Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

மஞ்சள் வெயில் மாலையிலே!-8

Advertisement

praveenraj

Well-known member
Member
மதிய நேரத்தில் தனக்கிருந்த வகுப்பை முடித்த நந்தனா ஓய்வெடுக்க வேண்டி தன்னுடைய ஸ்டாப் ரூமை நோக்கிச் சென்றார். அவர் பணிபுரிவதோ மும்பையில் இருக்கும் ஒரு பிரபலமான கல்வி நிறுவனம். மிகப் பெரிய வளாகத்தில் ப்ரைமரி தொடங்கி ஹையர் செகண்டரி வரை மூன்று பிளாக்காக ஒரு புறமும் கலை தொடங்கி மருத்துவம் பொறியியல் என்று உயர் கல்வி நிறுவனங்கள் மறுபுறமாகவும் விரிந்திருக்கும் அந்த வளாகத்தில் பத்தாம் வகுப்புக்கு உயிரியல்(விலங்கியல்) பாடத்தை முடித்தவர் செல்கையில் அவருடைய அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
"அண்ணி க்ளாஸா?" என்று யோசிக்கும் படியான ஒரு சுமைலி பதிவிட்டிருந்தான் தன்வீர். பள்ளி முடிந்திருக்க மாணவர்கள் எல்லோரும் வீட்டிற்குச் செல்ல வெளியேறிக்கொண்டிருந்தனர். அவனுக்கு டயல் செய்த நந்து,
"க்ளாஸ் முடிஞ்சது தனு. நான் இன்னும் அரை மணிநேரம் இங்க தான் இருப்பேன். என்ன விஷயம்?"
"சும்மா இந்தப் பக்கமா வந்தேன். சரி அப்படியே நம்ம அண்ணி ஸ்கூலை விசிட் அடிக்கலாம்னு நெனச்சேன். அடிக்கலாமா?" என்று விழுந்த வார்த்தைகளை யாரேனும் கேட்க நேர்ந்தால் அவனை அசிஸ்டன்ட் கமிஷ்னர் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். கல்லூரி படிக்கும் மாணவனைப் போல் கேசுவலாக வார்த்தைகள் விழுந்தது.
"அதென்ன தனு வாரம் ஒரு நாள் உனக்கு என் ஸ்கூல் பக்கம் டூட்டி போடுறாங்க போல?" என்று கிண்டலாக நந்து வினவினாலும் தன்வீரை நினைக்கையில் அவருக்கு மிகவும் பெருமையாக இருந்தது. பதினாறு வயதில் முதன்முதலில் தான் சந்தித்த தன்வீருக்கும் இப்போது இருக்கும் இந்த தன்வீருக்கும் குணத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லையே! ரன்வீருக்கும் நந்தனாவுக்கும் இடையிலேயான காதலை அவர்கள் குடும்பத்தில் முதன்முதலில் அறிந்துகொண்ட பெருமை தன்வீருக்கு தானே இருக்கு. பார்த்த முதல் சந்திப்பில் தன்னை அண்ணி என்று விளித்தவன் ஆயிற்றே. இந்த பனிரெண்டு வருடங்களில் அவனுடைய வளர்ச்சியை மிக அருகில் இருந்து பார்க்கிறார் அல்லவே!
"அதை நீங்க என் கமிஷ்னர் கிட்டத் தான் கேக்கணும். ஓகே ரெடியா இருங்க நாம வெளிய சாப்பிட போலாம். உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்..." என்ற இறுதி வார்த்தை மட்டும் சீரியசாக விழுந்தது.
"நீயும் பல முறை என்கிட்ட இதைப் பத்திப் பேசிட்டே. நானும் என் முடிவைச் சொல்லிட்டேன். அதைத் தவிர என்ன வேணுனாலும் பேசலாம். இல்லைனா நீ வராத... சாரி" என்று நந்துவும் சீரியசாக பதிலளிக்க,
"அப்போ என் கல்யாணத்தைப் பத்தி பேசக்கூடாதா? சரி டேக் கேர்..." என்று பொய்யாக தன்வீர் கோவிக்க,
"என்ன சொன்ன? தனு... சீரியஸாவா? நாம மீட் பண்ணலாம் டா. சாரி மீட் பண்ணலாம் சார். நீ ஒரு ஆபிஸேர்னு அடிக்கடி மறந்திடுது தனு"
"நான் ஊருக்குத் தான் ஆபிசர். உங்களுக்கு அதே தனு தான். நான் வரேன்" என்று அழைப்பைத் துண்டிக்க நந்து தனக்கிருந்த வேலையை முடித்தவர் ஆள் அரவமற்ற அந்த வளாகத்தில் நடக்கும் வேளையில் அங்கே வந்த காரில் இருந்து இறங்கினான் ஷாந்தனு தேசாய், வித்யாஞ்சலி கல்வி நிறுவனத்தின் இயக்குனர்.
