Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ரமீனா சிவராஜ்-ன் நீயே என் சுவாசக் காற்று அத்தியாயம்-4

Advertisement

ரமீனா சிவராஜ்

Well-known member
Member
ஹாய் சகோதரிகளே....


போன பதிவுக்கு லைக்ஸ் & கமெண்ட் குடுத்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி....??????


இதோ அடுத்த அத்தியாயத்துடன் வந்து விட்டேன்.....??






மறுநாள் காலை ஹரிணி எழும்போது ரித்விக் கிளம்பிக் கொண்டிருந்தான்....
"நான் சீக்கிரம் கிளம்பனும்‌...உனக்கு போய் வர உன் கார் டிரைவரிடம் சொல்லிருக்கிறேன்...பாய்...ஏதாவது என்றால் கால் செய்"என்று கிளம்பினான்...

அவளும் கிளம்பி வீட்டில் எல்லாரிடமும் சொல்லிக் கொண்டு ஆஸ்பிட்டல் சென்றாள்..

அவள் சென்ற பின் ஆண்கள் அனைவரும் அலுவலகம் சென்றனர்....

மீதி அனைவரும் பேசிக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்...
"அம்மா....பாருங்கம்மா....இவன் என்னிடம் கூட சொல்லலாமல் கல்யாணம் பண்ணி கொண்டான் என்று நான் கோபமா பேசாம இருந்தா அவன் என்ன சமாதானம் கூட செய்மலம்மா... அப்படியே போய்ட்டான்... கல்யாணம் முடிந்ததும் அப்படியே மாறிட்டான்ம்மா"என்றாள் மேகலா....

"மேகலா .....ஏன் இப்படி பேசுற.....அவன் எப்பொழுதும் இப்படி தான் என்று உனக்கே தெரியும்.....பிறகு ஏன் இப்படி சொல்ற...நீ சொல்றது ஹரிணி தான் அவன் மாத்திட்டாள் என்று சொல்ற மாதிரி இருக்கு....நான் அவளிடம் பேசியது வைத்து அவள் குணம் அப்படி தெரியவில்லை.....இத அவ கேட்டிருந்தா அவ மனசு எவ்வளவு கஷ்டப்பட்டுருக்கும்... யாரையும் பத்தி முழுசா தெரியாம பேசாதே....உன் தம்பி உன்னிடம் பேச வில்லை என்றால் அவன மட்டும் திட்டு..."என்றார் சந்திரலேகா....

"அம்மா...நான் ஹரிணியை குறை சொல்ல வேண்டும் என்று நினைத்து இப்படி கூறவில்லை.... ரித்விக் மேலுள்ள கோலத்தில் ஏதோ பேசிவிட்டேன்.....அவங்க வரவேற்புக்கு நாள் பார்த்தாயிற்றா?"

"எங்க.... வரவேற்பு வைக்க கூடாது என்று ஒரே அடம் உன் தம்பி.... அதன்பிறகு நாங்களும் அதைப்பற்றி பேசவில்லை..."

"ஏன்ம்மா?இவன் இப்படி இருக்கான்?...எப்பதான் எல்லாரையும் அனுசரித்து பேசப் போறானோ...ஹரிணி தான் பாவம்... வாழ்க்கை முழுவதும் இவன் கிட்ட நாடா படப்போறாள்"

"இவனப்பத்தி தெரிஞ்சி தான லவ் பண்ணி கல்யாணம் பண்ணிருக்காள்....அப்புறமென்ன...அது அவங்க வாழ்க்கை ‌....விடு...உன் மாமியார் வீட்டுக்கு எப்ப போனும்?"

"நாளைக்கு காலைல கிளம்பனும்மா.... அப்ப தான் அங்க நைட்டுக்குள்ள போகமுடியும்..."

"சரி.... அப்பாட்ட சொல்லி எல்லா ஏற்பாடும் பண்ண சொல்றேன்"என்றவாறே அலைபேசியை எடுத்துக் கொண்டு எழுந்து சென்றார்....


