிறாய் இமை அனைக்கையில்
நான் வினா வினா வளைகிறேன்
உனை நினைக்கையில் ஏ…ன்

தேனுவை நினைத்து மூடிய கண்களிலிருந்து கண்ணீர் உருண்டு, அவன் கண்ணங்களில் வர, தன் பிஞ்சு விரலால் ஒரு பக்கம் கண்ணத்தை துடைத்தான் பப்பு. மறுபக்க கண்ணத்தை பெரிய விரல்கள் துடைக்க கண்களை திறந்து பார்த்தான் இனியன்..

நீயாடா... லவ்வர் மாதிரி என்பின்னாடியே வருவீயாடா அசோக்..

ஏன்டா என்னை ஏமாத்திட்டு போயிடலாம் நினைச்சியா... தேனு எப்ப ஊருக்கு போனாலும் சொல்லும் என் மாமாவ பார்த்துக்கோ அண்ணான்னு.. என் தங்கச்சிக்கு வாக்கு கொடுத்திருக்கேன்டா...

மாமான்னு பப்பு கட்டிக்கொள்ள..

என் செல்லம்.. சாப்பிட்டியா பப்பு.

ம்ம் என்று தலையை ஆட்டினான் பப்பு.

அவனை பார்த்து முறைத்துக்கொண்டிருந்தான் இனியன்... எதுக்குடா முறைக்கிற..
பின்ன சமீ இப்பதான் குழந்தை பெத்துட்டு இருக்கு, தனியா விட்டு வருவீயாடா..

எங்கடா விட்டேன் மாமனார் வீட்டுலதானே... எல்லாம் வீக் என்ட்ல போய் பார்த்துப்பேன்.. விசாகபட்டினம் போய் ஜாயின் பண்ண போற சொல்லு... அங்க பொண்ணுங்க செமயா இருப்பாங்களாம் மச்சி... ஆந்திரா இல்ல காரமா மப்பு மந்தாரமா இருப்பாங்களாம்..

இனியனின் முகம் பிரகாசிக்க அப்படியா மச்சான்..

இப்ப மட்டும் மூஞ்சில ஆயிரம் பல்பு எரியுது... ஏன்டா என் தங்கச்சிக்கு துரோகம் செய்யற...

ஆமாம் பெரிய தங்கச்சி டேய் என்னை தவிக்கவிட்டு போயிருக்காடா... எங்கியோயிருந்து கண்ணாமூச்சி ஆட்டம் ஆடுறா..

இனியனின் முகத்தை திருப்பி, ஏன்டா பொண்டாட்டி இல்லாம சோகமா தாடி வச்சிட்டு இருக்காம... இப்படி இரண்டு வருஷத்தில ரொம்ப அழகா இருக்க... பாடிய அப்படி மெயின்டைன் செய்யற.. உனக்கு ஃபீலிங்கே இல்லடா தேனுவை பற்றி..

அவளுக்காக தான்டா அசோக் இப்படி இருக்கேன்... என்னை சைட் அடிப்பா பாரு... மாமனை பார்த்தவுடனே மயங்கி விழுந்துடனும்... அதெல்லாம் உனக்கு புரியாது நீ சின்ன பையன்..

யாரு நானா..

இரண்டு பிள்ளைக்கு தகப்பன்டா..

தேனுமட்டும் கிடைக்கட்டும்... புதுசா ஹனிமூன்தான்.. தேனுகிட்ட சொல்லுவேன் இந்த அசோக் இரண்டு பிள்ளையை பெத்துட்டு பயங்கறமா சீன் போடுறான்னு...

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பப்பு தன் தலையில் அடித்துக்கொண்டான்..

ஏன்டா இனியா.. உன் பையன் நம்ம பேசறதை கேட்டு தலையில் அடிச்சிக்கிறான்.. புரிஞ்சிருக்குமோ..

இருக்கலாம்...

இருவரும் இரவில் பேசியபடி தூங்கிபோனார்கள். மறுநாள் காலை விசாகப்பட்டினம் ரெயில்வே ஜங்ஷனில் நிற்க..

மூவரும் இறங்கினார்கள்...

இனியன் ஏற்பாடு செய்த கார் காத்துக்கொண்டிருக்க, அதிலேறி அனகாபள்ளிக்கு சென்றார்கள்..

அனகாபள்ளி மாவட்டக் கலெக்டர்தான் நம்ம இனியன்... 70 சதவீதம் விவசாயத்தை கொண்ட மாவட்டம் தான் இந்த அனகாபள்ளி.. அங்கே கார்மெட்ஸ் ஆரம்பிக்க தான் அசோக் இனியனுடன் வந்திருப்பது.
.......

தும்மபாலா, இனியன் தங்கியிருக்கும் இடம்... அனகாபள்ளி சிட்டியின் வெளியே இருக்கும் பெரிய கிராமம்..சுற்றியிருக்கும் பச்சைபசேல் என்ற வயல்களும், நடுவில் அங்காங்கே விற்றிருக்கும் பங்களாவும்... பெரிய பணக்கார குடியிருக்கும் இடம்போல் காட்சியளித்தது..
அந்த குட்டி பங்களாவிற்குள் கார் நுழைய, மச்சான் சூப்பரா இருக்குடா இடம்... போலிஷனே இல்ல.. சுத்தமான காற்றை சுவாசிக்கிறோம்டா..