என்ன தான் கடந்த மூன்று ஆண்டுகளாக இந்தப் பள்ளியில் பணிபுரிந்தாலும் ஷாந்தனுவை மிகச் சமீபத்தில் தான் நேரில் கண்டிருந்தாள் நந்து. அவன் தன்னை நோக்கி வருவதைக் கண்டவள் அப்போது தான் அவள் அந்த வழியை மறைத்துக்கொண்டு நிற்பது புரிந்து ஒதுங்கி அவனுக்கு வழிவிட அவனோ அவள் திரும்பிய திசையிலே திரும்பினான். அனிச்சையாக நந்துவின் கண்கள் அங்கும் இங்கும் அலைபாய தன்னைச் சுற்றி யாரும் இல்லை என்றதும் அவளையும் அறியாமல் ஒரு பயம் குடிகொண்டது. அவளது மருண்ட விழிகளைப் பார்த்தவன்,
"நந்தனா, நான் உங்களை மீட் பண்ண தான் வந்தேன். நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும். பேசலாமா?" என்று அவளது அனுமதியை வேண்டி பார்த்தான் ஷாந்தனு.
"ஏங்க இப்படி பயப்படுறீங்க? முதல ரிலேக்ஸ் ஆகுங்க ப்ளீஸ். நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். உங்களை நான் பாஸ்ட் டூ இயர்ஸா கவனிச்சிட்டு இருக்கேன். நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு ரொம்ப அமைதியா இருக்கீங்க. எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. நீங்க ஓகே சொன்னா நாம மேரேஜ் பண்ணிக்கலாமா? எனக்கும் தேர்ட்டி த்ரீ தான் ஆகுது. சாரி உங்க பயோ டேட்டாவை நான் பார்த்தேன். இதைப்பத்தி பேசக்கூடிய இடம் இது இல்லை தான் இருந்தாலும் இன்னைக்கு உங்களை இங்க மீட் பண்ணதும் சொல்லிட்டேன். நீங்க என்ன?" என்றவன் அவளது கோபத்துடன் கூடிய அருவருப்பான பார்வையைக் கண்டவன்,
"நான் உங்க பயோ டேட்டா படிச்சுட்டேன். உங்க ஹஸ்பண்ட் ஒரு மாவீரன். நாட்டுக்காக உயிரையே கொடுத்தவர். ப்ளீஸ் என்னை அப்படிப் பார்க்காதீங்க. எனக்கு உங்களைப் பத்தி போன மாசம் தான் எல்லாம் தெரியும். ஆனா ரெண்டு வருஷமாவே எனக்கு உங்களைப் பிடிக்கும். நீங்க தானே ஆறு மாசத்துக்கு முன்னாடி நம்ம ஸ்கூல் ஸ்டூடெண்ட் ஒருத்தன் யாரும் ப்ளஸ் டூ பையாலஜில ரீ ப்ரொடக்சன் டாபிக் எடுக்கறதில்லைனு கேட்டதும் எல்லா ஸ்டுடென்சுக்கும் க்ளாஸ் எடுத்தது. ஒரு பையன் இந்தச் சமுதாயத்துல நல்ல மனுஷனா இருப்பதுக்கு கண்டிப்பா அவன் படிச்ச ஸ்கூல் ரொம்பவும் முக்கியம். சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர் என்னைக்கும் கூச்சப்படவோ தயங்கவோ கூடாது. அதுக்கு நீங்க ஒரு எக்ஸ்சாம்பில். அதுக்குப் பிறகு..."
"ஸ்டாப் இட் மிஸ்டர். விட்டா பேசிட்டே போறீங்க. கடைசியில நீங்களும் எல்லா ஆம்பளைங்க மாதிரி தான்னு நிரூபிச்சிட்டிங்க இல்ல? யூ பிளட்டி..." என்று முடிக்கும் முன்னே நந்தனாவைத் தடுத்தவன்,
"அதென்ன எல்லா ஆம்பளைங்க? இங்க பாருங்க நான் என்ன தப்பா பேசிட்டேன்? எனக்குப் பிடிச்ச பொண்ணுகிட்ட நான் என் லவ்வை கன்ப்பஸ் பண்ணேன். அதும் ரொம்ப டீசெண்டா தானே அப்ரோச் பண்ணேன்? நான் உங்க பையோ டேட்டா பார்த்தது கூடத் தப்பில்லை. நான் இந்த ஸ்கூலோட கரெஸ்பாண்டெண்ட். நீங்க பொறுமையா யோசிச்சு ஒரு முடிவு சொல்லுங்க..."
"மிஸ்டர்..."
"ஷாந்தனு"
"நான் தனியா இருப்பது என்னோட சாய்ஸ். முழுக்க முழுக்க நானா விரும்பி எடுத்த முடிவு. நான் இப்படியே இருந்துக்குறேன். அண்ட் இதுவே நம்மளோட லாஸ்ட் மீட்டிங்கா இருக்கனும். இல்லைனா அந்த நாள் தான் இந்த ஸ்கூல்ல நான் ஒர்க் பண்ற கடைசி நாளா இருக்கும்..." என்ற நந்தனா அங்கிருந்து நகர அப்போது அவளுக்கு முன் வந்து நின்றான் தன்வீர்.