--------

ஹரிணி ஆஸ்பிட்டல் சென்றதும் அவளுக்கு வேலை இருந்து கொண்டே இருந்தது....முதலில் அன்றைய ஓ.பி.பார்த்து முடிக்கவே இல்லை....அதற்குள் மூன்று டெலிவரி கேஸ் வந்துவிட்டது....


இரண்டு மணிக்கு பசிக்க ஆரம்பித்ததும் தான் சாப்பாடு பற்றி யோசனை வந்தது...இதற்கு முன்பு ஹாஸ்டலில் இருந்து மதிய சாப்பாடு வரும்படி ஏற்பாடு செய்திருந்தாள்....இன்று என்ன செய்ய என்று யோசித்து கண்டீனில் வாங்கி சாப்பிட அவளிடம் உதவியாயிருக்கும் சிஸ்டரிடம் கேட்டாள்...

"கமலாக்கா ,கண்டீன்ல இப்ப என்ன சாப்பாடு இருக்கு என்று கேட்டு ஒரு பார்சல் ஆர்டர் கேளுங்க"என்றாள்...

"டாக்டர், உங்களுக்கு சாப்பாடு வந்துவிட்டது....உங்க பெயர் சொல்லி குடுத்துட்டு போனாங்க...டைனிங் ஹாலின் இன்சார்ஜ்ட்ட வாங்கி வைக்க சொல்லிட்டேன் மேம்...ஆனா அதை உங்கட்ட சொல்ல மறந்துட்டேன்"கமலா

"ஓஓஓ...சரி...."என்றாள்... மனதினுள்ளே ஹாஸ்டலில் இருந்து நான் வெளியே சென்றது மறந்து போய் குடுத்து விட்டு இருப்பார்கள் என்று நினைத்து கொண்டே எழுந்து சென்றாள்...

சாப்பிடும் அறைக்குள் சென்று அவள் சாப்பாடை கேட்க அவர் குடுத்ததோ வேறு ஒரு பை....அதை வாங்கி யோசித்து கொண்டே அமர அவள் அலைபேசி சிணுங்கியது...

மகிழ்ச்சியாக அதை எடுத்து காதுக்கு கொண்டு சென்று"சொல்லுங்க அத்தை" என்றாள்.

அந்தப்பக்கம் "சாப்பிட்டியாம்மா?என்றார்...

"இல்லத்தை....இப்பதான் சாப்பிட வந்தேன்..."

"சரி..இப்பதான் சாப்பிட போறியா??? பன்னிரெண்டு மணிக்கே குடுத்துவிட்டுடேன்....இன்னும் நீ சாப்பிட்டு போன் பண்ணலையே என்று தான் கூப்பிட்டேன்...பார்த்தா நீ இன்னும் சாப்பிடவேயில்லை..... சீக்கிரம் மீதிவைக்காம சாப்பிடு...."என்றார்...


"சரியத்தை.... அவங்க சாப்பிட்டாங்களா?"

"அத உன் புருஷன்ட்ட நீயே கேட்டு தெரிஞ்சிக்கோ....முதல்ல சாப்பிடு....வைக்கிறேன்ம்மா...என்றார்..


அலைபேசியை கீழே வைத்தவளுக்கு கண்கள் களங்கியது.... அவளுக்கு அவ்வளவு சந்தோசம்.‌..தனக்கு நேரத்திற்கு சாப்பாடு அனுப்பி அதையும் சாப்பிட்டியா என்று கேட்கும் உறவு கிடைத்ததில் அத்தனை ஆனந்தம்...இதற்கு தானே மனம் இவ்வளவு நாட்கள் ஏங்கியது.....

உடனே ரித்விக் கை அழைக்க அவனுக்கோ அழைப்பு செல்லவில்லை.... மகிழ்ச்சியாக சாப்பிட்டு முடித்து அவள் அத்தைக்கு சொல்லிவிட்டே வேலையை பார்க்க ஆரம்பித்தாள்....