ம்ம்... இங்க மோஸ்ட்லி தமிழ் மக்கள் இருக்காங்க அசோக்... அதனால நம்ம ஊர் சமையல் சமைக்க ஆளுங்க கிடைப்பாங்க..

வீட்டை சுற்றி தென்னை மாமரம், சூழ்ந்திருக்க... ஒருபக்கம் அடுத்த பெரியவீட்டை ஒட்டியிருந்தது.. இரண்டு வீட்டிற்கும் பொதுவான காம்பவுன்ட் தான்..
அதை பார்த்த அசோக் கண்கள் விரிய, மச்சான் பக்கத்து வீடு ரொம்ப பெரிசு போல... அவங்களோடதுதானா இந்த வீடு..

ஆமாம் என்று தலையை ஆட்டினான்..

ரேனுகா அத்தையோட மாமியாருக்கு தூரத்து சொந்தமாம் இவங்க அதனால இங்க தங்கசொல்லி அத்தை சொன்னாங்கடா..
....
புதிய ஊர் இவர்கள் செட்டில் ஆக ஒரு வாரம் ஆனது...

இன்று மாலை பஸ் ஸ்டான்ட் இனியன் மற்றும் இனியனின் பி.ஏ. ராபர்ட் யாரையோ எதிர்பார்த்து நின்றிருந்தார்கள்..

அங்கு வந்து சேர்ந்தான் அசோக்... மச்சான் எதுக்குடா வர சொன்ன.. ஏன் பஸ் ஸ்டான்ட்ல நிற்குற.. இவன் யாரு என்பது போல் பக்கத்தில் நிற்கும் ராபர்டை பார்த்தான்.
இது ராபர்ட் என்னுடைய பி.ஏ.. அவனுக்கு உதவி செய்யதான்டா வரச்சொன்னே..
என்ன..

நாலுவருஷமா ஒரு பொண்ணை லவ் பண்ணுறானா மச்சான்.. மடியில போல ஹெல்ப் கேட்கிறான்.. பாவம்டா அசோக்..

டேய் இனியா.. நம்ம என்ன இருபது வயசு பையனாடா.. இருபதெட்டு ஆயிடுச்சுடா.. லவ் பண்ண ஹெல்ப் செய்ய போறானாம்... அவன் ஆளுக்கு லவ் லட்டர் எடுத்துட்டு போய் கொடுக்க போறீயா..

ஸார் நானே பார்த்துக்கிறேன் ராபர்ட் சொல்ல

ப்ச்.. அதெல்லாம் ஒண்ணுமில்ல.. நீ சும்மாயிரு ராபர்டு நாங்க உதவி செய்யறோம்.. பொண்ணு யாருன்னு சொல்லு..

ஸார் அதோ அந்த பஸ்லே ஏறுதே அந்த பொண்ணுதான் ஸார் என்று பச்சை கலர் சுடி அணிந்த பெண்ணை ராபர்ட் காட்ட...

அவளை பார்த்த இனியன்.. பக்கத்தில் ஒட்டி வந்த பஸ்ஸை பார்த்து மச்சான் இந்த பஸ்ல ஏறு என்று அசோக்கின் கையை பிடித்து ஏற்றினான்...

ஸார் இந்த பஸ் இல்ல பக்கத்து பஸ் என்று ராபர்ட் கத்தி சொல்ல... காதில் வாங்காமல் பஸ்ஸில் ஏறி சென்றார்கள் இனியனும், அசோக்கும்..

கூட்ட நெரிசலில் ஸ்டான்டிங்கில் நின்றார்கள்... அசோக் தள்ளி விடுடா என்று மெதுவாக இனியன் சொல்ல..

மாட்டேன், என் தேனு தங்கச்சிக்கு துரோகம் செய்ய மாட்டேன் போடா..

என் முன்னாடியிருக்க பொண்ணு செம பிகராயிருக்கும் போல பேக் எப்படி ஷேப்பாயிருக்கு இந்த மயில் பச்சைகலர் சாரியில... ப்ளீஸ்டா..

அவனை திட்டிக்கொண்டே தள்ளிவிட்டான் அசோக்.. அப்போது ட்ரைவர் சடன் பிரேக் போட அவள் முதுகில் மேல் படர்ந்தான் அவன் கைகள் அவளின் இடுப்பை
வளைத்துக்கொண்டது...

அவனை திரும்பி பார்த்த அந்த பெண் இதழ்களோ கருவாயன் என்று சொல்ல..
இருவரும் திகைப்பாக நின்றார்கள்..
------என்னில் சிக்க வைக்கிற
 
Nirmala vandhachu ???
Best wishes for your new story ma ???
 
Thenuku enna achi .Ava second baby pregnant nu story mudichinga...apa anda baby enga....authority iniyanum ,ashokum marave Ila...apadiye irukanga...best wishes
 
Top