"அண்ணி, சாரி லேட் ஆகிடுச்சு. நாம போலாமா?" என்றதும் அவர் முறைக்க,
"என்னாச்சு அண்ணி? ஏதாவது பிரச்சனையா?"
"கொஞ்சம் தலை வலியா இருக்கு..."
"அப்போ வாங்க காஃபீ குடிக்கலாம்" என்றவன் வழக்கமாக அவர்கள் செல்லும் மில்லெட் ஃபேக்டரிக்கு (millet factory) சென்றனர். மில்லெட் ஃபேக்டரி அந்தச் சுற்று வட்டாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு கஃபே. முற்றிலும் இயற்கை பொருட்களால் இயங்கும் ஒரு கஃபே. பாரம்பரிய உணவுகளை மீட்டெடுத்து அதை இன்றைய தலைமுறை மக்களுக்கு அறிமுகப்படுத்த எண்ணும் முயற்சியில் தொடங்கப்பட்டிருக்கிறது. சிறுதானியங்களை மக்களிடம் பிரபலப்படுத்த எடுத்திருக்கும் முயற்சி.
இன்னும் நந்தனா ஷாந்தனு கொடுத்த அதிர்ச்சியில் இருந்து வெளிவரவில்லை. அவள் உடல் தான் இங்கு இருந்ததே தவிர அவள் எண்ணமெல்லாம் அவளுக்கும் ரன்வீருக்குமான காதல் அவனுடனான முதல் சந்திப்பு ஆகியவற்றில் திளைத்திருந்தது.
"அண்ணி என்னாச்சு? ஏன் ஒரு மாதிரியே இருக்கீங்க?" என்ற தன்வீரின் குரலில் கொஞ்சம் கொஞ்சமாக நிகழ்வுக்குத் திரும்பினாள் நந்து.
இப்போது அவரையும் அறியாமல் முகத்தில் புன்னகை மலர,"என்ன டா விஷயம்? யாரந்த பொண்ணு?" என்றதும்,
"சொல்றேன் அண்ணி. அப்பா அலைன்ஸ் பார்க்க ஆரமிச்சுட்டார். எப்படியும் உங்களுக்கு விஷயம் வந்திருக்கணுமே?"
"அங்கிள் பார்க்கணும்னு சொன்னாரு. என்ன உன் லவ்வை வீட்ல சொல்லனுமா? ஆனா அதுக்கு செலவாகுமே?" என்று நந்து சிரிக்க ஏனோ தன்வீருக்கு மனதில் கொஞ்சம் கொஞ்சமாக நெருடல் உண்டானது.
"எனக்கு இப்போதைக்கு மேரேஜ் பண்ற ஐடியா இல்ல"
"என்ன சொல்ற தனு? ஏன் மேரேஜ் பண்ண மாட்டா?"
"ஒருவேளை நான் யாரையாவது மேரேஜ் பண்ணி நாளைக்கு எனக்கு ஏதாவது ஆச்சுனா..." என்று முடிக்கும் முன்னே,
"டேய் என்ன பேசுற இப்படி அபசகுனமா?" என்று பொங்கியிருந்தாள் நந்து.
"எங்க ப்ரொபெஸன் அப்படி ஆச்சே அண்ணி. எல்லாத்துக்கும் பிப்ட்டி பிப்டி சான்ஸ் இருக்குல்ல? நாளைக்கு உங்களை மாதிரியே அவளும் அவளோட வாழ்க்கையை அழிச்சிக்கணுமா?" என்றதும் நந்தனா சுற்றம் மறந்து கத்திவிட்டு பின் அடிக்குரலில்,
"பைத்தியம் மாதிரி உளறாத. உனக்கு ஒன்னும் ஆகாது. நீ கடைசி வரை சந்தோசமா வாழ்வ பாரு..."
"இப்போவே நான் சந்தோசமா இல்லை. இதுல இதுக்குப் பிறகு எப்படி நான் ஹேப்பியா இருப்பேன்?" என்று அவன் சொன்னதும்,
"ஏன் டா இன்னுமா ரன்வீரை நெனச்சு பீல் பண்ற?"
"நான் எப்போவோ அதுல இருந்து கடந்து வந்துட்டேன் அண்ணி. இப்போ சில வருஷமா என் மனசை அரிச்சிட்டு இருக்குறது எல்லாம் உங்களோட இந்த நிலை தான்" என்று வேதனை நிரம்பிய குரலில் தன்வீர் உரைக்கவும்,
"தனு, ஒன்னு நல்லாப் புரிஞ்சிக்கோ. என்னோட இந்த முடிவுக்கு யாரும் காரணமில்லை. நான் மட்டும் தான் காரணம். இது முழுக்க முழுக்க என்னோட விருப்பம். ஹேப்பினஸ் ஈஸ் எ சாய்ஸ். இப்படி இருக்கறது தான் என்னோட ஹேப்பினஸ். நான் இப்படியே இருந்திடுறேன். நீ உன்னோட வாழ்க்கையைப் பாரு..."