வீட்டிற்கு வர மாலை ஐந்தரை ஆகிவிட்டது...வந்து குளித்து சாமி கும்பிட்டு வந்து அனைவரிடமும் பேசிக் கொண்டிருந்தாள்....

சிறிது நேரம் கழித்து குழந்தைகளுடன் விளையாட ஆரம்பித்தாள்....நேரம் சென்றதே தெரியவில்லை...இரவு ஏழைக்கு மேல் தான் வந்தான்..

வந்தவனை பார்த்ததோடு சரி‌..... அதன்பிறகு அவள் கண்டுகொள்ளவேயில்லை...இதை கவனித்த சந்திரலேகா முகம் யோசனைக்குள்ளாகியது‌....

சிறிது நேரம் கழித்து ரித்விக் தான் ஹரிணி யின் எண்ணுக்கு அழைத்து காபி கொண்டு வருமாறு கூறினான்...

அதை எடுத்து கொண்டு மேலே சென்றாள்...அவளிடம் காபியை வாங்கி பருகிக் கொண்டே,"இனி எப்பொழுதும் நான் வீட்டுக்கு வந்ததும் ஒரு காபியோடு நமதறைக்கு வா...."என்றான்...

மனதினுள் இதக்கூட ஆர்டரா தான் சொல்லனும்மா நினைத்து கொண்டாள்...

"சரி சொல்லு..."

அவள் முறைக்க

"எதுக்கு முறைக்கிற??"

இப்போது தான் அவனுக்கு புரிய.... சிரித்துக் கொண்டே"நானா மறந்தாலும் நீ மறக்க விடமாட்ட போல...நான் அதை கேட்கல...மதியம் ஏன் கால் பண்ணுன?"என்றான்....


"மதியம் கால் பண்ணுனா நைட் வந்து ஏன் என்று கேட்குறீங்க...இதுதான் போலிஸ் வேலையா?இப்படி லேட் லேட்டா தான் எல்லா வேலைய தான் பார்ப்பீங்களோ??" ...

"ஹோய்....யாரை லேட் வேலைன்னு சொல்ற??நீ பேசுறது எல்லாமே கொஞ்சம் ஓவர் தான்"மிரட்றமாதி பேச அவள் அமைதியானாள்....

"எதுக்கு கால் பண்ணுன?"

"சாப்பிட்டீங்களா என்று கேட்க தான்"

"பொய் சொல்லாத....இத்தனை நாள் இப்படி கேட்டீயோ???இத என்ன திடீர்னு? ஒழுங்கா உண்மைய சொல்லு"

"அத்தை எனக்கு சாப்பாடு குடுத்து விட்டுருந்தாங்க....கால் பண்ணி சாப்டியா?மீதி வைக்காம ஒழுங்கா சாப்பிடனும் என்று சொன்னாங்க.... ரொம்ப சந்தோசமா இருந்தது....அத உங்களிடம் சொல்லத்தான் கால் பண்ணுனேன்"மகிழ்ச்சியாக கூறினாள்..

"குட்...அப்புறம் ஏன் இத முதல்ல சொல்லாம பொய் சொன்ன..."

பதிலில்லை..

"சரி...சொல்லு அந்த டிரஸ் பேறென்ன?"என்றபடி காபி டம்ளரை அவளிடம் தர அவளோ வெட்கத்தில் குனிந்து கொண்டாள்...

"முதல்ல கேட்டப்போ முறைச்ச...இப்ப பதில் சொல்லாம வெட்கப் படுற...ஒன்னும் புரியலை‌....இந்த பொண்ணுங்க எப்போ எப்படி தெரிஞ்சிக்கிறது உலகமகா கஷ்டமடா...‌"

"புரிஞ்சா சரி"

"கொஞ்ச கொஞ்சமாக உன்ன புரிந்து கொள்றேன்"...