"முடியாது அண்ணி. எனக்கு என் நந்து அண்ணியை பனிரெண்டு வருஷமா தெரியும். இந்த நாலு வருஷமா நான் பாக்குற இந்த நந்து நீங்க இல்ல. உங்க உதட்டுல எப்பயும் ஒரு சிரிப்பு இருக்கும். உங்க முகத்துல ஒரு புத்துணர்ச்சி இழையோடும். ஆனா இப்போ அதெல்லாம் இல்லவே இல்ல. ஒன்னே ஒன்னு மட்டும் நான் கேக்குறேன் அண்ணி. ஒருவேளை அவனுக்கு பதிலா உங்களுக்கு ஏதாவது ஆகியிருந்து ரன்வீர் உங்களை மாதிரி இருந்தா நீங்க நிம்மதியா இருப்பிங்களா? ஐ மீன் உங்க ஆன்மா நிம்மதியடைச்சு இருக்குமா? உங்களுக்குப் புரியாது அண்ணி. இப்போலாம் எனக்கு நிம்மதியா தூக்கம் கூட வரதில்ல. இது உங்களுக்கு வேடிக்கையா இருக்கலாம். ஏன் சிரிப்பு கூட வரலாம். ஆனா எனக்கு ரன்வீர் எதையோ சொல்லுற மாதிரியே இருக்கு. என் நந்துவை இப்படிக் கஷ்டப்பட வெக்குறிங்களேன்னு என் சட்டையைப் பிடிச்சு கேள்வி கேக்குறான். முன்னாடி கேட்டிங்களே இப்போல்லாம் ஏன் வாரம் ரெண்டு நாள் உங்களைப் பார்க்க வரேன்னு, என்னால நிம்மதியா இருக்க முடியில அண்ணி. நான் என்ன சொல்ல வரேன்னு புரியுதா? உங்களுக்குனு இருக்குறது உங்க அப்பா மட்டும் தான். உங்களை ஏன் நாங்க இன்னும் நம்ம வீட்டுக்குக் கூப்பிடாம வெளிய தங்க வெச்சு இருக்கோம் சொல்லுங்க? உங்க வாழ்க்கை இதோட முடியக்கூடாதுனு தான். ப்ளீஸ் அண்ணி. நீங்க இன்னொரு மேரேஜ் செஞ்சுக்கிட்டா அண்ணனை நீங்க லவ் பண்ணலன்னு அர்த்தம் இல்ல. நீங்க எனக்கு ரொம்ப ஸ்பெஷல் அண்ணி. எங்க வீட்ல நானும் அண்ணனும் மட்டும் தான். அதும் எனக்கும் அவனுக்கும் ஆறு வருஷம் வித்தியாசம். நான் முதன் முதலா உங்களை எப்போ பார்த்தேனோ அப்போவே நீங்க என் வாழ்க்கையில ரொம்ப ஸ்பெஷல் ஆனா ஆள் ஆகிட்டீங்க. வாழ்க்கையில மூவ் ஆன் ஆகணும் அண்ணி. உங்களுக்குத் தெரியுமா என் அண்ணன் என் அப்பாவோட பெருமை. என் அம்மாவோட சந்தோசம். ஆனா அவங்க கூட இப்போ இதுல மூவ் ஆன் ஆக ஆரமிச்சுட்டாங்க. காரணம் நான். எனக்காக அவங்க இப்போ இருக்காங்க. ஆனா உங்களுக்கு அப்படிக் கூட யாருமில்லையே? ப்ளீஸ் அண்ணி. சொல்றேனேனு தப்பா எடுத்துக்காதீங்க என் அப்பா அம்மா அவனை முப்பது வருஷம் வளர்த்தி ஆளாக்குனாங்க. எனக்கு அவனை இருபத்தி அஞ்சு வருஷமா தெரியும். ஓகே இப்போ சொல்றேன் கேளுங்க, உங்க லைஃப் மாறாம என் லைஃப்ல மேரேஜ் கிடையாது. என் அண்ணா என்னை மன்னிக்கவே மாட்டான்..."
"என்ன கடைசியா பிளாக் மெயில் பண்றியா? நீ கல்யாணம் பண்ணா எனக்கென்ன பண்ணாட்டி எனக்கென்ன? நான் கிளம்பறேன்..." என்று நந்து சொல்லிச் சென்றாலும் அவனுடைய அன்பு ரன்வீரின் நினைவு அவன் பெற்றோரின் கவலை இறுதியாக ஷாந்தனு செய்த ப்ரபோசல் ஆகியவை நந்தனாவை தெளிவாகக் குழப்பி மனசோர்வைத் தந்தது.