"கல்யாணம் ஆகி எட்டு வருஷம் ஆக போது...இப்ப தான் என்ன புரிந்து கொள்ளனும்னு முடிவு பண்ணறீங்க"


"என்னமோ எட்டு வருஷமா எங்கூட குடும்பம் நடத்துன மாதிரி சலிச்சிக்கிற...இப்ப தான் என்கூட வாழ்வே வந்திருக்க...அப்போ இப்போ தான் எல்லாத்தையும் ஆரம்பிக்க முடியும்"

அவள் அடுத்து ஏதோ கூறிவரும் முன்
"ஹரிணி இப்படி பேசிக்கிட்டே இருந்தா பேச்சுதான் நீளும்...விடு... சரி..நீ கீழேப்போ...நான் வாறேன்"என்றான்...

"ம்ம்ம்" என்றபடி கீழே வந்தாள்...வந்தவளின் முகத்தையும் சந்திரலேகா கவனித்தார்...அவரால் ஒன்றும் உறுதியாக கணிக்க முடியவில்லை....


எல்லாரும் சேர்ந்து சாப்பிட்டு விட்டு பேசிக் கொண்டிருந்தனர்....ரித்விக் மேகவர்ணனிடம் நன்றாகவே பேசிக் கொண்டிருந்தான்...ஒன்பதரை மணியாகி விட்டது....காலையில் மேகலா குடும்பம் அவளது மாமியார் ஊருக்கு கிளம்புவதால் அனைவரும் சீக்கிரம் படுக்க சென்றனர்...


இரவு பதினொன்றரை மணிப்போல் கதவு தட்டும் சத்தம் கேட்டு ரித்விக் கதவை திறந்தான்....மேகலாவும் சந்திரலேகாவும் தயங்கிதான் நின்றுக் கொண்டிருந்தனர்....

இருவரையும் கேள்வியாக பார்த்தான்...எதுவும் கேட்கவில்லை...மேகலா தான் வாயை திறந்தாள்..."ஹரிணியை கொஞ்சம் எழுப்பு...மேக்னாக்கு காய்ச்சல் குறையவே இல்லை.."என்றாள்....

அவன் திரும்பி அறையின் உள்ளே செல்ல சந்திரலேகாவோ இவன் எங்கே போறான் என்று மெதுவாக உள்ளே எட்டிப் பார்த்தவர் அதிர்ந்தார்....

சோபாவில் தூங்கி கொண்டிருந்த ஹரிணியை அவன் எழுப்பிக் கொண்டிருந்தான்....

அவர்க்கு என்ன என்றுகூட யோசிக்க முடியவில்லை......அதற்குள் ஹரிணி வெளியே வர விஷயம் தெரிந்து மெடிக்கல் கிட் எடுத்துக் கொண்டு அவர்களுடன் நடந்தாள்.... சந்திரலேகாவோ அவனை திரும்பி பார்த்து முறைத்தவாறே சென்றார்....

அவர் முறைப்பது ஏன் என்று புரிந்தாலும் இவனும் எதிர்ப்பார்வை
பார்த்துக் கொண்டிருந்தான்...

கீழே வந்தவள் மேக்னா வை பார்க்க ஆரம்பித்தாள்....என்ன மருந்து கொடுத்தார்கள் என்று கேட்டு அதற்கு ஏற்ப வேறு ஒரு மருந்தை எடுத்து சிரஞ்சில் ஏற்றி ஊசிப்போட்டு அரைமணிநேரத்தில் ஜுரம் குறையத் தொடங்கியது....வேறெதும் பயமில்லை என்று கூறி அனைவரையும் படுக்க சொன்னாள்‌.....

மேலும் அரைமணிநேரம் சென்றதும் முழு ஜுரமும் குறைந்து வியர்க்க தொடங்கியது....அதுவரை ஹாலில் சோபாவில் அமர்ந்திருந்தாள்....

அவள் கிளம்பும் போது"ரொம்ப பயந்துட்டேன்....இந்த நேரத்தில் உங்கள் தொந்திரவு செய்ய சங்கடமா இருந்தது...வேற வழியில்லாமல் தான் வந்தேன்....சாரி....உதவி செய்ததுக்கு நன்றி"என்று அவள் கைப் பிடித்தவாறே மேகலா கூறினாள்...