********************
ஜன்தந்ர் விகாஸ் பார்ட்டி தலைமை அலுவலகம்
வரவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக கட்சியின் பொதுக்குழு கூடவிருந்தது. எல்லாக் கட்சிகளைப்போல் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் அந்தக் கட்சியின் நிறுவனர் முதல் தலைவர்கள் வரை அனைவரின் உழைப்பும் தியாகமும் நினைவுக்கு வர கட்சி அலுவலகத்திற்கு வெளியே நீண்ட கட் அவுட்டில் ஜன்தந்ர் விகாஸ் பார்ட்டி நிறுவனரும் முன்னாள் முதல்வருமான கணேஷ்கரும் பிரித்விராஜ் தேஷ்முக்கின் தந்தையான வாசுதேவனும் முகத்தில் புன்னகையுடன் காட்சியளித்தனர். கட்சியின் பொது செயலாளர் அப்துல் உள்ளே நுழைய அவருக்குப் பின் மற்ற நபர்கள் உள்ளே வந்தனர். அப்போது அங்கே பிரவேசித்தார் ஷங்கர் தேசாய். ஜன்தந்ர் விகாஸ் பார்ட்டியின் மிக மூத்த உறுப்பினரும் முன்னாள் கல்வி அமைச்சரும் ஆவர். ப்ரித்விராஜின் தந்தையான வாசுதேவன் எதிர்பாராமல் இறந்து விட மாநிலத்தின் அடுத்த முதல்வர் தானே என்று கனவுக்கோட்டை கட்டியிருந்த வேளையில் யாரும் எதிர்பாராமல் பிரித்விராஜ் முதல்வராக அதன் பின் இன்றுவரை கட்சியில் அவருக்கு இரண்டாம் இடம் தான். சமயங்களில் அப்துல் அந்த இடத்தைப் பெற்றால் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்படுவார் ஷங்கர் தேசாய். கனேஷ்கர் அமைச்சரவையில் முக்கிய இடத்தில் இருந்தவருக்கு வாசுதேவன் பெரும் சவாலாக வந்துவிட முதலில் தந்தையிடம் தோற்றவர் பிறகு மகனிடமும் தோற்க வேண்டியதாயிற்று. அவரது தோற்றத்திற்கும் அவர் செயலுக்கும் சம்மந்தமே இருக்காது. இனிக்க இனிக்க பேசுவதில் வல்லவர். அவரைப் பற்றி பிரித்விராஜ் புரிந்துகொள்ளவே கால தாமதம் ஆனது. ஆயிரம் தான் அவர் மீது குற்றமிருந்தாலும் அவர்போல் ஒரு அரசியல் மதியுகி இந்த மஹாராஷ்டிரா மாநிலத்திலே கிடையாது. பதினோராவது முறையாக எம்.எல்.ஏ ஆனவர் தன்னுடைய பனிரெண்டாவது முறைக்காகக் காத்திருக்கிறார். தன்னால் பிடிக்க முடியாத இடத்தை எப்படியேனும் தன்னுடைய மகன் அடைந்துவிட வேண்டும் என்று உறுதியாக உள்ளார். அவர் மகனும் ஐந்து முறை எம்.எல்.ஏ ஆனவர். இன்று கட்சியில் இருக்கும் இளைஞர்கள் வரிசையில் அவருக்கு இரண்டாவது இடம். முதல் இடம் ப்ரித்விராஜுக்கு. ஆயினும் தன்னுடைய அறுபத்தி மூன்றாவது வயதில் கட்சியின் இளைஞரணி செயலாளராக வலம் வருகிறார்.
உள்ளே எல்லோரும் வந்துவிட அப்துல் இன்றைய கூட்டத்திற்கான அவசியத்தையும் வரவிருக்கும் தேர்தலுக்காக எப்படி தங்கள் கட்சியைத் தயார் படுத்துவது என்று பேசிக்கொண்டிருக்க அப்போ உள்ளே அவசரமாக வந்த அந்தக் கட்சியின் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அந்த விஷயத்தை அப்துலின் காதில் ஓத உடனே அந்த அரங்கில் இருந்த எல்.இ.டி ஸ்க்ரீனில் இந்தியா லைவ் சேனலில் நடாஷா பிரேக்கிங் நியூஸ் வாசித்துக்கொண்டிருந்தாள்.
"மஹாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ந்த பின் எப்போது வேண்டுமானாலும் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள இந்தச் சூழலில் பிரதான கட்சிகள் தங்களுடைய தேர்தல் யுக்திகளை வகுக்க தொடங்கியிருக்கும் சூழலில் முக்கிய திருப்பமாக ஜன்தந்ர் விகாஸ் பார்ட்டியின் நிறுவனரும் முன்னாள் முதல்வருமான கணேஷ்கரின் பேரனும் ஒரே வாரிசுமான யஷ்வந்த் இன்று பாரதிய லோக் பார்ட்டியில் இணைந்து இருக்கிறார். தங்கள் கட்சியின் நிறுவனருடைய குடும்ப வாரிசே எதிர் கட்சியில் இணைந்ததால் மஹாராஷ்டிரா தேர்தல் களம் தேர்தல் அறிவிக்கும் முன்னே சூடு பிடிக்க ஆரமித்து விட்டது..." என்னும் வேளையில் யஷ்வந்த் பேட்டி கொடுக்க முன்வர,
"உங்க தாத்தா ஆரமிச்ச கட்சியை விட்டு நீங்க ஏன் எதிர் கட்சியில சேர்ந்திங்கே? அந்தக் கட்சியில உங்களைச் சேர்த்துக்க மாட்டேன்னு சொல்லிட்டாங்களா?" என்று அர்னாப் முதல் கேள்வியிலே பத்தவைக்க,
"எதுங்க என் தாத்தா ஆரமிச்ச கட்சி? என் தாத்தா சுதந்திர இந்தியாவுல இருந்து இந்தியாவின் பழம்பெரும் கட்சியில இருந்தவர். என்னைக்கு அந்தக் கட்சியே மக்களுக்கு விரோதமா நடக்குதுன்னு தெரிஞ்சதோ அன்னைக்கே தனி கட்சி ஆரமிச்சு அன்னைக்கே முதல்வர் ஆனார். அவரோட துரதிர்ஷ்டம் அவர் சீக்கிரம் இறந்து போனதும் பணத்துக்கு அலையுற நரிங்க கையில அந்தக் கட்சி சிக்கிடுச்சு. இன்னைக்கு அவரோட பேரனான எனக்கே அவங்க சீட் கொடுக்க மாட்டேங்குறாங்க. அது கூட பிரச்சனை இல்ல. இன்னைக்கு அது ஒரு குடும்ப கட்சியா ஆகிட்டு இருக்கு..."
"கணேஷ்கருடைய பேரங்கறதால நீங்க சீட் கேட்டா நீங்க தானே குடும்ப அரசியலை உள்ள கொண்டு வரீங்க?" என்று நடாஷா மடக்க,
"உங்களுக்கே தெரியும், என் தாத்தா ஒரு நேர்மையான அரசியல் வாதி. தன்னுடைய ஆயுள் காலத்துல தனக்குனு வெச்சுயிருந்த ஒரே இடத்தையும் அந்தக் கட்சிக்காக தானம் பண்ணிட்டார். ஆனா இன்னைக்கு ஐஞ்சு முறை ஆறு முறை அமைச்சரா இருக்கவங்களோட சொத்து மதிப்பு என்னனு தெரியுமா? உங்களுக்கு ஒரு லைவ் எக்ஸ்சாம்பில் கொடுக்குறேன். என் தாத்தா எழுதுன சுயசரிதையில ஒரு பெட்டி கடை வெச்சு இருந்தவர் தான் மிஸ்டர் ஷங்கர் தேசாய், அவருக்குனு பெரிய சொத்து எதுவும் இல்லைனு எழுதியிருக்கார். நீங்க வேணுனா 1967 எலெக்சன்ல அவர் தாக்கல் செஞ்ச நாமினேஷன் பைலை எடுத்துப்பாருங்க. கடைசியா அவர் தாக்கல் செஞ்சதுல அவருக்கு அசையும் அசையா சொத்து சேர்த்து எண்பது கோடி இருக்குனும் அவர் மனைவிகிட்டயும் அவர் கிட்டயும் சேர்த்து எட்நூத்தி நாப்பது கிராம் தங்கம் அதாவது நூத்தி அஞ்சு சவரன் நகை டைமண்ட் வெள்ளினு இருக்கு. உங்களுக்கே தெரியும் அவரோட ரெண்டாவது மகன் என்ன பிசினெஸ் பண்ணறாருனு. மிகப் பிரபலமான ஸ்போர்ட்ஸ் வியர் ப்ராண்ட் அவரது. அதெப்படி ஒரு ஆள் பதினோரு முறை எம் எல் ஏவாவும் ஒருமுறை எம்.எல்.சியாவும் இருந்து இவ்வளவு சம்பாதிக்க முடியும்? இதெல்லாம் தெரிஞ்சா இந்த நாட்டுல இருக்குற ஏழை மக்களை சுலபமா வறுமையில இருந்து மீட்டுடலாம். சொல்ல மறந்துட்டேன் அவர் பசங்களுக்கு ஒரு மெடிக்கல் காலேஜும் ஒரு என்ஜினீயரிங் காலேஜும் இருக்கு. நான் என்ன அவர் கொள்ளையடிச்சதையா கேட்டேன்? என் தாத்தா பேர்ல இருக்குற இடத்தை எனக்குக் கொடுக்க சொல்லுங்க. இல்லைனா அதுக்கான விலையைத் தாங்கனு கேட்டா என்னை அவமானப் படுத்தினாரு. அதுக்குத்தான் இப்ப நான் அவரை எதிர்த்து என் தாத்தா தொகுதியில நிக்கப்போறேன். அந்தக் கட்சியை உருவாக்கி முதல்வரா இருந்த கணேஷ்கருடைய வாரிசுக்கே இந்த நிலைமைனா அப்பறோம் உங்க நிலையை யோசிச்சு பாருங்க. அவருக்கு மட்டுமில்ல, எல்லா மாஜி அமைச்சருக்கும் சொல்றேன், ஏன் இருபத்தி இரண்டு வருஷமா முதல்வரா இருக்குற ப்ரித்விராஜுக்கும் சொல்றேன், நீங்க உங்களோட முதல் எலெக்சன்ல் நிக்கும் போது உங்களுக்கு இருந்த சொத்து மதிப்பும் இப்போ உங்களோட சொத்து மதிப்பும் எப்படி எவ்வளவு உயர்ந்துச்சுனு சொல்ல தயாரா?"