"அச்சோ!!!அண்ணி...ஏன் இந்த பார்மாலிட்டீஸ்....எந்த நேரத்திலும் என்னிடம் வந்து எதுவும் கேட்கலாம்....அப்புறம் சாரி தேங்க்ஸ் என்று உறவுக்குள் எதுவும் சொல்லத் தேவையில்லை அண்ணி..‌போய் தூங்குங்க....இனி ஒன்னும் பயமில்லை..."என்று கூறினாள்...

"ம்ம்ம்"

"சரி..ஹரிணி...நீ போய்ப்படு..."என்று சந்திரலேகா கூற அவள் சென்று விட்டாள்...

அறைக்குள் வந்து பார்த்தா ரித்விக் உறங்கவில்லை.‌..அலைபேசியில் ஏதோ பார்த்துக் கொண்டிருந்தான்....

இவள் வந்தது தெரிய "மேக்னா இப்போ எப்படி இருக்காள்?"கேட்டான்..‌


"இனி பிரச்சினை இல்லை..ஜுரம் குறைந்துவிட்டது...இனி சரி ஆகிரும்"

"ம்ம்ம்".....

"அண்ணி என்னை எழுப்ப ரொம்ப யோசிச்சாங்களாம்...தொந்திரவு பண்றோம் என்று நினைச்சிட்டாங்க போல...அஸ் அ டாக்டரா எப்ப வேணும்னாலும் எனக்கு கேஸ் வரும்....இதுல என்ன இருக்கு?"என்றாள்

"அம்மா உன்ன எதுவும் கேட்டாங்களா?"

"இல்லையே‌....."

"ஓஓஓ..."

"இனி கேட்பாங்க.."

"எதைப்பற்றி?"

"அத கேட்கும் போது தெரிஞ்சிக்கோ.....படு"

அவள் சோஃபாக்கு செல்ல சத்தம்போட்டு சிரித்தான்....

"ஏன் சிரிக்கிறீங்க?"

"சும்மாதான்"என்று அவளருகே சென்று அமர்ந்தான்....

அவள் முறைக்க

"எத்தனை மணிக்கு உடம்பு சரியில்லை என்றாலும் யாரும் ஆஸ்பத்திரிக்கு போக யோசிக்க மாட்டோம் ....ஆனா இவ்வளவு பக்கத்துல இருந்தும் உன்ன இப்ப ஏன் எழுப்ப யோசிச்சாங்கனு புரியுதா?"

"ம்ஹும்ம்....ஒருவேளை நான் பார்க்க மாட்டேன் என்று நினைச்சிருப்பாங்களோ?"

"என்னது?"

"இல்ல...நான் பிடியாட்ரிஷன் இல்லல...சோ அப்படி யோசிச்சிருப்பாங்களோ"

"உனக்கு இருக்கிற அறிவுக்கு இன்னும் கொஞ்சம் படிச்சிருக்கலாம்"

"இது பாராட்டா?கிண்டலா?"

"ஹரிணி....ஒரு டாக்டரா யோசிக்காத....ஒரு மனிதனா எப்படி யோசிப்பான்னோ அப்படி யோசி...."

" என்ன சொல்ல வர்றீங்க என்று புரியல...தெளிவா சொல்லுங்க"

"இதலாம்மா விளக்கி சொல்லனும்...நீயே யோசித்து புரிஞ்சிக்கோ"

அமைதியாகிவிட்டாள்...

"அவங்கள பொறுத்து வரை நீயும் நானும் புதுசா கல்யாணம் ஆனவங்க....சோ நைட் எழுப்ப யோசிச்சிருப்பாங்க...."

"புதுசா கல்யாணம் ஆன என்ன?....எல்லாரும் நைட் ஆனா தூங்க தான் செய்வாங்க..அதுக்கு எதுக்கு எழுப்ப யோ.....சிக்க....னும்ம்ம்ம்?...சொன்ன பிறகே அர்த்தம் புரிய அசடு வழிய அப்படியே நிறுத்தி விட்டாள்...


"ஒரு வழியாக டியூப்லைட் எரிஞ்சிட்டு"என்று கூறி நகைத்தான்....


"அப்போ இவ்வளவு நேரம் என்ன கிண்டல் தான் பண்ணுணீங்களா?"


"இப்ப தான் லைட் பிரகாசமா எரியுது"கூறி சத்தமாக நகைக்க வேகமாக அவன் வாயை தன் கைகளால் மூடி"ஏன் இவ்வளவு சத்தமா சிரிக்கீங்க? பால்கனி கதவு திறந்துதான் இருக்கு....கீழ வரை கேட்கும்"என்றாள்...

அவள் கையை தட்டி விட்டு"கேட்கட்டும் என்று தானே இங்கே வந்து சத்தமாக சிரிக்கிறேன்....நான் தான் கதவை திறந்து வைத்தேன்...‌வேணும்னு தான் இங்க வந்து சத்தமாக சிரிக்கிறேன்"என்றான்..


" ஏன்"?

"உன்ன எழுப்ப வந்தப்போவே அம்மா நீ சோபா வில் படுத்திருந்தத பார்த்துவிட்டாங்க....என்ன முறைச்சி ஒரு பார்வை வேற பார்த்தாங்க..."

"அதான் என்னிடம் ஏதாவது கேட்டாங்களா என்று கேட்டீங்களா?"

"ம்ம்ம்"

"நாளைக்கு கேட்பார்களா?"

"அப்படித்தான் நினைக்கேன்....கேட்டா என்ன சொல்லுவ?"

"ஏதோ சொல்லி சமாளிச்சிருவேன்"

"எங்க அம்மாவ அவ்வளவு சாதராணமா நினைக்கிற...எதையும் ஓரளவு யூகிச்சிருவாங்க..."

"ம்ம்ம்...ஆனா நீங்க தான் என்ன இங்க வந்தன்னைக்கு படுக்க சொன்னீங்க"

"அது ஒரு கோவத்தில் சொல்லிட்டேன்...அப்புறம் யோசித்து பார்த்த பிறகு தான் அது தப்பு என்று தெரிந்தது....அதான் அடுத்த நாளே இங்க வந்து படுக்க சொன்னேன்...ஆனா நீ தான் கோவத்தில் அங்க போய் படுத்த"....

"ஆமாம்...கோவம்தான்‌... எல்லா.....த்தையும் சொல்லி காட்டுனீங்க....அழுகையோட தான் போனேன்...ஆனா அத்தக் கிட்ட என்ன சொல்ல?"

"கேட்க மாட்டாங்கனு தான் நினைக்கேன்..‌‌பார்ப்போம்...."

"ம்ம்ம்"

"பின்ன உண்மையையா சொல்ல முடியும்"

"என்ன உண்மை?"

"நீ இங்க வந்து ஏன் படுத்தியோ அந்த உண்மை?"சொல்லி மறுபடியும் சத்தமாக சிரித்தான்

"இத விடவே மாட்டீங்களா...போங்க‌..போய் படுங்க..நான் தூங்கனும்...என்று கூற அவனும் எழுந்து சென்று பால்கனி னி கதவை மூடிட்டு வந்து படுத்து உறங்கினான்....


தொடரும்....
 

Attachments

  • 1630561518153.jpg
    1630561518153.jpg
    146.8 KB · Views: 0
Appuram yenda rithvik ipdi irukura. Harini sariyana tubelight athuvum led than pola. Ponga aduthu enna aga pogutho.
மிக்க நன்றி சகோதரி ?...

ஆமாம் ‌....இவன் ஏன் இப்படி இருக்கான்??????

ஹரிணி-எல்இடி யா????செம....??

ஆனா நீங்க இப்படி சொல்றது ரித்விக் கிற்கு தெரிஞ்சா என்ன ஆகும்????


அடுத்து என்ன நடக்கப் போகுதுனு நானும் ஆவலாக காத்திருக்கிறேன்.....
நாளைக்கு காலைல தெரிந்து கொள்வோம் அரசி....??
 
Top