"அப்போ அந்த நிலத்துக்காக தான் இந்த திடீர் அரசியல் பிரவேஷமா?" என்ற தீரஜுக்கு,
"இல்லைங்க. இல்லவே இல்லை. நிலத்தை சட்டபடியா நான் மீட்டுக்குறேன். இது மக்களை விழிப்புணர்வாக்க நான் செய்யுற முயற்சி. இந்த இடத்துல நான் ஒன்னு சொல்ல கடமைப்பட்டிருக்கேன், எங்க கட்சி ஆட்சிக்கு வந்ததும் எங்க முதல்வர் தீபக் கோவர்தன் இவங்க மேல விசாரணை அமைப்பாரு. இனி தேர்தல் களத்துல சந்திப்போம். இப்படிக்கு யஷ்வந்த் கணேஷ்கர். நான் ஒன்னும் அடுத்தவங்க மாதிரி எலெக்சன் அப்போ மட்டும் என் தாத்தாவைச் சுமப்பவன் இல்ல. என்னுடைய முழுப் பேரே அது தான். உபயம் வாசுதேவ தேஷ்முக்..." என்று தன்னுடைய முதல் பேட்டியை காரசாரமாகவே முடித்தான் யஷ்வந்த்.
இங்கே இதைக் கேக்க கேக்க ஷங்கர் தேசாய்க்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவரோடு கட்சியின் மூத்த உறுப்பினர்களான நாராயணன், அப்துல், சாகோதமன் ஆகியோர் கேள்வியாக ப்ரித்விராஜைப் பார்க்க,
"இதுக்குத் தான் அன்னைக்கு நான் படிச்சு படிச்சு சொன்னேன். கேட்டீங்களா அண்ணா?" என்று ஷங்கரை வருத்தத்துடன் பிரித்விராஜ் பார்க்க, அதில் அவமானமுற்றவர்,
"அவன் யாரு சின்ன பையன். நேத்து முளைச்ச காளான். என்னை எதிர்த்து நின்னு அவன் ஜெய்ச்சிடுவானா?" என்று வெளியில் ஆக்ரோஷமாகவே பேசினாலும் உள்ளுக்குள் அவருக்கும் ஐயம் இருக்கத்தான் செய்தது.
அன்று, அதாவது இன்றிலிருந்து சரியாக நான்கு நாட்களுக்கு முன் கட்சியின் அலுவலகத்திற்கு யஷ்வந்த் வந்தான். இந்த முறை தேர்தலில் தான் போட்டியிடப்போவதாக அவன் சொன்ன தொனியே ஷங்கரை எரிச்சல் மூட்ட அப்போது பார்த்து ப்ரித்விராஜும் இல்லாமல் போக மிகுந்த எள்ளலுடன்,
"தம்பி உனக்கு முதல ஓட்டுபோடுற வயசு வந்துடுச்சா?" என்று கேட்டு அருகிலிருந்தவர்களிடம் நையாண்டி பேச,
"எண்பது வயசுக்கு மேல ஆகி நீங்களே இன்னும் டிக்கெட் வாங்காம எலெக்சன்ல நிக்குறீங்கன்னு போது எனக்கென்ன தாத்தா..." என்று அவனும் எள்ளலாகவே பேச அங்கேயே மூக்கறுபட்டார் ஷங்கர்.
"எனக்கு என் தாத்தாவோட தொகுதி வேணும்" என்று அடுத்த கேள்வியை முன்வைக்க,
"நீ முதல இந்தக் கட்சியில இருக்கியாடா?" என்று ஆவேஷமாகவே அவர் கேட்டுவிட,
"நீங்கலாம் இருபத்தி ஏழு வயசுல இருக்கும் போது தான் இந்தக் கட்சியில உறுப்பினர் ஆனீங்க. நானெல்லாம் பொறக்கும் போதே இந்தக் கட்சியோட உறுப்பினர்" என்று சொன்னதும் அவனது சாதூர்யத்தை அப்துல் மெச்ச அங்கே மீண்டும் மூக்கறுப்பட்டவர் அவனை அவமானப் படுத்தி தள்ளி விடவும் பிரித்விராஜ் வரவும் சரியாக இருந்தது.
"என் தாத்தா இடத்துல இருந்து என்னையே தள்ளி விடுறிங்களா? உங்களைச் சும்மா விட மாட்டேன்டா" என்று அனைவரையும் ஒருமையில் பேசிய யஷ்வந்த் அடுத்த நான்கு நாட்களில் இப்படியொரு முடிவெடுப்பான் என்றும் இது போலொரு பேட்டி கொடுப்பான் என்றும் யாரும் நினைத்துப்பார்க்கவில்லை.
சும்மா இருந்த நியூஸ் சேனல்களுக்கு அவல் கிடைத்தது போல் அந்த இடத்தைப் பற்றியும் கணேஷ்கர் பற்றியும் கடந்த இரண்டு மூன்று சட்டசபை தேர்தல்களில் மூத்த அமைச்சர்கள் பெரும் புள்ளிகள் ஆகியோரின் சொத்து விவரங்களை தோண்டி எடுக்க ஆரமித்திருந்தனர்.
ஷாந்தனு தேசாய்- வித்யாஞ்சலி கல்வி நிறுவனத்தின் இயக்குனர்.
நந்தனா- தன்வீரின் அண்ணி.
யஷ்வந்த்- கணேஷின் பேரன்.
ஷங்கர் தேசாய்- ஆளுங்கட்சியின் முக்கிய பிரமுகர். ஷாந்தனு தேசாய்க்கும் ஷங்கர் தேசாய்க்கும் நேரடி சம்மந்தம் இல்லை.
இன்னும் சில கதா பாத்திரங்கள் வருவார்கள். இதுவரை புரிந்தது தானே?
மகாராஷ்டிரா அரசியல் சூழல்,
ரத்தோர் மிஸ்ஸிங் வழக்கு,
சுகி மரணம்,
ஜெய் யாக், இதயன் ஜீவி, தன்வீர் தாரா, ரேவந்த் அங்கிதா, நந்தனா ஷாந்தனு,
அடுத்தது, வித்யாஞ்சலி கல்வி நிறுவனத்தில் நடக்கும் ஒரு சம்பத்தோடு வருகிறேன்.
அது போக இன்னும் சில. எல்லாமும் இணையும் புள்ளியில் கதை விளங்கும்.
நான் ரொம்ப பிசி. விரைவில் ரெகுலர் அப்டேட்ஸ் உடன் 'இலைமறைவில் மழைத்துளியாய்' கதையின் அக்னி-அஜந்தாவோடும் வருகிறேன்( என் பக்கெட் லிஸ்ட்ல அடுத்த கதை. எப்போ வரும் எப்படி வரும்னு சத்தியமா எனக்குத் தெரியாது. ஆனால் கட்டாயம் வரும்???) இப்போ மழைக்கால மேகங்கள்னு ஒரு குறுநாவல் எழுதிட்டு இருக்கேன். அதையும் சீக்கிரம் கொடுக்குறேன். இந்த மினிட்ல என் மூளையில பதினோரு கதைங்க ரெடியா இருக்கு. ஆனா இது எக்ஸாம்ஸ் சீஸன். தயவுசெய்து லேட் அப்டேட்ஸ்க்கு பொறுத்துக்கோங்க. ப்ளீஸ் ப்ளீஸ்?? சீக்கிரம் நான் ஸ்டாப் அப்டேட்ஸ் நான் ஸ்டாப் கதைகளோடு வருகிறேன்...
அக்னி❤ அஜந்தா, சுபாஷ் சந்திர போஸ்❤ மாயா வியோலெட், ஆண்டாள்❤ அழகர், பரிதி❤ பாற்கதிர், பொன்வண்ணன்- தூரிகா சரிதா நிஹாரிகா, செவ்வாணன்❤ நெய்தல் இப்படி லிஸ்ட் நீளும்...
 
Nirmala vandhachu ???
 
மாசம் ரெண்டாச்சு.... எங்க தான் போனீங்க.... இந்தியாக்குள்ள தான் இருக்கீங்களா ???
 
என் வண்டி இப்போ ரொம்ப கரடு முரடான பாதையில போய்ட்டு இருக்கு. எக்ஸாம்ஸ் அப்பறோம் கொஞ்சம் ஹெல்த் இஸ்ஸுஸ். எழுதும் மனநிலையில் இல்ல. கண்டிப்பா சீக்கிரம் வரேன். நிறைய புதிய கதைகள் வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கு... சாரி அண்ட் என்னைத் தேடுனதுக்கு ரொம்ப நன்றி??
 
உங்க தடைகளை எல்லாம் தகர்த்து சீரான பாதையில சீக்கிரம் வருவீங்க....All THE BEST AND COME WELL SOON ????????????
 
Seerana pathayai nookkiya karadu muradana payanam
Best wishes to reach your goals pa thambi
Health problem seekirama sariyagidum
Sry yethukku nalla news +story yoda vanga
Indha 2022 unghalukku best ahh irrukkattum ???
@praveenraj
 
உங்க தடைகளை எல்லாம் தகர்த்து சீரான பாதையில சீக்கிரம் வருவீங்க....All THE BEST AND COME WELL SOON ????????????
thank u sis?
 
Top